|
||||
|
மனம்பெரி தொடக்கம்
-இசைப்பிரியா
வரை கருணையற்ற
மனோநிலை ஊடக, உலக தேவைகள்
நலன்களுக்கப்பால்
சனல்-4 இல் இசைப்பிரியா
இழுத்துச்செல்லப்படும்
காட்சி எம்மை அமைதியிழக்கச்செய்கிறது. நிராதரவான
பயங்கரமான
குரூரமான
தனிமையான
அவலமானது
அந்தச் சூழல், சேறும்
இரத்தமுமாக வக்கிரமிருகவெறியுடன்
துப்பாக்கி
முனையில்
ஒரு பெண்ணை
இழுத்து வரும், மரணத்தை
நோக்கிய அவலமான பயணம். நாம்
மனிதரெனக்
கொண்டிங்கு
வாழும் போது இசைப்பிரியாவின்
நிலை, தவிப்பு
,கையறு நிலை இதனைப்பார்க்கும்
போது வெட்கமாகவும்
அவமானமாகவும்
இருக்கிறது.
இசைப்பிரியாவின் துயரம்
ஒரு கைத்தொலைபேசியில்
பிடிக்கப்பட்டதால்
அதிர்ச்சியில்
உறைய வைக்கிறது.
இதேபோன்று ஒளிப்பதிவுசெய்யப்படாத
நிழல்படங்களாக்கப்படாத எத்தனையோ அநியாயங்கள்
அக்கிரமங்கள்
நிகழ்ந்திருக்கின்றன.
நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இவை பற்றி விசாரிக்கப்படாவிட்டால்
தண்டனை வழங்கப்படாவிட்டால்
இது இலங்கையின்
கண்ணியமான
பெருவாரியான
மக்களின்
வாழ்க்கை
நெறிமுறைகளை
இகழ்வதாக
அமையும்.
இதுபோன்ற சம்பவங்கள்
தொடர்பாக
தொடர்ச்சியான
உண்மைகளைக்
கண்டறியும்
செயற்பாடுகள்
அவசியம் . ஏற்கனவே கண்டறியப்பட்டவற்றுக்கு
நடவடிக்கை
வேண்டும்.
இதனை எதிர்மறையாக
நோக்கத் தேவையில்லை.
இலங்கையின் வாழ்வை
செம்மையுற
வைப்பதற்கு
ஓயாத விழிப்புணர்வு
வேண்டும்.
வெறுமனே ஒரு சில மிருகங்களின்
செயற்பாடென்று
எடுத்து விட முடியாது.
நிறுவன ரீதியான
காட்டுமிராண்டி
சுதந்திரத்தில்
இருந்தே இது நிகழ்ந்திருக்கிறது.
மனிதர்கள் என்ற அடையாளத்தையும்
தார்மீக விழுமியங்களையும்
அறங்களையும்
அழிப்பது
மனித குலவிரோதிகள்
செய்யக் கூடிய காரியங்களே.
இங்கு இறைமை என்ற
சொல் அர்த்தம்
இழந்து போகிறது. இறையாண்மை என்பது
மக்களின்
நம்பிக்கைகள்,
நல்வாழ்வு,
பாதுகாப்பு
என்பவற்றுடன்
தொடர்பு பட்டது. இது ஒரு தனிப்பட்ட
சம்பவம் அல்ல. ஒரு
சமூகம் பற்றிய குரூரமான வெறுப்பின்
வெளிப்பாடு.
மானிட அறத்தின்
பாற்பட்ட
பகுத்தறிவு
-பொதுப்புத்தி
என்ன சொல்கிறது
என்பதுதான்
முக்கியம்.
உலகவரலாறு வரட்டு
எழுத்துருக்களில்
இருந்து வரவில்லை.
இரத்தமும் சகதியுமான
மனித வாழ்விலிருந்து
வருவது. இசைப்பிரியாவிற்கு நேர்ந்தது
போன்ற அவலங்களை புலிகள் நிகழ்த்தவில்லை
என்றும் இல்லை. தெரிந்ததும்
தெரியாததுமான
சம்பவங்கள்
கணக்கற்றவை.
இரத்தம் தோய்ந்தவை.
எல்லாம் ஒளிப்படங்களாக
வரவில்லை.
சொந்த சமூகம் மாத்திரமல்ல
சக சமூகங்களைச்
சேர்ந்த பெண்கள் குழந்தைகளும்
குரூரமாக
கொல்லப்பட்டார்கள்.
அவர்கள் எந்த உலக சட்டத்திட்டங்களுக்கும்
கட்டுப்பட்டவர்கள்
அல்ல என்றவாதமும்
சரியானதல்ல. இசைப்பிரியாவிற்கு நிகழ்ந்த கொடூரத்திற்கு
மேலாதிக்கவெறி
அதிகார அகங்காரம்
பிரதான காரணமாக இருந்தது. சிறுபான்மைச்
சமூகத்தைச்
சேர்ந்தவர்கள்
அல்லது நலிவுற்றவர்கள்
மீது எத்தகைய
காட்டுமிராண்டித்தனத்தையும்
நாம் பிரயோகிக்கமுடியும்
அதற்கு பாதுகாப்பிருக்கிறது
என்ற அந்த
உணர்வு நிலை ஆபத்தானது.
இது போன்ற இதற்குநிகரான
நிலை மறுதரப்பிலும்
காணப்பட்டது.
மாற்று இயக்கங்களில்
சம்பந்தப்பட்ட , மாற்றுக் கருத்துடைய
பெண்களை, சொந்தமெனச்
சொல்லும்
மக்களை என்ன செய்தார்கள்
என்பதும்
அதிர்ச்சி
ஏற்படுத்துவது.
இங்கு ஒப்பீடுசெய்ய
வரவில்லை.
காட்டுமிராண்டித்தனங்கள் எல்லாப்பக்கங்களிலும்
கோலோச்சியிருக்கிறது.
நாளாந்தம் எவ்வளவு
குரூரமான
படுகொலைகள்
நிகழ்த்தப்பட்டன.
முள்ளிவாய்கால் வரை ஒரு மக்கள்
கூட்டத்தை
பலாத்காரமாக
அழைத்துச்
சென்றவர்களும்
இதற்கு பொறுப்பு சொல்லவேண்டும். சமூகப் பொறுப்புணர்ச்சி,
தமது உறுப்பினர்கள்-
மக்கள் மீது கருணையும்
அன்பும் உள்ளவர்கள்
இத்தகைய காரியத்தைச
செய்ய மாட்டார்கள். இசைப்பிரியாவின்
இறுதி நாள் அவலமும்,
கையறு நிலையும், கல்வாரிப்பயணமும்
முள்ளிவாய்கால்வரை
மக்களை வழிநடத்தியவர்களின் காட்டிக்கொடுப்புமாகும்.
சமூகப்பொறுப்புணர்வுள்ளவர்கள் மக்கள்
மீது அக்கறையுள்ளவர்கள்
இந்த காரியத்தை
செய்ய மாட்டார்கள். ஒரு சிறிய இடத்தில்
மக்கள் அடைபட நிர்ப்பந்தித்தவர்களும்
பல்லாயிரக்கணக்கான
மக்களின்,
போராட்டக்காரர்களின்
மரணங்களுக்குப்
பதில் சொல்லவேண்டியவர்கள். இசைப்பிரியாவினதும்,
கடந்த 30 வருடங்களாக
குரூரமாகவும்
அவலமாகவும்
கொல்லப்பட்ட
பலநூற்றுக்கணக்கான
பெண்களினதும்
மரணங்களுக்கு
அரசு மாத்திரமல்ல,
ஜனநாயக விரோத தமிழ் பாசிசத்திற்கு
ஆதரவழித்து
நின்ற சமூகமும்
பதில் சொல்லவேண்டும்.
1971
கிளர்ச்சி
தோற்கடிக்கப்படும்
போது மனம்பெரி
என்ற கதிர்காமத்து
அழகுராணிக்கும்
குரூர மரணம் விளைவிக்கப்பட்டது. ஆயுதம்தாங்கிய அதிகாரம்
காட்டுமிராண்டிநிலைக்கு
மனிதனை பல சந்தர்ப்பங்களில்
அழைத்துச்
சென்றிருக்கிறது.
1994 இல் ருவண்டாவின்
பல்லாயிரக்கணக்கான
டுட்சி இனப்பெண்கள்
பாலியல் பலாத்காரத்திற்கும்
படுகொலைக்கும்
உள்ளானார்கள்.
ஆப்கானில்
தலிபான்கள்
பெண்களுக்கெதிரான
பாசிச வன்முறைகளைத் தொடர்ந்து
கொண்டிருக்கிறார்கள்
யாழ்ப்பாணத்தில் சில
நாட்களுக்கு
முன் லோகராணி
என்ற பெண்
பாலியல் பலாத்கார படுகொலைக்கு
ஆளாக்கப்பட்டு
காங்கேசன்துறை
வீதி நாச்சிமார்
அம்மன் எனும் பெண்தெய்வத்தின்
தேர் முட்டியில்
சடலமாக வீசப்பட்டு
கிடந்ததெல்லாம்
பெரிய அதிர்ச்சிகளை
ஏற்படுத்தாத
அன்றாடச்
செய்தியாகியது.
இத்தகைய மனோநிலை
ஆபத்தானது. எங்கிருந்து எந்த மன
நிலையிலிருந்து
இந்த வன்முறைகள்
எழுகின்றன? இத்தகைய வன்முறைகளுக்கு
நாம் பொறுப்பில்லையா
என்பதைச்
சிந்திக்கவேண்டும்.
இந்த குரூரம்
யுத்தத்திற்கு
பின்னரும்
அங்கொன்றும்
இங்கொன்றுமாக
நிகழ்ந்துகொண்டுதான்
இருக்கிறது.
நாம் எம்மை சுயபரிசோதனைக்குட்படுத்துவது
முதன்மையானது.
எம்மை சுயவிமரிசனத்திற்குள்ளாக்க
வேண்டும்.
உண்மையை நீதி நியாயத்தை
தரிசிப்பதற்கு
இது மிக
மிக அவசியம்.
நாடு முழுமையாக
ஜனநாயக மயப்படுத்தப்படவேண்டிய
தருணமிது.
கண்ணியமான சுயமரியாதையுடனான
வாழ்வொன்றை
கட்டியெழுப்ப
முனைவோம்.
சுகு-ஸ்ரீதரன் |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |