என்ன தான்
சொன்னாலும் எங்களுக்கு
வெட்கப்படுகிற
இயல்பு குறைவு
(ஸ்ரீதரன் சுகு)
ஒரு
காலத்தில் பிரதானமாக
தமிழ் இயக்கங்களும்
செய்த நல்லது,
கெட்டதை அட்டகாசங்களை
சமூகத்தின் வௌ;வேறு
பிரிவினர் ரசித்தார்கள்.
அருவருத்தார்கள்
நியாயப்படுத்தினார்கள் . பாராட்டினார்கள்.
தூற்றினார்கள்.
இன்னும் சிலர்
நல்ல விடயங்கள்
எதுவும் நடக்காமல்
இருப்பதற்கு பிழைபிடித்துப்
பிடித்தே
தமது புனித வேசத்தை
துலக்குவதை இன்றும்
பரவலாக காணலாம்.
பாட்டுப்பாடி
பரிசு வேண்டும்
புலவர்களும், பிழைபிடித்து
பரிசு வேண்டும்
புலவர்களும் இன்றளவில்
இருந்து கொண்டுதான்
இருக்கிறார்கள்.
புலிகளின்
பௌதிக இருப்பு
அற்றுப்போய்விட்டாலும்
அந்த கருத்தியல்
இன்னும் சமூகத்தில்
செல்வாக்குச்
செலுத்துகிறது.
அவர்கள்
இருந்தால் இன்று
நடக்கும் “கலாச்சார
சீரழிவுகள் ஒழுக்க
கேடுகளுக்கு ? மண்டைவெடி”
என்று பெருமிதத்துடன்
சிலர் சொல்வதை
இன்று அடிக்கடி
கேட்கக் கூடியதாக
இருக்கிறது. இது ஒருவிதமான
மனக் கிலேசம்’
என்பதை விட மனநோய்
என்பதே பொருத்தம்.
இவ்வாறு சிந்திப்பதற்காக
நம்மவர்கள் வெட்கப்படுவதில்லை.
மறு புறம் இன்று
ஆட்சி அதிகாரத்தை
நிரந்தரமாக வைத்திருப்பதற்காக
எத்தனையோ விதமான
ஆட்டங்கள் நிகழ்கின்றன.
அண்மைய வரலாறு
பூராவும் இந்த
வெட்கமற்ற ஆட்டம்
நிகழ்கிறது.
யுத்தம் முடிவடைந்த
பின் என்ன தேவைப்பட்டது.
அமைதி ,சமாதானம்
,சகவாழ்வு, சுதந்திரம்
என பல தர்மீக வலுக்கள்.
ஏதோ ஒரு அளவில்
ஜனநாயக இடைவெளி
ஒன்று ஏற்பட்டிருக்கிறது
என்பதை மறுக்க
முடியாது.
ஆனால் அது தற்காலிகமானது
என்பது போல் தான்
காரியங்கள் நடைபெறுகின்றன.
யுத்தகால நெறிமுறைகளே
இன்றும் பிரயோகிக்கப்படுகின்றன.
முதலில் யுத்தம்
ஏற்பட்டதற்கான
காரணம் இனிமேலும்
அது வராமல் இருப்பதற்கு
என்ன செய்யவேண்டும்
என்பன எல்லாம்
ஆட்சி மட்டத்தில்
அக்கறைக்குரிய
விடயங்கள் அல்ல.
முக்காலத்திலும்
தமிழர்கள் ,முஸ்லீம்கள்
,மலையக மற்றும்
சிறுபான்மையின
மக்கள் மீது தமது
கிடுகிப்பிடிகளை
இறுக்கி வைத்திருக்கவேண்டும்
என்ற போக்கே மேலோங்கிக்
காணப்படுகிறது.
உதாரணத்திற்கு
இந்திய- இலங்கை
ஒப்பந்தம் கைச்சாத்தானதன்
பின் இலங்கை அரசியல்
யாப்பில் மேற்கொள்ளப்பட்ட
13 வது திருத்தத்தில்
அதிகாரப்பரவலாக்கல்
யோசனைகள் இருக்கின்றன. ஆனால் அதனை எவ்வாறு
வெட்டிக் கொத்தி
அகற்றுவதென்பதில்
எமது பேரினவாதிகளுக்கு
நிகர் எவரும் இல்லை.
அது பிரிவினைக்கு வழிவகுத்துவிடும்
என்ற மாதிரியும்
அதனை அமுல்படுத்த
கோருபவர்கள் இலங்கையின்
எதிரிகள் என்ற
மாதிரியும் எழுத்துக்களும்
பேச்சுக்களும்
இருக்கிறது.
அதிகாரப் பரவலாக்கலுக்கெதிரான
எழுத்துக்கள்
கணக்கில் அடங்காதவை.
அதே மாதிரித்தான்
தமிழர்தரப்பிலும்
“இந்த 13வதில் என்ன
கிடக்குது அதால
ஒரு பிரயோசனமுமில்லை.
சாதாரண முனிசிப்பாலிற்றிக்கு
உள்ள அதிகாரங்கள்
கூட இல்லை.
எங்கள் மீது திணிக்கப்பட்டது”
என்றெல்லாம் பேசி,எழுத்திக்
கிழித்துக் குவித்திருகிறார்கள்.
இவர்களை நினைக்கும்
போது “நெஞ்சில்
உரனும் இன்றி
நேர்மைத்திறனும்
இன்றி வஞ்சனை செய்வாரடி
கிளியே வாய்ச்
சொல்லில் வீரரடி
“என்ற பாரதியின்
வார்த்தைகள் தான்
ஞாபகத்திற்கு
வருகின்றன.
இரு தேசங்கள், ஒருநாடு சுயநிர்ணயஉரிமை
என்றெல்லாம் கூறுவார்கள்
. ஏதோ தாம் புதிதாக
கண்டுபிடித்ததைப்போல.
எமது ஜனங்களின்
பாமர மனங்களும்
அப்படித்தான்
வேலை செய்கின்றன.
தம்மைத்தாமே
கல்விமான்கள்
என்று வரிந்துகொண்ட
இவர்கள் தான் இதனை
கண்டுபிடித்தார்கள்
என்று நம்பினாலும்
நம்புவார்கள்.
ஆனால் இந்த
அதற்குரிய நடைமுறைச்
சாத்தியமான பாதையைக்
காட்டமாட்டார்கள்.
வகுக்கவும்
மாட்டார்கள்.
ஆனால் இந்த
மாகாண சபை முறையை
எதிர்த்த எல்லோருமே
மாகாண சபைத்தேர்தலிகளில்
பங்குபற்றுவதை
எதிர்க்கவில்லை.
அல்லது பங்கு
பற்றாமல் விடவில்லை.
இன்னொரு பகுதியினர்
இதனை வெள்ளை யானை
என்று சொல்லி தமது
வித்துவ வருத்தத்திதை
காட்டுவார்கள்.
இலங்கையின்
சுமை என்பார்கள்.
அவர்களும்
பங்குபற்றாமல்
விடவில்லை.
உண்மையில்
மாகாணசபை என்பது
இலங்கையில் மத்தியிலிருந்து
பிராந்தியங்களுக்கு
அதிகாரங்களை பரவலாக்குவதற்கான
சரித்திரத்தின்
திருப்புமுனையாகும்.
பாய்ச்சலாகும்.
தமிழர்களின்
அஹிம்சை வழிப்போராட்டம்
ஆயுதப்போராட்டமாக
மாறியதில் கிடைத்த
பெரும் பேறாகும்.
ஆனால் சிந்தப்பட்ட
இரத்தம் அளவிடமுடியாதது.
அது வேறுகதை
பல்லாயிரக்கணக்கான
இளைஞர் யுவதிகளின்-
மக்களின் மரணங்களிலும்,
தியாகங்களிலும்
தான் சம்பவித்தது
என்பதை யாரும்
மறுத்துவிடமுடியாது.
மலையகமக்களின்
பிரஜாஉரிமை விடயத்திலும் ,முஸ்லிம்கள்
உட்பட சிறுபான்மைச்
சமூகங்களுக்கு
மாத்திரமல்ல இலங்கையில்
பிராந்தியங்களுக்கு
அதிகாரங்களைப்
பரவலாக்கல் என்பதில்
அது முதல் அடிவைப்பாகும்.
அதாவது இலங்கை
ஜனநாயகப்படுத்துவதில்
ஒரு முக்கிய பாய்ச்சலாகும்.
ஆனால் அதன்
அதிகாரங்களை அறுத்துக்
கொட்டுவதில் இன்றைய
அளும் தரப்பு மும்முரமாக
இருக்கிறது.
மாகாணசபை 1988
இறுதியில் அமைந்த
காலத்திலேயே அதற்கான
உண்மையான அதிகாரங்களைப்
பெறுவதற்குப்
போராடவேண்டியிருந்தது.
ஆனால் தமக்கு
மூக்குப்போனாலும் பரவாயில்லை
வடக்கு-கிழக்கு
மாகாண சபைக்கும்
,இந்தியாவிற்கும்
சகுனம் பிழைத்தால்
சரி என்ற போக்கிலேயே
பிரேமதாச அரசும்
புலிகளும் செயற்பட்டனர்.
நடைமுறையில்
வடக்கு கிழக்கு
மகாகாணசபைக்கு
கிடைத்த ஏமாற்றம்
விரக்தி
19 அம்ச கோரிக்கை
அதுவும் இல்லையேல்
ஈழமென்று முடிந்தது.
பின்னர் தேர்தல்
மூலம் அமைந்த மாகாணசபையை
கலைக்கும் செயற்பாடு
1990 யூனில் நிகழ்ந்தது.
இதன் பின்னர்
கடந்த 20 வருடங்களாக
மாகாண சபை செயற்படவில்லை.
ஆனால் அதிகாரப்பரவலாக்கல்
எந்த சமூகத்திற்கு
பிரதானமான கோரக்கையாக
இருந்ததோ அது தவிர
மற்ற இடங்களில்
மக்களால் தெரிவு
செய்யப்பட்ட மாகாண
சபைகள் இயங்கின.
இங்கு யுத்தத்தின்
காரணமாக தேர்தல்
நடைபெறவில்லை.
உள்ளுராட்சி
சபை பாராளுமன்ற
தேர்தல்கள் நடைபெற்றன.
அன்று அந்த மாகாண
சபையை தமிழ் முஸ்லிம்
தலைமைகள் பரந்தளவு
ஐக்கியமாக கையில்
எடுத்திருந்தால் இன்று இலங்கையின்
அரசியல் சரித்திரம்
வேறாக இருந்திருக்கும்.
ஆனால் உள்ளவற்றையும்
கெடுத்த காரியங்கள்
தான் காரியங்கள்
தான் தொடர்ந்து
நடைபெற்றன.
மாகாணசபை முறைக்கு
பிந்திய வளர்ச்சியாக
சந்திரிகா அவர்களின்
ஆட்சிகாலத்தில் சமஸ்டி முறையிலான
அதிகாரப்பரவலாக்கல்
முன் னெடுக்கப்பட்டதையும்
நாம் மனங்கொள்ளவேண்டும்.
இலங்கையின் அரசியல்
தலைவர் ஒருவர்
ஒற்றையாட்சி முறைக்கு
வெளியே ஒரு தீர்வை
முன்வைத்து அதனை
சிங்கள மக்கள்
மத்தியில் ஒரு
இயக்கமாக முன்னெடுத்த
சரித்திர முக்கியத்துவம்
வாய்ந்த சம்பவம்.
இந்த யோசனைகள்
பல்வேறு நெருக்குதல்களில்
பாராளுமன்றத்தில்
முன்வைக்கப்பட்டபோது
ஐதேக பாராளுமன்ற
மேசையில் இந்த
யோசனைகளை தீயிட்டது.
பாராளுமன்றத்திற்கு
வெளியே பிக்குகளும்
தீவிரவாதிகளும்
ஆர்பாட்டத்தில்
ஈடுபட்டிருந்தார்கள்.
பாராளுமனறத்தில்
அன்றிருந்த தமிழ்
தலைமையும் இந்த
அரசியல் யாப்பு
திருத்த யோசனைகளை
எதிர்த்தது.
ஆனால் இன்று
நிலை கழுதைதேய்ந்து
கட்டெறும்பாகி
விட்டது.
தற்காலிகமாக
இணைக்கப்பட்ட
வடக்கு-கிழக்கு
உயர்நீதிமன்றத்
தீர்ப்பின் பிரகாரம்
பிரிந்து விட்டது.
பாராளுமன்றத்தினூடாக
முறையாக செய்யவேண்டும்
என்று தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே கடந்து
வந்த 20 வருடங்களில்
புனர்வாழ்வு புனரமைப்பு , ஆதாரவைத்தியசாலை,போக்குவரத்து
,கல்வி போன்ற துறைகள்
மத்திய ஆளுந்தரப்பால்
சட்டவிரோதமாக
கடத்திச் செல்லப்பட்டு
விட்டன.
இவை பற்றி அரசியல்
சட்ட நிபுணர் ஜெயம்பதிவிக்கிரமரட்ன ,பேராதனைப்பல்கலைக்கழக
பேராசிரியர் ரஞ்சித்
அமரசிங்க ,முன்னாள்
நிதி நிர்வாசேவை
அதிகாரி அசோகடிசில்வா
மற்றும் அதிகாரப்பரவலாக்கலில்
அக்கறை கொண்ட இடதுசாரி-ஜனநாயகத்
தலைவர்களும் பல்வேறு
கருத்தரங்குகளில்
விரிவாக எடுத்துரைத்துள்ளார்கள்.
அதிகாரப்பரவலாக்கலின்
நிலம் , சட்டம்
ஒழுங்கு அதிகாரங்கள்
பகிரப்படாதது
தொடர்பாக மலையக
மற்றும் தென்பகுதி
இளம் மாகாணசபை
உறுப்பினர்கள்
மத்தியில் அக்கறைகள்
இருக்கின்றன.
ஆனால் எப்போதும்
அதிகாரத்தை ஒருசிலரின்
கையில் வைத்திருப்பது
இராணுவமுதன்மையும்
என்ற போக்கே இலங்கையில்
மேலோங்கி காணப்படுகிறது.
அவசரகாலச்சட்டம்
,பயங்கரவாத தடைச்சட்டம்
போன்றன தசாப்தங்களினூடாக
அதிகாரமையத்தை
நோக்கி நகர்த்தி
சென்றிருப்பதோடு
இலங்கையில் மிச்சமீதமான
ஜனநாயமும் ஈடாட்டம்
கண்டுள்ளது.
இது பற்றிய
வெட்கமே கூச்ச
சுபாவமோ குற்ற
உணாச்சியோ இங்கு
கீழ்மட்டத்திலேயே
காணப்படுகிறது.
வரம்பற்ற அதிகாரம்
எதையும் செய்யத்
தூண்டுகிறது.
“திவிநெகும” என்ற
சொற்பதத்தின்
கீழ் (இப்போது
இலங்கையில் ஒவ்வொன்றுக்கும்
விளங்காத புதுப்புதுப்
பெயர்கள் இருக்கின்றன.)
மலையகம் ,தென்பகுதி
அபிவிருத்தி ,
சமூர்த்தி போன்ற
விடயங்கள் மத்திய
அமைச்சரின் கீழ்
இயக்குவிப்பது
தொடர்பான உயர்
நீதிமன்ற தீர்ப்பு.
மாகாண சபைகளின்
அனுமதியின்றி
இதனைச் செயற்படுத்த
முடியாது எனத்
தெரிவித்துள்ளது.
நீதிமன்றம்
,பாராளுமன்றம்
, விசேட அதிகாரம்
கொண்ட ஜனாதிபதி
என்பன சுயாதீனமான
நிறுவனங்கள்.
உயர் நீதிமன்றம்
வழங்கிய தீர்ப்பு
அரசு வட்டாரத்தில்
உஸ்ணத்தை கிளப்பியுள்ளது
ஜனநாயகம் என்ற
அச்சாணி இயங்குவதற்கு
இவற்றின்
சுயாதீனமான செயற்பாடும்
இணக்கப்பாடும்
அவசியம்.
உயர் நீதிமன்ற
தீர்ப்பிற்கெதிராக
செயற்கையான ஆர்பாட்டங்கள்
தூண்டிவிடப்பட்டன.
சகலவிடயங்களிலுமே
அது இனப்பிரச்சனையாயினும்
சரி ,அரச யந்திரத்தின்
அச்சாணி ஆயினும்
சரி தனித்துவமும்
புரிந்துணர்வும்
என்ற கருத்தியலுக்கு
இசைவுபட இலங்கையின்
ஆளுந்தரப்புகள்
விரும்பியதில்லை.
வடக்கு மாகாண
சபையைத் தவிர மீதி
எல்லாமே ஆளும்
கட்சியின் கையில்
இருப்பதால் இதனை
சுலபமாக நிறைவேற்றி
விட அரசு அவசரப்படுகிறது.
ஆனால் தெரிவு செய்யப்பட்ட
மாகாண சபை இல்லாத
வடக்கிலிருந்து
இதற்கான அனுசரணையைப்
பெறமுடியாது என்பது
தார்மீக நியாயம.;
ஆனால் ஏதாவது பொத்தல்களுக்கூடாக
நுழைவார்கள். அவர்களுக்கா
பாதை தெரியாது.
தமிழ் தேசிய
கூட்டமைப்பு மேல்
முறையீட்டு நீதிமன்றத்திலிருந்து
உயர் நீதிமன்றம்
வரை சென்றுள்ளது.
உண்மையில்
“திவிநெகுமா” இந்திய
இலங்கை ஒப்பந்தத்தின்
அடிப்படையில்
உருவான மாகாண சபை
முறையை குறைத்து
மதிப்பிடும் செயலாகும்.
இதில் வேடிக்கை
என்னவென்றால்
இந்தியாவிற்கும்
உலகிற்கும் அதிகாரப்பரவலாக்கல்
பற்றி வாக்குறுதியளித்துவிட்டு
அனைத்து கட்சி
பாராளுமன்ற பிரதிநிதிகள்
குழுவில் இது தீர்க்கப்படும்
என்றெல்லாம் தெரிவித்து
விட்டு அவசர அவசரமாக
காரியங்கள் நடைபெறுகின்றன.
மாகாண சபையை
வெறுங்கோதாக்கும்
அல்லது மத்தியில்
வரம்பற்ற அதிகாரத்தை
குவிக்கும் செயற்பாட்டின்
அம்சமாகும். ஏற்கனவே 18வது
திருத்தசட்ட மூலம்
மாகாண சபையின்
அதிகாரங்களை ஈடாடச்செய்துள்ளது.
சுயாதீன பொலிஸ் ,தேர்தல் ,
நிர்வாகசேவை ஆணைக்குழுக்களை
அமைப்பதற்கான
17 வதுதிருத்தம்
அர்hதம் இழந்து
போயிற்று
மறுபுறம் அதிகாரப்
பரவலாக்கலை எய்தி
தமது தமது பிராந்தியங்களில்
தாம் ஆட்சி செய்வதை
இந்த சிறுபான்மையின்
அரசியல் சத்திகள்
எல்லா விரும்புகின்றனவா
என்பதில் ஐயம்
இருக்கிறது.
ஒரு மாகாணசபை அதிகாரப்பரவலாக்கல்
கட்டமைப்பு அலகு
அதன் உறுப்பினராக ,அமைச்சராக
,முதலமைச்சராக
இருப்பதை விட பாராளுமன்ற
உறுப்பினராக மத்திய
அமைச்சராக இருப்பது
அதிகாரமும் ,அந்தஸ்தும்
மிக்கது என சிறுபான்மையின
சமூகங்களின் பல
அரசியல் தலையாரிகள்
கருதுகிறார்கள்.
இவர்கள் மனதளவில்
மாகாண சபை இரண்டாம்
பட்சமானது என கருதுகிறார்கள.;
உண்மையில் இவர்கள்
மாகாண சபையிலிருந்துதான்
அதிகாரப்பரவலாக்கலுக்கு
போராடவேண்டும்
ஆனால் அவர்கள்
அப்படி அல்ல.
இரண்டாம் நிலை
அல்லது 3ஆம் நிலை
தலைவர்களே மாகாண
சபைக்குரியவர்கள்
என்ற மனேபாவம்
காணப்படுகிறது.
இந்த மன நிலையில்
அதிகாரப் பரவலாக்கல்
எவ்வாறு நிகழும்.
முஸ்லீம் தமிழ்
தலைமைகள்
2 ஆம் நிலைத் தலைவர்களை
மாகாண சபையில்
வைத்துக் கொள்வதற்கும்
தமிழ் அரசியல்
தலைமை அம்மாகாண
சபையில் எதிர்கட்சியில்
அமர்ந்துகொள்வதும்
சௌகரியமானதாக
கருதுகிறார்கள்
.
இந்த சிந்தனைப்போக்கு
அதிகாரப் பரவலாக்கலுக்கு
எதிரானதாகும்.
உதாரணத்திற்கு
இந்தியாவை எடுத்துக்
கொண்டால் மாநில
அளவில் அமைச்சர்களாக
சட்ட சபை உறுப்பினர்களாக
இருப்பவர்கள்
பெருமுக்கியத்துவம்
வகிக்கிறார்கள்.
அந்த சட்ட சபைகளுக்கு
அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின்
தேசிய அரசியலிலும்
அந்த சட்டசபைகள்
நிர்ணயகரமான பாத்திரத்தை
வகிக்கின்றன.
இதனை ஏன் இங்கு
குறிப்பிடுகிறேன்
என்றால் அதிகாரப்பரவலாக்கலில்
இதய சுத்தியானதும்
அhப்;பணிப்பு
கொண்டதும் ,பொறுமையானதும்
,அறிவு பூர்வமானதுமான
அணுகுமுறை தேவை.
அதிகாரப்பரவலாக்கல்
நாட்டை ஜனநாயக
மயப்படுத்தலின்
ஒரு அம்சம் என்பது
விளங்கிக் கொள்ளப்படவேண்டும்.
இதே வேளை கெடுபிடியான
சட்டங்கள் இராணுவ
முன்னிலை என்பன
அகல வேண்டும்
இலங்கை போன்ற ஒரு நாட்டின்
அரசியல் பண்பாட்டு
வரலாறு ஒற்
றையாட்சியன் கீழ்
அதிகாரப்பரவலாக்கலின்
செல்லுபடித் தன்மை
பற்றிய கேள்வியை
எழுப்புகிறது.
மாகாண சபையின்
அவலச் சரிதம் அதனை உணர்த்தி
நிற்கிறது.
எனவே 13வதற்கு
அப்பால் செல்லவேண்டிய
தேவை எழுந்துள்ளது.
ஒற்றையாட்சி
அமைப்பு நீக்கப்படவேண்டும்.
வேறு வழியில்லை.
ஆனால் அது நிகழும்
சாத்தியம் மிக
மிக அரிது. ஆனால் அரசியலமைப்பில்
அந்த மாற்றம் நிகழ்ந்தே
ஆகவேண்டும். அரசியலமைப்பு
மறுசீரமைப்பு
இயக்கத்துடன்
அது தொடர்புபட்டது.
இலங்கையை ஜனநாயக
மயப்படுத்துவதில்
சகல அதிகாரமும்
கொண்ட ஜனாதிபதி
முறை நீக்கப்படவேண:டும்
என்ற பரவாலன கருத்து
நிலவுகிறது அதனுடன்
இதுவும் முன்னெடுக்கப்படவேண்டும்
மாகாண அதிகாரத்தை
அறுத்துக் கொட்டும்
எலிகளை கட்டுப்படுத்த
குறைந்த பட்ச வழி
இதுதான்
நாடளாவிய அளவில்
சில ஆர்வமூட்டும்
செயற்பாடுகள்
நிகழ்கின்றன.
பல்கலைக்கழக ஆசிரியர்கள்
சம்பள உயர்வு உள்ளிட்ட
தமது கோரிக்கைகளை
மாத்திரமல்ல கல்வித்துறைக்கான
ஒதுக்கீட்டை வலியுறுத்தியுள்ளார்கள்.
இன்று மக்கள்
மத்தியில் இது
மிக முக்கியமான
விவாதப் பொருளாக
மாறியிருக்கிறது.
இதனை இந்திய
பல்கலைகழகங்களைச்
சேர்ந்த ஆசிரியர்களும்
ஆதரிக்கிறார்கள்.
கல்விக்கு 2 வீதத்திற்கு
குறைவான ஒதுக்கீடு
ஒரு தேசிய அவமானமாகும் .
இதனை வலியுறுத்தி
இயக்கம் நடத்துகிறார்கள்.
இலவசக்கல்வி இலங்கையை
பொறுத்தவரையில்
ஒரு வரப்பிரசாதம் . ஆசியாவின்
அதிசயம் ஆவதற்கு?
கல்வி தான்
பிரதான உந்துவிசையாக
இருக்கும். அது என்ன கல்வி
என்பதும் முக்கியம்
.வாழ்க்கையோடு
இணைந்த சமூகம்
-சுற்றாடல் பற்றிய
உலகம் பற்றிய ஆழமான
நேசிப்புள்ள பிரக்ஞையுள்ள
கல்வியாக அமையவேண்டும்.
ஏன் எனில் ஈவிரக்கமற்ற
சேவைத்துறையினர்?
உருவாகியிருக்கிறார்கள்.
எல்லாம் “காசே
தான் கடவுளடா”
என்ற நிலை உருவாகியருக்கிறது.
மனிதம் மெல்ல
மெல்ல மரணித்து
வருகிறது.
பங்கு மார்க்கட்டில்
பந்தயம் கட்டப்பட்டிருக்கும்
ஊழியர் சேமலாப
நிதி நட்டமடையும்
தொழில் துறைகளில்
முதலிடப்பட்டிருப்பதாக
14 தொழிற்சங்கங்கங்கள்
தீதிமன்றம்சென்றுள்ளன.
உயர்தரமாணவர்களின்
பல்கலைகழக அனுமதிக்கான
“சட் ஸ்கோர்” முறை
புரியாத புதிராகத்தொடர்கிறது.
பெரு நகர அபிவிருத்தி
ஏறகனவே பாதுகாப்பமைச்சின்
கைக்குச் சென்றுள்ளது
சிவில் சமூகவாழ்க்கையில்
இராணுவத்தலையீடு
அதிகரித்து வருகிறது.
வடக்கு கிழக்கில்
சிவல் நிர்வாகத்தின்
உயர் அதிகாரிகளாக
படையின் ஓய்வு
பெற்ற அதிகாரிகளே
இருக்கின்றனர்.
இராஜதந்திரதுறையிலும்
அவ்வாறே.
வடக்கு கிழக்கில்
படைபிரசன்னம்
80 ஆயிரத்திலிருந்து
லட்சத்திற்குமேல்
வரை இருப்பதாக
தெரிவிக்கப்படுகிறது.
இது மக்களின் பிரத்தியேகமில்லாத
,சுதந்திரமற்ற
வாழ்வை பிரதிபலிக்கிறது.
அண்மையில் இந்து
பத்திரிகையின்
ஆசிரிய தலையங்கம்
ஒன்று அதிகாரப்
பரவலாக்கலை இந்தியா
தொடர்ந்து வலியுறுத்தும்
என்றும் இலங்கையில்
தமிழர்கள் யுத்த
வெற்றி தோல்விகளினடிப்படையில்
நடத்தப்படுகிறார்கள்
என்பதையும் சுட்டிக்காட்டி
இருந்தது.
ஆனால் அதிகாரம்
மத்தியை நோக்கி
குவிக்கப்படவேண்டும்
என்று றோகன் குணவர்த்தனா
போன்றவாகள் எழுதுகிறார்கள்
இவை ஒன்றும் தற்செயலாக
நடைபெறவில்லை.
பிரமண்டமான
வீதிகள், விமான
நிலையங்கள், விளையாட்டு
மைதானங்கள் அமைக்கப்படுகின்றன.
ஆனால் இலங்கையின்
சாதாரண மக்களின்
வாழ்வுடன் எவ்வாறு
இவை இசைவு படுகின்றன.
சாதாரண மக்களுடை
உணவு, நிலம், வீடமைப்பு,
வேலைவாய்ப்பு
கல்வி, கலாச்சாரம் ஆகிய துறைகளில்
எந்தளவுக்கு மாற்றம்
ஏற்பட்டுள்ளன.
என்பது முக்கியமானதாகும்;. இன்றைய
விலைவாசியும்
சராசரி இலங்கையரின்
மாதாந்த சம்பளத்திற்குமிடையிலான
முரண்பாடு இங்கு
முக்கியமானதாகும்.
மலையக மக்கள்
நாளாந்த வாழ்க்கையை
எவ்வாறு ஓட்டுகிறார்கள்
என்பது ஒரு பெரும்
தார்மிக கேள்வி.
இது பற்றி பாரிய
விழிப்புணர்வு
தேவை
பிந்திய செய்தி
–நீதிச்சேவை ஆணைக்குழுவின்
செயலாளர் கொழும்பு
கல்கிசை மவுண்ட்லவேனியாவில்
வைத்து தாக்கப்பட்டுள்ளார்.
யாருக்கும்
வெட்கமில்லை.
ஸ்ரீதரன்
-- சுகு