|
||||
|
ரூ. 1 கோடி 19 இலட்சம்
கடன் அட்டை
மோசடி
போலி கடன் அட்டைகளை
பயன்படுத்தி
சுமார் ஒரு கோடி
19 இலட்சம் ரூபா பண
மோசடியில்
ஈடுபட்ட மோசடி கும்பலை
குற்றப் புலனாய்வு
திணைக்கள
பொலிஸார்
கைது செய்துள்ளனர். பாரிய
அளவில் திட்டமிட்ட
அடிப்படையில்
மோசடியில்
ஈடுபட்டு
வந்த திருகோணமலை,
இரத்மலானை,
களுவாஞ்சிக்குடி
மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களைச்
சேர்ந்த நால்வரே சி.ஐ.டி. யினரால் மடக்கிப்
பிடிக்கப்பட்டுள்ளனர்.
போலியாக தயாரிக்கப்பட்ட
15 கடன் அட்டைகள்,
அவற்றை தயாரிக்க பயன்படுத்திய
இலத்திரனியல்
இயந்திரங்கள்,
உண்மையான
கடன் அட்டைகளின்
தரவுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த
கணனி மற்றும்
பல்வேறு வகையான உபகரணங்களையும்
சீ.ஐ.டி.யினர்
கைப்பற்றியுள்ளனர்.
திட்டமிட்ட அடிப்படையில்
வலையமைப்பாக
செயற்பட்டு
வந்த இந்தக்
குழுவினர்
உள்நாட்டு
மற்றும் வெளிநாட்டில்
பயன்படுத்தும்
போலி கடன்
அட்டைகளை
இலங்கையில்
தயாரித்துள்ளமை
ஆரம்பக்கட்ட
விசாரணைகளிலிருந்து
தெரியவந்து
ள்ளது. இந்தக் குழுவினருக்கும்
உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச்
சேர்ந்த வேறு நபர்களுக்கும்
தொடர்பு உள்ளனவா என்பன தொடர்பான
விரிவான விசாரணைகளை
சி.ஐ.டி. யினர் முடுக்கியுள்ளனர்.
தரவுகள் சட்டவிரோதமாக
பதிவு செய்யப்படுதல்,
போலி கடன்
அட்டைகள்
தயாரித்தல்,
பண மோசடி
போன்ற நடவடிக்கைகள்
தொடர்ச்சியாக
இடம்பெற்று
வருவதாக கொமர்ஷல் வங்கி, நேஷன்
ட்ரஸ்ட் மற்றும் ஹற்றன் நெஷனல் வங்கி ஆகிய
மூன்று தனியார் வங்கிகளின்
முகாமைத்துவம்
சி.ஐ.டி.யினரிடம்
முறைப்பாடுகள்
செய்துள்ளன.
இதனையடுத்தே சி.ஐ.டி.யினர்
விசாரணைகளை
ஆரம்பித்துள்ளதுடன்,
கண்காணிப்பு
நடவடிக்கைகளை
மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பு, இரத்மலானை,
பேலியாகொடை
மற்றும் ஜாஎல ஆகிய
பகுதிகளிலுள்ள
எரிபொருள்
நிரப்பும்
நிலையங்களிலேயே
இதுபோன்ற
மோசடி நடவடிக்கைகள்
இடம்பெறுவதாக
தகவல்களை
பெற்றுக்கொண்ட
சி.ஐ.டி. யினர் மேற்படி
எரிபொருள்
நிரப்பு நிலையங்களில்
சிவில் உடை அணிந்த
இரகசிய பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட
நான்கு சந்தேக நபர்களில்
ஒருவர் இரத்மலானை
எரிபொருள்
நிலையத்தில்
எரிபொருளை
நிரப்பிக்கொண்ட
பின்னர் போலி கடன்
அட்டையை கொடுத்துள்ளனர். திருகோணமலை
பிரதேசத்தைச்
சேர்ந்த இவர் மடக்கிப்
பிடிக்கப்பட்டு
விசாரணைக்குட்படுத்தப்பட்டபோது,
அவரிடமிருந்து
மறைத்து வைக்கப்பட்டிருந்த
செலான், ஹற்றன் நெஷனல், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிகள் உட்பட மேலும்
பல வங்கிகளின்
ஆறு கடன்
அட்டைகளையும்,
எரிபொருள்
நிரப்பியமைக்கான
பற்றுச் சீட்டுகளையும்
கைப்பற்றியுள்ளனர்.
இவரிடமிருந்து கடவுச்
சீட்டும்
பறிமுதல்
செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபரின் திருகோணமலை
வீட்டிலிருந்து
போலி கடன்
அட்டை தயாரிக்கும்
இயந்திரங்களும்
கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த
மோசடி சம்பவத்துடன்
இரண்டாவது
சந்தேக நபர் களுவாஞ்சிகுடி
பிரதேசத்தில்
தலைமறைவாகியிருந்த
நிலையிலும்
மேலும் இருவர் பேருவலை பிரதேசத்தில்
வைத்தும்
கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கும்பல் போலி கடன்
அட்டைகளை
எரிபொருள்
நிரப்பு நிலையங்களிலேயே
பயன்படுத்தியுள்ளனர். எரிபொருள் நிரப்பு
நிலையத்திலுள்ள
தன்னியக்க
இயந்திரத்திலிருந்து
பெருமளவில்
பணத்தை எடுத்துள்ளனர்.
இந்த பணத்தை
எரிபொருள்
நிலைய ஊழியர்களுக்கும்
பகிர்ந்துள்ளமையும்
தெரிய வந்துள்ளது.
கடன் அட்டைகளை
பயன்படுத்தி
போலியான முறையில் பணத்தை பெற்றுக் கொண்டதில்
கொமர்ஷல்
வங்கிக்கு
1,05,600/= ரூபா
நஷ்டமும்,
நேஷன் ட்ரஸ்ட் வங்கிக்கு
87,91,000/= ரூபா நஷ்டமும், ஹற்றன் நெஷனல் வங்கிக்கு
30,000,000/= ரூபா நஷ்டமும் ஏற்பட்டுள்ளது
என முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளதாக
பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
சுட்டிக்காட்டினார்.
சந்தேக நபர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு
குற்றப் புலனாய்வு
திணைக்கள
பொலிஸாரினால்
மேலதிக விசாரணைக்கு
உட்படுத்தப்பட்டுள்ளனர்
என்றும் அவர் தெரிவித்தார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |