|
||||
|
கிழக்கின் தேர்தல்
உதயத்தை
தருமா....? தாயக கனவை
மீட்குமா....? (சாகரன்) இலங்கையின்
ஜனாதிபதித் தேர்தலை
விட பரபரப்பாக
விறு விறுப்பாக
பேசப்படுவது தற்போது
மாகாணசபைத் தேர்தல்.
மூன்று மாகாணங்களுக்கான
தேர்தல்கள் நடைபெ
உள்ள நிலையில்
தமிழ் மக்களின்
பாரம்பரிய பிரதேசத்திறகான
கிழக்கு மாகாணத்திற்கான
தேர்தல் எல்லாவற்றையும்
விட பரபரப்பாக
முக்கியத்துவம்
கொடுத்து பேசப்படுகின்றது.
மே 2009 இன் போருக்கு
பின்னரான கிழக்கு
மாகாணத்தின் தேர்தல்
பலராலும் உற்று
நோக்கப்படுகின்றது. வடக்கு
– கிழக்கு இணைந்த
மாகாண ஆட்சி முறைமைக்கு
பின்பு நடைபெற்ற
கிழக்கு மாகாணத்
தேர்தலில் தமிழீழ
விடுதலைப் புலிகளிடம்
இருந்து பிரிந்து
சென்ற கருணா அம்மான்,
பிள்ளையான் என்பவர்களின்
பெரும் ஆதிகத்துடன்
இலங்கை அரசின்
அனுசரணையுடன்
நடைபெற்ற தேர்தலில்
கிழக்கு மாகாணம்
ஒரு தமிழ் முதல்
அமைச்சரைப் பெற்றுக்
கொண்டது. விருப்பு
வாக்குகள், ஆசனங்கள்
அடிப்படையில்
முஸ்லீம் மக்களுக்கு
சார்பாக இருந்த
தேர்தல் முடிவுகளை
மீறி தமிழ் மக்களை
'உச்சி குளிர வைக்கும்'
நோக்கில் ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ஷவின்
தனிப்பட்ட 'ஆளுமை'
இனால் கிழக்கின்
முதல் அமைச்சர்
பதவி அன்று தமிழ்
மகன் ஒருவனுக்கு
கிடைத்து என்றால்
அது மிகையாகாது. சிலாபத்தில்
இருந்து பருத்தித்துறை
வரைக்கும், திருகோணமலையில்
இருந்து மன்னார்
வரைக்கும், மட்டக்களப்பில்
இருந்து மலையகம்
வரைக்கும் தமிழர்களின்
தாயகம் என வரிந்து
கட்டிக் கொண்டு
புறப்பட்டதுதான்
தமிழர் ஐக்கிய
விடுதலை முன்னணியின்
தனி நாட்டுக் கோரிக்கை.
தேர்தல் வெற்றிக்காக
மக்களை உசுப்பேத்த
முன்னெடுத்த கோஷம்
இது. மிதவாதக்
கட்சியின் செயற்பாட்டில்
தீவிரம் காணாது
என இளைஞர்கள் ஆயுதம்
எடுத்து போராட
வெளிக்கிட்டனர்
தனி நாடு கோரி.
இதில் பலர் சிலாபத்தையும்,
புத்தளத்தையும்
தமது தனிநாட்டு
வரைபடைத்திலிருந்து
நீக்க வேறு சிலர்
மலையகத்தை மட்டும்
வரைபடத்திலிருந்து
நீக்கி தமது தனிநாட்டு
வரைபடங்களை மாற்றியமைத்தனர்.
ஆனால் சராசரித்
தமிழனோ வடக்கு
கிழக்கு மட்டும்
தமிழரின் தாயகப்
பிரதேசம் என்று
பிரகடனப்படுத்தி
மகிழ்ந்தனர். ஆனால்
மலையகத்தில் வாழும்
தமிழ் மக்களோ,
வடக்கு கிழக்கு
பகுதிகளில் வாழும்
ஏனைய தமிழ் பேசும்
முஸ்லீம் மக்களோ
இந்த தனி நாட்டுடன்
தம்மை எப்போதும்
இணைத்துப் பார்க்கவில்லை.
இணைத்து பார்பதற்குரிய
நிலமைகளை பலரும்
தமது செயற்பாட்டின்
மூலம் தடுத்தே
வந்தனர். தமிழ்
மக்களின் தேசிய
இனப் பிரச்னைக்கான
போராட்டங்களுக்கான
நியாயத் தன்மைகள்
பலவும் இருந்தன.
பிர்தானிய ஏகாதிபத்தியம்
ஏற்படுத்திவிட்டு
போன பிரித்தாளும்
தந்திரத்தை இலங்கையை
ஆண்டு வருகின்ற
பேரினவாத அரசுகள்
தொடர்ந்தும் கைப்பிடிப்பது
முக்கிய காரணமாக
இருந்தும் வருகின்றது.
ஆளும் பேரினவாத
கட்சிகள் தேசிய
இனப் பிரச்சனைக்கு
தீர்வு காண முற்படும்
போதெல்லாம் எதிர்
கட்சிகள் அவற்றை
இல்லாமல் செய்வதற்காக
பாத யாத்திரை,
இனக்கலவரங்கள்,
பாராளுமன்றத்தில்
எதிர்த்து வாக்களித்தல்,
சட்ட மூலத்தை எரித்தல்
போன்ற செயற்பாடுகளினால்
இல்லாமல் செய்து
வந்ததே இலங்கை
வரலாறு. இவற்றையும்
மீறி சாத்தியப்படக்
கூடிய தீர்வுத்திட்ட
முயற்சிகளுக்கு
தமிழ் தலைமைகள்
எதிர் கட்சிகளுடன்
இணைந்து எல்லாவற்றையும்
குழப்பிய வரலாற்றையே
தமிழ் மிதவாதத்
தலைமைகளும், ஆயுதம்
தாங்கிய தீவிரவாதத்
தலைமைகளும் சிறப்பாக
புலிகளும் மேற்கொண்டன.
இவற்றிற்கு பல
உதாரணங்களை கூறலாம்.
தமிழ் தலைமைகள்
எப்போதும் தேசிய
இனப் பிரச்சiனையில்
சாணக்கியத்துடன்
நடக்கவில்லை. கிடைத்த
சந்தர்பங்களை
புத்திசாதுர்சியத்துடன்
அணுகி வெற்றி கொள்ளவும்
இல்லை. இது டி.எஸ் செனநாயக்கா
காலத்திலிருந்து
ஆரம்பித்து மகிந்த
ராஸபக்ஸ ஆட்சிக்காலம்
வரைக்கும் நடைபெற்றே
வந்திருக்கின்றது.
சுpறப்பாக எஸ்.டபிள்யூ.ஆச்.
டி. பண்டாரநாயக்கா
காலத்திலும், அவரின்
மகள் சந்திரிகா
குமாரரணதுங்க
காலத்தில் ஏற்பட்ட
உள்நாட்டு சாத்தியப்
பாடுகளை இல்லாமல்
செய்வதில் உச்சம்
பெற்றன. இதே போல்
ஜே.ஆர் ஆட்சிக்
காலத்து இலங்கை
இந்திய ஒப்பந்தமும்.
ரணில் ஆட்சிக்
காலத்து ஒஸ்லோவில்
ஏற்படவிருந்த
ஒப்பந்தமும் வெளிநாடுகளின்
ஆதரவுடன் ஏற்படவிருந்த
அரசியல் தீர்வுகளுக்கான
வாய்ப்புக்கள்
ஆகும். இவை எல்லாவற்றிலும்
தமிழ் தலைமைகளின்
சாணக்கிமற்ற செயற்பாடுகள்
சிலாபத்தில் இருந்து
பருத்தித்துறை
வரைக்கும், திருகோணமலையில்
இருந்து மன்னார்
வரைக்கும், மட்டக்களப்பில்
இருந்து மலையகம்
வரைக்கும் தமிழர்களின்
தாயகம் என்ற கனவை
மண்ணாக்கிய விடயங்கள். இவற்றை
விட சாத்தியமற்ற
கோரிக்கைகளையும்,
இருக்கின்ற பிரதான
பிரச்னையை விட்டு
இல்லாத பிரச்சனையை
முதன்மைப்படுத்தல்
என்ற தமிழ் தலைமைகளின்
அணுகுமுறையும்
அரசியல் தீர்வுக்கான
ஆரம்ப புள்ளியை
தடுத்து நிறுத்தியே
வந்திருக்கின்றன,
வருகின்றன. ஒரு
தினத்தில் சிறுபான்மை
மக்களின் அரசியல்
தீர்வை அடைவது
என்ற அணுகுமுறையும்
தீர்வுகளை எட்ட
முடியாமல் இழுத்துக்
கொண்டு போவதற்கு
காரணமாக அமைகின்றது.
ஏக தலைமை என்ற
இலங்கை தமிழ் காங்கிரஸில்
ஆரம்பித்த சிந்தனை
இன்று தமிழ் தேசியக்
கூட்டமைப்பு வரைக்கும்
நீடித்து இருப்பதுவும்
பேரினவாத அரசுகள்
தங்கள் இஷ்டம்
போல் பிரச்சனையைத்
தீர்காமல் இழுத்தடிப்பதற்கு
காரணமாக அமைகின்றன.
இதில் புரிகளின்
ஆயுதம் தாங்கிய
ஏகபோகம் தமிழ்
மக்கள் மத்தியில்
3 தலைமுறைக்கான
வலுவான அரசியல்
தலைமையை இல்லாமல்
கொன்றொழித்து
விட்டும் சென்றிருக்கின்றது. இன்று
வடக்கிற்குள்
மட்டும் சுருங்கிவிட்ட
தாயகக் கனவுகளை
வரும் 8ம் திகதி
நடைபெற இருக்கும்
கிழக்கு மாகாணத்
தேர்தல் கட்டியம்
காட்டி நிற்கின்றது.
கருணாவின் பிளவுடன்
வடக்கு, கிழக்கு
இணைதல் என்பதற்கான
சாத்தியப்பாடுகள்
அற்றே போய்விட்டன.
இதற்கான பொறுப்புக்களை
தமிழ் மக்கள் மத்தியிலிருந்த
ஏகபோக தலைமைகளே
ஏற்கவேண்டும்.
இதில் கணிசமான
பங்கு புலிகளையே
சாரும் என்பதே
யதார்த்தம். இது
விரும்பியோ விரும்பாமலே
ஏற்றுக் கொள்ள
வேண்டிய விடயம்.
கிழக்கு
மாகாணம் 35 வீதம்
தமிழர்களும்,
35 வீதம் முஸ்லீங்களும்,
29 வீதம் சிங்களவர்
என்ற இனப் பரம்பலை
தற்போது கொண்டுள்ளது.
இதில் எந்த சிங்கள
மகனும் தமிழ் கட்சிகளுக்கு
வாக்கு போடப் போவது
இல்லை. இதே போல்
எந்த முஸ்லீம்
மகனும் தமிழ் கட்சிகளுக்கு
வாக்கு போடப் போவது
இல்லை. தமிழ் கட்சி
என்றால் அது இன்று
கிழக்கில் தேர்தலில்
நிற்கும் தமிழ்
தேசியக் கூட்டமைப்புதான்.
ஆனால் தமிழ் மக்கள்
மத்தியிலும் முஸ்லீம்
மக்கள் மத்தியிலிருந்தும்
பொது ஜன ஐக்கிய
முன்னணிக்கு நிச்சயம்
வாக்குகள் விழும்.
சிங்கள மக்களின்
பெரும் பகுதி வாக்குகள்
இதே கட்சிக்கு
விழும். எனவே இனப்பரம்பல்
அடிப்படையில்
பார்க்கையில்
கிழக்கின் தேர்தலில்
பொது ஜன ஐக்கிய
முன்னணிக்கே வெற்றி
வாய்ப்புக்கள்
அதிகம். இதற்கு
அடுத்த படியாக
சிறீலங்கா முஸ்லீம்
காங்கிரஸிற்கு
இருக்கின்றது.
தேர்தல் முடிவுகள்
ஆட்சி அமைக்க சிறிய
குறை நிரப்பு தேர்தல்
வெற்றியாளர்கள்
தேவைப்படின் அதனை
பொது ஜன ஐக்கிய
முன்னணிக்கு வழங்க
முஸ்லீம் காங்கிரஸ்
தேர்தலுக்கு பின்பு
நிச்சயம் தயாராக
இருக்கும். இந்த
வகையில் பொது ஜன
முன்னணி ஆட்சி
அமைக்கவே அதிகம்
வாய்ப்புக்கள்
இருக்கின்றன. ஐதே
கட்சி தமிழ் மக்களின்
சிறிய பகுதியினரின்
வாக்குகளால் ஒரு,
இரு ஆசனங்களைப்
சிலவேளைகளில்
பெறலாம் மற்றபடி
ஆட்சியைத் தீர்மானிக்கும்
சக்தியாக இது உருவெடுக்கமாட்டாது.
ஆட்சியைத் தீர்மானிக்கும்
கிங் மேக்கராக
ராவூப் கக்கீம்
பெரும்பாலும்
இருப்பார் என்பது
வெள்ளிடை மலை.
அது பெரும்பாலும்
பொது ஜன ஐக்கிய
முன்னணியுடன்
இணைந்து தான். ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ஷ
இன் கூற்றின்படி
தமது முன்னணியில்
அதிக விருப்பு
வாக்குகள் பெறும்
ஒருவரே முதல் அமைச்சர்
ஆக்கப்படுவார்
என்பதினால் அது
பெரும்பாலும்
ஒரு முஸ்லீம் முதலமைச்சரை
கிழக்கில் ஏற்படுத்தவே
வாய்ப்புகள் அதிகமாக
உள்ளது. அதே வேளை
ஒரு சிங்கள் மகன்
முதல் அமைச்சராக
வர அதிக விருப்பு
வாக்குகள் வாய்ப்பு
அளிக்கலாம். அப்படி
நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு
இல்லை. ஆனால் மகிந்த
இந்த சூழ் நிலையை
தவிர்க்கவே விரும்புவார்.
குpழக்கில் கிடைக்கப்
பெறப் போகும் மாகாண
சபைத் தேர்தல்
முடிவுகள் சிலாபத்தில்
ஆரம்பித்து மலையகம்
வரையிலான தமிழர்களின்
தாயக கனவு தேர்தல்
முடிவுகளுடன்
வடக்கிற்குள்
குறுகிவிட போகின்றதுதான்
பரிதாபம். இதற்கான
அடிக்கல்லை டி.எஸ.;
செனநாயக்காவும்,
ஜிஜீ பொன்னம்பலமும்
நாட்டி விட்டுச்
சென்றாலும் அவரகளின்
வழித் தோன்றல்கள்
இதனைச் செவ்வனவே
செய்து முடிகின்றனர்
இன்று. இதில் ஆயுதம்
தாக்கி போராடிய
தமிழீழ விடுதலைப்
புலிகளுக்கும்,
ஜேவிபி இற்கும்
கணிசமான பங்குகள்
உண்டு. தேர்தல்
வெற்றிக்காக இனவாதம்
பேசி வாக்குகள்
கேட்கும் கூட்டதினருடன்
இணைந்தவர்கள்
வரலாற்றில் தமிழ்
தலைமைகள் பொன்னம்பலம்
காலத்திலிருந்து
செய்து வரும் தவற்றையே
இத் தேர்தலிலும்
செய்திருக்கின்றார்கள்.
இது ஆயுதம் தாங்கி
போராடப் புறப்பட்ட
அமைப்பிலிருந்து
இன்று தேர்தலில்
நிற்கும் தமிழ்
தேசியக் கூட்டமைப்பு
உறுப்பினர்களுக்கும்,
முஸ்லீம் காங்கிரஸ்
உறுப்பினர்களுக்கும்,
பொது ஜன ஐக்கிய
முன்னணி உறுப்பினர்களுக்கும்,
ஜேவிபி இற்கும்
பொருந்தும். தேர்தலில்
ஒரு பரந்து பட்ட
இடதுசாரி, ஜனநாய
ஐக்கிய முன்னணியை
அமைத்து மக்களை
சந்திக்கப் புறப்பட்டிருந்தால்
தேர்தல் வெற்றிகளினூடாக
இல்லாவிட்டாலும்
கருத்தியல் ரீதியில்
ஒரு பலமான தீர்கமான
செயற்பாட்டை ஆரம்பித்து
இருக்கலாம். மீண்டும்
மீண்டும் தவறு
விடும் தலைமைகள்
சிங்கள் மக்கள்
மத்தியில் மட்டும்
அல்ல தமிழ் மக்கள்
மத்தியிலும் இதுவே
இருக்கின்றது.
பாவம் (கிழக்கு)
மக்கள்.
(Saakaran)
(September
06, 2012) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |