Contact us at: sooddram@gmail.com

 

காந்தி – இந்தியா

சுகு-ஸ்ரீதரன்

காலனி ஆதிக்கத்திற்கெதிரான இந்திய சுதந்திர இயக்கம் இந்தியாவிற்கும் உலகிற்கும் பல அறங்களைக் கற்றுத் தந்தது. வன்முறை சாராத காந்தியாரின் போராட்ட முறைமை எதிரிகளின் மனச்சாட்சியை உலுக்கியது. இந்தியாவின் கோடான கோடி மக்களை ஆகர்சித்தது. குஜராத் -இங்கிலாந்து- தென்னாபிரிக்கா வாழ்க்கை, தேடல் என்பன அற உணர்வின் உன்னதங்களை நோக்கி மோகன்தாஸ் கரம்சம் காந்தியை வழி நடத்தியது. தாய் தந்தையர் மற்றும் உறவுகள் -நண்பர்கள் -சுற்றாடல் அனுபவங்கள அரிச்சந்திரன், இராமாயணக்கதைகள் கலாச்சாரம் பழக்கவழக்கங்கள் எல்லாமே அவர் மீது செல்வாக்குச் செலுத்தின. தாயைப் போற்றும  இந்திய பண்பாட்டு மரபுகளும் அவரைச் செப்பனிட்டன. துன்புறும் மனிதர்கள் மீது அவர் கருணை கூர்ந்தார். இந்திய ஆன்மிக உலகில் உருவான எளிமையான வாழ்க்கை, கொல்லாமை, பொய்யுரையாமை என சமூக விழுமியங்கள் அவர் மீது தளை விட்டன. தென்னாபிரிக்க வாழ்க்கையில் நிறவெறி -அதிகாரம் ஆபிரிக்க- இந்திய மக்கள் மீது காட்டிய வெறுப்பு அடக்குமுறை- அதிகாரம் ,வாழ்வைப்பற்றி அவர் மனம் புழுங்கினார்.

மனிதர்கள் மீது இயல்பான சமத்துவத்தையும் நேசிப்பையும் அவர் கொண்டிருந்தார். நிறவெறிக்கெதிரான அவரது ஆட்சேபங்கள் அவரை நெருக்கடிக்குள் தள்ளின. தென்னாபிரிக்காவில  ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட  அந்த இடத்திலிருந்து பிரதானமாக தனது அறப்போராட்டத்தை தொடங்கினார். மனிதர்களின் சுயமரியாதை, கண்ணியம் பற்றிய அக்கறைகளே அவரின் சுதந்திரப்போராட்ட அற உணர்வின் அடிப்படையாக அமைந்தன. சாதாரண சராசரி இந்தியர்களின் வாழ்க்கையைத் தரிசிப்பதற்கான அவரது சராசரியான 3 ஆம் பெட்டி ரயில் பயணங்களும், எளிமையான ஆச்சிரம வாழ்வும் இந்திய மக்கள் பற்றிய அவரின் தேடல் உணர்வின் வெளிப்பாடாகும்.

எளிமையை அவர் வழிபட்டார். இராட்டினத்தில் நூல் நூற்றல் ,எளியோருடன் வாழ்வது ,பொது மல கூடங்களைச் சுத்தப்படுத்துவது ,தொழு நோயாளர்களுக்குச் சேவகம் செய்வது பிரார்த்தனைகளில் ஈடுபடுவது என்பது அவரது வாழ்க்கைமுறையாக இருந்தது. சாதியின் கொடூரத்தில் சிக்கிய மனிதர்களை கடவுளின் குழந்தைகள் என்றார். வாழக்கடினமான கரடு முரடான பகுதிகளில் தனது ஆச்சிரமங்களை அமைத்தார். இந்தியப் பெண்கள் அனுபவிக்கும் துன்பங்களை தனது நீண்ட இந்திய தரிசனத்தினூடாக கண்டடைந்தார்

அவர் ஒரு சமூக ரிசியாக வாழ்ந்தார். தான் ஒரு பண்பாட்டு மரபைச் சோந்தவராக இருந்தாலும் சக மனிதர்களின் கலாச்சாரம் பழக்கவழக்கங்களை புண்படுத்தாமல் வாழவேண்டும் என்று எப்போதும் வலியுறுத்தினார். இந்திய துறவிகளின் பாரம்பரியத்தில் அவர் ஒரு சமூக நே  ுறவியாக வாழ்ந்தார்.

மக்களிடமிருந்தும் சகாக்களிடமிருந்தும் உலகின் உன்னத மனிதர்களிடமிருந்தும் கற்றுக் கொள்ள அவர் எப்போதும் தயாராக இருந்தார். ஆலோசனைகள் கருத்துக்களைக் கேட்டார். லியோரால்ஸ்ராய் ,ரவீநதிரநாத்தாகூர் போன்றவர்களுடன் ஆழ்ந்த கருத்துப்பரிமாற்றத்தில் ஈடுபட்டார். இந்திய மனிதர்களின் நிலைமையை தாம் வாழவேண்டும் என்பதற்காக மேல் சட்டையில்லாத அரைநிர்வாணியாக அவர் வாழ்ந்தார். அந்தக் கோலத்தில் எந்த பிரபுக்கள் சபையிலும் ஏறுவதற்கு அவர் கூச்சப்படவில்லை.

'யங் இந்தியா' பத்திரிகை ஊடாக தனது கருத்துக்களை ஒழிவு மறைவின்றி  ெளிப்படுத்தி வந்தார். ஐன்ஸ்ரீன் போன்ற மாபெரும் விஞ்ஞானிகளால் அவர் நேசிக்கப்பட்டார். கோடான கோடி இந்திய மக்களை ஆகர்சிக்கும் சக்தி அவரிடம் இருந்தது. சட்ட மறுப்பு இயக்கங்கள்- தான் கைது செய்யப்படும் போதும் ,விடுதலைசெய்யப்படும்போதும் பதட்டமில்லாத இயல்பான மனித தோற்றத்துடன் அவர் காணப்பட்டார். சிறை அதிகாரிகள்- பிரித்தானிய அதிகார வர்க்கத்தினர் செயற்பாடுகளை அஞ்சாமை புன்முறுவலுடன் நோக்கினார்.

உப்புச் சத்தியாக்கிரகம் , ஒத்துழையாமை இயக்கத்திலும் அவரது சத்திய ஆவேசங்கள் வெளிப்பட்டன. தனது ஆன்மீக் நம்பிக்கைகள் சமூக கலாச்சார பெறுமானங்களுடன் இந்திய சமூகத்தை நோக்கினார். நிறவாதம் , காலனி ஆதிக்கம், அடக்குமுறை, சுரண்டல் இவை தொடர்பான இயல்பான சொந்த அனுபவங்களினூடாக அவரது எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டது. அதற்காக நிதானமாக அமைதியாக மக்களைத் திரட்டினார். போராட்டத்தின் பெயரில் மக்களை அவலத்தில் தள்ளி விடும் பொறுப்பற்ற செயல்கள் அவரிடம் இருக்கவில்லை. தான் தனது குடும்பம் எல்லாவற்றையும் இந்தி  ிடிமை வாழ்வின் பகுதியாகவே கண்டார்.

வௌ;வேறு , மதங்கள் ,மொழிகள் ,கலாச்சாரங்கள் எல்லாவற்றையும் இந்தியா என்று ஒன்றிணைக்கும் வல்லமை அவரிடம் காணப்பட்டது. பரந்த தேசத்தின் மக்களை ஒருங்கிணைக்கும் அந்த ஆழுமை இந்திய மரபார்ந்தது. உலகளாவிய அளவில் போராட்ட அறம் அவரால் கற்றுத்தரப்பட்டது. சாமானிய மனிதர்களின் சார்பில் அதிகாரத்திற்கு அழுத்தம் தருவது மனச்சாட்சியை உலுக்குவதே அவரின் போராட்டத்தின் சாரம்சமாக இருந்தது. ஜனநாயகம், மனித உரிமை அவர் நாளாந்த வாழ்வு இயல்பிலேயே வலியுறுத்தினார். யுத்தமற்ற பூமி இயற்கையுடன் இணைந்து வாழ்தல் சம நிலை வாழ்க்கை பற்றிய கருத்துக்கள் இழையோடின. ஒரு கீழைத்தேச மனிதரின் முழு மனச்சாட்சியாக அவர் இருந்தார்.

மாட்டின் லூதர்-நெல்சன் மண்டெலா போன்ற சமகால உன்னத மனிதர்களின் வழிகாட்டியாகவும் அவர் திகழ்தார். ஆபிரிக்காவில் வட அமெரிக்காவில் அவர் நிறவாதத்திற்கெதிரான உந்து சத்தியாகத் திகழ்ந்தார். கிறிஸ்தவத்தின் அறக் கோட்பாடுகளின் அடிப்படையில் எழுந்த லியோரால்ஸ்ராயின் எழுத்துக்கள் அவரை ஆகர்சித்தன. இந்துத்துவ கிறிஸ்தவ இஸ்லாமிய அறங்கள் அவர் மேல் செல்வாக்குச் செலுத்தின. மதச்சாபற்  இந்தியாவை உருவாக்குவதில் இவை பங்களித்தன. வெறுப்பு , பகை உள்ளம் என்பன அவரிடம் காணப்படவில்லை. கருணை கொண்ட தோற்றப்பொலிவு அது. பாழ்பட்டு வறுமை மிஞ்சி போன நாட்டில் அது கடவுளின் மறு அவதாரம். இந்திய தேசியத்தின் நாடி நரம்பெல்லாம் காந்தியத்தால் ஆகர்சிக்க்பபட்டிருந்தது.

ஜவகர்லால் நேரு, அம்பேத்கர், பட்டேல், ஜின்னா போன்ற ஆளுமைகளின் கருத்துக்களுக்கெல்லாம் இடைவெளிகளைக் கொண்ட பன்முகத்தன்மை வாய்ந்ததாக காந்தியம் காணப்பட்டது. சுதந்திர இந்தியாவின் அதிகாரத்திற்கு வருவதற்கு அவர் ஒருப்படவில்லை. காந்தியாரின் சகிப்புத்தன்மை தீவிரவாத சக்திகளுக்கு கசப்பாக இருந்தது. இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக எரிந்து கொண்டிருந்ததேசத்தில் தன்னை ஒறுத்தார். வன்முறையில் ஈடுபட்டவர்களின் மனச்சாட்சியை கிளறி விட அவர் பாடுபட்டார். இது மிக மிக அசாதாரணமானது.

எரியும் நெருப்புக்கு நடுவே அவர் உண்ணாவிரதம் சத்தியாக்கிரகம் இருந்தார். வெறுப்பு, குரோதம் மனிதர்களை மனிதர் மாய்க்கும் செயற்பாட்டிற்கெதிராக அவர் நெருப்பின் நடுவே நின்றார். தனது எரியும் இதயத்தை அவர் திறந்து காட்டினார். காந்தி காட்டிய வழியில் இந்தியாவும் உலகமும் இருக்குமானால் உலகில் அதிகாரங்களுக்கு இடமில்லை. காழ்ப்புணர்வு விரோதம் சுரண்டலுக்கு இடமில்லை. மனித குலத்திற்கான அறம் பற்றி காந்தியும,; கார்ல் மார்க்சும் தத்தமது அனுபவங்களிலிருந்து போதித்தார்கள். இந்திய சாமானிய மனிதர்களை மாத்திரமல்ல கலைஞர்களையும் படைப்பாளிகளையும் அவர் ஒன்றிணைத்தார். இந்தியாவிற்கு ஏற்ற பொருளாதார சமூக முறைமைகள் பற்றி அவரிடம் கற்பனாவாத நிலைப்பாடுகள் இருந்திருக்கலாம்.

ஆனால் அவரது சிந்தனை அப்பழுக்கற்றது. வன்முறையற்ற உலகிற்கான அவரது கனவுகள் போதனைகள் செயற்பாடுகளை மீறி இந்தப் பிராந்தியம் உலகம் வன்முறையின் களமாக மாறியிருக்கிறது. காந்திய அறங்கள் உலகளவில் மாத்திரமல்ல இந்திய வாழ்க்iகைமுறையின் எல்லாமட்டங்களிலும் பலவீனமடைந்துள்ளது. புதிய சமூக அனுபவங்களின் தார்மீக் கூறுகளையும் உள்ளடக்கி இது செழுமையுடன் முன் கொண்டு செல்லப்படவேண்டும். ஒரு முற்போக்கு உள்ளம் கொண்ட மனிதராக ஜவஹர்லால் நேரு காந்தியின் வாரிசுகளில் மிளிர்பவரா  ுடிந்தது.

சுதந்திர இந்தியாவின் தலைவராக அவர் தம்மை அதிகார பூர்வமாக அமைத்துக் கொள்ளவில்லை. அவருடைய துறவு லோகாயுத- மற்றும் மானிட வாழ்வின் ஆதார சுருதிகள். ஒரு அமைதியான இனிய இசையைப் போன்றது அவரது வாழ்வு. காந்தி இந்திய வாழ்வின் பெருமையின் குறியீடு. ஆனால் காந்தியாரின் கற்பனாவாத இலட்சியங்களுக்கும் இன்றைய வாழ்வின் நுகர்வுக்கலாச்சாரத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட வாழ்விற்குமிடையே பாரிய இடைவெளி காணப்படுகிறது.

காந்திய வலுக்கள் இந்தி  உலக வாழ்வில் மீள் செலுத்தப்படவேண்டும். ஆக்கிரமிப்பு, யுத்தம் மனிதப்படுகொலைகளுக்கெதிராக இவை முன்நிறுத்தப்படவேண்டும். இயற்கை அழிவு ,பிராணி வதைகள், ஊழல் சமூக மோதல்கள், அரச-மற்றும் குழுக்களின் வன்முறைகள் தொடர்பில்  காந்தீயம் உன்னதமான போதனைகளை வளங்குகிறது. இந்திய சுதந்திரத்தின் நவீன வரலாறு காந்தியிலிருந்தே தொடங்குகிறது.  அவர் அக்டோபர் புரட்சியின் காலனிகளின் விடுதலை பற்றிய கோரிக்கைளை வரவேற்றார். சமகால உலகின் தேவை காந்தியடிகள்.

பெரும் கோடீஸ்வரர்களும் பஞ்சத்தில் உழலும் கோடானகோடி மக்களும் காந்தியத்திற்கு முரண் நிலையாகும். காந்தியின் உன்னதாமான தொண்டர்களாக இருந்தவர்கள் கைமாறு கருதாமல் செயற்பட்டவர்கள். சுதந்திரப்போராட்டத் தியாகிகள் என்போர் அவர்கள் தமது சொந்தவாழ்வை அர்ப்பணித்தவர்களாக இருப்பார்கள். பலர் தமது சொத்து சுகங்களை எழுதிக் கொடுத்து விட்டு போராட்டதில் இணைந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் காந்தியாரின் வார்த்தைக்கு இசைவாக அஹிம்சை அறத்தின் அடிப்படையில் சிறைகளை நிரப்பத் தயாராக இருந்தவர்கள்.

ஈவிரக்கமற்ற அடக்குமுறை வடிவமான பிரித்தானிய காலனி ஆதிக்கத்தின் மனச் சாட்சியை அவர் உலுக்கினார். அந்தமான, நிக்கோபாரிலும், ஏரவாடாவிலும் இந்தியா எங்கணும் சிறைகளில் வதைமுகாம்களில் சுதந்திரப்போராட்டத் தியாகிகள் சொல்லொணா வேதனைகளை அனுபவித்தார்கள். அமிர்தசரசில் 'யூலியன் வாலாபாக்' திடலில் அமைதியாக கூடியிருந்த மக்கள் மீது பிரித்தானிய காலனி ஆதிக்கம் தனது அதிகார அகங்காரத்தை காட்டியது. ஆனால் பாரதி கூறிய 'கத்தியின்றி ரத்தமின்றி' நடந்த அந்தப்போர் ஓயவில்லை. இந்த சுதந்திர இயக்கம் பாரதி போன்ற உன்னதகவிஞர்களை பிரசவித்தது .இந்த மாபெரும் தேசம் இயல்பாகவே சுதந்திர இயக்கத்தின் பின்னால் அணிதிரண்டது. தன்னியல்பாக போராட்டங்கள் நிகழ்ந்தன. சிறந்த கல்வியும், விரிந்த பார்வையும் இந்திய சுதந்தி  இயக்கத்தின் ஆதார அடிப்படையாக இருந்தன.

இரண்டாம் உலகமகாயுத்ததின் பின்னர் காலனிகளைப் பராமரிக்கமுடியாத நிலை, ஓயாத அலையான மக்கள் எழுச்சிகள் தவிர்க்க முடியாமல் இந்தியாவை விட்டுவெளியேறுவதற்கான நிலைமைகளை காலனியாதிக்கவாதிகளுக்கு ஏற்படுத்தியது. வெளியேறுவதற்கு முன்னர் இந்தியா பாகிஸ்தான பிரவினை ஏற்பட்டது.  தலைவர்கள் இந்தப்பிரிவினையின் யதார்த்தத்தை உணாந்து கொண்டார்கள். உணர்ச்சிகளுக்கு இடமளிக்கவில்லை. ஆனால் ரணகளமாகவே இந்த பிரிவினை ஏற்பட்டது. பிரிவினை வேண்டாம். இந்தியாவின் பிரதமராக ஜின்னாவே இருக்கட்டும் என்று காந்தி பரிந்துரைத்தார். ஆனால் பிரிவினையைத் தவிர்க்க முடியாதது அவருக்கு நிரந்தர வேதனையாகத்தான் இருந்தது.

இந்தப் பிராந்தியத்தில் இந்தியா ஒரு மாபெரும் ஜனநாயகமாக உருக் கொள்வதற்கு அதன் அறப்போராட்ட பாரம்பரியமும் ஒரு மூலவிசையாகும். உலகில் நாம் கருதிய பல நாடுகள் சிதைவுற்ற நிலையிலும் இந்தியா நிறகிறது. இது நாம் ஆழமாகச் சிந்திக்கவேண்டிய விடயம். சுதந்திர இயக்கம் ஜனநாயக நெகிழ்வுத்தன்மை கொண்ட வௌ;வேறு மனிதர்களிடையே நல்லிணக்கத்தை வெளிப்படுத்துவதாக அது அமைய வேண்டும். நாம் கருதிய சோவியத் நாடு நிற்கிவில்லை. இந்தியா நிற்கிறது.

காந்தியடிகளின் தலைமை இந்திய தேசிய சுதந்திரற்கப்பால் இந்திய மக்களின் சமூக ஏற்றத்தாழ்வுகளை களைவதில் முன்செல்லமுடியவில்லை. அது இன்றைய தலைமுறையினரால் தான் முன்னெடுக்கப்படவேண்டும். காந்திய அறநெறிகளுக்குச் சம்பந்தமில்லாத விடயங்கள் மலிந்து போயிருக்கின்றன. மனிதர்கள் ஒருவரை ஒருவர் மதித்தல் ,வன்முறையற்ற மனோநிலை, கருணை என்பன காந்திய அறங்கள். ஆனால் இந்திய வாழ்விலும் உலக வாழ்விலும் ஈவிரக்கமற்ற தன்மைகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் மாற்றம் வேண்டும். தீண்டாமைக் கொடுமைகள் -மதப் பூசல்கள்- மேலாண்மை ஊழல் என்பன தலைவிரித்தாடுகின்றன.

 சகிப்புத்தன்மையற்றவாழ்வு இங்கு பெரும் சவால். எடுத்தற்கெல்லாம் வன்முறை என்ற நிலை உருவாகியிருக்கிறது.

காந்தியாருக்குப் பின் வியட்னாமிலும் சில ஆபிரக்க நாடுகளிலும் மத்திய கிழக்கிலும் பல மிலிலியன் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். காந்திய சிந்தனை இன்று மிக விசாலமாக முன் கொண்டு செல்லப்படவேண்டும். நிலமானிய சித்தனையின் தாக்கங்கள  அதில் இருந்தாலும் நவீன வாழ்வில் காந்தீயத்தை அதன் வழியில் பிரசன்னப்படுத்தவேண்டும். சாதாரண மக்களின் நலன்களைப் புறக்கணிக்கும் எதிர்திசையில் உலகம் பிரவேசிக்கத் தயாராகியிருக்கிறது. இன்றைய அராஜக வாழ்வில் மாற்றம் தேவை. அதற்கு இது கணிசமான அளவில் பங்களிக்க முடியும்

உலகம் பூராவும் இருக்கும் அதிகார அகங்காரம் கொண்ட பல தலைவர்கள் அவர்களது படை சேவகர்கள் பல சந்தர்பங்களில் ஜெனரல் டயர் போன்றவர்கள் உருவாகி விட்டார்கள். உலகளாவிய அளவில் அதிகாரங்களுக்கெதிரான பண்பாட்டுப் புரட்சிகள் தேவைப்படுகின்றன. இந்திய சுதந்திர இயக்கத்தின் செல்வாக்கிலிருந்த பாகிஸ்தான் ,பங்காள தேசம் ,மியன்மார், இலங்கையில் வௌவேறளவில் இராணுவ வகைப்பட்ட அதிகாரங்கள் செல்வாக்குச் செலுத்துகின்றன.

இன சமூகங்களின் அபிலாசைகள் சாதாரண மக்களின் சமூக பொருளாதார அபிலாசைகள் கவனப்படுத்தாத வரை உண்மைiயான சமத்துவம் நிலவாது. இது தவிர்க்கமுடியாதது வரலாற்று விதியின் நியதி அது. இவை காந்திய இயல்புகளுடன் அணுகப்படவேண்டும். திறந்த மனதுடன் திட்டங்கள் எதுவுமில்லாமல் போகவேண்டும். சாதராண மக்களின் வழங்கள் ச10றையாடப்படுவது காந்திய அறங்களுக்கு முரணானது என்பது உணரப்படவேண்டும்.  வன்முறை சாரா வகையில் இந்த இயக்கங்கள் நிகழ்த்தப்படவேண்டும். சுற்றாடல் மாசடைதல் ,சூறையாடுதல் போன்றவற்றை நிறுத்துவதும் சமூகப் பாதுகாப்பிற்கான நிலைமைகளை ஏற்படுத்தவும் முடியும். காந்தியின் சுதந்திர இலட்சியங்கள் அஹிம்சை, தீண்டாமை ஒழிப்பு, மத இன சமூகங்களின் ஐக்கியத்தை வலியுறுத்தி நின்றது.

ஆனால் அந்த இலட்சியங்களை தலை கீழாகப் புரட்டிப் போடும் செயல்கள் இன்று இந்தியாவில் செல்வாக்குச் செலுத்துகின்றன. இந்த சத்திக்ளைத் தோற்கடிப்பதற்கான இயக்கமும் தொடர்கிறது. வன்முறையற்ற உலகு . சிந்திக்கும் போது எவ்வளவு நன்றாக இருக்கிறது. மோதல்கள-; பேதங்கள் இருந்திருக்கலாம். மனிதர்களுக்கு கண்ணியமா  ுதந்திரமான வாழ்வு பிரகடனம் செய்யப்பட்டது. உலகத்தை வியப்பில் ஆழத்திய இத்தகைய மனிதர்கள உலகில் அரிதாகிவிட்டனர். இந்திய சுதந்திர இயக்கமும், அமெரிக்க கறுப்பு இன மக்களின் கிளர்ச்சி மற்றும் தென்னாபிரிக்க விடுதலை இயக்கங்களும் காந்திய செல்வாக்கிற்கு உட்பட்டிருந்தன.

காந்திய வழிகள் பின்பற்றப்பட்டிருத்தால் இன்று உலக இயற்கையில் இத்தனை பாரிய அழிவு ஏற்பட்டிருக்காது. இயற்கையுடன் இணைந்த வாழ்வு வலியுறுத்தப்பட்டது.  முதிர்ச்சியடையாத அரைநிலமானிய முதலாளித்துவ இந்தியாவில் காந்தியடிகளின் தலைமையிலான சுதந்திர இயக்கம் வரையறைகளைக் கொண்டிருந்தது. ஆனால் அதே காந்திய வலுக்களுடன் சமூக மாற்றத்திற்கான இயக்கமும் முன்னெடுத்துச் செல்லப்பட்டிருக்கவேண்டும்.

அநீதியற்ற சமூக அமைப்புமுறை பற்றிய தேடல்கள் கருத்துக்கள் நேரு விடமும் இடதுசாரித் தவைர்களிடமும் இருந்தன. இநதிய சுதந்திர இயக்கத்தின் லட்சோப லட்சம் போராட்டக்காரர்களும,; கலைஞர்களும் ,கவிஞர்களும், எழுத்தாளர்களும் அனேகமாக சாமானிய மனிதர்களே. தமது அற்ப சொற்ப சொத்துக்களையும் சுதந்திர இயக்கத்திற்கு அர்ப்பணிக்கத் தயாராயிருந்தவர்கள். காந்தி  அறங்கள் சிதைக்கப்பட்டதும் சமூக நீதிக்கான இயக்கத்தை முன்னெடுப்பதில் தடைகளை ஏற்படுத்தியதெனலாம். காந்திய இயக்கத்தின் தாக்கத்தால் அதே வடிவிலோ வேறு விதமாகவோ சமூக சீர்திருத்த இயக்கங்கள் உருவாயின.

அம்பேத்கர் ஈவேரா போன்ற தலைவர்களின் சாதி அமைப்பு முறை மதம் பெண்ணடிமைத்தனம் இவற்றுக்கெதிரான இயக்கங்களைக் குறிப்பிடலாம். இந்திய சுதந்திரத்திற்கான செயற்பாட்டில் இடதுசாரிகள் காந்தியாருடன் தீவிரமான பேதங்களை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. விமரிசனமும் செயற்பாடும் என்ற முறைகளையே பின்பற்றினார்கள். இன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் தலித்துக்களுக்கெதிரான முஸ்லீம் மக்களுக்கெதிரான சிறுபான்மையினருக்கெதிரான பெண்கள் மீதான தாக்குதல்கள், கனிம வள அழிப்பு ,ஊழல், வளங்களைச் சூறையாடல் அரசியல்வாதிகளின் ரவுடி ராச்சியம் எல்லாமே காந்திய அரசியலை அரித்தழித்து வருகின்றன.

காந்தியின் காலத்து காங்கிரஸ் மாநாடுகள் கூட்டங்கள் பொதுவாகவே கலந்துரையாடல் கருத்தொருமிப்பு என்ற முறைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தன. ஒரு மனிதரைச் சுற்றி என்பதல்ல. தனிமனிதரின் வரலாற்று பாத்திரம் முக்கியமானது. பல மனிதர்கள் இருந்தார்கள். லட்சோபலட்சம் மனிதர்கள் இருந்தார்கள.; கருத்துமக்களைப் பற்றிக் கொண்டால் சத்தியாக உருவெடுக்கும். காந்தியம் அத்தகைய மாபெரும் ஆற்றலைக் கொண்டிருந்தது.

கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதி வரை உலகின் ஆகக் கூடிய சனத்தொகை கொண்ட நாடு பின்பற்றிய வழிமுறை அது. உலக விவகாரங்களில் இந்தியா என்ன செய்கிறது அல்லது இந்தியாவின் மீது உலகத்தினரின் மரியாத  எல்லாம் இங்கிருந்துதான் ஆரம்பிப்பவை  இத்தகைய மெல்லிதயம் படைத்த மனிதனை நேசித்த நாடு. தனது பாதுகாப்பு சட்டம் ஒழுங்க  உட்பட தனது அதிகார கட்டமைப்பை பாரிய அளவில சீர்திருத்த வேண்டியிருக்கிறது ஊழலும் சாதாரண மக்கள் மீது வெறுப்பை உமிழும் ஆடம்பரத்தில் திளைக்கும் வாழ்க்கைமுறை பற்றியும் சிந்திக்கவேண்டும்.

எளிமையின் சாதாரண வாழ்க்கையின் அடிப்படையில் உருவான தேசம். அதன் சுதந்திரப்போராட்ட அறங்களைத் தொலைத்து நிற்கிறது. காந்தியின் தேசம் பொக்கை வாயுடன் சிரித்துக் கொண்டிருக்கும் எனத்தான் இந்தியாவிற்கு அப்பால் உள்ள சாதாரண மக்கள் சிந்திப்பார்கள்.ஆனால் யதார்த்தம் அதுவல்ல. ஒரு கருணையற்ற தன்னலமும் அதிகார அகங்காரமும் உருவெடுத்துள்ளது இவை இந்திய வாழ்வியலில் இருந்து களையப்படவேண்டும். இங்கு பின்தங்கலைநோக்கிச் செல்வதைப்பற்றிக் குறிப்பிடவில்லை.

'தோணிகள் செய்வோம் இரும்பாணிகள் செய்வோம் ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம் சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவோம'; என்ற பாரதியின் வாக்கிற்கிணங்க நிகழ்வுகள் நடைபெறவில்லை என்றல்ல. நிகழ்ந்திருக்கிறது. ஆனால் இந்தியாவின் கோடான கோடி மக்களின் வாழ்வில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. காந்திய கொள்கைகளின் போதாமை காரணமாக இருந்திருக்கலாம் . ஆனால் காந்திய அறம் இன்று தேவைப்படுகிறது. வெறுப்பும், குரோதமும் மலிந்த உலகில் அது நவீன வடிவில் இன்றும் தேவைப்படுகிறது.

சுகு-ஸ்ரீதரன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com