Contact us at: sooddram@gmail.com

 

முதலில் வெளிப்படையான தேர்தலை நடத்துங்கள் - அமெரிக்காவுக்கு சாவேஸ் அறிவுரை

நடப்பாண்டு நவம்பர் மாதத்தில் புதிய அமெரிக்க அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. தற்போதைய அதிபர் பாரக் ஒபாமா மீண்டும் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடப் போகிறார். அவரை எதிர்த்துப் போட்டியிடுவதற்கான வேட்பாளரைத் தேர்வு செய்யும் பணியில் குடியரசுக் கட்சி தற்போது ஈடுபட்டிருக்கிறது. தற்போதுள்ள நிலையில் மிட் ரோம்னி வேட்பாளர் தேர்வில் முன்னணியில் இருக்கிறார். ஒபாமாவைப் பொறுத்தவரை, மிட் ரோம்னிக்கு எதிரான பிரச்சாரத்தைத் துவக்கி விட்டார். பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள வேளையில், நெருக்கடி தீர்ந்து விட்டது என்று தேர்தலுக்காக அறிக்கையும் வெளியிட்டார். தனது தேர்தல் பிரச்சார மும்முரத்திலும், தங்களுக்குத் தலையாட்டாத நாடுகளை சீண்டுவதை அவர் நிறுத்தவில்லை.

வெனிசுலாவில் தேர்தல் நடைமுறை பற்றி அவர் கருத்து தெரிவித்திருந்தார். வெனிசுலாவிலும் நடப்பாண்டில் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. சாவேஸ் மீண்டும் களத்தில் இருக்கிறார். அவரை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்த அமெரிக்க ஆதரவு எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்றன. அவர்களுக்குள் அதில் குடுமிப்பிடி சண்டை நடந்து கொண்டிருக்றது. வெனிசுலா தேர்தல் நடைமுறை பற்றி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில்தான் பாரக் ஒபாமாவும் வெனிசுலாவின் தேர்தல் நடைமுறை பற்றிக் கருத்து தெரிவித்திருக்கிறார். வரக்கூடிய வெனிசுலா ஜனாதிபதித் தேர்தல் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அதேவேளையில், புற்றுநோய்ச் சிகிச்சைக்காக கியூபா சென்றுள்ள சாவேஸ், இறந்து விட்டார் என்ற பொய்ச் செய்திகளையும் அதே நாளில் மேற்கத்திய ஊடகங்கள் பிரசுரித்தன.

நடக்குமா வெளிப்படையான தேர்தல்?

கடந்த பத்து நாட்களாக சாவேஸ் எடுத்து வந்த சிகிச்சைகள் வீடியோ காட்சிகளாக தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. ஏப்ரல்14 அன்றுதுவங்கி, சாவேஸ் எத்தகைய சிகிச்சைகளை எடுத்துக் கொண்டார் என்று அதில் விளக்கப்பட்டிருக்கிறது. இந்த வீடியோவில் சாவேஸ் மக்களிடம் சாவேஸ் சொல்ல விரும்பிய செய்தியையும் பதிவு செய்திருக்கிறார்கள். வெனிசுலாவின் அரசே இந்த வீடியோவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது. அதில் பேசியுள்ள சாவேஸ், வெனிசுலாவில் வெளிப்படையான தேர்தல் நடைபெறும் என்று நம்புவதாக ஒபாமா கூறியிருக்கிறார். நாங்கள் என்ன எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம் என்றால், அமெரிக்காவில் வெளிப்படையான தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்றுதான். அங்கு மக்கள் நேரடியாக வாக்குகள் அளித்து அதிபரைத் தேர்வு செய்யும் வாய்ப்பு உருவாக வேண்டும். அதிபர் வேட்பாளருக்கு வாக்குகளை அளிக்கும் அதே வேளையில், தங்களின் பிரதிநிதிகள் என்று சொல்லக்கூடியதேர்தல் குழுமம்ஒன்றிற்கும் வாக்களிக்கிறார்கள். இரண்டு வகையான தேர்தல் நடக்கிறது. இந்தப் பிரதிநிதிகள்தான் யார் அதிபர் என்பதை முடிவு செய்கிறார்கள். மக்கள் நேரடியாக அதிபரைத் தேர்வு செய்வதில்லை. மக்களின் வாக்குகளை அதிகமான அளவில் பெற்றவர், அதிகமான அளவில் பிரதிநிதிகளின் வாக்குகளைப் பெறாமல் இருந்தால் தோல்வியைத் தழுவுவார். அமெரிக்காவை ஜனநாயகப்படுத்த வேண்டும். அப்போதுதான் அங்கு நடக்கும் ஒடுக்குமுறைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று குறிப்பிட்டார். இந்த வீடியோ காட்சிகள் வெனிசுலா தொலைக்காட்சிகளில் மட்டுமல்லாமல், பல தென் அமெரிக்க நாடுகளின் தொலைக்காட்சிகளிலும் வெளியாகின. பல நாடுகளிலும் இந்த வீடியோ காட்சிக்கு பெரும் வரவேற்பு இருந்திருக்கிறது.

அதில் மேலும் பேசியுள்ள சாவேஸ், இந்த பூமிப்பந்தில் வெனிசுலாவின் தேர்தல் நடைமுறையைப் போன்ற வெளிப்படையான, மிகவும் திறமையான, சிறந்த தேர்தல் நடைமுறை வேறெங்கும் இல்லை என்று நான் சொல்கிறேன். எனது உடல்நிலை பற்றி மேற்கத்திய ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம். தற்போது நடைபெற்று வரும் சிகிச்சை மிகவும் நல்ல முறையில் இருக்கிறது. விரைவில் நாடு திரும்புவேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஊருக்கு உபதேசம் செய்யும் அமெரிக்கா, முதலில் வெளிப்படையான தேர்தலை நடத்தி முறையான ஜனநாயகத்தை அந்நாட்டுமக்களுத்குதரும்முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று வெனிசுலாவின் ஆளும்கட்சியான வெனிசுலா சோசலிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அதிக வாக்குகள் வாங்கியும  ோற்ற அல் கோரே

1993 ஆம் ஆண்டு முதல் துணை அதிபராக இருந்தவர் அல் கோரே. இவர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர். கிளிண்டன் அதிபராக இருந்த எட்டாண்டுகள் இவர் அவருக்கு துணை அதிபராகப் பணியாற்றினார். 2000 ஆம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக அவர் நிறுத்தப்பட்டார். புளோரிடா மாகாணத்தின் ஆளுநராக இருந்த ஜார்ஜ் புஷ்சை எதிர்த்து அவர் களமிறங்கினார். வாக்கு எண்ணிக்கையின் நிறைவில் புஷ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு தேர்தல் குழுப் பிரதிநிதிகள் அதிகமாக வாக்களித்ததால் இந்த முடிவு என்றும் கூறினர். அதாவது 271 வாக்குகள் புஷ்சுக்கும், 266 வாக்குகள் அல் கோரேவுக்கும்கிடைத்தது.நேரடியாக மக்கள் அளித்த வாக்குகளின்படி பார்த்தால், புஷ்சை விட அல் கோரே ஐந்து லட்சம் வாக்குகளை அதிகமாகப் பெற்றிருந்தார். மக்களின் தேர்வு அல் கோரேவாக இருந்தாலும், தேர்தல் குழு வாக்களிக்காததால் அவர் அதிபராக முடியவில்லை. இந்தப் பிரதிநிதிகளைத் தேர்வு செய்யும் நடைமுறையும் மாகாணத்திற்கு, மாகாணம் மாறுகிறது. சில இடங்களில் மக்களும், சில இடங்களில் மாகாண சபைகளும் இந்தப் பிரதிநிதிகளைத் தேர்வு செய்யும் குழப்பமான நிலை இருக்கிறது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com