Contact us at: sooddram@gmail.com

 

புலிகளின் ஜனநாயகமும்!  சூடுகண்ட தமிழர்களும்!

(சாகரன்)

புலிகள் ஜனநாயக நீரோடையில் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கு இலங்கை அரசு அனுமதி மறுத்துள்ளது. வன்னி யுத்தத்தின் போது பல இலட்சம் மனிதக் கேடயங்களாக பிடித்து வைத்திருந்து அவர்களின் மரணங்களுக்கு காரணமாக இருந்த புலிகள் ஜனநாக நீரோடையில் தமது முதுகு எலும்பு முறிக்கப்பட்ட நிலையில் இணையப் போவதாக தற்போது அறிவித்துள்ளது நகைப்பிற்கும் நகைப்பான இடம்.

யுத்தம் நடைபெறும் போது துப்பாக்கிகளை கீழேவைத்து சரணடைந்து ஜனநாயக வழிமுறைக்கு திரும்பும் அணுகுமுறை மூலம் தங்களால் போர்முனை கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்களை விடுவித்து போரை முடிவிற்கு கொண்டு வருமாறு புலிகள், புலி முகவர்கள் தவிர்ந்த உள்ளுர், சர்வ தேச அமைப்புக்கள் விடுத்த வேண்டுகோள்களை நிராகரித்த புலிகள் எல்லாவற்றையும் இழந்தவுடன் தமிழ் சினிமா படத்தில் கடைசி காட்சியில் தான் திருந்திவிட்டேன் என்று எம்ஜிஆர் காலத்து வில்லன் சொன்னதும் அதனை ஏற்கும் நிகழ்வு சினிமாவிற்கு ஏற்புடையதாக இருக்கலாம். இவை பாரதிராஜ, சீமான் போன்றவர்களுக்கு திரைக்கதை அமைக்க உதவுமே தவிர, நிஜ வாழ்வில் அதுவும் புலிகளின் வாக்குறுதியில் எக்காலத்திலும் நம்பக்கூடிவ விடயம் அல்ல. அங்கங்கே புதைத்து வைத்திருக்கும் இரும்புகளை தோண்டி எடுத்து பிஸ்ரல் குழுக்களினால் தனிநபர் கொலைகளையும், கிளைமோர் தாக்குதல்களையும் பொங்கிஎழுந்து? செய்யத்துடிக்கும் கைகளின் விலங்கை கழற்றி விடுமாறு கோரும் கோரிகையாகத்தான் புலிகளின் ஜனநாயக நீரொடை இணைவைப் பார்க்க முடியும்.

ரணில் - பிரபா காலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் அரசியல் அலுவலகம் அமைத்து அரசியல்? நடத்த அனுமதித்த சுதந்திர நடமாட்டத்தில் புலிகள் செய்தது தினம் 5 பேர்வரையிலான மாற்றுக்கருத்தாளர்களையும், புலிகளுக்கு எதிராக கேள்வி எழுப்பிய பொது மக்களை கொலை செய்ததுதே. இதில் குஷி கண்ட புலிகள் இறுதியில் தமிழ் மக்கள் தாமாகவே எழுந்து பொங்கு தமிழராக கிளைமோர் தாக்குதலில் ஈடுபட்டதும் இதன் மூலம் குறைந்த பட்சம் நிலவி வந்த இயல்பு நிலைகளை இல்லாதொழித்து மக்களை இராணுவத் தாக்குதல் பொறிக்குள் வீழ்த்தியதை நாம் அறிந்ததே. எனவே புலிகளின் ஜனநாய செயற்பாடுகளின் விருபம் இவ்வாறுதான் எப்போதும் இருந்து வந்திருக்கின்றது. கூடவே யாழ்பாணத்தில் இருந்து இடம் பெயர்ந்து தற்காலிகமாக வாழ்ந்து வந்த முக்கிய இடங்களான வவுனியா, திருகோணமலை போன்ற இடங்களில் தமிழ்மக்கள் சற்றே இயல்பு வாழ்விற்கு திரும்பி இருந்த வேளைகளில் அவ்அவ் போது தேவையற்ற குண்டு வெடிப்புக்களை மேற்கொண்டு இihணுவத்தை வலிந்து தாக்குதலுக்கு இழுத்து பதட்டமான நிலைகளை அங்கே ஏற்படுத்தினர்.

ஏகபோகத்தை தனது அரசியல் கொள்கை(ள) ஆக உள்ள புலிகளிடம் ஜனநாயகம் பற்றி என்ன எதிர்பார்க்க முடியும். மறு கருத்து, மாற்றுக்கருத்து, கருத்துப்பரிமாற்றம் என்பனவற்றை தமது இயக்கத்தினுள்ளேயே கடைபிடிக்காத புலிகள் ஜனநாயகம் பற்றி பேச புறப்பட்டதை இட்டு நகைப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும். தமது இயகத்திற்குள் ஜனநாயக மறுப்பை 'இயக்கக் கட்டுப்பாடு' என்ற ஒழுக்க விதிகளுக்குள் அடக்கி தூய்மைவாதம் பேசி தலைவரின் காந்தர்வ மணத்தில் தூய்மை வாதத்தை தூக்கி எறிந்த புலிகள் தற்போது எல்லாவற்றையும் இழந்த பின்பு ஞானம் பிறந்தது போல் ஜனநாக அரசியல் பாசாங்கு செய்வது எஞ்சியிருக்கும் சில மாற்றுக் கருத்தாளர்களை முதலில் கொலை செய்வதற்கே. இதன் பின்பு வழமைபோல் மக்களின் இயல்பு வாழ்க்கையை குழப்ப மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் மட்டும் குண்டுகளை வெடிக்கவைக்க இராணுவம் திருப்பித்தாக்க மரணங்கள் ஏற்பட இந்த பிணங்களை வைத்து அரசியல் வியாபாரம் செய்யும் கனவுகளே புலிகளின் ஜனநாயகம் என்பதன் விருப்புக்கள் எல்லாம்.

புலம் பெயர் நாடுகளில் புலிகளில் தினமும் தற்போது நடாத்திவரும் உலகத்தமிழர்களின் 'இரகசிய' தொடர் கூட்டங்கள் இவர்களின் ஜனநாயகத்தை எடுத்துக்காட்டுகின்றன. இக் கூட்டங்களில் சொத்துக்களை தன்னடக்கிக் கொள்ள முயலும் கூட்டங்கள் நாடுவிட்டு நாடு சென்று தமது 'டாக்டர்' பட்டங்களை பாவித்து மிரட்டும் நடவடிக்கைகள் நிறையவே அரங்கேறி வருகின்றன. வழமைபோல் இதற்கும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டமே தலைப்பில் இடப்படும் கோஷம். இதன் தொடர்சியாக பல காட்டிக்கொடுப்பு நிகழ்வுகள் குத்து வெட்டுக்கள் இவர்களுக்குள்ளேயே ஆரம்பமாகிவிட்டது. 'தலைவரின் பாதையில் பயங்கரவாதம்', 'தலைவரின்பாதையில் ஜனநாயகம்' இதில் எது எங்கள் பாதை என்ற குத்து வெட்டு. இவற்றின் ஆரம்பமே புலிகளின் வானொலி, தொலைக்காட்சிகளில் கேபி யின் அறிக்கையுடன் ஆரம்பமான துக்கதின முகாரி இராக இசை சில மணிநேரமும், பின்பு சடாரென இவை அனைத்தும் நிறுத்தப்பட்டு எழுச்சிதின ஆனந்த இராகங்களும் இசைக்கப்பட்ட வெக்கங்கெட்ட நிகழ்வுகள். கேபி துரோகி ஆக்கப்பட்ட நிகழ்வு. இவற்றை சர்வதேச சமூகங்கள் பார்த்து சிரிக்கின்றன.

வெளி நாடுகளில் முகாரி ராகத்திற்கும், ஆனந்த ராகத்திற்கும் இடையில் புலிகளின் 'ஜனநாக அணுகுமுறை' வானொலி, தொலைக்காட்சி நிலையங்களில் அரங்கேற்றப்பட்டது தற்போது ஊர் அறிந்த உண்மை. தலைவரின் பிறந்த ஊர் சண்டியர்கள் (இவர்களும் உலகத்தமிழர்கள்தான்) தமது பழைய பாணி ஜனநாயக அணுகுமுறையில் ஒலி, ஒளி பரப்பிக் கொண்டிருந்த முகாரியை ஆனந்தமாக தம் முன்னிலையில் மாற்றி ஒலி, ஒளி பரப்ப வைத்து விட்டுத்தான் கலையகத்தில் இருந்து வெளியேறினர். இதற்கு அவர்கள் பாவித்தது புலிகளின் ஜனநாயக அணுகு முறையைதான். இதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது உலகத்தமிழர்கள் தொடர் கூட்டங்கள் வெகு விமர்சையாக நடை பெறுகின்றன. இக் கூட்டங்களின் குறிக்கோள் ஒன்றுதான். கணக்கில் காட்ட முடியாத சொத்துக்களை தன்னடக்கிக் கொள்ளுதல். என்ன? கோடு கச்சேரி என்று அலைந்து சொத்தை உரிமையாக்கி கொள்ளும் சொத்துக்களா இவை?

அது சரி எத்தனை தடவைதான் ஒரு மனுசனை? சாகடிப்பீர்கள். என்னவோ அந்த மனுசன் மனித குலத்திற்கு செய்த மனித விரோதச் செயல்லளுக்காக இப்படியா போட்டு வதைக்கிறது. சரி காதலிச்சவனை கொண்டான் தன்னை யாரும் காதலிக்கவில்லை என்பதற்காக. கை கோத்து நிற்றவர்களை கொண்டான் ஒற்றமையை குலைத்து ஏகபோகம் நிலைநாட்ட. தன்னுயிர்காக்க பல ஆயிரம் மக்களை பலி கொடுத்தான் கேட்க யாரும் இல்லை என்ற மமதையில். இறுதியில் தன்னுயிர்காக்க சயனட் அருந்தாமல் புறமுதுகு காட்டாமல் சரண் அடைந்தான்...... என்ன எல்லோரையுமா கொண்டான்?...... இறுதியில் திருந்தி ஆமியை கொல்லாமல்தானே துப்பாக்கியை மௌனமாக்கினான். இதற்கு இப்படியா தண்டனை வழங்குவது. இதுவா இயக்கக் கட்டுப்பாடு? தலைவருக்கு என்ன இயக்க கட்டுப்பாடு. அது எல்லாம் அவரின் கல்யாணத்தோடு முடிந்துவிட்டது. செத்தவனை செத்தவனாக இருக்க கூட விடமாட்டீர்கள் போல இருக்கு.

'எங்களின் ஜனநாயகத்தில் இதுவெல்லாம் சகஜம் அப்பா' என்று நீங்கள் கூறுவது எங்களுக்கு தெரிந்ததினால் தான் கூறுகின்றோம், நீங்கள் உங்கள் ஜனநாயக வழிக்கு திரும்புவதை நாம் ஏற்றகப்போவது இல்லை. உங்கள் ஜனநாயகத்தை நாம் நம்பப்போவதும் இல்லை. விருந்திற்கு அழைத்து கொன்றவர்கள் நீங்கள். மாலை போட்டு வரவேற்று கொன்றவர்கள் நீங்கள். அகதியாய் வந்து சாப்பாட்டிற்கு அல்லல்பட்டவனுக்கு சாப்பாடும் படிப்பும் தனது வறுமையிலும் செய்தவரை கொன்றவர்கள் நீங்கள். 'தம்பி தெளிவல்லாமல் இருக்கின்றாய் போய் உன் பொறுப்பாளரைக் கூட்டிவா அவருடன் பேசுகின்றேன்' என்னதற்காக கொன்றவர்கள் நீங்கள். காதலித்ததற்காக படுக்கையில் கொன்றவர்கள் நீங்கள். தலைமையில் பங்கு கேட்டுவிடுவானோ என்று சந்தேகப்பட்டு கொன்றவர்கள் நீங்கள். போராடும் உரிமையை மறுத்து கொன்றவர்கள் நீங்கள். தஞ்சம் கொடுத்து பணம், ஆயுதம் கொடுத்தவரை கொன்றவர்கள். கேள்வி கேட்வர்களை கொன்றவர்கள். தப்பி தனிவழியில் சென்றவர்களை கொன்றவர்கள் நீங்கள். ஜனநாயக சமாதான பாதையை ஏற்க விரும்பியவர்களை கொல்லமுயன்றவர்கள் நீங்கள் இறுதியில் உயிர் காக்க தப்பி ஓடியவர்களை வகை தொகையில்யாமல் கொன்றவர்கள் நீங்கள். .....

நீங்கள் சொல்கின்றீர்கள் நாம் ஜனநாயகப்பாதைக்கு வருகின்றோம் என்று. எப்படி ஐயா நம்புவது. நாம் உங்களால் ஏமாந்தது ஒரு தடவையா? இரு தடவையா......? ஜனநாயக மறுப்பு என்பதுதானே உங்கள் பிராணவாயு இது இல்லாமல் உங்களாலேயே உயிர் வாழ முடியாதே. ஏன் ஐயா நீங்கள் 'ரிஸ்க்' எடுக்கின்றீரகள். இரும்புகள் இல்லாமல் நீங்கள் எப்படி ஐயா உயிர் வாழ முடியும் வன்னி நலன்புரி முகாங்களில் ஆயுதம் இன்றி மக்களோடு மக்களாக அடைக்கப்பட்டிருக்கும் உங்களுக்கு மக்கள் தரும் தண்டனைகள் மரண தண்டனைவரை சென்றுள்ளதாக செய்திகள் கசியத் தொடங்கிவிட்டன. உங்கள் இடுப்பில் இரும்பு இல்லாமல் உங்கள் ஜனநாயகம் இல்லை. அதுதான் சொல்கின்றோம் உங்கள் ஐனநாயகத்தின் மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை. அவ்வளவு சூடுகளை மக்கள் கண்டுவிட்டார்கள். இனி அவர்கள் அடும்பங்கரையை நாடமாட்டார்கள். இது இலங்கைவாழ் தமிழ் மக்கள் பற்றி.

புலன் பெயர் தமிழ் மக்களுக்கும் உங்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. அவர்கள் வேறு அர்தத்தில், தேவைகளுக்காக உங்கள் ஜனநாயகத்தை விரும்பமாட்டார்கள், நம்பமாட்டார்கள், உங்கள் ஆயுதங்களைத்தான் விரும்புவார்கள். அப்போதுதான் தொடர்ந்தும் அகதிநிலை கோரிக்கையில், நிரந்தர வதிவிட அந்தஸ்துகளில் வெளிநாடுகளில் குளிர்காயலாம், பிழைப்புக்களை நடத்தலாம், தங்கள் பிள்ளைகளுக்கு சகல காப்புறுதிகளையும் எடுத்து வைத்துக்கொண்டு, மீண்டும் இலங்கையில் ஒரு வழியும் இல்லாத ஏழைப் பிள்ளைக்கு குண்டைக்கட்டி அனுப்பி வெடிக்க வைத்து சதைப்பிண்டங்களின் எண்ணிக்கையை வைத்து வீரப்பிரதாபங்களை கதைக்கலாம், பொங்குதமிழ் செய்யவாம், கொண்டாட்டம் செய்யலாம். தமிழ்நாட்டு வைகோ, சீமான் களுக்கும் உங்கள் ஐனநாயகத்தில் பணநாயகத்தை காணமுடியாது என்பது நன்றாக தெரியும். இவர்களும் உங்கள் ஐனநாயகத்தை விரும்பப் போவதுதில்லை. நக்கிரன் வகையறாக்களுக்கும் உங்கள் ஜனநாயகம் மஞ்கள் பத்திரிகை வியாபாரத்தின் வசூலை குறைத்துவிடும். இவர்களும் உங்கள் துப்பாக்கியில்லா ஜனநாயகத்தை விரும்பமாட்டார்கள். எனவே யாருக்கும் உங்கள் ஐனநாயகத்தில் நம்பிக்கை இல்லை.

அப்படி ஒரு அனுவபவம் அவர் அவர் நிலமைகளில். எங்களுக்கு புரிகின்றது உங்கள் நிலமை. நீங்கள் மட்டும் வாழ்ந்த உல்லாச அராஜக சாம்ராஜ்யம் கொடுத்த ஏகபோக வாழ்க்கை விடுத்து உழைத்து வாழுதல் உங்களுக்கு கஷ்டம் என்று. ஆனால் நாம் மீண்டும் ஒரு 'ரிக்ஸ்' எடுக்கத்தயார் இல்லை எங்கள் மக்களின் நல்வாழ்விற்காக.

இந்த யுத்தம், ஊருக்கொரு அங்கவீனர்கள் இருந்த எம்தேசம் இன்று வீதிக்கொரு அங்கவீனர்களை உருவாக்கிவிட்டது, துப்பாக்கிச் சனியன் தனது வீரதாபங்ளை வீடுதோறும்காட்டி வன்னியின் சகல வீட்டிலும் மரண ஓலத்தை கேட்க வைத்துவிட்டது. ஊருக்கே சாப்பாடு போட்ட வன்னி மக்களை சோற்றுக்கு பிச்சையெடுக்க அலையவி;ட்டது. நெல் விளையும் பூமியில் புல்லுக்கூட முளைக்காமல் செய்துவிட்டது கந்தகவாயு. கடல் மீன்கள் எல்லாம் எங்கள் கரையைவிட்டு ஓடிவிட்டன பாதுகாப்பு தேடி. அறிவு ஜீவிகள் அழிக்கப்பட்டனர் அல்லது அடுத்த நாட்டிற்கு ஓடிவிரட்டப்பட்டனர். ஏதிலிகள் எரிகுண்டுகளுடன் எதிரியைகொல்லவும், தலைவரை காப்பாற்றவும் என எரிக்கப்பட்டு விட்டனர். எம் குலத்து பெண்கள் தனித்துவாழ நிர்பந்திக்கப்பட்டனர். எங்கள் பிஞ்சுக் குஞ்சுகள்; அநாதைகள் ஆக்கப்பட்டனர். இவையெல்லாம் 2002 ஆண்டு ரணில் - பிரபா சமாதான ஒப்பந்தமும் அதன்பின்னான புலிகளின் ஜனநாயக செயற்பாடுகளும் எங்கள் மக்களுக்கு தந்த மிகப்பெரிய பரிசுகள். போதும் ஐயா போதும் புலிகளின் ஜனநாயகமும் சிங்கங்களின் ஆசீர்வாதங்களும்.

சாகரன் (வைகாசி 27, 2009)

கருத்து: ஐ. பற்றிக்

  1. To whom talk about Tamil people ! Don’t talk please about Freedom.

In my concern Tamil people only had freedom in Sri lanka even they say they “We don’t have freedom” as they can travel to any part of Sri lanka and they are living in peacefully in Colombo kandy and most popular cities, doing their own business. but, Sinhalies and Muslims are not able to travel or do business in Jafna or in the city, village which the Tamil people are majority there. Why. please don’t do false propaganda and let the people them self, they know what to do and how to do.

You see! can you tell me one history took place over the world same our Thamil people have done, that they completely washed away the Muslim people from Jafna. What is this? Please don’t talk about freedom. You are not suitable for that.

In Eastern province, in Kattandudy our people killed the Muslims who were praying inside the mosque . is this simple think than Mahinda did to Prapaharan? And they killed more than 150 Muslims on the way from Ampara to Kattankudy, these peoples came from Makka after they performed their Haj compulsory. Is this a simple think, can you show me one evidence same to this had taken place in Sri lanka by other by other people. Please don’t talk about freedom.

And how many Tamil leaders were killed by the same people why? they expressed their own ideas and opinions (they have given the name (Thurohihal) is this a freedom? Pls. Pls. Pls.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com