Contact us at: sooddram@gmail.com

 

தார்மீக வலுவிழந்த தமிழ் அரசியல் சூழல்


தோழர் நாபா சில நினைவுகள்


(தோழர் சுகு- ஸ்ரீதரன்)


தமிழ் சமூகத்தின் தேசிய விடுதலையுடன், இலங்கையில் சமூக பொருளாதார விடுதலையையும், ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களாக இருக்கக்கூடிய சர்வதேச சமூகத்தின் நட்புறவுக்காகவும் வாழ்ந்து தமிழ் சமூகத்தினுள் வேரூன்றிவிட்ட பாசிசத்தின் படுகொலை தாக்குதலில் பன்னிரு தோழர்களுடன் பலியாகியவர் தோழர் பத்மநாபா. ஆளுமைமிக்க தோற்றமும், தீட்சண்யமான பார்வையும் மலையென சவால்கள் எழுந்தாலும் நோ 'புரொளப்ளம்" என்று சொல்லி வாழ்ந்து மடிந்தவர் தோழர் பத்மநாபா. அவர் ஒன்றரை தசாப்தங்களாக மக்களின் விடிவுக்காக உழைத்து தனது 39 வயதில் மரணம் என்னும் சவாலை எதிர் கொண்டார்.

தமிழ் சமூகத்தின் உன்னதமான தலைவர்களெல்லாம், மக்களை நேசித்த மனிதர்;களெல்லாம் இவ்வாறுதான் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

மகா புருஷன் எனப்படுபவன் ஏனையோரை விட தீர்க்கத்தரிசனம் மிக்கவன் என்றார் ரஷ்ய தத்துவஞானி பிளக்காநோவ். இற்றைக்கு 25 ஆண்டுகளுக்கு முன் வடக்கு கிழக்கு வாழ் மக்களுக்கு ஒரு நியாயபூர்வமான தீர்வை உருவாக்குவதில் அவர் தீர்க்கமான பங்களிப்பை வழங்கியிருந்தார். அவருடைய அரசியல் தூரதிருஷ்டி- ஒரு பேரழிவில் இருந்து சமூகத்தை காப்பாற்றும் அக்கறையைக் கொண்டிருந்தது. அவர் மலையக மக்களை பெரிதும் நேசித்தார். இலங்கையில் நடக்கும் சமூக மாற்றத்தில் மலையக மக்களின் பங்கை அவர் எப்போதும் வலியுறுத்தி வந்தார். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினரான சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள், வர்க்க ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் தேசிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள், ஒடுக்குமுறைக்குள்ளான பெண்கள் அத்தனை சமூக பிரிவினர் மீதும் அதீத ஈடுபாட்டை காட்டினார். தோழமை என்றால் என்ன என்பதற்கு அவர் ஒரு வாழும் உதாரணமாக திகழ்ந்தார். அவருடைய இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட மக்களே அவர் எத்தகைய மானிடர் என்பதற்கு சான்று பகன்றன.

அவர் மிகவும் அழகான கனவை கொண்டிருந்தார். அது மனித குலத்தின் மகிழ்ச்சியான வாழ்வு என்பது மாத்திரம்தான். அதற்காக அவர் முழுமையாக தன்னை அர்ப்பணித்திருந்தார். இந்திய தேசிய சுதந்திர போராட்ட தலைவர்களுடனும், இடதுசாரி தலைவர்களுடனும், இலங்கையின் சமூக பொருளாதார மாற்றங்களுக்காக பாடுபாட்ட மனிதர்களுடனும் அவர் நட்பு ப+ண்டிருந்தார்.

அன்றாட உணவிற்கு பணம் கிடைக்கிறதோ இல்லையோ ஈழச் செய்தி என்ற மாதாந்த செய்தி தொகுப்பை கொண்டு வருவதிலும் சுவரொட்டிகள் மூலம் ஈழத் தமிழர் பிரச்சினையை தமிழகத்தில் வெளிக்கொணர்வதிலும், ஊடகங்களில் செய்திகள் இடம்பெறச் செய்வதிலும் அவர் ஆரம்ப நாட்;களில் இருந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு இருக்கிறார்.

தோழர்களுடன் சமகால பிரச்சினைகள் பற்றிய கலந்துரையாடல்களை அனுபவம் வாய்ந்த தலைவர்கள், கல்விமான்களைக் கொண்டு அவர் ஏற்பாடு செய்யவும் தவறவில்லை. சமூகத்தினதும்- ஸ்தாபனத்தினதும் வளர்ச்சிக்காக அவர் நேர காலம் பாராது உழைத்தார்.

நாபாவும் மறைந்த தோழர்களும், கண்ட கனவுகளுக்கும் இன்றைய யதார்த்தத்திற்குமிடையிலான இடைவெளி நெஞ:சு பொறுக்கமுடியாத இடைவெளி காணப்படுகிறது.

இன்று தமிழ் அரசியல் சூழல் என்பது அயோக்கியர்களின் கூடாராமாக மாறியிருக்கிறது என்பதை மிகுந்த தன்னடக்கத்துடன் உரைக்க வேண்டியிருக்கிறது.

நேர்மையானவர்கள், உண்மையானவர்கள் எள்ளி நகையாடப்படுவதான சூழல் உருவாகியிருக்கிறது

முற்போக்கான மக்கள் சார்ந்த அரசியல் பாரம்பரியம் உருவாகுவதற்கு நீண்டகாலம் எடுக்கலாம்.

தார்மீக உணர்ச்சி சிறிதும் இல்லாமல் கிடைப்பதைச்சுருட்டிக் கொள்வது, சூறையாடல் மக்களை ஏமாற்றுதல் என்ற போக்கு அதிகரித்திருக்கிறது.

போராட்டத்தில் உயிரை இழக்கச்சித்தமாக இருந்தவர்களும் இவர்களும் ஒரே மக்கள் பிரிவினர் அல்ல.

தமிழர்களின் போராட்டத்தின் பாசிச கூறுகளும் பேரினவாதமும் சமூகத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கி;யுள்ளன.

உன்னதமான முற்போக்கான பரந்த எண்ணங்கொண்ட தலைமைத்துவ மரபு ஒன்று தலை முறிக்கப்பட்டுள்ளது

அது தளிர் விட வேண்டும்.

ஒரு புதிய தலைமுறைப் பிரகாரசமான தலைவரின் பேரிழப்பு. ஈடுசெய்யமுடியாத வெற்றிடம் அது. ஹிட்லரின் நாசிசம் ஜேர்மனியினதும் ஐரோப்பாவினதும் மாபெரும் தலைவர்களை எவ்வாறு காவு கொண்டதோ அவ்வாறுதான தமிழ் பாசிசமும் தோழர் நாபாவை காவு கொண்டது. அவர் சேகுவேரா, கொங்கோவின் விடுதலை வீரர் லுமும்பா ,மண்டெலா போன்ற தலைவர்களின் வரிசையில் வைத்து எண்ணப்பட வே;ணடியவர். வரலாறு இம் மகத்தான மனிதனை என்றோ ஒரு நாள் முன்னிறுத்தும். தற்போதைய சமூக முன்னேற்றத்துக்கு எதிரான சக்திகள் அன்று வரலாற்றின் குப்பைத் தொட்டியில் இருப்பார்கள். தோழர் நாபா நாமம் நீடூழி வாழ்க.
பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
(முன்னர் எழுதியது. பொருத்தம் கருதி அவரது பிறநத் தினத்தை ஒட்டி மிள பிரசுரம் செயப்படுகிறது)

(நவம்பர் 19 தோழர்நாபாவின் 63 வது பிறந்த நாள்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com