Contact us at: sooddram@gmail.com

 

அலப்போ நகரில் பாரிய மோதலுக்கு தயாராகும் இராணுவம் - கிளர்ச்சியாளர்

சிரியாவின் மிகப் பெரிய நகரான அலப்போவில் தொடர்ந்தும் மோதல் இடம்பெற்று வரும் நிலையில் இரு தரப்பும் பாரிய மோதல் ஒன்றுக்கு தயாராகி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. அலப்போ நகரைச் சுற்றி சுமார் 20,000 அரச படை முன்னகர்ந்து வருவதாக இராணுவ தரப்பில் கூறப்பட்டுள்ளதோடு, பலமான தாக்குதலுக்கு தயாராகி வருவதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இதில் அலப்போ நகர் மீது அரச படை எறிகணை, விமானம் மற்றும் ஹெலிகொப்டர் மூலம் தாக்குதல்களை தொடுத்து கிளர்ச்சியாளர்களை பின்வாங்கச் செய்ய முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அலப்போ நகரின் அரச தொலைக் காட்சி, வானொலி தலைமையகங்களுக்கு அருகிலும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள அலப்போவின் சலாஹுத்தீன் பகுதி மீது கடுமையான ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக கிளர்ச்சியாளர்களின் சிரிய சுயாதீன படை குறிப்பிட்டுள்ளது.

இது இங்கு மோதல் ஆரம்பித்த ஜூலை 20 ஆம் திகதி முதல் நடத்தப்பட்ட மோசமான ஷெல் தாக்குதல் என கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் அலப்போ நகர அரச தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களுக்கு தாக்குதல் நடத்த முற்பட்ட பல தீவிரவாதிகள் (கிளர்ச்சியாளர்கள்) கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயத்திற்கு உள்ளானதாக சிரிய அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

அலப்போ நகரின் ஷார், பாப் அல் நைராப், அல் ஷகூர் என பல பகுதிகளிலும் குண்டுத் தாக்குதல்கள் பதிவாகியுள்ளதாகவும் அதில் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அலப்போவில் இருக்கும் அல் ஜkரா செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

அரச படை தொடர் வான்தாக்குதல்களை இங்கு நடத்தி வருவதாக அந்த செய்தியாளர் கூறியுள்ளார்.

இதேவேளை தலைநகர் டமஸ்கஸ்ஸில் கிளர்ச்சியாளர் வசம் எஞ்சியிருந்த கடைசி பகுதியான டடாமுன் பகுதியை நேற்று முன்தினம் அரச படை கைப்பற்றியுள்ளது. கடுமையான எறிகணை தாக்குதலுக்கு பின்னரே இராணுவம் இந்த பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

எனினும் டமஸ்கஸ்ஸின் ஜொபார் பகுதியில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறைகளால் டமஸ்கஸ்ஸில் நேற்று முன்தினம் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சிரியா வந்த ஈரானை சேர்ந்த பக்தர்கள் 48 பேர் நேற்று முன்தினம் கடத்தப்பட்டனர். சிரியாவில் உள்ள சாயிதா ஷைனாப் மாவட்டத்தில் உள்ள ஷியா பிரிவினரின் புனித தலத்துக்கு ஆண்டு தோறும் ஈரானை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்வது வழக்கம்.

அது போன்று அங்கு வந்த ஈரானியர்கள் புனித தலத்துக்குச் சென்று விட்டு டமஸ்கஸ் திரும்பினர். அங்கிருந்து விமான நிலையத்துக்கு ஒரு பஸ்ஸில் புறப்பட்டு சென்றனர். அந்த பஸ்சை ஆயுததாரிகள் துப்பாக்கியால் சுட்டு நிறுத்தினர். பின்னர் ஓட்டுனரை மிரட்டி பஸ்சை கடத்திச் சென்றனர்.

அவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈரான் தூதரக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மே மாதம் லெபனானைச் சேர்ந்த 11 பேர் கடத்தப்பட்டனர். பின்னர் 3 நாட்களுக்கு பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

எனினும் ஈரான் புரட்சிப்படையைச் சேர்ந்த ஒருசிலரை தாம் பிடித்ததாக கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சிரியாவில் அமைதி ஏற்படுத்துவதற்கான என்னுடைய முயற்சிக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை என கொபி அனான் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் நடக்கும் சண்டைக்கு முற்றுப் புள்ளி வைக்க அரபு நாடுகளின் சார்பில் அமைதி நடவடிக்கை தூதராக கடந்த பெப்ரவரி முதல் கொபி அனான் செயல்பட்டார். இதற்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இது குறித்து அவர் குறிப்பிடுகையில், அமைதி திட்டத்திற்காக நான் மேற்கொண்ட முயற்சிக்கு சர்வதேச சமூகம் எனக்குப் போதிய ஆதரவளிக்கவில்லை.

இது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும் ஒத்தகருத்து ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com