Contact us at: sooddram@gmail.com

 

பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசு உறுதி, தலையீடுகளுக்கு இடமளிக்க முடியாது

பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது. இதற்கு சகல கட்சிகளையும் உள்ளடக்கும் விதத்தில் பாராளுமன்றத் தெரிவுக்குழு மூலமே பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணப்பட வேண்டும் என்பதையும் அரசாங்கம் உறுதியாக நம்புகிறது. ஆனால், எந்தவொரு வெளிநாட்டின் தலையீடுகளுக்கும் இடமளிக்க முடியாது இதுவே அரசாங்கத்தின் நிலைப்பாடு என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று பாராளு மன்றத்தில் தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. எனினும், உலகில் எந்தவொரு நாட்டிலும் ஆணைக்குழுக்களினால் முன்வைக்கப்படும் பரிந் துரைகளை முழுமையாக நூறுவீதம் அமுல்படுத்தி யதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஜெனீவாவில் இலங் கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த பிரேரனை நிறைவேற்றப்பட்டமை தொடர்பாக நேற்றுப் பாராளுமன்றத்தில் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாத்ததிற்கு பதிலளித்துப் பேசும்போதே பேராசிரியர் மேற்கண்டவாறு கூறினார்.

நேற்றுப் பராளுமன்றத்தில் இரண்டாவது நாளாக விவாதம் நடைபெற்றது. அமைச்சர் தொடர்ந்தும் பேசுகையில், அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணை ஊடாக இலங்கைக்கு பாதிப்பு உள்ளது. அதனை ஏற்றுக்கொள்கிறோம். இந்தியா அதற்கு ஆதரவு வழங்கியதாலும், பாதிப்புக்கள் ஏற்பட்டது. அதனையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

எமக்கு எதிராக பிரேரணை கொண்டு வந்தார்கள் என்பதற்காகவும், எமக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவாக வாக்க ளித்தார்கள் என்பதற்காகவும் இந்தியாவுட னும், அமெரிக்காவுடனும் நாம் பகைமை பாராட்டவில்லை. அவர்களும் எம்மோடு பகைமை பாராட்டவில்லை. இலங்கைக்கு எதிரான பிரேரணை கொண்டுவரப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு நாம் தூதரகங் களை மூடிவிடப்போவதாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை.

எமது இராஜதந்திர உறவுகளில் எந்தவித பாதிப்புகளும் இல்லை. ஆனால், புதிதாக வர்த்தக நடவடிக்கைகளுக்காக சில நாடுகளில் தூதரகங்களை திறக்கவேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. அதனால், எமது வளத்துக்கு ஏற்றவகையில் சில இடங்களில் தூதரகங்களை மூடி சில இடங்களில் புதியவற்றைத் திறக்கவுள்ளோம்.

சர்வதேச சமூகம் இலங்கை போன்ற நாடுகளுக்கு அழுத்தங்களைக் கொண்டுவருவ தற்கு முன்னர் அந்த நாட்டுக்கே உரிய தீர்வுகளை, முன்னெடுப்புக்களை செய்வ தற்கான சந்தர்ப்பங்களை வழங்கவேண்டும்.

ஜெனீவாவுக்குச் சென்ற எமது குழுவினர் ஒருவருக்கு ஒருவர் முரண்பட்டுக் கொண்டதாக ஒற்றுமையற்ற நிலையில் செயற்பட்டதாக சிலர் குற்றஞ்சுமத்தினார்கள். ஆனால் ஒவ்வொருவரும் ஒற்றுமையுடன் தனித்தனியே நிகழ்ச்சி நிரல்களைத் தயாரித்து அதற்கேற்ற விதத்தில் இலங்கைக்கு ஆதரவைத் திரட்ட முற்பட்டிருந்தார்கள்.

ஜெனீவாவுக்குத் தலைமையேற்றுச் சென்றிருந்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க விவாதத்தில் ஏன் வரவில்லையென்று சிலர் கேள்வியெழுப்பியிருந்தார்கள். அவர் உத்தியோகபூர்வ விஜயமாக உகண்டா சென்றுள்ளார். அதனால்தான் அவர் வரவில்லையென்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்தார். பாராளுமன்றம் மீண்டும் மே மாதம் 8ஆம் திகதி கூடுகிறது. நேற்று பாராளுமன்றம் மாலை 6.30 முடிவடையும்போது பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்து சபைக்குத் தலைமைதாங்கியிருந்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com