Contact us at: sooddram@gmail.com

 

ஈபிஆர்எல்எப் இன் உன்னதான தருணங்களின் மனிதன்

(சுகு-ஸ்ரீதரன்)

ஈபிஆர்எல்எப் உருவாக்கத்தில் பங்களித்து வாழ்ந்து மறைந்த மனிதர்கள் இருக்கிறார்கள். தோழர் குமரேசன் -சுதன் பெருமாள் கோவிலடியைச் சேர்ந்தவர். சிற்பங்கள், அணிகலன்கள், கோபுரங்களை ஆக்கும் கலைஞன் -  படைப்பாளி .1980 களின் முற்பகுதியில் ஈழாணவர் பொது மன்றத்தில் தன்னை இணைத்துக் கொண்ட அவரது சிரித்த முகமும் குரலும் வசீகரமானது. நற்பண்புகளின் உறைவிடம் என்பதை அவை காட்டிக் கொடுத்துவிடும். ஈழமக்கள் புரட்சிகர விடுதலைமுன்னணியின் வெகுஜன வேலைகளிலும்; கிளர்ச்சி - புரட்சிகர நடவடிக்கைகளில்  ிக நெருக்கடியான காலகட்டங்களில் கட்சிக்கு நிதி ஆதாரங்ளை பெற்றுக் கொடுப்பதில் நிகரற்ற பங்களிப்பை வழங்கியவர்.

ஈபிஆர்எல்எப் இன் நானாவித பணிகளையும் மேற்கொண்டவர். அவரது குடும்பம், உற்ற சுற்றம் எல்லாருமே பங்களித்திருக்கிறார்கள்;. அவரது சகோதரியின் கணவர் தோழர் சிவக் கொழுந்து ஓட்டிசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலையில் தொழிலாளி . ஆஸ்துமாவுடனும் குடும்ப வறுமையுடனும் போராடிக் கொண்டு சமூகப்பணி செய்தவர். அவருடைய முன் இளமைக்காலம் மலையகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி செங்கொடிச் சங்கம் போன்றவற்றுடன் சம்பந்தப் பட்டது. பிற்காலம் ஈபிஆர்ல் எப , ஈபிடிபி ஆகிய கட்சிகளில் தொழிற்சங்க வேலைசெய்தவர். இராணுவமுகாம் சித்திரவதை சிறைவாழ்வை அனுபவித்தவர். தோழர் கந்தசாமி சிவதாசன் ஆகியோருடன் இணைந்து தொழிற்சங்க பணியாற்றியவர். மலையகத்தை பிறப்பிடமாக கொண்ட தோழர் சிவக்கொழுந்து சில வருடங்களுக்கு முன்னர் மறைந்தார்.

அவரையெல்லாம் ஈபிஆர்எல்எப் இற்கு கொண்டு சேர்ப்பித்தவர் தோழர் குமரேசன். அவரது அயலவர்கள் நண்பர்கள் என்று பலர் ஈபிஆர்எல்எப் இல் இணைந்து கொண்டனர். பலர் 80 களின் நடுப்பகுதியில் படையினராலும் புலிகளாலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள .

தான் செய்ததற்கு பிரதியுபகாரமாக  ாரிடமிருந்தும் எதையும் கோரியவர் இல்லை. தோழர்கள் றொபேட ,  இந்திரன் , மோகன் , போல்டன் குமார் ஆகியோருடன் ஆரம்ப மக்கள் விடுதலைப் படை கமிட்டியின் அங்கத்தவர். பரந்த தொடர்புகள் அவருக்கிருந்தது. எல்லோராலும் விரும்பப் படும் தோழராக இருந்தார். தமிழகத்தில் திருநெல்வேலியில் தனது உறவுக்காரப் பெண்ணான சிவகாமியை திருமணம் செய்து கொண்டார . அவருக்கு இரு பெண்பிள்ளைகள்.

தனது இறுதி நாள்வரை ஓய்வொழிச்சல் இல்லாமல் உழைத்தார். அவருடைய தாயார் ஒரு இரவில்  ைவிளக்கு ஒளியில் கரும் பானையிலிருந்து எனக்கும்  தோழர் தயாபரன் சுதனுக்கு உருட்டித் தந்த சோற்றுக் கவளங்கள் அந்த இனிய நாட்கள் மறக்கமுடியாதவை.

எமது ஆரம்பகால சுவரொட்டிகளில் தோழர்கள் பட்டாபி , கமல் ஆகியோரின் கைவண்ணங்கள் இருந்தன. பிரதானமாக யாழ் ஆஸ்பத்திரியின் பின்சுவரில் ஏணி வைத்து பக்கம் பார்த்து ஒட்டப்படும . சீன பெருஞ்சுவர் என அதை அழைப்போம். அது மிகவும் பிரபலமான சுவராக மாறியிருந்தது. பெருமாள் கோவிலடியிலிருந்த தோழர் லோகநாதன் -தொழிற்சங்கவாதி அவருடைய வீட்டில் பசை காய்ச்சி 15, 20 பேப்பர்களை வைத்து ஒட்டுவோம். அவ்வப்போது கருத்து சித்திரங்களையும் வரைந்து ஒட்டுவோம். அந்த சுவர் மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டத . அந்த சுவருக்கும் எமக்கும் ஈழப்போராட்டத்திற்கும்  இடையிலான உறவு முக்கியமானது .

எமது இயக்க வரலாற்றில் அதன் தொடர்ச்சி செய்திப்பலகையாக இருந்தது.

நிரஞ்சனாவின் நினைவுகள் அழிவதில்லை நாவலில் வருவது போல் அருமையான உறவுகள் .தற்போது சென்னையில் 100 அடி றோட்டாக இருக்கும் பகுதியில் அப்போது சதுப்பு முட்காடு நெரிசலான சேறும் சகுதியுமான குடியிருப்பு பகுதியில் அவர் சிலகாலம் வாழ்ந்தவர . நானும் எனது மனைவி தோழர் ஞானசத்தியும் எமது வாழ்க்கை பயணத்தின் முதல் நாளை அங்கு தான் ஆரம்பித்தோம். பல உறவுகள் தொலைந்து விட்டன . நினைக்கும் போது மூச்சு முட்டுகிறது. மூடப்பட்ட காற்றில்லாத தனி அறையில் விடப்பட்டதுபோன்ற பிரமை .மூச்சு முட்டுகிறது.

தோழர் பொனி பாலா பிரான்சில் இருக்கிறார் என்று கேள்விப்படுகிறேன். அவருடை சகோதரர் ஈஸ்வரன் கந்தன் கருணையில்  ொல்லப்பட்டு விட்டார். எல்லோரும் நாங்கள் தோழர்கள். நாம் துன்பங்களை பகிர்ந்து கொள்ள அக்கம் பக்கத்தில் யாரும் இல்லை. சிதறுண்டு போய் விட்டோம். காலம் எம்மை நிரந்தரமாக பிரித்ததோடு திசைகளில் எறிந்துள்ளது.

காயப்பட்ட இறந்த தோழர்களை ஆஸ்பத்திரியில் பாதுகாப்பான இடங்களில் சேர்ப்பது போன்ற பணிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்.

உழைப்பையும் உறவுகளையும் இறுதி மூச்சுவரை பேணியவர். மற்றவர்களுக்கு எப்படியோ என்னைப் பொறுத்த வரை யாழ் பெருமாள் கோவிலடியில் இனம் புரியாத ஒரு தனிமையும் வெறுமையும் கலந்த நிரந்தர சோகத்தின் நிழல் விழுந்து கிடக்கிறது. தோழரே உமக்கு எம் பிரியாவிடை!

சுகு-ஸ்ரீதரன்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com