Contact us at: sooddram@gmail.com

 

நெருக்கடியால் பாலியல் தொழிலில் அமெரிக்க மாணவிகள்!

பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஐந்து மாணவிகள் அண்மையில் அமெரிக்கக் காவல்துறையிடம் சிக்கினார்கள். அவர்களிடம் விசாரித்தபோது, தாங்கள் உயர்நிலைப் பள்ளிகளில் படித்து வருவதாகவும், கல்விக்கட்டணம் உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்கு பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் காட்டப்பட்டு இந்தத் தொழிலில் இறக்கிவிடப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்கள். காவல்துறை மேலும் விசாரித்தபோது, இத்தகைய தொழில்களில் பெண்களை ஈடுபடுத்துவதில் ஏராளமான குழுக்கள் இயங்கி வருகின்றன. அண்மைக்காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், ஏற்கெனவே செய்து வந்த செலவைச் செய்ய முடியாத நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள் மற்றும் பெண்களைக் குறிவைத்து இந்தக் கும்பல்கள் இறங்கியிருக்கின்றன. அதில் சிக்கியவர்கள்தான் தற்போது காவல்துறையிடம் வாக்குமூலம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தின் ஒரு பகுதியான ஃபேர்பாக்சில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இந்தக் கும்பல்கள் பள்ளிக்கூட வளாகங்கள், சமூக ஊடகக்குழுக்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து நிறுத்தங்கள் போன்றவற்றில் 16, 17 மற்றும் 18 வயது மாணவிகளைக் குறிவைத்து இயங்குகின்றன என்று காவல்துறை விசாரித்ததில் தெரிய வந்துள்ளது. ரவுடிகளின் துணையோடு தங்களை அடையாளம் கண்டுகொள்ள முடியாத பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று பாலியல் தொழிலில் இந்த மாணவிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். ஒருமுறை ஒப்புக்கொண்டபிறகு, அதில் ஈடுபட மறுத்தவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு இதில் ஈடுபட்ட மாணவிகளில் பெரும்பாலானவர்கள் பொருளாதார ரீதியான தேவைகளுக்காகவே சம்மதித்திருக்கிறார்கள் என்று காவல்துறை கூறுகிறது. அவர்கள் கொடுத்துள்ள வாக்குமூலங்களும் அதை உறுதிப்படுத்துகிறது.

இந்த பாலியல் மோசடிக் கும்பலின் தலைவர் என்று கருதப்படும் ஜஸ்டின் ஸ்ட்ரோம் கைது செய்யப்பட்டிருக்கிறார். மாணவிகளில் ஒருவர் சம்மதித்தபிறகு, தன்னை விட்டுவிடுங்கள் என்று கூறியிருக்கிறார். கத்தி முனையில் இந்த ஜஸ்டின் ஸ்ட்ரோம் அப்பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்தார். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களைக் கடத்திக் கொண்டு வந்து தனது மோசடித் தொழிலைச் செய்து வந்த ஜஸ்டின் ஸ்ட்ரோமுக்கு பொருளாதார நெருக்கடி உதவியிருக்கிறது. காவல்துறை வசம் சிக்கியுள்ள ஸ்ட்ரோமுக்கு ஆயுள் தண்டனைதான் என்றாலும் இன்னும் பல ஸ்ட்ரோம்கள் அமெரிக்காவில் உலாவிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், நெருக்கடி முற்றி வருவதால் இதுபோன்ற அவலங்கள் மேலும் அதிகரிக்கவே செய்யும் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர்களில் சிலர். அரசின் கல்விக்கட்டணக் கொள்கை உள்ளிட்டவை மாறாமல் நிலைமையில் மாற்றம் ஏற்படாது என்கிறார்கள் அவர்கள்.

அமெரிக்காவின் பல மாகாணங்களில் இந்த சம்பவங்கள் நடந்து வருகின்றன. வர்ஜீனியா மாகாணத்தின் அரசு வழக்கறிஞரான நீல் மக்பிரைடு கூறுகையில், தொடர்ந்து பல வாரங்கள் இந்த மாணவிகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் மட்டும் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்து மாணவிகளாவர். இவர்கள் அனைவரும் 16 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களுக்கு போதை மருந்து தரப்பட்டு, இந்த மோசடியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். அப்படியும் ஒத்துழைக்காத மாணவிகள் அடித்து, துன்புறுத்தப்பட்டனர். மாணவிகளின் பெற்றோர்களுக்கு ஒவ்வொரு இரவும் நிம்மதியில்லாமல் கழிகின்றன. எப்போது வேண்டுமானாலும் தங்கள் மகள் காணாமல் போய்விடலாம் என்று அச்சப்படுகிறார்கள். ரவுடிகள் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்பதை ஒவ்வொரு நாளும் அவர்களால் பார்க்க முடிகிறது. நிலைமை அவ்வளவு மோசமாக உள்ளது என்று குறிப்பிடுகிறார்.

28 லட்சம் பேர் நடுத்தெருவில்...

வீட்டை விட்டு ஓடிவந்த மற்றும் குடியிருக்க வீடில்லாத இளம் ஆண்கள் மற்றும் இளம் பெண்கள் 28 லட்சம் பேர் அமெரிக்கத் தெருக்களில் உலாவிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் சுரண்டலுக்கு உட்படும் ஆபத்தில் உள்ளனர். அமெரிக்காவின் தேசிய பாலியல் பலாத்காரம், பாலியல் சீண்டல் ஆய்வு வலைத்தளம் தரும் விபரங்களின்படி, 2007 ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் 2 லட்சத்து 48 ஆயிரத்து 300 பெண்கள் பாலியல் பலாத்காரங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்த ஆண்டுக்கான புள்ளிவிபரம்தான் கடைசியாக நடத்தப்பட்ட ஆய்வில் கிடைத்துள்ளது. அமெரிக்காவில் கடத்தப்படுபவர்களில் 80 சதவிகிதம் பெண்களாகவும், சிறுமிகளாகவும் இருக்கிறார்கள். அதிலும் பாதிக்கு மேற்பட்டவர்கள் 18 வயதிற்குக் கீழ் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com