|
||||
|
கடாபி குடும்பம்
அல்ஜீரியாவில்
தஞ்சம், இளைய மகன்
காமிஸ் பலி
லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபியின்
மனைவி, மகள் மற்றும்
இரு மகன்கள்
அயல் நாடான
அல்ஜீரியாவில்
தஞ்சமடைந்துள்ளனர். இந்த தகவலை அல்ஜீரிய
வெளியுறவு
அமைச்சு நேற்று உறுதி செய்தது.
முஅம்மர் கடாபியின்
இரண்டாவது
மனைவியான
சபியா, மகள் அயிஷா
மற்றும் மகன்களான ஹனிபல், முஹம்மட் ஆகியோருடன்
அவர்களது
குழந்தைகளும்
அல்ஜீரியாவுக்கு
தப்பிச் சென்றுள்ளனர்.
இவர்கள் கடந்த திங்கட்கிழமை
காலை 8 மணி
அளவில் லிபிய எல்லையை
தாண்டி அல்ஜீரியாவை
வந்தடைந்ததாக
அல்ஜீரிய
வெளியுறவு
அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து
அல்ஜீரியாவுக்கான
ஐ.நா. தூதுவர் கூறுகையில்,
‘அவர்கள் மனித நேய
அடிப்படையில்
வரவேற்கப்பட்டுள்ளனர்’
என்றார்.
“வருவோர்களை
வரவேற்பது
எமது கலாசாரத்தின்
முக்கிய பண்பு. குறிப்பாக
பாலைவனப்
பகுதிகளில்
இருக்கும்
எமக்கு தஞ்சம் அடைவோருக்கு
உதவி அளிப்பது
கடமையாகும்’
என்று ஐ.நா.வுக்கான
அல்ஜீரிய
தூதுவர் மவுராத் பென்மெஹதி
தெரிவித்துள்ளார்.
எனினும் அல்ஜீரியாவின்
நடவடிக்கைக்கு
கிளர்ச்சிப்
படையின், தேசிய மாற்ற
கெளன்சில்
கண்டனத்தை
வெளியிட்டுள்ளது. இது
லிபிய மக்களுக்கு
எதிரான செயல் என
குறிப்பிட்டுள்ள
மேற்படி கெளன்ஸிலின்
பேச்சாளர்
மஹ்மூத் ஷம்மான் இந்த குற்றவாளிகளை
மீண்டும்
லிபியாவுக்கு
கொண்டுவர
சட்ட ரீதியான
அனைத்து நடவடிக்கைளும்
எடுக்கப்படும்
என தெரிவித்தார்.
எவ்வாறாயினும் லிபியாவின்
தேசிய மாற்ற கெளன்ஸிலை
அல்ஜீரிய
அரசு இன்னும்
அங்கீகரிக்கவில்லை
என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே 6 கவச
வாகனங்கள்
லிபிய எல்லையை தான்டி சுல்ஜீரியாவுக்குள்
சென்றதாவும்
அதில் முஅம்மர் கடாபி நாட்டை
விட்டு தப்பிச் சென்றிருக்கலாம்
எனவும் கிளர்ச்சிப்படை
இரண்டு நாட்களுக்கு
முன்னர் குறிப்பிட்டிருந்தது.
எனினும் அந்த தகவலை அல்ஜீரிய
அரசு மறுத்தது.
இதில் அல்ஜீரியாவில்
தஞ்சம் புகுந்துள்ள
கடாபியின்
மகன்களான
முஹம்மட்
மற்றும் ஹனிபல் ஆகியோர் அந்நாட்டு
அரசியலில்
செல்வாக்கு
செலுத்தவில்லை
என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, முஅம்மர் கடாபியின்
மற்றுமொரு
மகனாக காமிஸ் கடாபி கொல்லப்பட்டதாக
கிளர்ச்சிப்படை
குறிப்பிட்டுள்ளது. கடந்த
ஞாயிற்றுக்கிழமை
வடமேற்கு
லிபியாவின்
துருனா மற்றும் பனி லலித்
கிராமப்பகுதிகளில்
இடம்பெற்ற
மோதலின்போது
காமிஸ் கடாபி கிளர்ச்சியாளர்களின்
தாக்குதலில்
கொல்லப்பட்டதாக
கிளர்ச்சிப்படை
இராணுவ கெளன்ஸிலின்
துணைத் தலைவர் மஹ்தி அல்
ஹாதி தெரிவித்துள்ளார்.
28
வயதான காமிஸ் கடாபி 32 ஆவது
இராணுவ பிரிவின் தளபதியாக செயற்பட்டார். கிளர்ச்சியாளர்களுடனான அண்மைக்
காலப் போரில் கடாபி ஆதரவுப்
படையை வழி நடத்தியவர்களுள்
முக்கியமானவராவார்.
ஏற்கனவே இவர் நேட்டோ
தாக்குதலில்
கொல்லப்பட்டதாக
கூறப்பட்டிருந்தது. எனினும் அது பின்னர் மறுக்கப்பட்டது.
இதற்கிடையில் லிபியாவில்
கடாபி இராணுவத்தினர்
கொன்று குவித்து புதைத்த ஆயிரக்கணக்கான
நபர்கள் உள்ள 4 புதைகுழிகளை
கண்டுபிடித்துள்ளதாக
கிளர்ச்சியாளர்கள்
தெரிவித்துள்ளனர்.
கடாபி ஆதரவுப்
படைக்காக
போர் புரிய
மறுத்த இராணுவ வீரர்களே இவ்வாறு கொல்லப்பட்டிருக்கலாம்
என கிளர்ச்சியாளர்கள்
சந்தேகம்
வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் லிபியா குறித்த ஐ.நா. ஆவணமொன்று ஊடகங்களுக்கு
கசிந்துள்ளது.
இதில் கடாபிக்கு
பின்னரான
லிபியா குறித்து ஐ.நா. தீர்மானங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதில் லிபியாவின்
ஸ்திரத் தன்மையை பேண ஐ.நா.வின்
200 இராணுவ மேற் பார்வை
யாளர்கள்
மற்றும் 190
பொலிஸாரை
நிலை நிறுத்த
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த தீர்மானத்தை
நடைமுறைப்படுத்த
ஐ.நா. பாதுகாப்புச் சபையின்
அங்கீகாரம்
வேண்டும்
என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, திரிபோலியை
கைப்பற்றிய
கிளர்ச்சிப்படை
கடாபி பிறந்தகமான
சிர்த் நகரை நோக்கி
முன்னகர்ந்து
வருகிறது.
அத்துடன் முஅம்மர்
கடாபி இன்னும் லிபியாவிலேயே
உள்ளதாக நம்பும் கிளர்ச்சியாளர்கள்
அவரது ரகசிய பதுங்கு
குழிகளில்
தேடிவருகின்றனர். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |