Contact us at: sooddram@gmail.com

 

இலங்கைத் தமிழர் விவகாரம்:டில்லியில் மாநாடு 10 தமிழ்க் கட்சிகளுக்கு தனித்தனியே அழைப்பு!

இலங்கைத் தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஒன்றுபட்ட அரசியல் நிலைப்பாட்டை ஏற்படுத்துவதை நோக்கம்

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் இந்த வாரம் இலங்கைத் தமிழர்கள் விவகாரம் தொடர்பாக இரு நாள் மாநாடு இடம்பெறவுள்ளது. இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்கு 10 இலங்கை தமிழ்க் கட்சிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருக்கிறது. துயரும் தீர்வும்' என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது. உலக முன்னேற்றத்திற்கான மனித உரிமைகள் தொடர்பான இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பினால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 23, 24 ஆம் திகதிகளில் பகல் 11 மணி5 மணி வரை இந்த மாநாடு இடம்பெறவிருக்கிறது. தமிழகத்தின் சிவகங்கை தொகுதியைச் சேர்ந்த இராஜ்ஜிய சபா எம்.பி.யான டாக்டர் இ.எம். சுதர்ஷன நாச்சியப்பன் மாநாட்டின் ஏற்பாட்டாளராவார். உலக முன்னேற்றத்திற்கான மனித உரிமைகள் தொடர்பான இந்திய பாராளுமன்ற அமைப்பில் 150 எம்.பி.க்கள் அங்கம் வகிக்கின்றனர். இந்திய பாராளுமன்றத்தின் மக்களவையான லோக்சபா, மாநிலங்கள் அவையான இராஜ்ஜிய சபா ஆகியவற்றின் எம்.பி.க்களே இதில் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இலங்கைத் தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஒன்றுபட்ட அரசியல் நிலைப்பாட்டை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இந்த மாநாட்டிற்கு உலக அபிவிருத்திக்கான மனித உரிமைகள் தொடர்பான பாராளுமன்ற அமைப்பு அனுசரணை வழங்கியுள்ளது.

பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான கட்டமைப்பை உருவாக்குதல், மாநாட்டில் பங்குபற்றும் இலங்கைத் தமிழ்க் கட்சிகள் மத்தியில் கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்துதல் என்பனவே இந்த மாநாட்டின் நோக்கமாகும். இந்த மாநாட்டில் இலங்கைத் தமிழ்க் கட்சிகள் மத்தியில் கருத்தொருமைப்பாடு ஏற்படுமேயானால், இதன் மூலம் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து ஆதரவைத் திரட்டிக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் புதுடில்லியின் அணுகுமுறையில் சாத்தியமான மாற்றத்தை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் மேற்கொள்ளும் விதத்தில் செல்வாக்கைச் செலுத்தக் கூடியதாக இந்த முன்னகர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடில்லிக்கு, வருகை தருமாறு உலக அபிவிருத்திக்கான மனித உரிமைகள் விவகாரம் தொடர்பான இந்திய பாராளுமன்ற அமைப்பினால் ஒவ்வொரு தமிழ் கட்சியினதும் இரு பிரதிநிதிகளைக் கலந்துகொள்ளுமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் அல்லது செயலாளர் அல்லது அவர்களுடைய பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பத்து தமிழ்க் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்ற போதிலும் டில்லி மாநாட்டில் சகல தமிழ்க் கட்சிகளும் கலந்துகொள்வார்களா என்பது குறித்து அறியவரவில்லை.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்புவிடுக்கப்பட்டிருக்கும் அதேசமயம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லையென இணையத்தளச் செய்தியொன்று தெரிவித்தது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழீழ விடுதலை அமைப்பு, சுரேஷ் பிரேமச்சந்திரன் அமைப்பு ஆகிய நான்கு கட்சிகள் அங்கம் வகிக்கும் தமிழ்க் கூட்டமைப்பிற்கு தனியாக அழைப்புவிடுக்கப்படாமல் அதன் நான்கு பங்காளிகளுக்கும் தனித்தனியே அழைப்புவிடுக்கப்பட்டிருக்கிறது. தமிழரசுக் கட்சியின் பிரதிநிதியாக அக்கட்சியின் யாழ்.மாவட்ட எம்.பி.மாவை சேனாதிராஜா தேசிய பட்டியல் எம்.பி. எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர். சுரேஷ் பிரேமச்சந்திரன் மாநாட்டில் கலந்துகொள்வார். அதேவேளை, ஈ.பி.ஆர்.எல்.எவ்.இன் பத்மநாபா பிரிவைச் சேர்ந்த சிறிதரன் துரைரட்ணம், அழைப்புவிடுக்கப்பட்டிருக்கிறது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி, அகில இலங்கைத் தமிழர் ஐக்கிய முன்னணித் தலைவர் டாக்டர் கே.விக்னேஷ்வரன் ஆகியோரும் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.

புளொட் மற்றும் ஈ.என்.டி.எல்.எவ். ஆகிய கட்சிகளுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டிருப்பதாக அறிய வருகிறது. ஞானசேகரம் அல்லது பரந்தன் ராஜன் தலைமையிலான ஈ.என்.டி.எல்.எவ். இந்தியாவின் பங்களூரைத் தளமாகக் கொண்டிருக்கிறது. டில்லி மாநாட்டிற்கு உலக அபிவிருத்திக்கான மனித உரிமைகள் தொடர்பான இந்திய பாராளுமன்ற அமைப்பிற்கு ஈ.என்.டி.எல்.எவ். அனுசரணை வழங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மலையக தமிழ்க் கட்சிகள் மற்றும் முஸ்லிம் கட்சிகள் அல்லது ஐ.தே.க., ஐ.ம.சு.மு. அல்லது ஜே.வி.பி. போன்ற கட்சிகளைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் உறுப்பினர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருக்கவில்லை. துயரும் தீர்வும் என்ற மாநாட்டிற்கு இந்திய அரசாங்கம் தந்திரோபாயமான ஆதரவை வழங்கியிருக்கும் சாத்தியம் இருப்பதாக ஊகிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்த மாநாட்டின் ஏற்பாட்டாளர் சுதர்ஷன நாச்சியப்பன் இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் விசுவாசியென ஊடகங்கள் சில விமர்சித்துள்ளன. தமிழ் நாட்டிலுள்ள கடும் தமிழ்த் தேசிய உணர்வாளர்களால் காங்கிரஸ் கட்சி தற்போது கடுமையான எதிர்ப்பிற்கு உள்ளாகியிருக்கும் நிலையில் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருப்பது குறித்து பல்வேறு விதமான ஊகங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com