Contact us at: sooddram@gmail.com

 

அடுத்த பொதுத் தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ் அல்லாதவர் பிரதமராக வாய்ப்பு

நாட்டில் பா.ஜ.க., காங்கிரஸ் அல்லாத ஒருவர் இவ்விரு கட்சிகளில் ஏதாவதொரு கட்சியின் ஆதரவில் பிரதமராக வாய்ப்புள்ளது என்று பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கருத்துத் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நிறுத்தக்கூடாது என்று ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், பிகார் முதல்வருமான நிதீஷ் குமார் கூறியுள்ள நிலையில் எல்.கே. அத்வானி அதிரடியாக இப்படியொரு கருத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக தனது வலைப்பூவில் எல்.கே. அத்வானி மேலும் கூறியுள்ளதாவது:

அடுத்த தேர்தலில் "பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சாராத ஒருவர், இவ்விரு கட்சிகளில் ஒன்றின் ஆதரவுடன் பிரதமராக சாத்தியமுள்ளது. கடந்த காலங்களில் இதுபோன்று நடந்துள்ளது.

எனினும் பா.ஜ.க. காங்கிரஸ் அல்லாத ஒருவர் பிரதமராக வந்தாலும் அவர் எத்தனை நாள் அப்பதவியில் தாக்குப் பிடிப்பார் என்பதை கணித்துச் சொல்ல முடியாது. சரண் சிங், சந்திரசேகர், தேவ கெளடா, ஐ.கே. குஜ்ரால் போன்றோர் காங்கிரஸ் ஆதரவுடன் இதற்கு முன்பு பிரதமராக இருந்துள்ளனர். பா.ஜ.க. ஆதரவுடன் வி.பி. சிங் பிரதமராக இருந் துள்ளார். ஆனால் அவர்களால் நிலையான ஆட்சியைத் தரமுடியவில்லை.

மத்தியில் காங்கிரஸ் அல்லது பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்தவர் பிரதமராக இருந்தால் தான் நிலையான ஆட்சி அமையும். கடந்த 25 ஆண்டு கால தேசிய அரசியல் நிகழ்வுகளால், காங்கிரஸ், பா.ஜ.க. ஆதரவு இல்லாமல் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில் 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மூன்றாவது அணியால் ஆட்சியைப் பிடிக்க முடியாது.

சமீபத்தில் 2 மத்திய அமைச்சர்களுடன் உரையாடியபோது அடுத்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி களால் பெரும்பான்மை பெற்று ஆட்சி யமைக்க முடியாது. அத்தகைய சூழ்நிலையில் மூன்றாவது அணிதான் ஆட்சியமைக்கும் என்று தோன்றுகிறது என்ற கருத்துத் தெரிவித்தனர். ஆனால், அவர்களின கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என்று அத்வானி குறிப்பிட்டார்.

அண்மையில் மும்பையில் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்ற போது கட்சியின் தலைவர் நிதின் கட்கரி யும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி யும் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தினர். இது அத்வானிக்குப் பிடிக்கவில்லை. பாரதிய ஜனதா கட்சிக்குள் நடக்கும் சில விவ காரங்கள் தனக்கு அதிருப்தி அளிப்பதாகக் கூறி கட்சிக்கு அத்வானி தர்மசங்கடத்தை ஏற்படுத்தினார்.

2014 பொதுத் தேர்தலில் நரேந்திர மோடியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தமாட்டோம் என பா.ஜ.க. உறுதியளிக்க வேண்டும் என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் கோரி வருகிறார். இது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று நிதின் கட்கரியும் பதில் கூறியிருந்தார். அத்வானிக்கும் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் உடன்பாடி ல்லை என்று சொல்லப்படுகிறது. இந் நிலையில் அவர் புதிய கருத்தை அதிரடி யாகத் தெரிவித்துள்ளார்.

தோல்வியை ஒப்புக்கொண்டார் அத்வானி. காங்கிரஸ், மக்களைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே தனது கட்சி யின் தோல்வியை அத்வானி ஒப்புக் கொண்டுள்ளார் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கருத்துத் தெரிவித் துள்ளனர்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், நாடாளுமன்ற விவகாரங் களுக்கான மத்திய இணையமைச்சருமான ராஜீவ் சுக்லா தில்லியில் கூறியது: பா.ஜ.க. அல்லாதவர் பிரதமராக வாய்ப் புள்ளது என்று அத்வானி தெரிவித்துள்ளதன் மூலம் தேர்தல் எனும் ஓட்டப்பந்தயம் தொடங்குவதற்கு முன்பே தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார் அத்வானி.

தயக்கத்துடன் போர்க்களத்தைச் சந்திக்கும் தளபதியால் எவ்வாறு போரில் வெற்றிபெற முடியும்? தேர்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டால் அத்வானியை எந்த வகையான தளபதி எனக் கருதுவது" என்றார். சமாஜவாதி கட்சியின் பொதுச் செயலாளர் மோகன் சிங்கும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளார்.

"பா.ஜ.க.வுக்குள் நிலவும் உள்கட்சிப் பூசலே அத்வானியின் இக்கருத்துக்குக் காரணம்" என்று காங்கிரஸைச் சேர்ந்த எம்.பி. சத்யவிரத சதுர்வேதி தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஊகத்தின் அடிப்படையில் கருத்து எதையும் தெரி விக்க முடியாது என்று ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே பா.ஜ.க. துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறு கையில், "நாடு முழுவதும் காங்கிரஸ¤க்கு எதிரான அலை வீசுகிறது. பா.ஜ.க. தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வரும் மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை யுடன் ஆட்சி அமைக்கும்" என்றார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com