Contact us at: sooddram@gmail.com

 

மழையுடன் சேர்ந்து மீன் மழையும் பூமியில் பொழியவிருக்கிறது

அடுத்த இரண்டு, மூன்று வாரங்களில் மழையுடன் சேர்ந்து மீன் மழையும் பூமியில் பொழியவிருக்கிறது. ஆகாயத்திலிருந்து மழையுடன் மீன்கள் வந்து விழுவதைப் பார்த்து இதுவொரு இயற்கை அழிவு அல்லது துர்தேவதைகளின் வெறியாட்டம் என்று எவரும் அஞ்சிவிடலாகாது. பொதுவாக, ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு மேலாக சூரியன் சஞ்சரிப்பதனால் இலங்கை போன்ற நாடுகளில் காலநிலைக்குப் பாதகமான தாக்கங்கள் ஏற்படுகின்றன. இதனால், ஏப்ரல் மாதத்திலும், மே மாதத்தின் முதல் இரண்டு வார காலத்திலும் திடீரென்று மின்னல் வெட்டுடன் மாலை வேளையில் பெருமழை பெய்வதுண்டு.

இதுபற்றி பல முக்கிய தகவல்களை சிரேஷ்ட காலநிலை ஆய்வாளரும், இலங்கை வளிமண்டல ஆய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளருமான கே. ஆர். அபேசிங்க எமது பத்திரிகைக்கு அளித்த விசேட பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பொதுவாக, இலங்கையில் மின்னல் தாக்கியதனால் வருடா வருடம் 50 மரணங்கள் ஏற்படுவதுண்டு என்று தெரிவித்த திரு. அபேசிங்க ஏப்ரல், மே மாதங்களிலேயே நாடெங்கிலும் மின்னலுடனான பெருமழை பொழிகின்றன என்று கூறினார்.

இதனால், பிற்பகல் 02 மணி முதல் இரவு 08 மணி வரையில் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். மழை பெய்யும் போது, எவரும் பெரிய மரங்களின் கீழ் பாதுகாப்பாக நிற்கக் கூடாது. திறந்த வெளியில் நடக்கக் கூடாது. சைக்கிளில் தன்னந்தனியாக செல்லக்கூடாது. மின்னல் வெட்டும் போது வீட்டு ஜன்னல்களில் இருந்து அதனை பார்க்கக் கூடாது.

இவ்விதம் அவதானமாக இருந்தால், மின்னல் தாக்குதல்களில் இருந்து தங்கள் உயிர்களை காப்பாற்றிக்கொள்ள முடியும்.

மழையும், மழையுடன் இடி முழக்கம், மின்னல் வெட்டுக்களின் போது சாதாரண தொலைபேசியையோ, கையடக்கத் தொலைபேசியையோ உபயோகிப்பது பேராபத்தை ஏற்படுத்தும். தொலைபேசி மின் அலைவரிசையில் மின்னல் இணைந்து கொண்டால் அதனை பயன்படுத்துவோர் மரணிக்கும் அளவுக்கு பேராபத்தை எதிர்நோக்குவார்.

சமீபத்தில் மத்துகம பிரதேசத்தில் மழை பொழிந்து கொண்டிருந்த போது, வீதியில் கையடக்கத் தொலைபேசியில் பேசிக்கொண்டு சென்ற ஒருவர் மின்னல் தாக்கி மரணமடைந்தார். இன்னுமொருவர் காயமடைந்து ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மின்னல் தாக்குதல் பொதுவாக தாழ்ந்த பிரதேசத்திலும், சப்ரகமுவ பிரதேசத்திலும் மலையகத்திலும், தெற்கின் நெலுவ பிரதேசத்திலும் அதிகமாக இடம்பெறு கின்றது.

மத்துகம பிரதேசமும் மழை அதிகமாகக் காணப்படும் பகுதி என்பதனால் அங்கும் மின்னல் தாக்கும் ஆபத்துக்கள் அதிகமாக இருக்கின்றன.

தமிழ் சிங்கள புத்தாண்டுக் காலத்தில் எல்லோரும் மகிழ்ச்சியடைவதுண்டு. ஆனால், இந்தக் காலப் பகுதியில்தான் மின்னல் போன்ற காலநிலையில் கொடூரங்கள் கோரத் தாண்டவமாடி மக்களின் உயிரைப் பறிக்கும் வகையில் ஆபத்துக்கள் உருவாக்கிய வண்ணம் இருக்கின்றன.

இதனால், நாம் அவதானமாக இருப்பது அவசியம். மழை பெய்யும் போது வானொலிப் பெட்டிகள் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகளை செயற்படுத்தக் கூடாது. அவையும் அந்த வீடுகளுக்கு மின்னல் தாக்குவதற்கு உறுதுணை புரியலாம்.

இந்தக் காலத்தில் டோனிடோ என்ற சூறாவளிக் காற்று உருவாகுவதனால்தான் மின்னல் தாக்கங்களும் மழையும் அதிகமாக ஏற்படுகின்றன. டோனிடோ காற்று ஒரு பிட்டுக் குழலைப் போன்று தரையில் இருந்து பல்லாயிரக்கணக்கான அடி உயரத்திற்கு சுழன்று கொண்டே உயர்ந்து திடீரென்று அது உருவாகிய இடத்தை அடுத்துள்ள 5 கிலோ மீற்றர் பிரதேசத்தில் இடி மன்னலுடனான பெரு மழையுடன் வந்து தாக்கி பேரழிவை ஏற்படுத்துகின்றது.

ஒரு பிரதேசத்தில் டோனிடோ தாக்கி வீடுகளையும் கட்டடங்களையும் சின்னாபின்னப்படுத்தினாலும், அதிலிருந்து சுமார் 3, 4 கிலோ மீற்றர்களுக்கு அப்பாலுள்ள கட்டடங்களும் வீடுகளும் ஆபத்தின்றி பாதுகாப்பாக இருப்பதை நாம் அவதானிக்கலாம்.

இந்த டோனிடோ காற்று கடலில் உள்ள மீன்களை நீருடன் அள்ளிவந்து ஆகாயத்திற்கு எடுத்துச் சென்று, பின்னர் மீன் மழையை பொழிய வைக்கின்றது. மீன்களுடன் ஐஸ்கட்டி மழையும் இந்தக் காலத்தில் பூமியில் வந்து விழுவதுண்டு.

மின்னல் வெளிச்சம் தெரிந்து 15 வினாடிகளில் இடி முழக்கத்தின் சத்தம் கேட்டால் மின்னல் தாக்கிய இடம் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து ஐந்து கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கிறது என்பதை நீங்கள் ஊர்ஜிதம் செய்து கொள்ளலாம். அதுபோன்று மின்னல் வெளிச்சம் வந்து 30 வினாடிகளில் இடி முழக்கம் கேட்டால் மின்னல் தாக்கிய இடம் 10 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கும்.

இவ்விதம் மின்னல் வெளிச்சம் வந்து 3 வினாடிகளில் இடி முழக்கம் கேட்டால் மின்னல் தாக்கிய இடம் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

இன்றிலிருந்து அடுத்த மூன்று வாரங்களுக்கு பொதுமக்கள் மாலை வேளையில் பெய்யும் மழை, இடி, மின்னல் முழக்கத்தின்போது அவதானமாக இருந்தால் ஆபத்துக்களை தவிர்த்துக் கொள்ளலாம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com