|
||||
|
என்
மனவலையிலிருந்து….. என்னை அதிகம் கவர்ந்த மக்கள் புரட்சியாளன் (சாகரன்) மிகவும் வளம் குறைந்த ஆயுதத் தளபாடங்களைக் கொண்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடி வீரம் மிக்க புரட்சியை வென்ற நாடு என்றால் அது வியட்நாம் என்றால் மிகையாகாது. இந்த வெற்றிக்கு பின்னால் இந்த புரட்சியைத் தலமை தாங்கிய மக்கள் புரட்சியாளன் ஹோ சி மின் இருந்திருக்கின்றார் என்றால் அது மிகைப்படுத்திக் கூறப்படும் விடயமும் அல்ல. ஒருபுறம் பிரெஞ்சு ஆக்கிரமிப்பு படை மறுபுறம் அமெரிக்க ஏகாதிபத்திய படை என்று பல்முனைத் தாக்குதலை எவ்வாறு வியட்நாம் மக்கள் எதிர் கொண்டனர் என்பதை விபரிக்க சில பக்கங்கள் போதாது. ஆனால் தங்களிடம் இருக்கும் வளங்களை மட்டும் நம்பி தமது சொந்தக்காலில் நின்று கொண்டு மிகவும் நுணுக்கமான போர்த் தந்திரோபாயங்களைப் பின்பற்றி வெற்றியடைந்து புரட்சிகளில் வியட்நாம் புரட்சி முதன்மை பெறுகின்றது. ஆகாயத்தில் இருந்து ஒரு திசையை நோக்கி மட்டும் சுடக் கூடிய சுடுகலனைப் பொருத்திய வானூர்தியை(Helicopter) அதன் பறப்பு திசைக்கு ஏற்ப தமது நிலைகளை மாற்றி மாற்றி நின்று வெறும் அம்பு வில்லு போன்ற ஆயுதத்தால் சுட்டு வீழ்த்திய துணிவும் போர்த்த தத்திரோபாயமும் நிறைந்த போராட்டம் இவர்களுடையது. இவர்கள் தமது போராட்டத்தில் எப்போதும் தம்மிடம் இல்லாத ஆயுதங்களைப் பற்றி கனவு கண்டு கொண்டு இருக்கவில்லை. இவை இருந்தால்தான் போராட முடியும் வெல்ல முடியும் என்று போராட்டத்தை நடாத்தவில்லை என்பதை இந்த யுத்தம் முழுவதும் நாம்காண முடியும். கிடந்ததை. கிடைப்பதைக் கொண்டு போராடும் மனவலிமையும் புத்திக் கூர்மையும், மன தைரியமும் இவர்கள் போராடம் முழுவதும் வியாபித்திருந்தது. இதற்கான கூட்டுத்தலமையை இப் போராட்திற்கு தலமை தாங்கிய ஹோ சின் மின் வழங்கினார். மிக முக்கியமாக தமது போராட்டத்திற்கான நியாயாதிகங்களை சர்வதேச சமூகத்திடம் எடுத்துச் சென்றதில் இவர்களின் புரட்சி வெற்றி பெற்து பெரிதும் தங்கியிருந்து. எந்த அமெரிக்கா இவர்களுக்கு எதிராக யுத்தத்தை முன்னெடுத்தார்களே அந்த அமெரிக்க மக்களின் பலத்த எதிர்ப்பு அமெரிக்காவிற்கும், அனுதாபம் வியட்நாம் மக்களுக்கும் கிடைக்கும் வண்ணம் தமது அரசியல் செயற்பாட்டை முன்னெடுத்தனர். கூடவே சர்வ தேச சமூகமும் ஊடகங்களும் இவர்களின் போராடத்தில் அமெரிக்காவின் கொலை வெறியை அம்பலப்படுத்தும் வண்ணம் தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். இதற்கெல்லாம் வழிகால் அமைத்தவர் என்றால் அது தோழர் ஹோ சி மின் தான். இவர் தனது சக போராளிகளுடனும் மக்களுடனும் இரண்டறக் கலந்தே இருந்தார் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்த போது தந்திரோபாய ரீதியில் பின்வாங்களையும், தலைமறைவு வாழ்வையும், நாடுவிட்டு நாடு மாறி உயிர் வாழ்தலுக்கான அவசியத்தை நிலைநாட்டியதாகவும் இருக்கட்டும் இது ஹோ சி மின் இன் சிறப்பு அம்சங்கள் ஆகும். இப்படியான மிகச் சிறந்த புரட்சியாளனிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம். என் ஈழவிடுதலைப் போராட்ட வாழ்வில்; என்னையும் அறியாமல் தோழர் ஹோ சி மின் இன் பாதுகாப்பாக இருத்தல் என்ற அனுபவப் பாதைகளை பின்பற்றி இருக்கின்றேன் என்பதை இங்கு மகிழ்ச்சியுடன் நினைவு கூற விரும்புகின்றேன். இன்றைய என் உயிர் வாழ்த்தலுக்கு இதுவே காரணமாகவும் அமைந்திருக்கின்றது என்பது எனது மிகையான கூற்றல்ல. அன்றைய காலகட்டத்தில் இலங்கையில் நிலவிய பெரும் தேசியவாதக் கொலைஞர்களுக்கு மத்தியிலும், புலிகள் போன்ற குறும் தேசியவாத பாசிச்ட்டுக்களுக்கும் இடையில் எம்மைப் போன்றவற்கள் தப்பித்து உயிர் வாழ ஹோ சி மின் போன்றவர்கள் பின்பற்றிய போராட்ட அணுகு முறைதான் காரணமாக அமைந்தது. மாறாக சாம் 7, ஏகே 47 அல்லது வேறுவகை சயனட் குப்பிகளோ எம்மைப் பாதுகாக்கவில்லை. மக்களே எமக்கு அரணாக இருந்தார்கள். கிடைத்த சில தற்காப்பு ஆயுதங்களை தருணம் பார்த்து எம்மை தற்காத்துக் கொள்ளமட்டும் பாவித்தோம். மாறாக எமது வீரப்பிரதாபங்களை காட்ட நாம் இவ் ஆயுதங்களைப் பாவிக்கவில்லை. கூடவே இத்தனை இராணுவத்தைக் கொன்றோம் என்று எண்ணிக்கையைக் காட்டிப் பெருமைப்படவும்; நாம் பாவிக்கவில்லை. ஹோ சி மின் னைனத்த இந்த நல் நாளை நாமும் நினைவு கூர்வதில் அவரின் பாதைகளைப் பினபற்றிய நாங்களும் பெருமையுடன் நினைவு கூர்கின்றோம். போராட்டக் களத்தில் ஹோ சி மின் இன் ஒரு பிரதிபலிப்பை பல தளங்களில் தோழர் நாபாவிடம் என்னால் காணக் கூடியதாக இருந்தது. வாழ்க தோழர் ஹோ சி மின் இன் நாமம். வாழ்க வியட்நாம் மக்களின் சோசலிச பயணம். (சாகரன்) (செப்ரம்பர் 03, 2015) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |