|
||||
|
நாட்டைப்பற்றி
எண்ணி 19க்கு கை உயர்த்துங்கள்
- ஜனாதிபதி ஜனநாயகத்தையும் மக்களுக்கான சுதந்திரத்தையும் எதிர்காலத்திலும் பாதுகாப்பதற்காக நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்தார். நூறு நாட்கள் திட்டத்தின் நிறைவு நாளான நேற்று (23) இரவு, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போதே ஜனாதிபதி இந்த வேண்டுகோளை விடுத்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 19ஆவது திருத்தத்துக்கு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அத்தனை உறுப்பினர்களும் ஆதரவு வழங்குவார்கள் என்ற முழுமையான நம்பிக்கை எமக்கு உள்ளது. தேர்தல் விஞ்ஞாபனத்தை மறந்து நாம் ஒருபோதும் செயற்படவில்லை. இனியும் அவ்வாறு செயற்படப்போவதுமில்லை. மக்களுக்கான அனைத்து வாக்குறுதிகளையும் ஓர் அணுவும் பிசகாமல் நிறைவேற்றுவதே எமது நோக்கம். அரசாங்கம் 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் எதனைச் சாதித்துள்ளது என்றும் என்னை ஆளுமையற்ற ஒருவன், செயற்பட முடியாத ஒருவன் என்றும் கூட இக்காலங்களில் விமர்சனங்கள் எழுகின்றன. அவ்வாறு கூறுபவர்களுக்கு நான் கூறவிரும்புவதெல்லாம், கடந்த 8ஆம் திகதி நான் ஜனாதிபதியாகப் பதவியேற்ற போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றியுள்ளேன். மீதமானவை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்பதையே. இலங்கையின் வரலாற்றில் அனைத்து கட்சிகளையும் ஒரே நோக்கத்தின் கீழ் கொண்டுவர எம்மால் முடிந்துள்ளது. இலங்கையிலிருந்து பிரிந்து கிடந்த வெளிநாடுகளை மீள நாட்டோடு ஒன்றிணைக்க முடிந்துள்ளது. நாம் முன்னெடுக்கும் அத்தனை செயற்பாடுகளுக்கும் சர்வதேசத்தின் முழுமையான ஆதரவு தற்பொழுது கிடைத்து வருகிறது. சர்வதேச ரீதியில் இன்று எமக்கு எதிரிகள் இல்லை. நான் பதவியேற்றதும் முதலில் எமது அயல்நாடான இந்தியாவுக்கு விஜயம் செய்தேன். பின்னர் பிரித்தானியா சென்றேன். அங்கு பிரதமர், பாதுகாப்புச் செயலாளர், மகாராணி உட்பட பிரதானிகளை சந்தித்தேன். தொடர்ந்து சீனா சென்றேன். பாகிஸ்தான் சென்றேன். இந்நாடுகளின் விஜயமானது எமது வெளிநாட்டு நட்புறவுக்கொள்கையை நிலைநாட்டுவதற்கான சந்தர்ப்பங்களாகும். நாம் சர்வதேசத்தை இந்த குறுகிய காலத்தில் வென்றுள்ளோம். அது இலங்கையின் அரசியல் வரலாற்றில் நாம் பெற்றுக்கொண்டுள்ள பெரும் வெற்றியாகும். இலங்கையைப் பொறுத்தவரை தலைவர்களின் தவறுகள் ஐம்பது வீதமாக குறிப்பிடப்பட்டாலும், மீதம் 50 சதவீதத் தவறுகள் நடைமுறையில் இருந்த கொள்கைகளிலேயே தங்கியுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய்களை செலவிட்டு தலைவர்கள் தம்மை உயர்த்திக்காட்டுவது முனைப்புடன் செயற்பட்ட வரலாறுகள் உண்டு. பணத்தாலன்றி குறிக்கோளிலும் நோக்கத்திலும் கொள்கையிலும் அரசியல் ரீதியான வளர்ச்சியே முக்கியமானது.இந்த யுகத்தில் நாம் அதை செய்துள்ளோம். 1948ஆம் ஆண்டு சுதந்திரத்தின்போது நாம் எதிர்பார்த்த சுதந்திரமன்றி தற்போதைய காலத்துக்குப் பொருத்தமான சுதந்திரம் எமக்கு அவசியமாகவுள்ளது. அதனை நாம் தற்போது செயற்படுத்தி வருகின்றோம். அரசியல் கட்சிகளும் மக்களும் ஒரே நோக்கத்துடன் செயற்பட்ட இப்படியொருகாலம் இதற்கு முன்னர் இருந்ததில்லை. உள்நாட்டுப் பிரச்சினைகளில் அனைவரும் தெளிவுபெறவேண்டியுள்ளது. மீண்டும் இந்த நாட்டில் யுத்தம் ஒன்று இடம்பெறாத வகையில் பார்த்துக்கொள்வது எமது அனைவரதும் பொறுப்பாகும். அத்தகைய சூழலைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்து சமூகம் மத்தியிலும் சகோதரத்துவத்தை கட்டியெழுப்ப வேண்டியது முக்கியமாகும். அரசியலில் எமக்கு எதிராகச் செயற்படுபவர்கள் சர்வதேச வலையமைப்புகளின் ஊடாகவும், ஊடகங்களின் ஊடாகவும் மிக மோசமாக பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். வடக்கில் இராணுவத்தினரைக் குறைத்துள்ளோம் என்றும் அங்கிருந்து இராணுவத்தை எடுத்துவிட்டோம் என்றும் சம்பூரில் புலிகளுக்கு காணிகளை வழங்கியுள்ளோம் என்றும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. சிங்கள மக்களைவிட அதிகமான உரிமைகளை தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் வழங்கியிருப்பதாக பிரசாரங்கள் கிளப்பப்படுகின்றன. ஒருசில அடிப்படைவாதிகளே இத்தகைய பொய் பிரசாரங்களை உலகிற்குத் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு செயற்பட வேண்டாம் என்று நான் அவர்களை கேட்டுக்கொள்கிறேன். வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களை திசைதிருப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. நாம் ஒன்றைத் தெளிவாகக் கூறவேண்டும் யுத்தம் நடை பெற்ற காலங்களில் வடக்கு, கிழக்கு மட்டுமன்றி தெற்கிலும் கொழும்பு நகரிலும் கூட இராணுவம் தனியார் இடங்களை பாதுகாப்புக்கு எடுத்துக்கொண்டிருந்தன. கொழும்பு ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலும், அலரி மாளிகையைச் சுற்றியும் தனியாருடைய காணிகள் வீடுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பெற்றுக்கொண்டிருந்தனர். அந்த தனியார் காணிகளை தேசிய பாதுகாப்புக்கு எவ்வித பங்கமுமின்றி திருப்பிக் கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது? அந்த காணிகளை உரிமையாளர்களுக்கு மீண்டும் கொடுப்பதில்லையா?. எனினும், இச்செயற்பாடு தொடர்பில் தவறான பிரசாரங்களே முன்னெடுக்கப்படுகின்றன. சகல துறைகள் தொடர்பிலும் நாம் தெளிவான கொள்கைகளை கொண்டுள்ளோம். அது மட்டுமன்றி அரச வளங்களை மீண்டும் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் ஜனாதிபதி செயலணியொன்றை உருவாக்கியுள்ளோம். முறையற்ற விதத்தில் வெளிநாட்டு வங்கிகளில் வைப்புச் செய்துள்ள நாட்டுக்குச் சொந்தமான பணத்தை மீளப்பெற்றுக்கொள்ள ஜனாதிபதி செயலணி மூலம் நடவடிக்கை எடுப் போம். தேசிய சர்வதேச ரீதியில் அதற்கான ஒத்துழைப்புகளைப் பெற்றுக்கொண்டு இந்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்வோம்' என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.(அரசாங்க தகவல் திணைக்களம்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |