|
||||
|
அமைச்சர்கள்
வாசு, திஸ்ஸ,
டியு ஆகியோருக்கும்
தமிழ் தலைவர்களுக்குமிடையில்
சந்திப்பு
இலங்கை அரசாங்கத்தில்
சிரேஸ்ட அமைச்சர்களாக
இருக்கும்
இடதுசாரிக்
கட்சிகளின்
தலைவர்களான
தோழர் டியு குணசேகர
(கம்யூனிஸ்ட்
கட்சி) பேராசிரியர்
திஸ்ஸ விதாரண (சமசமாஜ கட்சி) மற்றும்
தோழர் வாசுதேவ நாணயக்கார
(நவசமசமாஜ
கட்சி) ஆகியோர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின்
தலைவர் திரு. ஆனந்தசங்கரி, முன்னாள்
வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர்
திரு வரதராஜப்பெருமாள்
மற்றும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத் தலைவர்
திரு. சித்தார்த்தன் ஆகியோருடன்
ஒரு கலந்துரையாடல்
சந்திப்பை
மேற்கொண்டனர்.
இந்தச் சந்திப்பு
7.8.2011 ஆம் திகதி
ஞாயிற்றுக்கிழமை
அன்று அமைச்சர் பேராசிரியர்
திஸ்ஸ விதாரண அவர்கள் இல்லத்தில்
நடைபெற்றது. இக்கலந்துரையாடல் சுமார்
இரண்டரை மணித்தியாலங்கள்
இடம்பெற்றது.
இச்சந்திப்பானது பிரதானமாக
நாளை அதாவது
8.8.2011ம் திகதி
திங்கட்கிழமை
அன்று ஜனாதிபதியின்
பிரேரணையின்
பேரில் உருவாக்கப்படவுள்ள
பாராளுமன்ற
தெரிவுக்குழு
தொடர்பாக
பாராளுமன்றத்தில்
அங்கம் வகிக்கும்
கட்சிகளின்
தலைவர்களுக்கிடையில்
இடம்பெறவுள்ள
கூட்டம் தொடர்பாக கலந்துரையாடுவதையேநோக்கமாக
கொண்டிருந்தது.
இந்த விடயத்தில்
குறிப்பிட்ட
மூன்று அமைச்சர்களும்
எடுக்கவுள்ள
எடுக்கவேண்டிய
நிலைப்பாடுகள்
தொடர்பாக
இச்சந்திப்பின்போது
கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலின்படி, பாராளுமன்றத்
தெரிவுக்குழுவானது
திட்டவட்டமாக
ஆறு மாத
காலத்துக்குள்ளாகவோ
அல்லது குறிப்பாக
குறித்துரைக்கப்பட்ட
சில மாதங்களுக்குள்ளாகவோ
ஓர் அரசியல்
தீர்வுக்கான
திட்டத்தை
ஜனாதிபதிக்கு
பாராளுமன்ற
சபாநாயகர்
ஊடாக சமர்ப்பிக்கும்
வகையில் பரிந்துரைக்க
வேண்டும்
எனவும் அத்துடன் பாராளுமன்ற
தெரிவுக்குழுவில்
மேற்கொள்ளப்படுகின்ற
கலந்துரையாடல்கள்
புதிய பிரேரணைகள்
புதிய கருத்துக்கள்
திரட்டல்
என்பவையாக
அல்லாமல்
ஏற்கனவே பல்வேறு கட்சிகளுக்கிடையிலும்
நடைபெற்ற
பேச்சுவார்த்தைகளின்
ஊடாக அடையப்பட்ட
ஒரு தீர்வுத்
திட்ட பிரேரணையை
அடிப்படையாகக்
கொண்டே செயற்பட வேண்டும் என்ற பொதுக்கருத்தே
இக்கூட்டத்தில்
இடம்பெற்ற
கலந்துரையாடலில்
நிலவியது.
இன்றைய சந்திப்பின்போது
பின்வரும்
சில விடயங்களும்
பிரதானமானவையாக
கருத்தில்
கொள்ளப்பட்டன.
1. சர்வதேச
சமூகங்களின்
மத்தியில்
இலங்கை அரசாங்கம்
தொடர்பாக
தொடர்ச்சியாக
அதிகரித்துவரும்
அழுத்தங்கள்
இலங்கை அரசுக்கு ஒரு பெரும்
அரசியல் ராஜதந்திர
நெருக்கடியை
ஏற்படுத்தவுள்ளன
என்பதை இக்கூட்டம்
அடையாளம்
கண்டது.
2.
இந்திய இலங்கையின்
உறவில் ஏற்பட்டு வரும் எதிரும்
புதிருமான
மாற்றங்கள்
இந்தியாவின்
அழுத்தங்களை
இலங்கை அரசு குறித்து
விரிவடைந்து
வரும் ஒரு விடயமாக
அடையாளம்
காணப்பட்டது. இந்தியா என்னும் அரசியல் காரணி இலங்கையின் அரசியலில்
பெரும் மாற்றங்களை
ஏற்படுத்தக்
கூடியது என்பதையும்
இக்கூட்டம்
அடையாளம்
கண்டுகொண்டது.
3.
கடந்த உள்ளுராட்சித்
தேர்தல் முடிவுகள்
இலங்கையின்
இனங்களுக்கிடையிலான
உறவு நிலையில்
ஓர் எதிர்
நிலையான துருவப் போக்கு அதிகரித்திருப்பதையே
காட்டுகிறது. அந்த ஆபத்திலிருந்து
மாற்றங்களைக்
கொண்டு வருவதற்கு
அவசியமான
ஓரு முற்போக்கான
இணக்க சக்திகளின்
மையம் இங்கு செயற்படவேண்டியது
மிகவும் அவசியம் என்பதையும்
இந்தக் கலந்துரையாடல்
புரிந்து
கொண்டதோடு
இங்கு பங்கு பற்றிய
கட்சிகள்
அதற்கான பங்குகளை எவ்வாறு செயற்படுத்தலாம்
என்பதுவும்
கலந்துரையாடப்பட்டது.
4.
இலங்கையின் இனப்பிரச்சனைத்
தீர்வுக்கு
நியாயமான
அளவில் அதிகாரப் பகிர்வு கொண்ட மாகாண
சபைகளின்
செயற்பாடு
அவசியமாகும். அரசாங்கத்திலும் மற்றும்
எதிர்க்கட்சிகளின்
மத்தியிலும்
அதிகாரப்
பகிர்வுக்கு
சாதகமாக உள்ளவர்கள்
பலர் உள்ளனர்.
இவர்களை ஓர்அணி திரட்ட வேண்டும் என்பதும் அத்தோடு அதிகாரப் பகிர்வு தொடர்பாக சிங்கள தமிழ் மக்கள்
மத்தியில்
காத்திரமான
பிரச்சாரங்களை
முற்போக்கு
சக்திகள்
மேற்கொள்ள
வேண்டும்
என்றும் இக்கூட்டத்தில்
அடையாளம்
காணப்பட்டது.
மேலும் இங்கு பங்கு
பற்றிய மூன்று இடதுசாரிக்
கட்சிகளின்
தலைவர்களும்
இன்றைய அரசாங்கத்தில்
அமைச்சர்களாக
இருந்த போதிலும் அவர்கள் சுயாதீனமான
முறையிலும்
தத்தமது கட்சிகளின்
சுதந்திரமான
அரசியல் நிலைப்பாடுகளின்
அடிப்படையிலும்
மக்கள் மத்தியில்
தமது அரசியல்
மற்றும் ஸ்தாபன வேலைப்பாடுகளை
மக்களுக்கு
வெளிப்படுத்துவதோடு
சிங்கள தமிழ் மக்கள்
மத்தியில்
உள்ள இடதுசாரி
மற்றும் முற்போக்கு
சக்திகளை
ஒருங்கிணைத்து
ஒரு முற்போக்கு
ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதற்கான
வேலைத்திட்டங்களை
மேற்கொள்வது
பற்றியும்
இங்கு கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் இன்றைய
கூட்டத்தைப்போல
தொடர்ந்தும்
கூட்டங்களை
தொடர்வது
என முடிவு
செய்யப்பட்டது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |