|
||||
|
நிஜங்களை பற்றி சிந்திப்போம்... செயற்படுவோம் (சாகரன்) புலிகளும் அவர்களது தளபதிகள், அவர்களின் முன்னாள் தலைவர் பிரபாகரன் பற்றியும் உலவி வரும் 'அவர் வருவார் ஆனால் வரமாட்டார்' என்ற மாயாவித்தன விக்கிரமாதித்தன் கதைகள் விடயத்தில் சற்று ஒதுங்கியே சூத்திரம் இருக்க விரும்புகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிகளை தமக்கு சாதகமாக்கிக் கொண்டு உயிருடன் இருக்கின்றார் என்ற வாதப் பிரதிவாதங்களில் கவனம் செலுத்தி எமக்கு இருக்கும் மிக முக்கியமான கடமைகளில் உள்ள கவனத்தை நாம் சிதறடிக்க நாம் விரும்பவில்லை. ஆனால் வாசகர்களின் சுயமான கருத்தாடல்களை நாம் தடை செய்யப் போவதும் இல்லை. இதற்கான களங்களை தேவையானபோது நாம் ஏற்படுத்திக் கொடுப்போம.; புலிகளும், புலிகளின் தளபதிகளும், புலித்தலைவரும் முடிந்த கதை என்பதே எமது நம்பிக்கை, நிலைப்பாடு, ஏன் உண்மையும் கூட. சரணடைந்த பின்பு வேண்டியவற்றை வாய்மூலம் எடுத்துவிட்டு உறுதிப்படுத்திய உயிர்பறிப்புக்களே புலிகளின் முக்கிய உறுப்பினர்களுக்கு கடைசித்தினங்களில் பெரும்பாலும் நடைபெற்றன என்பதும் நிஜம். புலிகளினால் சேகரிக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பல கோடி டாலர் காசும், இதற்கான பங்குச்சண்டையுமே. இப் பணத்தை கூறுபோடுவதற்கு யார் வாரிசு என்ற வாரிசு சண்டையும் முடிந்தால் இன்னும் திரட்டலாம் என்ற செயற்பாடுகளும் நிஜம். இதற்கு பலி ஆக இன்னும் சில வெளிநாடு வாழ் தினம் தினம் உழைக்கும் சிலர் தயார் என்பதுவும் நிஜம். இதற்காக கவன ஈர்ப்புக்களும், வாஷிங்டனுக்கு வண்டி கட்டுவதும் இன்னும் சில தினங்கள் நடைபெறும் என்பதுவும் நிஜம். இதனை வெளிநாட்டு ஊடகங்களும், தலைவர்களும் கண்டுகொள்ளப்போவது இல்லை என்பதுவும் நிஜம். தமிழ் நாட்டில் இவ்வகையான பிரச்சாரங்கள் பத்திரிகை வியாபாரங்களை நோக்கமாக கொண்டு பரபரப்பை சில பத்திகைகள் கிளப்பும் என்பதுவும் நிஜம். இது இதனைவிட பரபரப்பான செய்திகள் வந்ததும் இதனைக் கொண்டு பத்திரிகை வியாபாரம் செய்யலாம் என்று ஆனதும் நின்று விடும் என்பதும் நிஜம். மாதக் கொடுப்பனவுகள் நின்றதும் வைகோ வகையறாக்களின் பெரும் குரல் அடங்கிவிடும் என்பதும் நிஜம் பிரபாகரன் உயிருடன் இருந்தால் என்ன இல்லை இல்லாவிட்டால் என்ன (புலிகளின்) எல்லாம் முடிந்து விட்டது என்ற முடிவிற்கு பல வெளி நாடுவாழ் தமிழர்கள் வந்து விட்டார்கள் என்பதும் நிஜம். மதில் மேல் பூனையாய் இருந்து ஆதரவாளர்கள் என்று காட்டிக் கொண்ட பலர் கட்சிமாறும் செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கி விட்டார்கள் என்பதும் நிஜம். 'அன்புக்கட்டளை'க்கு ஏற்ப கடையடைத்து கவன ஈர்ப்பு, ஊர்கோலம் போக உதவிய கடைக்காரர்கள் இனி 'அன்புக்கட்டளை'யை ஏற்ற மறுப்பார்கள் என்பதும் நிஜம். இவை எல்லாவற்றையும் விட போரும் வேண்டாம் புலியும் வேண்டாம், ஆமியும் வேண்டாம், ஆயுதங்களும் வேண்டாம், புலம் பெயர் தமிழர்களின் தலமையும் வேண்டாம் என்பதே இலங்கை வாழ் தமிழர்களின் இன்றைய நிலை என்பது நிஜத்திலும் நிஜம். மேலும் நிஜத்திலும் நிஜம் தமிழ் மக்களுக்காக தலைமைமை கொடுக்க பலர் இன்னும் ஈழத்தில் உள்ளனர் என்பது. அவர்கள் யார் யார் என்பதுவே இனிவரும் நாட்களின் செய்திகள் ஆகும். நிச்சயமாக வுNயு அல்ல. இன்னும் சில தினங்களுக்குள் முP இன் கைதும் நிஜமாகும். (சாகரன்) (வைகாசி 22, 2009) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |