|
||||
|
தம்புள்ளை பள்ளிவாசலும்
கோயிலும்
புனித பூமிக்கு வெளியே உள்ளன
தம்புள்ளை முஸ்லிம் பள்ளிவாசலும்
கோயிலும்
தம்புள்ளை
புனித பூமி பிரதேசத்துக்கு
வெளியிலே
உள்ளன. இந்தப் பள்ளிவாசல்
நான் பிறப்பதற்கு
முன்பிருந்தே
அங்கு இயங்கி வருகிறது.
அது சட்ட விரோத கட்டிடமல்ல.
மூன்று முஸ்லிம்களின்
பெயரிலே பள்ளிவாசல்
காணி உள்ளது.
மத ஸ்தலம்
என்பதால்
தம்புள்ளை
பள்ளிவாசலுக்கு
சோலை வரி
விலக்கு வழங்கப்பட்டுள்ளது
என காணி
மற்றும் காணி அபிவிருத்தி
அமைச்சர்
ஜனக பண்டார
தென்னகோன்
தெரிவித்தார்.
தம்புள்ள புனித
பூமி தொடர்பில்
எழுந்துள்ள
பிரச்சினை
தொடர்பாக
விளக்கமளிக்கும்
ஊடகவியலாளர்
மாநாடு நேற்று காணி மற்றும்
காணி அபிவிருத்தி
அமைச்சில்
நடைபெற்றது.
இங்கு கருத்துத்
தெரிவித்த
அமைச்சர்,
3 மாதகாலத்தினுள்
தம்புள்ள
புனித பூமி திட்டத்தை
செயற்படுத்துவதன்
மூலம் இந்தப் பிரச்சினைக்கு
தீர்வு காண முடியும்.
30
வருட யுத்தத்திற்கு
முற்றுப்
புள்ளி வைத்து நிம்மதிப்
பெருமூச்சு
விடுகையிலே
இவ்வாறு இனங்களுக்கிடையில்
முறுகல் ஏற்படுத்தும்
வகையில் தேவையின்றி
தம்புள்ள
பள்ளிவாசல்
பிரச்சினை
பூதாகரமாக்கப்பட்டுள்ளது.
இது காலவரையும்
இங்கு சிங்கள, தமிழ், முஸ்லிம்
மக்கள் ஒற்றுமையாகவே
வாழ்ந்து
வருகின்றனர்.
தம்புள்ள புனித பூமி
விவகாரம்
நீண்டகாலமாக
தீர்க்கப்படாதிருந்தது. பிரேமதாஸ நகர அபிவிருத்தி
அமைச்சராக
இருந்தபோது
தம்புள்ள
நகருக்கு
அப்பால் வரையான பகுதி புனித
பூமியாக வர்த்தமானி
மூலம் பிரகடனப்படுத்தப்பட்டது.
ஆனால் பல வருடங்களாக
இந்த திட்டம்
முன்னெடுக்கப்படவில்லை.
1994
ல் நான்
பாராளுமன்ற
உறுப்பினராக
தெரிவான பின் புனித
பூமி திட்டத்தை
முன்னெடுக்க
நடவடிக்கை
எடுத்தேன். ஆனால்
மக்கள் தமது வீடுகளை
உடைப்பதை
விரும்பவில்லை.
இதனால் மக்களுக்கு
பாதிப்பின்றி
புனித பூமி திட்டத்தை
திருத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டது.
இறுதியாக நகர அபிவிருத்தி
அமைச்சராக
தினேஷ் குணவர்தன இருந்தபோதும்
இதில் திருத்தம்
செய்யப்பட்டது.
தம்புள்ள புனிதபூமி
அமைப்பதற்கான
பணிகள் 70 வீதம் பூர்த்தி
செய்யப்பட்டுள்ளன.
கடந்த 23 ஆம் திகதி
புத்தசாசன
மதவிவகார
அமைச்சின்
செயலாளர்,
மகா சங்கத்தினர்,
அடங்கலான
சகல தரப்பினருடனும்
பிரதேச செயலகத்தில்
கூட்டமொன்று
ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையிலே ஒரு தரப்பினர்
பள்ளிவாசலுக்கு
ஊர்வலமாகச்
சென்று குழப்பம் ஏற்படுத்தினர்.
பேச்சுவார்த்தை மூலம் இலகுவாகத்
தீர்க்கக்கூடிய
பிரச்சினை
பூதாகாரமாக்கப்பட்டு
சர்வதேச மட்டத்திற்கு
கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்தப் பள்ளிவாசல்
நான் பிறப்பதற்கு
முன்பிருந்தே
இங்கு இருக்கிறது. இதற்கான காணியை
நானே முஸ்லிம்களுக்கு
விற்றதாக
குற்றஞ்சாட்டப்படுகிறது.
இது முற்றிலும்
தவறாகும்.
3 முஸ்லிம்களின்
பெயரிலே இந்தக் காணி உள்ளது
1992.2.28 ஆம் திகதி
வர்த்தமானியில்
இது தொடர்பான
விபரம் உள்ளது.
தம்புள்ள புனித பூமி
திட்டத்தை
6 மாதங்களில்
முழுமையாக
செயற்படுத்துவதாக
பெளத்த விவகார அமைச்சின்
செயலாளர்
கூறியுள்ளார். ஆனால்,
அமைச்சின்
செயலாளர்,
தம்புள்ள
நகர சபை
தலைவர் அடங்கலான சகல தரப்பினருடனும்
நான் பேச்சு
நடத்தினேன்.
இந்த திட்டத்தை
மூன்று மாதத்தினுள்
முழுமையாக
அமுல்படுத்துமாறு
கேட்டுள்ளோம்.
இதன் மூலம் சகலரும் கெளரவமாக வாழும் சூழலை ஏற்படுத்த
வேண்டும்.
இனங்களுக்கிடையில் பிளவு ஏற்படுத்தும்
இத்தகைய முயற்சிகள்
குறித்து
கவலை அடைகிறேன். மக்கள் பிரதிநிதி
என்ற வகையில்
சகல மக்கள்
குறித்தே
நான் சிந்தித்து
செற்படுகிறேன்.
என்னை பெளத்த
விரோதியாக
காட்ட சிலர் முயல்கின்றனர்.
என்னைப் பற்றி பொய்
பிரசாரம்
செய்தவர்களுக்கு
எதிராக சட்ட நடவடிக்கை
எடுப்பேன். 20 ஆம் திகதி
நடந்த சம்பவத்தை
பொலிஸார்
கட்டுப்படுத்தியிருக்க
முடியும்.
யாராக இருந்தாலும்
சட்டம் ஒழுங்கு முழுமையாக
அமுல்படுத்தப்படவேண்டும்.
20 ஆம் திகதி நடந்த
ஆர்ப்பாட்டத்தில்
தம்புள்ள
பகுதி சிங்கள மக்கள் 100 பேர் கூட
பங்குபற்றவில்லை.
வெளியில் இருந்து
பஸ்ஸில் அழைத்து வரப்பட்டவர்களே
அதிகம் இதில் பங்கேற்றனர்.
இந்தப் பிரச்சினையை
தீர்க்க நடவடிக்கை
எடுக்குமாறு
கொரியா செல்ல முன்னர்
ஜனாதிபதி
கூறினார். இதனை பேச்சுவார்த்தை
மூலம் தீர்க்க வாய்ப்புள்ளது.
ஜனாதிபதி நாடு திரும்பிய
பின்னர் இதற்கு துரிதமான தீர்வு ஒன்றை வழங்குவார்
என நம்புகிறேன்
என்றார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |