Contact us at: sooddram@gmail.com

 

உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுவான ஜனநாயகம், மனித உரிமை, இறையாண்மை, சுயநிர்ணயம் அப்படி ஏதும் இருக்கிறதா?

வியட்னாமில் வைரஸ் குண்டுகளை வீசியவர்கள் பிற்காலத்தில் ஈராக்கில் இரசாயன ஆயுதங்களைத் தேடுவதாக நாடகமாடினார்கள். இதற்கு ஐ. நா சபையும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டது. ஈராக்கல் லிபியாவில் தற்போது சிரியாவில் நடந்துகொண்டிருப்பவற்றைப் பார்க்கையில் என்ன தெரிகிறது. சதாமோ, கடாபியோ சர்வாதிகாரிகளாக இருக்கலாம். ஆனால் அவர்களின் காலத்தில் ஈராக்கிலும் லிபியாவிலும் இருந்த 'வாழ்க்கை' துவம்சம் செய்யப்பட்டு அங்கு நரகங்கள் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றன. சிரியாவின் நிலமை சொல்லவே தேவையில்லை.

எண்ணெயக்காக இரத்தம் என்ற யுத்தம் நாடுகளின் மக்கள் எக்கேடுகெட்டால் என்ன அவர்கள் பாழ்பட்டு வறுமை மிஞ்சி மடிந்து போனால் என்ன தமக்கு உலகம் அட்சயபாத்திரமாக இருக்கவேண்டும் என்று தான் வட அமெரிக்காவும்,  ஐரோப்பாவும் சிந்திக்கின்றன. நேற்றிருந்த வாழ்க்கை தொலைக்கப்பட்டு நாளாந்த மரணமும் காட்டு மிராண்டித்தனமும் இந்த தேசங்களில் விதைக்கப்பட்டிருக்கிறது. தமக்கு தேவைப்பட்டவிடத்தில் மத அடிப்படைவாதங்களைத் தூண்டிவிட்டார்கள்.

ஒப்பீட்டளவில் ஈராக்கிலும் லிபியாவிலும் பெண்களுக்கு முன்னர் பாதுகாப்பான வாழ்க்கை இருந்தது. மரபுரிமையான கலாச்சார பெறுமானங்கள் இருந்தன. ஆனால் தற்போது வரலாறு அழிக்கப்பட்டிருக்கிறது. நாடுகள் நாகரிகங்கள் பல சுடுகாடுகள் ஆக்கப்பட்டிருக்கின்றன. எண்ணெய்க்கிணறுகளை எரிந்தன. நச்சுப் புகை மண்டிய மேகங்களும் வெடிமருந்துகள் ,இரசாயனங்கள் தாங்கிய பூமியாகவும் போய்விட்டன. மக்களைப் பிச்சைக்காரர்களாக ஊனமுற்றவர்களாக .......சிறுவர்களின் நிலை கொடூரமானது.

இவற்றுக்கு முன்னர் ஐரோப்பாவில் யூகோசலாவியாவின் நிலையைப்பார்ப்போம். டிட்டோவின் காலத்தில் அது எத்தகைய கீர்த்தி வாய்ந்த நாடாக இருந்தது. சோசலிச் உலகத்தை வீழத்துவதற்கான உலக ஏகாதிபத்தியத்தின் நோக்கங்களுக்காக அந்த நாடு சிதைக்கப்பட்டது. மனிதப்பேரழிவுகளைச் சந்தித்தது.சேர்பிய ,பொஸ்னியா ,குரோசியா, கொசோவா மனிதப்பேரழிவு பிரமாண்டமான பாலியல் கொடூரங்களினூடாக சிதைக்கப்பட்டது .வெறுமனே சேர்பியர்களின் மீது மற்றும் மிலோசெவிக் மீது மாத்திரம் பழிபோட்டு விட முடியாது. யூகோசலாவியாவை நாசமாக்க விரும்பியவர்கள் சகல மத இன மதப் பெருமிதங்களையும் தூண்டி விட்டு இனச் சுத்தீகரிப்ப நிலைக்கு இட்டுச் சென்றார்கள்.

இந்தியாவை அணி சேரா இயக்கத்தை நாசம் செய்வதற்காக பாகிஸ்தானில் இருந்து ஆரம்பித்தார்கள். ஆப்கானில் முஜாதீன்கள் உருவாக்கப்பட்டார்கள். மதங்களின் கருத்துக்களை அடிப்படைவாதம் மட்டுக்கும் இழுத்துச் சென்றார்கள். தமது அடிப்படைவாத நோக்கங்களுக்காக. அதில் குறிப்பிடத்தகுந்த வெற்றியும் பெற்றார்கள். ஆனால் அவர்கள் உருவாக்கிய பயங்கரவாதம் ஒரு புற்றுநோயாக இன்று உலகத்தை மாய்த்துக் கொண்டிருக்கிறது. எமது தென்னாசிய நிலமையைச் சொல்லவே தேவையில்லை. அது அன்றாட நிகழச்சி ஆகிவட்டது.

உலகில் எங்காவது அறம் சார் அரசுருவாக்கம் நிகழ்ந்தால் அது மேற்கத்தி  ஆதிக்க ஊடகங்களின் அவதூறுகள் நிந்தனைகள் சூழச்சிகரமான பலப்பிரயோகத்துடன் முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றன. உலகத்தை சிதறடித்து தமது நுகர்வு சுரண்டலுக்கான களமாக மாற்றுவது இவர்களின் வேலையாக இருக்கிறது. இவர்கள் கொசோவாவை உருவாக்கி சுயநிர்ணய உரிமை என்றார்கள். தெற்கு சூடானும் அவ்வாறே. ஆனால் கிரிமியா உக்கிரேனின் இறைமை என்கிறார்கள்.

இவர்கள் ஈராக் லிபியா மீது தாக்குதல் நடத்தினால் அது ஜனநயாக நிர்மாணம். கிரிமியர்கள் தமத பாரம்பரிய உறவு பாதுகாப்பு தொடர்பில் ரஸ்சியாவிடம் உதவி கோரினால் அது உக்ரேனிய இறையாண்மை தொடர்பான பிரச்சனை. 19 ஆம் நூற்றாண்டு பாணி ஆக்கிரமிப்பு? அமெரிக்க ராஜாஙகச்செயலாளர் யோன் ஹெரியின் நகைப்பிற்கிடமான விளக்கம் இது.

லத்தின் மற்றும் தென்னமெரிக்க நாடுகளில் நிகழும் சமூக பொருளாதார எழுச்சிகள் இவர்களை முகம் சுழிக்க வைப்பவை. ஆனால் பாசிஸ்டுகள் வலதுசாரிகளுடன் கூட்டமைத்து உக்ரேனில் ஆட்சி அமைத்தால் அது புரட்சி. இவர்கள் மனித உரிமை என்றால் என்னவென்றே தெரியாத அரபு சேக்குகளை சகித்துக் கொள்வார்கள். பாகிஸ்தானின் இராணு ஆட்சியாளர்களை சகிப்பார்கள். ஆனால் ஜனநாயக இடதுசாரிகளை சகிக்கமாட்டார்கள்.

கலிபோர்னியாவின் செனட்டர் கிரிமியாவில் ரஸ்சியப் பிரசன்னத்தை இட்டு ஒபமா அரசை கர்ண கடூரமாக விமர்சிக்கிறார். ரஸ்சியக் குண்டர்கள் கிரிமிய ஆக்கிரமிப்பிற்கெதிராக உடனடியாகச் செயற்படாமல் கதையளப்பதாக. அமெரிக்காவின் ராஜாங்கச் செயலாளர  ோன் கெரி 19 ஆம் நுற்றாண்டு ஆக்கிரமிப்பு முறையை 21 ஆம் நூற்றாண்டில் புட்டின் பின்பற்றுவது சரிப்பட்டுவராது என்று ஆவேசப்படுகிறார். ஈராக் லிபியாவில் அல்து சிரியாவில் தற்போது தாங்கள் விளைவிக்கும் நாசகார முறைகளை பிரயோகிக்க கூறுகிறாரா? கிரிமியாவில் இரத்தம் தோயாத ரஸ்சியப் பிரசன்னம் இருக்கிறது.

கீவில் வலதுசாரி பாசிஸ்டுகள் ஆட்சி  அமைத்திருக்கிறார்கள். நிலைமை சீரடையும் வரை தாம் அங்கே இருக்கப் போவதாயும் தெற்கிலும் கிழக்குப் பகுதிகளிலும் ரஸ்சிய மொழி பேசுபவர்கள் இருக்கிறார்கள். அவர்களை பாதுகாக்கவேண்டிய கடப்பாடும் தமக்கிருப்பதாக ஒபாமாவிடம் தொலைபேசியில் சொல்லியிருக்கிறார்.

உலகில் அடாவடித்தனம் பரவுவதற்கான தமது உரிமை மீது யாரும் கேள்வி எழுப்பக் கூடாது என்பதே அமெரிக்க மேற்குலக ஏகாதிபத்தியவாதிகளின் அகங்கார நிலைப்பாடாக இருக்கிறது. ரஸ்சியா மீது பொருளாதாரத் தடைவிதிக்கப்போவதாகவும் ஜி- 8 இல் இருந்து நீக்கிவிடப்போவதாகவும் அச்சுறுத்துகிறார்கள். தங்களது அடாவடித்தனத்திற்கு உலகம் வழிவிடவேண்டும் என்று இவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அமெரிக்க மேற்கத்திய ஊடகங்கள் மனித உரிமை அமைப்புக்கள் கீவில் பாசிஸ்டுகள் தலையெடுத்திருப்பது பற்றி மூச்சுக் காட்டவில்லை.

உலகத்தின் மீது காட்டுமிராண்டித்தனத்தையும் சர்வாதிகாரத்தையும் பாசிச மத அடிப்படைவாதத்தையும் கட்டவிழ்த்துவிட்டு ஊக்கப்படுத்திக் கொண்டு மறு பக்கம் ஜனநாயகம் மனித உரிமை பேரழிவு ஆயுதங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். பேரழிவு ஆயுதங்கள் உற்பத்தியாளர்களாகவும் ஏக வினியோகஸ்தர்களாகவும் இவர்களே இருக்கிறார்கள். இவர்களின் உலகின் மீதான எதேச்சதிகாரத்தை இந்த நாடுகளின் மக்கள் கண்டு கொள்ளாதவாற  ஐரோப்பிய வட அமெரிக்க மக்களின் வாழக்கைத்தரம் மற்றும் ஏகாதிபத்தியவாதிகளின் ஊடகங்கள் என்பவற்றின் ஒருதலைப்பட்டசமான பெரும் பிரச்சார இயக்கம் என்பன இந்த மக்களை போதையில் கிறங்க வைத்திருக்கின்றன. உலகம் பெருமளவிற்கு நரகமாக்கப்பட்டிருக்கிறது என்பது இவர்களில் பெரும்பாலானோருக்கு தெரியவில்லை.

தற்போது உக்ரேனில் பாசிசத்தை ஆட்சிக்கு கொண்டு வந்திருப்பது சிலவேளை ஒரு பொறியாக இந்த மக்கள் விழித்துக் கொள்ள உதவலாம். இந்த ஏகாதிபத்திய சக்திகள் ஒரு அணு ஆயுத யுத்த அபாயத்தின் விழிம்பை நோக்கி உலகத்தை வழி நடத்தியுள்ளன. விரல் விட்டு எண்ணக் கூடியவர்களின் சூறையாடல் களமாகவே உலகத்தை வைத்திருக்க இவர்கள் விரும்புகிறார்கள். அந்த நலன்களை எந்த ஒரு இரத்த களரியும் இல்லாமல் பரோபகாரமாக இவர்கள் ஒருக்காலும் தாரை வார்க்க மாட்டார்கள். உலக வங்கி சர்வதேச நாணய நிதியம் ஐ.நா சபை மத அடிப்படைவாத தேசியம் நிறவெறி பாசிசம் ஆயுத வியாபாரம் எல்லாவற்றையும் தமது நலன்களுக்காக செயற்படுத்துவார்கள்.

ரஸ்சியாவிற்கெதிராக தடைவிதிப்பதில் ஐரோப்பிய நாடுகளிடையே ஈடாட்டம் காணப்பட்டது. ஜேர்மனி, பிரித்தானியா கொஞ்சம் பொறுமைகாக்க விரும்பின. ஜேர்மனி தனது எரிபொருள் பெற்றோலிய காஸ் தேவைகளுக்கு பெருமளவிற்கு ரஸ்சியாவில் தங்கியுள்ளது. ரஸ்சியாவுடனான வியாபாரத்தினை கைவிடுவதில் பிரிட்டனுக்கு தயக்கங்கள் காணப்படுகிறது. அமெரிக்கா அவசர அவசரமாக காரியமாற்ற முயல்கிறது.

உக்ரேனின் பாசிச அதிகாரம் நீடிக்கமுடியாது. ரஸ்சியாவிற்கெதிரான அமெரிக்க, ஐரோப்பிய கூட்டும் நீடிக்கமுடியாது. எல்லை மீறிப் போய்விட்டதால் உலகளாவிய அராஜகம் தலைதூக்கியுள்ளதால் நிலைமைகள் தலைகீழாகவும் மாறலாம். அவர்கள் ரஸ்சியா என்ற மாபெரும் நாடு இருக்க கூடாது என்று சிந்தித்தால் அது உலகளாவிய விபரீதமாகும். ஐரோப்பிய மக்களுக்கு பாசிசத்தின் கொடூர அனுபவம் இருக்கிறது. அது பற்றிய விழிப்புணர்வும் இருக்கிறது.

சீனா, இந்தியா, ரஸ்சியா, கியூபா, பிறேசில், வெனிசூலா, வியட்னாம், தென்னாபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கநாடுகள் பிற மூன்றாம் உலக நாடுகள் புதிய மீள் அணிசேர்க்கைக்க  பற்றி தீவிரமாக சிந்திக்க  வேண்டிய அளவிற்கு நிலைமைகள் தீவிரமடைகின்றன.

(சுகு-ஸ்ரீதரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com