|
||||
|
என் மனவலையிலிருந்து........! மாணவியின் கொலை விட்டுச் சென்றிருக்கும் செய்தி (சாகரன்) இற்றைக்கு 40 வருடங்களுக்கு முன்பு நமது நாட்டில் கொலை என்ற சம்பவம் ஒரு தலைமுறையில் ஒருவர் இல்லது அதுவும் இல்லாது இருத்தல் என்பதாகவே இருந்து வந்திருக்கின்றது. அப்படி தலைமுறைக்கு ஒரு கொலை என்பது கூட பல தலைமுறைகளுக்கும் பேசப்படும் ஒரு விடயமாகவும் இருந்து வந்திருக்கின்றது. பிரபலமான கோகிலாம்பாள் கொலை அப்படிப்பட்டதே. ஆனால் இன்றோ யுத்த காலத்திலும் சரி, யுத்தம் முடியுற்ற தற்போதைய நிவையிலும் சரி கொலை என்பது சர்வசாதாரணமாகிவிட்டது. இதற்கு ஒவ்வொருவரும் மாற்றுத் தரப்பினரிடம் குற்றம் கூறுவதும், வசைபாடுவதும் இயல்பாகிப் போய்விட்டது. மரணங்களைக் கொண்டாடும் ஒரு சமூகத்தை உருவாக்கியதில் மிகப்பெரிய பங்கை வகித்தவர்கள் புலிகளே இவர்களே துரோகிகள், சமூகவிரோதிகள், தம்மைவிட்டுப் பிரிந்து சென்றவர்கள் தமக்குள்ளேயே பிரிந்து இருப்பவர்கள், மாற்றுக் கருத்தாளர்கள், கேள்வி கேட்கும், பொது மக்கள். மாற்று இனத்தவர்கள் என்று யாபபேரையும் கொன்றொழித்தனர். அது மட்டுமல்லாது இதனை கொண்டாடும் ஒரு கூட்டத்தையும் உருவாக்கிச் சென்றவர்கள். தலைவர் எப்படியும் 'முடித்து'ப் போடுவார் என்று கொண்டாடும் சமூகத்தின் ஒரு பகுதியினரை உருவாக்கி பாலசிங்கம் மூலமும் இதனைத் தொடர்ந்து தமிழ்ச்செல்வன் மூலமும் வியாக்கியானம் கொடுத்தவர்கள். சமூகத்தில் நீதி, நியாயம், ஒழுக்கம், நெறிமுறை குற்றச் செயற்களை தடுக்க செயற்படுதல், ஊரைக் கண்காணித்தல் என்ற பலவகை செயற்பாடுகளை ஒரு காலத்தில் ஊர்ச்சங்கங்கள் குறிப்பாக வாசிக சாலைகள், சனசமூக நிலையங்கள் செய்து வந்தன. இவை ஒரு பலமான அமைப்பாக ஊர்கள் தோறும் இருந்தே வந்தன. விடுதலை அமைப்புக்களின் ஆயுதச்சாலாச்சாரத்தின் வளர்சியும், இதனைத் தொடர்ந்த புலிகளின் ஏகபோகம் இந்த தன்னிச்சையான சமூக இயக்கங்கள் யாவற்றையும் இல்லாது செய்து விட்டது. புலிகளின் அமைப்பைத் தவிர வேறு அமைப்புகள்கள் இருக்க முடியாது என்ற நிலையில், சனசமூக நிலையங்களின் செயற்பாடுகள் மட்டும் அல்ல, ஒரு மட்டத்தில் அற நெறியை செயற்படுத்த முணன்ற கோவிகளும் தமது சுயாதீன செயற்பாட்டை இழந்து செயற்பட முடியாமல் போயின. இது போன்ற அமைப்புக்களின் செயற்குழுகள் என்று ஏதும் இல்லாமல் செய்யப்பட்டுவிட்டன. இந்த இடைவெளி பாரிய கண்காணிக்கும் நிலையங்களை கிராமங்கள் தோறும் இல்லாமல் செய்து விட்டது. இந்த அமைப்புக்கள் மட்டும் பலமாக இருந்திருப்பின் புங்குடுதீவு பாடசாலை மாணவி மாவச் செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கும்போது தெருவிலிருந்து தூக்கிச் சென்று சின்னாபின்னமாக்கி கொலை செய்திருக்க வாய்புக்கள் அரிதாகவே இருந்திருக்க வாய்ப்புக்கள் அதிகம். ஆயுதப் போராட்டதில் ஏற்பட்ட கொலைக் கலாச்சாரம் கொலைகாரர்களை மலிதானதாக பார்க்க வைக்கும் அல்லது செயற்பட வைக்கும் ஒரு சமூகப்பிரிவை ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கின்றது. இதுவும் கொலைகள் மலிந்து போவதற்கான இன்னொரு காரணிகளாக அமைகின்றது. ஒரு கதைக்கு வைத்துக் கொள்வோம் புலிகளின் பிரசன்ன காலத்தில் இவ்வாறான குற்றச் செயல்கள், கொலைகள் இல்லை என்று. அப்படி இருந்திருந்தால் இன்று அவர்கள் இல்லாது இருக்கும் போது மட்டம் இது எப்படி அதிகரித்தது. புலிகளின் துப்பாக்கியிற்கு பயந்தே இந்த குற்றவாளிகள் குற்றங்களை செய்யாதிருந்தனர் என்ற முடிவுக்கே வரமுடியும். மாறாக மக்களுக்கான அறிவுட்டல்கள், ஒழுக்க நெறிப் பயிற்சிகள் மூலம் இவை இல்லாமல் போயிருந்தன என்பது ஏற்புடையதாக இருக்கவாய்புக்கள் இல்லை. இவ்வாறான செயன்முறை மூலம் குற்றச் செயல்கள் குறைக்கப்பட்டிருந்தால் தற்போதைய நிலமையில் அறிவூட்டப்பட்ட நெறிப்படுதப்பட்ட இந்த சமூகம் தொடர்ந்தும் குற்றச் செயல்கள் குறைந்த சமூகமாக வளர்ச்சி அடைந்திருக்கும். மாறாக நடைபெறும் விடயங்கள் இவற்றிற்கு எதிர்வினையாகவே இருக்கின்றது. துப்பாக்கி முனையில் மட்டும் அதிகாரம் பிறக்காது என்பது இதுதான். உண்மையில் இந்தக் குற்றங்களைக் களைவதற்குரிய சமூகவேலைகள் பாரியளவில் நடைமுறை இல்லை. மாறாக துப்பாக்கியால் மிரட்டும் தர்பாரே நடைபெற்றிருக்கின்றது. யுத்தத்திற்கு பின்னரான் இந்த சீரழிவுகளும், கொலைகளும் இவற்றையே எடுத்தியம்பி நிற்கின்றன. மனித குலத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும் போதைவஸ்து கடத்தல் கும்பலின் தலைவன், குற்றவாளி மயூரனின் சட்டரீதியான மரணதட்டனையின் அடிப்படையிலான துப்பாக்கிச் சூட்டு கொலைக்கு கண்ணீர்கள் வடித்தளவிற்கு மாணவியின்; கொலை புலம் பெயர் தேசத்தவரால் உணரப்படவில்லை என்பது எமது சமூகத்தில் புரையோடிப்போய் இருக்கும் உண்மையான சமூக அக்கறையற்ற தன்மையின் வெளிபாடாகவே பார்க்க முடியும். வலிந்த மரணங்களை நாம் மறுதலித்தாலும், குற்றங்களை மறுதலிக்க முடியாது என்பதை மயூரனின் விடயத்திலும், மாணவியின்; கொலையில் சம்மந்தப்பட்டவர்கள் விடயத்திலும் பொதுமையாகத்தான் பார்க்கப்படவேண்டும். மேலும் இந்த சமூகத்தில் புரையோடிப் போய் இருக்கும் போதைவஸ்து குற்றங்களும், பெண்கள் மீதான் பாலியல் வன்புணர்வு குற்றங்களும் எந்த சமரசமும் இன்றி எதிர்த்துப் போராடி நிறுத்தப்பட வேண்டியவையே இதனைச் செய்து முடிக்க தனித்தனி மனிதர்களாக அன்றி சமூகமாக இணைந்து போராடுவதே சரியானது மட்டும் அல்ல, வெற்றி அளிக்கக் கூடியதும் ஆகும். இதற்கான கட்டமைப்புக்களை எமது பிரதேசங்கள் எங்கும் உருவாக்கப்படவேண்டும். எனவே மீண்டும் வாசிக சாலைகளும், விழிப்புக் குழுக்களும், நெறப்படுத்தல் சபைகளும் சுயாதீனமான செயற்பாட்டிற்காக உருவாக்கப்படவேண்டும். மாறாக தேர்தல் நாற்காலியை மையப்படுத்தி பிரபாகரன் இருந்தால் இது நடந்திருக்காது என்ற பேச்சுக்களும், தீவுப்பகுதி எங்கள் கட்டுப்பாட்டில் மட்டும் இருந்திருந்தால் இதுபோல் ஏதும் நடைபெறவிட்டிருக்கமாட்டோம் என்ற தனியோட்டங்களும், கதிரைகளை நோக்கிய ஓட்டங்களும் சமூக முன்னேற்றத்திற்கு பயன்படப்போவதில்லை. இதன் அர்த்தம் இவர்கள் சமூக அக்கறைச் செயற்பாட்டில் ஈடுபடக் கூடாது என்பதல்ல. இவை யாவற்றின் மத்தியிலும் இந்தக் கொலைக்கு எதிரான விழிப்புணர்வுடன் கூடிய மாணவர்களின் போராட்டம் வரவேற்கப்படவேண்டியதும் சரியானதும் ஆகும்,. இதனை சமூக ஆர்வலர்கள் தொடரந்து மன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவை எமது சமூகத்தில் அதிகமாக இருந்து கொண்டே இருக்கின்றது. (Saakaran) (May 16, 2015) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |