|
||||
|
பிரிந்து போவது
பொருத்தமான
தீர்வு அல்ல! தனித் தமிழீழம் குறித்து சி.பி.எம். விளக்கம்
கழுகார் பதில்கள்
பகுதியில்
கடந்த 14.4.13 தேதியிட்ட
இதழில் 'ஈழத்தமிழர்
விவகாரத்தில்
மற்ற கட்சிகளிடம்
இருந்து மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி முரண்படுவது
ஏன்?’ என்ற
கேள்வி- பதில் இடம்பெற்று
இருந்தது.
இதற்கு பதிலளித்து மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட்
கட்சியின்
நிலைப்பாட்டை
விளக்கி அந்தக் கட்சியின்
மத்தியக்
குழு உறுப்பினர்
உ.வாசுகி நமக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், ''இலங்கைத் தமிழர் விஷயத்தில்
மார்க்சிஸ்ட்
கட்சியின்
நிலைப்பாடு
மார்க்ஸ்,
லெனின் வழியில் இல்லை என்று
குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தேர்தல்களில்
தொகுதி உடன்பாடு என்பது, தேர்தல் உத்தி சம்பந்தப்பட்ட
விஷயம். எந்தக் கட்சியுடன்
உடன்பாடு செய்துகொள்கிறோமோ,
அந்தக் கட்சித் தலைவரின் வழி நடப்பதாகப்
பொருள் கொள்வது அரசியல் தெரியாதவர்களின்
நிலையாக இருக்கலாம்.
அரசியல் புரிந்த
ஒரு பத்திரிகையின்
கருத்தாக
வருவது ஆச்சரியமளிக்கிறது.
இலங்கையின் இன்றையச் சூழலில், அங்குள்ள தமிழர்களுக்குத்
தேவைப்படுவது,
சமவாய்ப்பும்
அந்தஸ்தும்
உள்ள குடிமக்களாக
அவர்கள் நடத்தப்படுவதே
ஆகும். அரசியல் தீர்வின்
ஒரு பகுதியாக
அதிகாரப்
பரவல் உறுதிசெய்யப்பட
வேண்டும்.
மறுகுடியமர்த்தப்பட்ட மக்களுக்குக்
கல்வி, வேலைவாய்ப்பு,
பொருளாதார
மேம்பாட்டுக்கான
ஏற்பாடுகள்
துரிதமாகப்
பூர்த்தியாக
வேண்டும்.
தமிழர்கள் வாழும்
பகுதிகளில்
இருந்து ராணுவம் விலக்கிக்கொள்ளப்பட
வேண்டும்.
உள்நாட்டு
யுத்தத்தின்
இறுதிக் கட்டத்தில்
நடந்த கடுமையான மனித உரிமை
மீறல் மற்றும் போர்க் குற்றங்களுக்கான
பொறுப்பாளிகள்
அடையாளம்
காணப்பட்டு
உரிய தண்டனை
வழங்கப்பட
வேண்டும்.
இதற்கு, நம்பகத்தன்மையுடன்
கூடிய சுயேச்சையான
உயர்மட்ட
விசாரணை நடத்த இலங்கை
அரசு முன்வர
வேண்டும்.
இதற்கான சர்வதேச
நிர்பந்தத்தை
இலங்கைக்கு
உருவாக்க
வேண்டும்.
இந்தியா தனது அரசியல், ராஜீய உறவைப்
பயன்படுத்தியும்,
சர்வதேச மன்றங்களில்
இதை எழுப்பியும்
கடுமையான
நிர்ப்பந்தத்தை
செலுத்த வேண்டும்.
இந்தப் பிரச்னையின்
இறுதித் தீர்வு தனி ஈழம்
என்பது தமிழகத்தில்
செயல்படும்
ஒரு சில
கட்சிகளின்,
அமைப்புகளின்
கருத்து.
மார்க்சிஸ்ட் கட்சியைப்
பொறுத்தவரை,
இன்றுள்ள
உலகச் சூழலில் பிரிந்துபோவது
பொருத்தமான
தீர்வாகாது
என்று கருதுகிறது.
எனினும், அடிப்படையில்
எது தீர்வு
என்பதை அங்குள்ள யதார்த்தச்
சூழலும், அங்குள்ள மக்களின் விருப்பமும்
அதற்கான அவர்களின்
போராட்டமும்தான்
நிர்ணயிக்கும்.
நமது விருப்பு
வெறுப்புகள்
அதைத் தீர்மானிக்க
முடியாது.
இலங்கை அரசு, இன
ஒடுக்குமுறையை
மட்டுமல்ல,
வர்க்க ஒடுக்குமுறையையும்
கட்டவிழ்த்திருக்கிறது. சமீபத்தில்
அங்கு கண்டெடுக்கப்பட்ட
குவியலான
எலும்புக்
கூடுகள்
(Mass Grave), 1988-89-ல் அரசை எதிர்த்துப்
போராடியபோது
படுகொலை செய்யப்பட்ட
ஜே.வி.பி.-யைச்
சேர்ந்த சிங்கள இளைஞர்களில்
ஒரு பகுதியினரின்
எலும்புகள்
என்று தகவல் வருகிறது.
இப்போது நடக்கும்
மாணவர் போராட்டத்தையும்
ராஜபக்ஷே
அரசு ஒடுக்கி
வருகிறது.
மக்களின் அதிருப்தியைத்
திசை திருப்ப...
இன, மத
வெறியைத்
தூண்டிவிட்டது.
எனவே, இத்தகைய
சூழலில் இரு பகுதிகளிலும்
உள்ள உழைக்கும்
மக்களும்,
ஜனநாயக, மதச்சார்பற்ற
சக்திகளும்
ஒன்றுசேர்ந்து
இந்த அரசின்
ஒடுக்குமுறைகளுக்கு
எதிராகக்
குரல் கொடுக்க வேண்டும் என்பதே பொருத்தமான
அணுகுமுறையாக
அமையும்.
கடந்த காலத்தில்
விடுதலைப்
புலிகளின்
அணுகுமுறை
இந்த வாய்ப்பை
முற்றாக அடைத்துவிட்டது. அதேபோல், இலங்கையில்
உள்ள முஸ்லிம்
தமிழர்கள்
கடந்த காலத்தில்
புலிகளால்
புறக்கணிக்கப்பட்டனர்.
முஸ்லிம் தமிழர்கள்
80 ஆயிரம் பேர் அவர்களின்
வாழ்விடத்தில்
இருந்து புலிகளால்
துரத்தியடிக்கப்பட்டனர்.
இப்போதாவது, கடந்த காலத்தைத்
தள்ளிவைத்து,
ஒற்றுமைக்கான
முயற்சிகள்
மேற்கொள்ளப்பட
வேண்டும்.
அனைத்துச் சிங்கள
மக்களையும்
தமிழ் இன எதிர்ப்பாளர்கள்
என இங்கிருந்து
முத்திரை
குத்துவது
இலங்கைத்
தமிழர்களுக்கு
எந்த விதத்திலும்
உதவாது. அது உண்மையும்
அல்ல. இப்படிச்
சொல்பவர்களை
உடனே, ராஜபக்ஷே
ஆதரவாளர்கள்
எனப் பகடி
பேசுவது, அங்கு பிரச்னை
தீர்ந்துவிடாமல்
இருந்தால்தான்
இங்கு அரசியல் நடத்த முடியும்
என்று நினைப்பவர்களின்
குறுகிய பார்வை.
குறிப்பிட்ட வரலாற்றுச்
சூழலில் அதாவது ஏகாதிபத்திய
இங்கிலாந்தின்
நுகத்தடியில்
இருந்து அயர்லாந்து
பிரிந்துபோவது
குறித்து
மார்க்ஸ்
சொன்னதையும்,
சோஷலிச தேசக் கட்டமைப்பில்
அனைத்து தேசிய இனங்களையும்
ஒன்றுசேர்க்கும்
சந்தர்ப்பத்தில்
சுயநிர்ணய
உரிமை குறித்து லெனின் சொன்னதையும்
அப்படியே
நகல் எடுத்து
எல்லாக் காலத்துக்கும்
எல்லாச் சூழல்களுக்கும்
பொருத்த முடியாது. மார்க்சியம் வறட்டுச்
சூத்திரமல்ல.
குறிப்பான
நிலைமைகளில்
குறிப்பாகப்
பொருத்திப்
பார்க்கப்படும்
அறிவியல்
பார்வை. இன்றுள்ள ஏகாதிபத்தியம்
கோலோச்சும்
உலகச் சூழலில், அது வளரும்
நாடுகளைத்
துண்டாடச்
செய்யும்
முயற்சிகளையும்,
தந்திரங்களையும்
கணக்கில்
எடுத்ததாக
நிலைபாடு
அமைய வேண்டும்
என்பதே எங்கள் கட்சியின்
கருத்து'' என்று குறிப்பிட்டுள்ளார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |