|
||||
|
குறுகிய
காலத்தில்
துரித மீள்குடியேற்றம்
அரசாங்கத்துக்கு
இந்தியக்
குழு பாராட்டு
இலங்கை வந்துள்ள இந்திய எதிர்க் கட்சித் தலைவி ஸ்ரீமதி
சுஷ்மா சுவராஜ் தலைமையிலான
இந்திய பாராளுமன்ற
பிரதிநிதிகள்
குழுவினர்
நேற்று வவுனியா மற்றும் முல்லைத்தீவு
பகுதிகளுக்கு
விஜயம் செய்தனர். இலங்கை விமானப் படைக்குச்
சொந்தமான
பெல் – 412 ரக பிரபுக்கள்
பயணிக்கும்
ஹெலிக்கொப்டரில்
இந்திய பிரதிநிதிகள்
12 பேரும் வவுனியா கதிர்காமர்
நிவாரணக்
கிராமத்தை
நேற்றுக்
காலை 9.45 மணியளவில்
சென்றடைந்தனர்.
மீள் குடியேற்ற
அமைச்சர்
குணரட்ண வீரக்கோன்,
பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி
முரளிதரன்,
வவுனியா அரச அதிபர்
பீ. எம். எஸ். சார்ள்ஸ் ஆகியோர்
பிரதிநிதிகளை
வரவேற்றனர்.
நிவாரணக்
கிராமத்தில்
1800 குடும்பங்களைச்
சேர்ந்த
6003 பேர் மட்டுமே
தங்கியுள்ளனர். ஒரு குறுகிய
காலத்துள்
பெருந்தொகையான
மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டு
விட்டதாகவும்
அவர்களுக்கான
சகல வசதிகளும்
செய்து கொடுக்கப்பட்டதாகவும்
வவுனியா அரச அதிபர்
திருமதி சார்ள்ஸ் பிரதிநிதிகளுக்கு
விளக்கமளித்தார்.
எதிர்வரும்
ஜூன் மாதம்
30 ஆம் திகதிக்கு
முன்னதாக
எஞ்சியுள்ள
மக்களையும்
விரைவில்
அவர்களது
சொந்த இடங்களில்
குடியமர்த்தப்படும்
என அமைச்சர்
குணரட்ண வீரக்கோன்
இந்திய பாராளுமன்ற
பிரதிநிதிகளிடம்
உறுதியளித்தார்.
இதனைத்
தொடர்ந்து
இந்திய எதிர்க் கட்சித் தலைவி சுஷ்மா
சுவராஜ் மற்றும் ஏனைய இந்திய
எம்.பிக்கள்
நிவாரணக்
கிராமத்திலுள்ள
மக்களை சந்தித்து
உரையாடினர். நிவாரணக் கிராமங்களிலிருந்த
மக்களை விரைவாக மீளக்குடியமர்த்துவதற்காக
எடுத்துள்ள
நடவடிக்கைகள்
குறித்து
இந்திய பாராளுமன்ற
குழுவினர்
அரசுக்கு
பாராட்டுகளையும்
தெரிவித்தனர்.
நிவாரணக் கிராமத்திலிருந்து
புறப்பட்ட
இந்திய பிரதிநிதிகள்
குழுவினரை
புளியங்குளம்
சென்று அங்கு இந்திய
நிதி உதவியுடன்
கட்டப்பட்ட
வீடுகளில்
மீளக் குடியமர்த்தப்பட்ட
மக்களையும்
சந்தித்து
உரையாடினர்.
இவர்களுடன் இலங்கையிலுள்ள
இந்திய தூதுவர் அசோக் கே.
காந்தா, யாழ். நகரிலுள்ள துணைத்
தூதர் மகாலிங்கம்
ஆகியோரும்
சென்றிருந்தனர்.
புளியங்குளம் சென்ற இந்திய பிரதிநிதிகள்
குழுவினரை
பொருளாதார
அபிவிருத்தி
அமைச்சர்
பசில் ராஜபக்ஷ, அமைச்சர் ரிஷாத் பதியுதீன்,
வட மாகாண
ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி
ஆகியோர் வரவேற்றனர்.
புளியங்குளம் வடக்கில் அமைக்கப்பட்ட
நிரந்தர வீடுகளில்
குடியமர்த்தப்பட்ட
மக்கள் வீட்டினுள்
தாம் செய்கை
பண்ணிய நெல் மற்றும்
உளுந்து வகைகளை மூடையிட்டு
குவித்து
வைத்திருந்ததையும்
இந்திய பிரதிநிதிகள்
குழுவினர்
பார்வையிட்டனர்.
யுத்தம் முடிவடைந்து
ஒரு குறுகிய
காலத்திலுள்ள
பாதிக்கப்பட்ட
பகுதிகளின்
அபிவிருத்தி,
உட்கட்டமைப்பு
வசதிகளை அரசு மேற்கொண்டுள்ளமை
தொடர்பாக
இந்திய பிரதிநிதிகள்
குழுவினர்
தங்களது பாராட்டுக்களையும்
தெரிவித்தனர்.
முல்லைத்தீவு பகுதிக்கு
விஜயம் செய்த இந்திய
பாராளுமன்ற
பிரதிநிதிகள்
குழுவினர்
முல்லைத்தீவு
ஆஸ்பத்திரிக்கு
சுமார் 89 மில்லியன்
ரூபா பெறுமதியான
வைத்திய உபகரணங்களையும்
கையளித்தனர்.
முல்லைத்தீவு அரச அதிபர் வேதநாயகன்
இந்திய பிரதிநிதிகள்
குழுவுக்கான
பகல் போசன
விருந்துபசாரங்களை
அரச அதிபர்
அலுவலகத்தில்
ஏற்பாடு செய்திருந்தார்.
நேற்று மாலை முள்ளியவளை
பாடசாலையில்
மக்கள் சந்திப்பொன்றும்
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மக்கள் சந்திப்பின்
போது மீளக்குடியமர்த்தப்பட்ட
மக்களையும்
இந்திய பிரதிநிதிகள்
சந்தித்து
பேசினர்.
இதனைத் தொடர்ந்து
குழுவினர்
யாழ். நகர் புறப்பட்டனர்.
இந்திய பிரதிநிதிகள்
குழுவினர்
ஹெலிக்கொப்டர்
மூலம் யாழ். மத்திய கல்லூரி
மைதானத்தை
சென்றடைந்தனர்.
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |