Contact us at: sooddram@gmail.com

 

அமெரிக்காவில் கடும் நில நடுக்கம்

வொஷிங்டன், நியூயோர்க்கில் மக்கள் பீதியில் ஓட்டம்

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் நேற்று முன்தினம் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் தலைநகர், வெள்ளை மாளிகை, பென்டகன் உள்ளிட்ட இடங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற நேரிட்டது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிரழப்பு எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவித்த தீயணைப்பு அதிகாரிகள் வொஷிங்டனில் சிலருக்கு காயம் மட்டும் ஏற்பட்டது என்றனர். விர்ஜினியா, ரிச்மாண்டின் வடமேற்கே 64 கிலோ மீட்டரில் மையம் கொண்டிருந்த இந்த நில நடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 5.8 எனப் பதிவானதாக அமெரிக்க புவி ஆய்வு மையம் தெரிவித்தது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் வடக்கு மின் நிலையத்தில் உள்ள 2 அணு உலைகள் தானாகவே செயல்பாட்டை நிறுத்திக்கொண்டன என அமெரிக்க அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய செய்தித் தொடர்பாளர் ரொஜர் ஹன்னா தெரிவித்தார்.

இந்த நிலநடுக்கத்தால் வொஷிங்டன் நகரில் பீதி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டும் அலுவலகங்களில் இருந்தும் வெளியேறினர். பாதைகளில் தஞ்சம் புகுந்தனர். அதைத் தொடர்ந்து பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. நில நடுக்கத்தின் போது வெள்ளை மாளிகையும் குலுங்கியது. அப்போது ஜனாதிபதி ஒபாமாவும், அவரது குடும்பத்தினரும் அங்கு இல்லை. விடுமுறையை கழிக்க மாஸ்சாசூ செட்ஸ் பகுதியில் உள்ள மார்தா வினியார்ட் என்ற இடத்துக்கு சென்று இருந்தனர். ஆனால் அங்கு வேலை பார்த்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் தெருக்களில் அச்சத்துடன் நின்றனர்.

இதேபோன்று மிக பலமான கட்டடம் உள்ள இந்திய தூதரகம், பென்டகன் (அமெரிக்கா இராணுவ தலைமையகம்) ஊழியர்களும் வெளியேற்றப்பட்டனர். இங்கு சுமார் 30 வினாடிகள் நில நடுக்கம் இருந்தது.

எனவே, தீயணைப்பு துறையினர் அலாரம் மூலம் அபாய எச்சரிக்கை விடுத்தனர். கட்டடங்கள், வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்தபடி வெளியே ஓடிவந்தனர். இதனால் பாதைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நியூயோர்க்கிலும் இதே நிலைதான் நீடித்தது. கட்டடங்கள் குலுங்கியதால் பீதி அடைந்த மக்கள் தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தை நினைவுபடுத்தியது. பூஸ்டன், தெற்கு மற்றும் வடக்கு கரோலினா, இண்டியானா பொலிஸ், டெட்ராஸ்ட் உள்ளிட்ட இடங்களிலும் நில நடுக்கத்தை உணர முடிந்தது. எனவே, நியூயோர்க் வந்த விமானங்கள் நீண்ட பரிசோதனைக்கு பின்னர் தாமதமாக தரை இறங்க அனுமதிக்கப்பட்டன.

வொஷிங்டனில் போக்குவரத்தில் சிறிது பாதிப்பு ஏற்பட்டது. ரெயில்கள் மணிக்கு 15 கி. மீற்றர் வேகத்தில் மெதுவாக இயக்கப்பட்டன. இப்பகுதியில் மொத்தம் 12 அணு உலைகள் உள்ளன. அவை பாதிக்கப்படவில்லை.

வொஷிங்டனில் உள்ள தேசிய நினைவு சின்னம் சேதம் அடைந்துள்ளது. அதேபோன்று மிக உயரமான கட்டடமான தேசிய கத்தீட்ரல், மத்திய டவர் கட்டடமும் சேதமானது.

எனினும் நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ பொருட் சேதமோ ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே 5.8 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுதான் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது

ஏனெனில் வொஷிங்டன் பகுதியில் கடந்த 1897 ஆம் ஆண்டு மே மாதம் 5.9 ரிச்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. தற்போது 110 ஆண்டுக்கு பிறகுதான் இதுபோன்று உருவாகியுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com