Contact us at: sooddram@gmail.com

 

பற்றி எரியும் லண்டன், மற்ற நகரங்களுக்கும் பரவுகிறது

பொதுமக்கள் மீது பிரிட்டன் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு பேர் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்த மக்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையில் மோதல் அதிகரித்திருக்கிறது. லண்டன் மாநகர் தெருக்கள் போர்க்களமாகக் காட்சியளிக்கும் வகையில் இருக்கிறது. ஏராளமான வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன. காவல்துறை அடக்குமுறையை ஏவிவிட்டு மக்களின் கோபத்தைக் கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகிறது. கடந்த சில மாதங்களாகவே ஐரோப்பிய நாடுகளில் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. பெரும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக மக்கள் மீது சுமையை ஏற்றும் அரசுகளுக்கு எதிராக ஏராளமான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தங்களின் நடவடிக்கை களை மீறி பொருளாதார நெருக்கடி கை மீறிப்போய்க் கொண்டிருப்பதால் மக்களின் போராட்டங்களை ஒடுக்கும் வேலையை பல ஐரோப்பிய அரசுகள் செய்து வருகின்றன.

லண்டனின் வடக்குப்பகுதியில் உள்ள டாட்டன்ஹாமில் கடந்த வியாழக்கிழமையன்று காவல் துறையினரால் மார்க் துக்கன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சனிக்கிழமையன்று இங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டம், வன்முறையாக மாறியது. இது குறித்து விளக்கம் தர வேண்டும் என்று மக்கள் கோரியதைத் தொடர்ந்தே பிரச்சனை துவங்கியது. இந்தக் கோரிக்கைக்கான ஆர்ப்பாட்டம் கடுமையான அடக்குமுறையைச் சந்தித்தது. 12 மணிநேரத்தில் பெரும் போராட்டமாக மாறியது. கடந்த மூன்று நாட்களாக இரவு மற்றும் பகல் என்று 24 மணி நேரமும் காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையிலான வன்முறை நடவடிக்கையாக மாறிவிட்டது. இத்தகைய சூழ்நிலையை கலவரக்காரர்களும் பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள். இதனால் பல இடங்களில் கொள்ளைகள் அடிக்கப்பட்டுள்ளன.

லண்டனின் தென் பகுதியில் உள்ள பெக்காம், லெவிஷாம், கிராய்டோன் மற்றும் டெப்ட்ஃபோர்டு ஆகிய மாவட்டங்கள் இந்த கலவரங்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. லண்டனின் கிழக்குப்பகுதியில் உள்ள ஹாக்னி என்ற நகரிலும் கலவரம் பரவியிருக்கிறது. பெக்காம் மாவட்டத்தில் கடைகள் தீக்கிரையாகியுள்ளன. கிராய்டோன் மாவட்டத்தில் ஒரு கட்டிடத்திற்கே தீ வைத்துள்ளனர். லெவிஷாம் மற்றும் டெப்ட்ஃபோர்டு ஆகிய மாவட்டங்களில் ஏராளமான கார்கள் எரிந்து சாம்பலாகியிருக்கின்றன. இந்நிலையில் சுமார் 160 பேரைக் கைது செய்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன. இவர்கள் கலவரக்காரர்களா அல்லது அப்பாவி மக்களா என்ற கேள்வி ஆத்திரமடைந்துள்ள மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாகும்.

மூன்று நாட்களுக்கு முன்பாகத் துவங்கிய இந்தப் பிரச்சனை, முதன்முறையாக திங்கட்கிழமை யன்று லண்டனுக்கு வெளியிலும் பரவியது. இத்தகைய நிலைமையை நாங்கள் எதிர்நோக்கியிருந்தோம் என்று காவல்துறையினர் கூறியிருந்தாலும் அதைத் தடுப்பதற்கான வேலைகள் எதையுமே எடுக்கவில்லை. பல பகுதிகள் கிட்டத்தட்ட முழு கடையடைப்பு போன்று காட்சியளிக்கின்றன. இதுதான் அரசுத்தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.

இந்த சம்பவங்கள் லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கப்போகும் இடத்திற்கு அருகில் நடந்து வருகின்றன. இதனால் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. 2012 ஆம் ஆண்டில் இந்தப் போட்டிகள் நடக்கப்போகின்றன. சில கிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் பகுதி, லட்சக்கணக்கான பார்வையாளர்களை இன்னும் ஒரு ஆண்டுக்குள் வரவேற்கவிருக்கிறது. ஆனால் போட்டி ஏற்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கையில், பொருளாதார நெருக்கடியும் சரி, அதற்கு எதிராக மக்களின் கருத்து மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் சரி, இவற்றால் ஒலிம்பிக் போட்டிகள் பாதிக்கப்படாது என்று கூறியுள்ளனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com