Contact us at: sooddram@gmail.com

 

மறு பக்கம்

பறக்கத்தயாராகும் ஜெட் விமானம் போல்  யாழ்ப்பாணம்

(சுகு-ஸ்ரீதரன்)

வேகமாக நிகழ்ந்து வரும் பிரமாண்ட சாலை அமைப்பு பணிகள், வடக்கு-தெற்கு புகையிரதப்பாதை ,விடமைப்புத் திட்டங்கள் ,சேவைத்துறைகளில்; சுகாதாரம்- கல்வி- மின்சாரம் நிகழும் மாற்றங்கள் மறுநிர்மணங்களுடன் சேர்ந்து மக்களுடைய வாழ்க்கை முறைகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. எமது மக்களில் ஒரு பகுதியினர் கடின உழைப்பாளிகள் என்பதில் ஐயமில்லை. அந்த கடின உழைப்பு கலாச்சாரம் இன்றும் தக்கவைக்கப்படிருக்கிறது. விசாலமான சாலைகளுடன்  சேர்த்துப்பார்த்தால் யாழ்ப்பாணத்தின் 6 முக்கிய வீதிகளும் தொழில் மயமாகி வருகின்றன. வீதியின் இருமருங்கிலும் உள்ள வீடுகள் வர்த்தக அல்லது தொழிலகங்களாக மாறி வருகின்றன. உள்ளக சிறுவீதிகளும் களை கட்டுகின்றன.

வங்கிகள் ,காப்புறுதி நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு தமது பிரசன்னத்தைக் காண்பிக்கின்றன. பழைய கடைத்தெருக்கள் மறைந்து புதிய வண்ணமயமான தெருக்கள் குடாநாடு பூராவும் உருவாகின்றன. சாலைப் பணியாளர்கள் தொப்பி பாதுகாப்பு உடைகள் அணிந்து பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை நவீன தொழிலாளிவர்க்கத்தின் உருவாக்கம்  நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வாகனங்கள் பழுதுபார்ப்பது பராமரிப்பு உள்ளிட்டவற்றுக்கான நவீன வசதிகளுடன் கூடிய தொழிலகங்கள் உருவாகி வருகின்றன.

நவீன விடுதிகள் ,உணவகங்கள் பல்பொருள் அங்காடிகள் பரவலாக அவதானிக்பபடுகின்றன. கோயில்கள், தேவாலயங்கள் ,திருமண மண்டபங்கள் பரவலாக கட்டியெழுப்பப் படுகின்றன. வைபவங்களில் பாரம்பரிய உணவு பரிமாறல் வீட்டு உபசரிப்புக்களுக்கு  மாறாக சுயசேவைமுறையில் அவை நிகழ்கின்றன. நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது.

 போக்குவரத்து நேரம் குறுகி விட்டது. கிளிநொச்சி ,வவுனியா மட்டக்களப்பு ,திருமலை பரவலாக நாட்டின் தென் பகுதியிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன.யுத்தகாலப்பொத்தல்கள் ,கோரவடுக்கள் மறைந்து வருகின்றன. கல்விச்செயற்பாடுக்ள தீவிரமடைந்துள்ளன.

மதி நுட்பம் வாய்ந்த தொழில் துறை ஆற்றல் எம்மவர்களுக்கு இருக்கிறது. அதற்குரிய பாதைகள் திறக்கப்பட்டால் மென் பொருள் உற்பத்தியில் எமது பிரதேசங்கள் கொடி கட்டிப் பறக்கும். யாழ்ப்பாணம் வேகம் எடுப்பது போல் ஒரு பிரமை. பறப்புக்கு தயாராகும் ஜெட் விமானம் போல் யாழ்ப்பாணம் காட்சியளிக்கிறது.

சகல தடைகளையும் உடைத்துக் கொண்டு வானத்தைக் கிழித்துக் கொண்டு இது போகலாம். அதற்கான உள்ளார்ந்த ஆற்றல் இன்னும் இதனிடம் இருக்கிறது. இந்த மாற்றம் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கிலும் தெற்கிலும் செல்வாக்கு செலுத்தலாம். சிங்கப்பூர் அல்லது கொங்கொங் அல்லது பெங்கள+ரூ போல யாழ்ப்பாணம் மாறிவிடுவதற்கான காலம் வெகு தூரத்தில் இல்லை.

இளந்தலைமுறை வெளி நாடுகளுக்கு ஓடிக் கொண்டிருந்தாலும் சனத்தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருந்தாலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. நம்பிக்கை வறட்சியின் மத்தியில் நம்பிக்கை கீற்றுக்களும் இருக்கின்றன.

சனத்தொகை மாத்திரமல்ல, சமூக பொருளாதார எழுச்சியை தீர்மானிப்பது. இன்றைய உலகமயமாக்கலில் பலமான புலம்பெயர்  படை ஒன்று இருக்கும் சூழலில் இந்தியாவில் ஏற்பட்டுவரும் சமூக பொருளாதார மாற்றங்கள் எல்லாமே இங்கு செல்வாக்கு செலுத்தும். உபகண்டத்தில் ஒரு முக்கியமான சந்ததைப்பகுதியாக யாழ்பாணம் மாறலாம்.

யாழ் நிலமானிய சமூக எச்சசொச்சங்கள் அந்தக் காலாவதியான மரவுரி உதிர்ந்து உலரவேண்டம் . இந்த வேகமான முதலாளித்துவ உற்பத்தி முறை மாறிவரும் வாழ்விடக்கோலங்கள் என்பன எமது சழுகத்தில் நிலவும் தீண்டாமை உள்ளிட்ட கொடுமைகளை நிர்மூலம் செய்வதில் ஒரு பாத்திரத்தை வகிக்கலாம்.

இந்த வளர்ச்சியில் நத்தை ஓட்டுச் சிந்தனை தகரலாம் . நவீன வளர்ச்சி என்பது சிக்கலான பொறிமுறைகள் கெர்ணடது. இனவாத அழுக்கு மூட்டைகளை தலையில் சுமப்பவர்கள் இந்த வளர்ச்சிக்கு எதிராகச் செயற்படுவர். இன்று முஸ்லிம்மக்களுக்கெதிராகச் ,கிறிஸ்தவர்களுக்கெதிராகச் செயற்படுபவர்கள் அவர்களது சமூக பொருளாதார வளர்ச்சியைப் பொறுக்காதவர்ளே.

முன்னர் இனக்கலவரங்களின் போதும் அதற்கு பின்னர் யுத்தத்தின் இறுதிக்காலத்தில் தமிழர்களின் பொருளாதார வளர்ச்சி மீது இலக்கு வைக்கப்பட்டது. ஆனால் இப்போது சகல சமூகங்களிலும் பொதுவாகவே வேகம் உந்துதல் காணப்படுகிறது. விசமிகள் அரசியல் லாபம் கருதியோர் தவிர மற்றவர்கள் மாற்றதிற்கான இயக்கத்தை தடுத்து நிறுத்த முடியாது.

வளர்ச்சியையும் இனவாதத்தையும் ஒரே நேரத்தில் பராமரிக்க முடியாது.  இராணுவ பிரசன்னம் திட்டமி;ட்ட குடியேற்றம் மனித உரிமை மீறல்கள் ஊடகங்கள் மீதான அச்சுறுத்தல் தொழிலாளர் மாணவர் இயக்கங்களை இரும்பு ,இனவாத மேலாண்மைக் கரங்கொண்டு அடக்குதல் என்பன விபரீதங்களை நோக்கியே இட்டுச் செல்லும்.

முழுமையான முதலாளித்துவ உற்பத்தி உறவு முறை ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பையே உருவாக்கும் . சேவைத்துறைகள் வலுவடைவதே பெருவாரியான மக்கள் மீதான சுமைகளைக் குறைக்க உதவும்.

சமூக மாற்றத்திற்கான இயக்கம் இடையறாமல் நிகழ ஜனநாயக சுதந்திரம் அவசியம்.  உற்பத்தி நடவடிக்கைகளில் மனிதர்கள் மகிழ்ச்சியுடன் படைப்பாற்றலுடன் அச்சமில்லாமல் ஈடுபடவேண்டும். அப்போது விளைபயனும் கூடுதலாக இருக்கும்.

எமது அரசியல்வாதிகள் அதிகாரிகளின் நடத்தைகளில் திருத்தம் வேண்டும் . உணாச்சி ஊட்டும் அரசியல்வாதிகளும் வெடுவெடு சுடுசுடு அதிகாரிகள் ஊழியர்களின் பழக்கவழக்கங்களை மாற்றவேண்டும.; மக்களுடைய வரிப்பணத்தில் தான் தாம் சேவையாற்றுகிறோம் என்ற மனப்பக்குவம் ஏற்படுத்தப்படவேண்டும். எமது பொலிஸ் நிர்வாக கலாச்சாரம் மாறவேண்டும். அது ஊழல் நிறைந்ததும் கருணை அற்றதும் கண்ணியமான மனிதர்களை விரக்தியடையச் செய்வதுமாகும்.

எப்போதும் மரணச் சடங்கில் சோக கீதம் இசைப்பதைப் போன்ற  பாணியை  நிறுத்த வேண்டும். பத்தாம் பசலித்தனங்கள், இனவாதம் அதிகார அகங்காரம் ,சாதியம் ,ஆணாதிக்கம் ,மரத்துப்போன ஊழல் என்பனவே சமூகத்தின் வளர்ச்சிக்கு சகுனப் பிழையாக அமைகின்றன.

சோதனைச் சாவடிகள்,பொலிஸ் நிலையம், வைத்தியசாலை,கிராமசேவையாளர் அலுவலகம், கச்சேரி ,பிரதேசசெயலகம் பொதுப் போக்குவரத்து எல்லா இடங்களிலுமே மக்கள் அவமானத்தை சந்திக்கிறார்கள். புழுங்குகிறார்கள.

பாலியல் வன்கொடுமைகள் ,சாதிய அவமதிப்புக்கள் அன்றாடம் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. எனவே பண்பாட்டுப் விழிப்புணாச்சி இயக்கங்கள் தேவைப்படுகின்றன.

மாற்றம் வேண்டும் .இந்த வேகம் வேண்டும்.

பொது இடங்களில் நாகரிகமாக நடந்து கொள்வது படிப்பிக்க வேண்டிய விடயமாக இருக்கிறது. வில்லன்கள்  போன்ற அணுகுமுறைகள் தெருவிலிருந்து, கடை ,ஆஸ்பத்திரி, பொதுப் போக்குவரத்து, பொலிஸ் எல்லா இடங்களிலும் வியாபித்துள்ளன. சமூகபொருளாதார வளாச்சி மற்றும் உல்லாசப்பிரயாணிகளின் வருகை என்பவற்றுக்கு எமது பழக்கவழக்கங்களில் மாற்றம் தேவை.

 பேருந்தில் இருந்து கொண்டு வீதியில் புளிச்செனத்துப்புவது, அல்லது காறித் துப்புவது ,பொலித்தீன்களை வீசி எறிவது, வீதி எனக்கு மாத்திரம் தான் என்ற அகம்பாவம் எமது சுற்றாடல் சக மனிதர்களைப்பற்றிய எந்த பிரக்ஞையும் இல்லாத நிலை என்பன மாறவேண்டும்.

விவசாயம் மீன்பிடி கருவிகள் எந்திரங்கள் நவீனமயப்பட்டிருக்கின்றன. ஆனால் விவசாயத்திலும் மீன் பிடியிலும் இளைய தலைமுறையிடம் ஆர்வம் குன்றி வருகிறது. வுpவசாய நிலங்கள் கொங்கிறீற் காடுகளாக மாறுவதும் நன்னீர் வளம் குன்றி இயற்கையின மரணமொன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இந்த விடயங்கள் அக்கறைக்ககுரியவை. இவை பற்றி கருத்தரங்குகள் விழிப்புணர்வு இயக்கங்கள் அவசியம். உயர் பாதுகாப்பு வலயங்கள் ,இராணுவ பிரசன்னங்கள் ,சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தலையீடு, நீதித்துறை சுயாதீனத்தை நிராகரித்தல் ,இன சமூகங்களுக்கு அதிகாரப் பரவலாக்கலை நிராகரித்தல் ,இனவன்முறைகளுக்கு தூபமிடல் ,ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படல் ,பேச்சு கருத்து சுதந்திரத்தின் மீதான நெருக்குவாரங்கள் ,ஆட்கடத்தல் ,கொலை ,மிரட்டல் என்பன வாய்ப்புக்கள் இருந்தும் சமூகத்தை உருப்படவிடாது.

ஆனால் இந்த நிலைமைகளும் வேகமெடுத்துள்ள சமூக பொருளாதார நடவடிக்கைகளால் மாறத்தான் வேண்டும். காங்கேசன் துறையிலிருந்து  சென்னைக்கு கப்பல் சேவையும் பலாலி- சென்னை விமான சேவையும் மன்னார்-இராமேஸ்வரம் கப்பல் சேவையும் ஆரம்பித்து விட்டால் சமூகபொருளாதார நிலைமைகளில் இன்னுமொரு பரிமாணம் ஏற்பட்டுவிடும்.

உண்மைகளை கண்டறியும் குழுவின் பரிந்துரைகளை காலம் தாழ்த்தாமல் நடைமுறைப்படுத்தி முறையான அதிகார பரவலாக்கல் திட்டத்தை சாத்தியமாக்கினால் இலங்கை பொருளாதார அபிவிருத்தியின் சிகரங்களை தொடமுடியும்.

 இன சமூகங்ளை மோதவிடும் அரசியல் சித்து விளையாட்டு இந்த நாட்டில் எந்த சமூகத்திற்கும் நன்மை பயக்காது. ஓட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்கு அது தடையாக அமையும் .இன்றைய உலகநிலவரங்கள் சமூக பொருளாதார உந்துதல்களுக்குப் பொருந்தாத அதிகாரமும் ,நிர்வாகமும் ,கோசங்களும் கூட காலாவதியாகும். எமது நிலை இப்படியே இருந்து விடும் என்பதல்ல. காலம் மாறும்.

ஏனெனில் எமது சமூகம் கடும் உழைப்பு சார்ந்தது. விதி விலக்குகள் இருந்தாலும் அது உண்மை. புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து கடின உழைப்பினுடாக அனுப்பபடும் பணத்தில் உலாசம் காணும் சோம்பேறிக் கூட்டம் ஒன்றிருக்கிறது. அதுவேறு கதை. ஆனால் பேராற்றில் இதெல்லாம் அள்ளுண்டு போகும்.

புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த ஒருமாலைப்பொழுதில் ஒரு பதட்டமான நிலையில் கூட நூற்றுக்கணக்கான பிள்ளைகள் மாலை  வகுப்புகளுக்கு முன்னால் கூடி நின்றதை என்னால் அவதானிக்க முடிந்தது.

இலங்கை முன்னேறத் துடிப்பதும் இனவாதமும் ஒன்றுக்கொன்று முரணானவையாகும். ஜனநாயக உரிமைகள் நிலை நாட்டப்படுவதே வளர்ச்சிக்கான அடிப்படையாகும். எனவே இலங்கை பேரினவாதத்தையும் இராணுவ மேலாண்மையையும் தூக்கி எறியாவிட்டால் முன்னேற முடியாது.

முன்னேறத்துடிக்கும் இலங்கைக்கு இதை விட வேறு வழி கிடையாது . உடனடியாகவோ ஒரு சில வருடங்களில் நிகழ்ந்தே ஆகவேண்டும். எந்த நாடும் இறைமையின் பெயரில் இன்றைய உலக சூழலில் தனித்து இயங்க முடியாது.

உலக அபிப்பிராயங்களை, அண்டை நாட்டை அலட்சியப்படுத்தி விட முடியாது. பிரதம நீதியரசருக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீhமானத்தின் பின் உலகம் எரிச்சலடையும் நிலை ஏற்பட்டுள்ளது. உண்மைகளை கண்டறியும் குழுவின் பரிந்தரைகளை நடைமுறைப்படுத்துவதில் காட்டும் தயக்கமும் பரவலாக விசயமறிந்த உலக வட்டாரங்களில்  அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை தன்னை சரி செய்து கொள்ளவேண்டியது சுதாகரித்துக் கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாதது.

ஜனாதிபதியின் யாழ் விஜயம்

அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி தலைமையிலான குழு யாழில் நடைபெறும் அபிவிருத்தி திட்டங்கள் பற்றிய தகவல்களை சிறய வாசிகசாலைகள் உட்பட விரல் நுனியல் வைத்திருந்தது. எல்லாம் நிழல்படங்களாக. பூர்த்திசெய்யப்படாத வேலைகள் பற்றி அதிகாரிகளிடம் கேள்விகள் கேட்டு திணறடித்தார். சிலர் வீட்டு வேலை செய்யாமல் பள்ளிக்கு வந்த மாணவர்கள்போல பேந்த பேந்த முழித்தார்களாம்.

பெற்றோரின் வேண்டுதலின் பேரில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்வதாக ஜனாதிபதி தரப்பால் உறுதி மொழி தரப்பட்டது. சுன்னாகம் மின்சார நிலையத்திற்குச் செல்லும் வழியில் விவசாயிகளிடம் உரையாடிய ஜனாதிபதி அவர்களுடைய பிரச்சனைகளை கேட்டறிந்தார். உற்பத்திப்பொருட்களை சந்தைப்படுத்துவத்தில் உள்ள பிரச்சனைகள் எடுத்துக் கூறப்பட்டது. மற்றவர்கள் தனக்கு இதனைக் கூறவில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்தன. இது ஒரு முன்மாதிரியான நடவடிக்கை.  இந்த கரிசனை வடக்கு வலிகாமம். முல்லைத்தீவு ,சம்பூர் விவசாயிகளின் நிலங்களை விடுவிப்பதில் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

வடக்கு கிழக்கு கரையோர மீனவமக்கள் தமது தொழிலை வினைத்திறனுடன் ஆற்றுவதற்கு உதவமுடியும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஸ்தம்பிதம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு  அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை அவர்கள் சமூகத்தின் பிரச்சனைகளில் வினைத்திறனுடன் செயற்படவில்லை. பரந்த ஐக்கிய முன்னணி தொடர்பான ஈடுபாடு;ம் இல்லை. இப்போதுள்ள உள்ள+ர் சர்வதேச  வாய்பான சூழலைபயன்படுத்தி இனப்பிரச்சனை திர்வுக்கு சாதகமான களத்தை ஏற்படுத்தும் முயற்சியுமில்லை. மக்கள் அவர்களைத்தான் பாராளுமன்றம் மகாணசபை மற்றும் உள்ள+ராட்சி சபைகளுக்கு தெரிவு செய்திருக்கிறார்கள். ஆனால் அதுபற்றி எந்த பிரக்ஞையும் பொறுப்புணர்வும் இல்லை. குடுமிபிடிச் சண்டைகள் உள்ளேயே நடைபெறுகின்றன. மக்கள் சார்செயற்பாடெதுவும் இல்லை என்பதே நிலையாகும். இங்கு எதுவும் செய்வதற்கான கையாலாகாத நிலை காரணமாகவே நாம் தென்னாபிரிக்க அனுபவங்ளை படிக்கிறோம் என்று கதை அளக்கிறார்கள். இவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பதை விட  ஒரு கதம்ப கூட்டம் போலவே செயற்படுகிறார்கள் என்பது துரதிஸ்டமான உண்மையாகும் .

காலாவதியான முறைகளில் செயல்படுவதை இவர்கள் மறு பரிசீலனை செய்யவேண்டும். இனிவரும் தலைமுறைகள் இந்தமுறைகளுக்கு உடன்படா. உணர்ச்சி ஊட்டல்களுக்குப் பதிலாக யதார்த்தமும் அறிவு பூர்வமான நடவடிக்கைளுமே சமூகத்தின் விடிவுக்கு உதவ முடியும். இன்றைய ஆட்சியாளர்களுக்கு இந்த பலவீனம் தெரியாதென்பதல்ல. சிங்கள மக்கள் மத்தியில் வாக்கு வங்கியைத் தக்க வைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கெதிரான புலம்பெயர் சமூகத்திற்கெதிரான அரசியல் தேவைப்படுகிறது. சமஸ்கிருதத்தில் “அனுகூல சத்துரு” என்ற வார்த்தை இருப்பதாக கூறுவார்கள்.

ஆனால் இந்த மாயத்திரைகளும் கிழியும். சமூக பொருளாதாரப் பிரச்சனைகளில் இருந்து இனவாத மார்க்கங்களால் விடுதலையடைய முடியாது.

இதுவும் கடந்து போகும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com