Contact us at: sooddram@gmail.com

 

நம்பிக்கைக் கீற்று

(சுகு-ஸ்ரீதரன்)

அமைச்சர் டக்ளஸ்- தேவானந்தாவின் முன்முயற்சியில் பாராளுமன்ற உறுப்பினர் சந்திர குமார்; இணைந்து ஜனாதிபதி-அரசின் உதவியுடன் கிளிநொச்சியில் அறிவியல் நகரம்- பொறியியல் கல்லூரி- விவசாய பீடங்களைச் சாத்தியமாக்கியது வன்னியின் கிழக்கு வடக்கின் எதிர்காலத்திற்கான பெரு நம்பிக்கைக் கீற்று. இவை சாதாரண காரியங்கள் அல்ல. இவை வன்னியைப் பொறுத்தவரை வன்னியின் வாழ்வில் தீவிர மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியவை.   வன்னி மற்றும் வடக்கு- கிழக்கின் கல்வி அறிவியல்- தொழில் நுட்ப -தொழில் துறை -விவசாய மீன்பிடி- இயற்கைப்பாதுகாப்பு -வறுமை ஒழிப்பு- சூழலியல் விடயங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அறிவுத்தாகமும் சமூக மலர்ச்சியும் விளைவோருக்கு இது நம்பிக்கை அளிக்கும் செய்தி.

யுத்தம் முடிவடைந்த பின்னர  வன்னிக்கு வந்து சென்ற இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுகின்ற வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் அவர்கள் கிளிநொச்சி இலங்கைமுழுவதற்கும் உணவளிக்கக் கூடிய ஆற்றல் கொண்டது என்று எனக்கு தெரிந்த தமிழக இடதுசாரித் தோழர்களிடம் தெரிவித்திருந்தார்.

கண்ணி -மிதி வெடிகள  அகற்றப்பட்டு நெடுஞ்சாலை புகையிரதப்பாதை இந்தியாவின் பிரமாண்டமான வீடமைப்புத் திட்டம் மற்றும் உள்ளக கட்டமைப்பு வசதிகள் பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவை வன்னி என்ற பாரிய நிலப்பரப்பின் மக்களின் வாழ்வில் பாரிய மறுமலாச்சியை ஏற்படுத்தக் கூடியவை.

வன்னியில் உள்ள 900 இற்கு மேற்பட்ட குளங்களைச் செப்பனிடுவது, நீர்வளத்தை அதிகரிப்பது, தொழில் துறைகள் வாழ்வாதாரங்களை உருவாக்குவது மூலவளங்கள்-பயன்பாட்டைக் கண்டறிவதில் இந்த பீடங்கள்- அறிவியல் நகரம்   செல்வாகுச் செலுத்தும்

பாரதி சொன்ன எளிமையான விடயம் 'ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'

கிளிநொச்சி அறிவியல் தொழில் நுட்பத்தில் ஆக்க சத்திகளை உருவாக்குவதில் அகிலம் பேசும் நகராவது நிச்சயம். .

'கூட்டத்தில் கூடிநின்று கூவிப்பிதற்றலன்றி நாட்டத்தில் கொள்ளாத' கூட்டத்தைப் பொருட்படுத்தாமல் மேற் கொள்ளப்பட்ட இந்த காரியம் பெரும் சாதனையே.

வடக்கு, கிழக்கு மாகாண சபைகளும் இத்தகைய விடயங்களையும் அனுபவ பாடங்களாக எடுத்துக் கொண்டு பல காரியங்களை ஆற்றமுடியும். சாதிக்கமுடியும். மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள  ெறுப்புணர்வுகளைத் தவிர்த்து ,தீண்டாமை பாராட்டாமல் இது போன்ற விடயங்களில் தம்முள் இணங்கிச் செயற்படமுடியும்.

பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் இவை பெரும் சமூக பொருளாதார மாறுதலை ஏற்படுத்தும்.

வன்னியில் பள்ளிகளில் கணிதம்- விஞ்ஞானம்- ஆங்கிலம் ஆகிய துறைகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது.

மிகத் துரிதமாக இது நிவர்த்திக்கப்படவேண்டும்.

உரிய வசதிகளைச் செய்துகொடுத்து தேர்ந்த ஆசிரியர்களை அங்கு குடியமர்த்த வேண்டும்.

ஒரு காலத்தில் கல்வியில் மிகப் பின் தங்கிய அம்பாறை மாவட்டத்தின் கல்வி வளர்ச்சி -சமூக பொருளாதார மலர்ச்சியில் இன்று தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஒரு நிர்ணயமான பாத்திரத்தை வகிக்கிறது. அதற்கு மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களின் தீர்க்க தரிசனமே காரணம்.

இந்திய- இலங்கை ஒப்பந்த காலத்தில் வடபகுதி குறிப்பாக யாழ்ப்;பாணம் மென் பொருள் உற்பத்திக்கு சிறப்பான ஒரு இடம.; இந்திய கர்நாடக மாநில தலைநகர் பெங்கள10ர் போல் ஒரு அலையை இங்கு ஏற்படுத்தலாம்  எதிபார்க்கப்பட்டது.

அதேபோல் திருமலையை ஒரு நவீன நகரமாக்குவது - கிளிநொச்சியில் ஒரு பொறியியல் கல்லூரி நிறுவுவது பற்றியும் சிந்திக்கப்பட்டது. ஆனால் அவற்றை செயற்படுத்துவதற்கான ஜனநாயக இடைவெளிகள் இருக்கவில்லை.

இவையெல்லாம் எமது கனவுகளாகவே இருந்தன.

யுத்தத்திற்கு முந்திய காலத்தில் யாழ் பல்கலைக்கழகம் கீர்த்தியின  உச்சத்தில் இருந்தது. யுத்தகாலத்தில் சுயாதீனத்தைப் பேணமுடியாததாலும் ஜனநாயக இடைவெளி இல்லாததாலும் அது நலிவிடைந்தது.

தற்போது பொறியியல் பீடமும் ,ிவசாய பீடமும், வன்னியின் சமூக பொருளாதார வாழ்வில் நிச்சயமாக ஒரு பாய்ச்சலை ஏற்படுத்தும். சர்வதேச அளவில் பிரதியுபகாரம் பாராமல் பங்களிப்பதற்கு ஏராளமான கல்வியாளர்கள-; துறைதோய்ந்தவர்கள் சமூக பிரக்ஞை உள்ளவர்கள் -நம்மவர்கள் இருக்கிறார்கள். அவர்களைத் தேடிப்பிடித்து இங்கு கொண்டு சேர்த்த  கற்பிப்பதற்கான ஏது நிலைகள் ஏற்படுத்தப்படவேண்டும். 'கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்'.

இந்த நாட்டு மாணவர்கள் மாத்திரமல்ல வெளிநாட்டு மாணவர்களும் கல்வி கற்பதற்கான நிலைமைகளை ஏற்படுத்தப்படும் என உயர் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி தென்னாசியவில் பெங்களுருக்கு நிகராக ஒரு அறிவியல் நகரமாக மாறுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே இருக்கின்றன.

ஆக்கச் செயற்பாடுகளுக்கு நிறைய களங்கள் இருக்கின்றன.

அவற்றை கண்டறிந்து எமது மக்களின் பிரதிநிதிகள் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு மனப்பூர்வமாக செயற்பட முன்வரவேண்டும்

தற்போது பொறியியல் விவசாய பீடங்களும-; அறிவியல் நகரமும் வீடமைப்புத் திட்டங்கள், பாரிய அளவிலான மக்களின் மிள் குடியேற்றம், மின் இணைப்ப , சாலைகள் ,ரயில்பாதை ,தெல்லிப்பளை புற்று நோய் வைத்திய சாலை போன்றன சாதனைகளே.

இன்னும் சவால்களும-; தீர்க்கவேண்டிய பிரச்சனைகளும் பிரமாண்டமான அளவில் உள்ளன. அவற்றை முயல்வதற்கு மனசில் மானசீகமான ஒளி வேண்டும்.

நீண்டகாலமாக பெரும் அவலமும் இருள் சூழ்ந்த வீட  ுப்பரவு செய்யப்பட்டு அங்கு ஒரு சிறிய விளக்கை ஏற்றும் போது வாழ்வதற்கான நம்பிக்கைகள்  பிரவாகிக்கின்றன.

இந்த சிறு பொறி பெரும் காட்டுத்தீயை மூட்டும .

நூறு மலர்கள் மலரட்டும்! நூறு பள்ளிகள்; உதயமாகட்டும!!;

(சுகு-ஸ்ரீதரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com