|
||||
|
ஐக்கிய தேசிய கட்சியின்
புதிய தலைவர் யார்?
இலங்கையின் சரித்திர
முக்கியத்துவம்
வாய்ந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு
பொருத்தமான
தலைமை இல்லாமல் இன்னும் திண்டாடுவது
கட்சி ஆதரவாளர்கள்
மத்தியில்
மாத்திரமல்ல
நாட்டு மக்களிடமும்
பெரும் அதிர்ச்சியையும்,
கவலையையும்
ஏற்படுத்தியிருக்கிறது.
நீண்டகால வரலாறுள்ள
இந்தக் கட்சிக்கு
தலைவரைத்
தெரிவுசெய்யும்
மாநாடு இன்று ஐ.தே.க.
தலைமைச் செயலகமான ஸ்ரீகொத்தாவில்
நடைபெறுகிறது.
ஏற்கனவே பல துண்டுகளாகப்
பிளவடைந்து
கிடைக்கின்ற
கட்சிக்கு
ஒரு தலைவரை
நியமிக்க
வேண்டுமென்ற
பரபரப்பான
சூழ்நிலையில்
ஐ.தே.க.வின்
செயற்குழு
இன்று கூடுகிறது. தலைமைப் பொறுப்பை
கரு ஜயசூரியவிடம்
ஒப்படைக்கவேண்டுமென
சஜித் தரப்பினர்
அழுத்தம்
கொடுத்து
வருகின்றனர்.
இது தொடர்பாக
ஐ.தே.க. பாராளுமன்றக்
குழு கொண்டுவந்த
தீர்மானம்
ஏக மனதாக
நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாராளுமன்றக்
குழு புதிய
தலைவரைத்
தேர்ந்தெடுத்தாலும் கட்சித் தலைமையை மாற்றும் அதிகாரம் அதற்குக் கிடையாது என ரணில்
விக்ரமசிங்க
தெரிவித்துவிட்டார். இந்த நிலையில் கட்சி யாப்பின்படி
முழுமையான
அதிகாரம்
கொண்ட செயற்குழு
இன்று கூடுகிறது.
செயற்குழுவே கட்சியின்
தலைவர் யார் என்பதை
இன்று தீர்மானிக்கும்.
ஆனாலும், சஜித் தரப்புக்கு
செயற்குழுவில்
எதிர்பார்க்கும்
அளவுக்கு
செல்வாக்கு
இல்லையென்பது
தெரியவருகிறது. செயற்குழுவில் ரணிலை காப்பாற்றும்
தீர்மானம்
எடுக்கப்படுமாகவிருந்தால்
அதற்கு எதிராக சத்தியாக்கிரகம்
இருக்கப்போவதாக
சஜித் பிரேமதாச தரப்பு தெரிவித்துள்ளது.
என்றாலும், சத்தியாக்கிரகத்தில்
ஈடுபடுவோரை
கட்சி ஆதரவாளர்களாக
ஏற்றுக்கொள்ளமுடியாது
என எதிர்க்கட்சித்
தலைவர் ரணில் விக்ரமசிங்க
தெரிவித்துள்ளார்.
கொழும்பு எதிர்க்கட்சித்
தலைவர் அலுவலகத்தில்
நேற்று 16ஆம்
திகதி நடைபெற்ற விசேட செய்தியாளர்
மாநாட்டில்
கலந்துகொண்டு
தெரிவிக்கும்போதே
எதிர்க்கட்சித்
தலைவர் ரணில் விக்ரமசிங்க
மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
வேட்புமனுச் சபை
நியமனம் உள்ளிட்ட கட்சியின்
முக்கிய தீர்மானங்களை
மேற்கொள்வதற்காக
நடைபெறவுள்ள
விசேட செயற்குழுக்
கூட்டத்தை
குழப்புவதற்கு
முயற்சிக்கின்றமை
சூழ்ச்சிகரமான
செயலாகுமெனவும்
அவர் மேலும்
தெரிவித்தார்.
எம்.ரி.வி. நிறுவனத்தின்
தலைவர் மஹாராஜாவை
ஐக்கிய தேசியக் கட்சியின்
தேசியப் பட்டியல் மூலம் நியமிக்காமையால்
அவர் கட்சியைத்
தொடர்ந்தும்
தாக்கிவருவதாகவும்,
அவரின் ஆசையினை நிறைவேற்றிக்
கொள்வதற்காக
தொடர்ந்தும்
அவர் ஐக்கிய
தேசியக் கட்சியை விமர்சித்துவருவதாகவும்
சுட்டிக்காட்டிய
ரணில் விக்ரமசிங்க,
ஊடகவியலாளர்களுக்கோ
அல்லது ஊடகங்களுக்கோ
கட்சி ஒன்றினை கட்டுப்படுத்த
உரிமை கிடையாது எனவும் வலியுறுத்தினார்.
இந்நிலையில், ஐக்கிய
தேசியக் கட்சியின்
பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச
கூறுகையில்,
ரணில் விக்ரமசிங்கவை
ஐக்கிய தேசியக் கட்சியின்
தலைவர் பதவியிலிருந்து
அகற்றுவதற்கான
ஆரம்பகட்ட
நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,
ரணில் விக்ரமசிங்கவுக்கு
எதிரான மக்கள் போராட்டத்தை
இன்று 17ஆம்
திகதி மாலை ஸ்ரீகொத்தாவில்
காணமுடியுமென்றும்
தெரிவித்தார்.
மக்களின் எதிர்ப்புக்கு
மதிப்பளித்து
கட்சித் தலைமைப் பதவியிலிருந்து
ரணிலை இராஜினாமாச்
செய்யவேண்டுமென
ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற
உறுப்பினர்
ரஞ்சித் மத்துமபண்டார
தெரிவித்துள்ளார்.
பல தசாப்தங்களாக
தலைமைப் பதவி வகித்த
ரணில் விக்ரமசிங்க,
மிகவும் கெளரவமான முறையில் இன்று கட்சித்
தலைவர் பதவியிலிருந்து
விலகுவார்
எனத் தான்
நம்புவதாகவும்
அவர் தெரிவித்தார்.
மக்களின்
எதிர்ப்புக்களுக்கு
மத்தியில்
அதற்கு எதிராக செயற்பட மக்கள் தலைவர் ஒருவரால் முடியாதெனக்
கூறிய மத்தும பண்டார, மக்களின் எதிர்ப்பினை
சம்பாதித்துக்கொள்ளாது
கட்சித் தலைமைப்பதவி
கரு ஜயசூரியவிடம்
ஒப்படைக்கவேண்டுமெனவும்
அவர் வேண்டுகோள்
விடுத்தார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |