|
||||
|
மகேஸ்வரி நிதியம்
எங்களிடம் கொள்ளையடித்த பணத்தை திருப்பி கொடுங்கள்! யாழ். பாரவூர்தி
உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் மகேஸ்வரி நிதியம் கொள்ளையடித்து வைத்திருக்கும் எங்களுடைய பணத்தை திரும்பவும் எங்களிடமே கொடுங்கள் எனக்கோரி யாழ்.மாவட்டப் பாரவூர்தி உரிமையாளர்கள் இன்றைய தினம் முதலமைச்சர் அலுவலகம் மற்றும் ஆளுநர், மாவட்டச் செயலகம் ஆகியவற்றுக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கின்றனர். யாழ்.பாரவூர்தி உரிமையாளர்களுக்குச் சொந்தமான சுமார் ஒரு கோடியே 97 லட்சம் ரூபா நிதியை ஈ.பி.டி.பி அமைப்பின் மகேஸ்வரி நிதியம் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றது. இந்தப் பணத்தை மகேஸ்வரி நிதியம் கொள்ளையடித்து வைத்திருப்பதாக குற்றம்சாட்டியே இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் காலை 10மணிக்கு மேற்படி முதலமைச்சர், ஆளுநர், மாவட்டச் செயலர் ஆகியோரின் அலுவலகங்களுக்கு முன்பாக இடம்பெற்றதுடன் மகஜர்களும் கையளிக்கப்பட்டுள்ளன. இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், மகேஷ்வரி நிதியத்திற்கு நாங்கள் மணல் ஏற்றுவதற்காக நம்பிக்கை பொறுப்பின் அடிப்படையில் 575 பாரவூர்தி உரிமையாளர்கள் நாங்கள் தலா 5ஆயிரம் ரூபா வீதம் பணம் செலுத்தினோம். இதற்கு மேலதிகமாக 51 ஆயிரம் தடவைகளுக்கு மேலதிகமாக எமக்கு கிடைக்க வேண்டிய வட்டிக்காசு 13 லட்சம் ரூபா மற்றும் 21 லட்சம் ரூபா கூலிக்காசு உள்ளடங்கலாக எமக்கு ஒருகோடியே 97 லட்சம் ரூபா பணத்தை மகேஷ்வரி நிதியம் வழங்கவேண்டும். இதற்கமைய நாங்கள் நிதியத்திடம் சென்று கேட்டபோது அவர்கள் 2லட்சம் ரூபா வீதம் வாராந்தம் எமக்கு வழங்குவதாக தெரிவித்திருந்தார்கள். ஆனால் 50பேருக்கு முதற் கட்டமாக காசோலை வழங்கினார்கள். பின்னர் எந்தவொரு நிதியையும் அவர்கள் எமக்கு வழங்கவில்லை. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சென்று கேட்டபோது அவர் இந்த விடயம் தொடர்பாக பேசுவதாக எமக்கு கூறியிருந்தார். பின்னர் நாங்கள் அவருடன் பேசுவதற்கு தொலைபேசி அழைப்பை எடுத்த போது அவர் தான் கொழும்பில் நிற்பதாகவும் பின்னர் பேசுகிறேன் எனவும் கூறினார். பல தடவைகள் எமது அழைப்பை எடுக்கவும் இல்லை. இந்நிலையில் எங்களுடைய பணத்தை வாங்கி அவர்கள் கனரக வாகனங்களை சொந்தமாக வாங்கி வைத்திருக்கின்றார்கள். இது பற்றி நாங்கள் கேட்டபோது உங்களுடைய பணத்தில் வாங்கவில்லை. உங்கள் பணம் வங்கிகளில் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கின்றது என கூறினார்கள். எங்கள் பணம் பத்திரமாக உள்ளதெனில் அதனை எதற்காக எங்களிடம் வழங்க முடியாமல் இருக்கின்றது? அதனை எமக்கு வழங்கவேண்டும். எங்களுடைய தொழிலாளர்கள் வறுமையினால் தங்களுடைய பாரவூர்திகளை விற்றுவிட்டு கூலிக்கு பாரவூர்திகளை ஓடிக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் நாங்கள் பணத்தை கேட்பதற்கு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவிருந்த நிலையில் மகேஸ்வரி நிதியத்தினர் பொலிஸில் முறைப்பாடு கொடுத்துள்ளார்கள். அதாவது தமக்கு இடையூறு என. எங்களுடைய பணத்தை தந்தால் எதற்காக நாங்கள் அவர்களை இடையூறு செய்யப் போகின்றோம். எனவே இந்த நிலையிலேயே நாங்கள் இன்றைய தினம் முதலமைச்சருக்கும், ஆளுநருக்கும், அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதிக்கும் மகஜர்களை கையளித்திருக்கின்றோம். எனவே எமக்கு எங்களுடைய பணம் வேண்டும் என கூறினார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |