Contact us at: sooddram@gmail.com

 

பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார்?

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா குரூரமான பாலியல் பலாத்காரப் பலாத்காரப்படுகொலைக்கு யாழ் குடாநாடு மற்றும் வடக்கு கிழக்கில் மக்கள் கொந்தளிப்பும் கோபமுமான உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த பாலியல் பலாத்கார படுகொலை புரிந்தவர்களுக்கு உச்ச பட்ச தண்டனை வழங்குவது, மாணவி வித்தியாவின் குடும்பத்திற்கு தமது ஆதரைவைத் தெரிவிப்பதும், இனிமேலும் இத்தகைய சம்பவங்கள் நிகழக் கூடாது என்பதும் இந்த வெகுஜன நடவடிக்கைகளினூடாக வலியுறுத்தப்படுகின்றன.
நாகரிகமான கண்ணியமான சுதந்திரமமான வாழ்வு தொடர்பான தாக்கமான பிரதிபலிப்புக்களாக அவை வெளிப்படுத்தப்படுகின்றன.

ஆசிரியர்கள் மாணவர்கள் பொதுமக்கள் தன்னியல்பாக, சுயாதீனமாக தமது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள். இம் மக்களின் எழுச்சிகள் நம்பிக்கை அளிப்பனவாக அமைகின்றன.
இதுபோன்ற கொடுமைகள் இதற்கு முன்னரும் நிகழ்ந்துள்ளன. இந்த எழுச்சி இவற்றுக்கெல்லாம் ஒரு எச்சரிக்கையாக அமையலாம். பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பாக பாரிய எழுச்சி சமகாலத்தில் இப்போதுதான் முதன் முதலாக நிகழ்கிறது.
இந்த பாலியல் வன்கொடுமை பற்றி வக்கிரமான செய்திகளை வெளியிடும் ஊடகங்கள்?? தமிழில் எண்ணுக்கணக்கற்று இருக்கின்றன.

இவை அன்றாடம் பாலியல் பலாத்காரம் புரிந்து கொண்டிருக்கின்றன. இந்த கிறிமினல் ஊடகங்கள் தடைசெய்யப்படுவதும் இந்த வக்கிரப்பேர்வழிகள் சட்டத்தின் பிடியில் கொண்டுவரப்படுவதும் சிரமமானதெனினும் முக்கியமான பணியாகும். பாதிப்பட்டவர்களின் நிழல் படங்களை வக்கிரமாக பிரசுரிப்பது செய்திகளை அதே விதமாக எழுதுவது. சமூக இணையத்தளங்களில் பரவிவிரும் இந்த விசக்கிருமிகளிடமிருந்து சமூக அற உணர்வுகள் பாதுகாக்கப்படவேண்டும்.

2013 இல் டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவியின் படுகொலைக்கு நீதி கோரி நிகழ்ந்த வெகுஜன எழுச்சியில் அந்த மாணவியின் நிழல் படங்கள் ஊடகங்களில் துஸ்பிரயோகம்செய்யப்படவில்லை. பாதிக்கபட்ட மாணவியின் குடும்பத்தினதும், ஜனநாயக வழியில் எதிர்ப்புத் தெரிவிக்கும் மக்களின் கண்ணியத்தை காக்கும் விதமாக ஊடக செயற்பாடுகள் அமைய வேண்டும். தவிர இந்த பாலியல் வன்கொடுமைக்கெதிராக மக்களின் எழுச்சியை தமக்கு சாதகமாகபாவிக்க சமூக விரோத சக்திகள் முயல்வதும் அவதானிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்த வெகுஜன எதிர்ப்பியக்கம் தொடரவேண்டியிருக்கிறது. பாலியல் வன்கொடுமை படுகொலைகள் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டிய கடப்பாடு மத்திய அரசு, மாகாண அரசு, உள்ளூராட்சி சபைகள், பொலிசாருக்கு இருக்கிறது. ஒருங்கிணைந்து மக்களின் பாதுகாப்பில் அக்றை செலுத்தி செயற்படவேண்டும். பொலிஸ், பிரசைகள் குழுக்கள் மக்களுடன் இணைந்து செயற்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். பொலிசிலும் பெண்களின் நலன் சார்ந்து தனிப்பிரிவு ஏற்படுத்தப்படவேண்டும். பெண்களுக்கு குடும்பத்தில் சழுதாயத்தில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றிய போதிய அறிவும் பயிற்சியும் அவர்களுக்கு இருக்கவேண்டும்.

அவசர தொலைபேசி அழைப்புக்களுக்கான இலக்கங்கள் பொதுமக்களுக்கு வழங்கவேண்டும். அவை 24 மணி நேரசெயற்பட்டில் இருக்க வேண்டும். வன்முறை மயப்பட்ட சீரழிந்த பிரிவொன்று சமூகத்தில் உருவாகியிருக்கிறது. இது வெற்றிடத்தில இருந்து வரவில்லை.
சமூகத்தில் பயத்தை ஏற்படுத்துவதற்கு அதிகாரம் மிக்க சக்திகள் வேண்டும் என்று அரசியல்வாதிகள் அமைச்சர்கள் முதல் பாமரர்கள் வரை பேசுகிறார்கள். ஆண்பெண் சமத்துவம் நிலவும் பெண்களின் சுதந்திரம் பாதுகாப்பு ஓரளவேனும் உறுதிப்படுத்தப்பட்ட நாடுகளில் அச்சுறுத்துவதற்கென்று அதிகாரசக்திகள் என்று எவரும் இல்லை.

ஐரோப்பா. வடஅமெரிக்க நாடுகளில் இதனை நாம் அவதானிக்கமுடியும். நம்மை ஆழ்வதற்கு சமுதாயத்தில் பீதி ஏற்படுத்தும் அதிகார சக்திகள் தேவை என்று கூறுவது ஜனநாயக விரோதமானதாகும். இதில் பாசாங்கும் இருக்கிறது. இடையறாத பண்பாட்டு மறுமலர்ச்சி மற்றும் சமூக மாற்ற இயக்கங்களினாலேயே மாறுதலைக் கொண்டுவரமுடியும். பண்பாடு கலாச்சாரத்தின் பெயரில் வக்கிரமே எமது சமூகத்தில் ஆதிக்கம் புரிகிறது. இந்த மாணவியின் மீது பாலியல் வன்முறை புரிந்தவர்களின் எண்ணிக்கை அதிர்ச்சியடையவைக்கிறது. இது இந்த சமூகத்தில் நிலவும் வக்கிரத்திற்கும், குரூரத்திற்கும், ஆசாடபூதித்தனத்திற்கும் சான்று.

மாணவி வித்தியாவிற்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும். அது எமது சமுதாயத்தில் பெண்களின் சுதந்திரம் பாதுகாப்பிற்குமான திறவுகோலாக அமைய வேண்டும். நாடளவிய அளவில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் உரிமைகளை மறுதலிக்கும் நுகர்வு பண்டமாக கருதும் போக்கு ஒரு வழமையாகியிருக்கிறது. எனவே இதன் முக்கியத்துவம் கருதி
பெண்களின் உரிமைகள் தொடர்பான சட்டங்கள் சிறப்பு முக்கியத்துவம் கொடுத்து பிரத்தியேகமாக உருவாக்கப்படவேண்டும். யாப்பு ரீதியாகவும் நடைமுறையிலும் உறுதிப்படுத்தப்படவேண்டும். பெண்கள் மீதான வன்முறைகளுக்கெதிரான இயக்கம் இடையறாது முன்னெடுத்துச் செல்லப்படவேண்டும்.

(ஞானசக்தி-ஸ்ரீதரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com