Contact us at: sooddram@gmail.com

 

ஆன்மாவைத் தேடுகிறாராம் ஒபாமா 

இதுபோன்ற பயங்கரமான, துயரமான நிகழ்வு கள் நடப்பது அதிகரித்துள்ளது. இப்படி நடக்காமல் இருக்க நம் ஆன்மாவைத் தேடும் வேலையைச் செய்ய வேண்டியிருக்கிறது. வன் முறையைக் குறைக்க இன்னும் கூடுதலாக ஏதேனும் வழிகளை ஆய்வு செய்ய வேண்டி யிருக்கிறதுஎன்றுஆன்மாவைத் தேடும் பணியில் இறங்கியிருக்கிறார் அமெரிக்க ஜனாதி பதி ஒபாமா. அமெரிக்காவின் விஸ்கோன்சின் மாகா ணத்தில் கிரீக் பகுதியிலுள்ள சீக்கிய மத வழி பாட்டுத் தலமான குருத்துவாராவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்மூடித்தனமாக மிக்கேல் பேஜ் என்ற நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 6 பேர் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவம் நடந்தது. இதில் 4 பேர் இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர்கள். இந்தச் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்து செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசியபோதுதான் மேற் கண்டவாறு ஒபாமா குறிப்பிட்டிருக்கிறார்.

அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் அரோரா பகுதியில் திரையரங்கு ஒன்றில் திடீ ரென உள்ளே புகுந்து வெறிப்பிடித்த ஒரு நபர் சர மாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 12 பேர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியாகினர். 58 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் நடந்து 2 வாரங்களில், சீக்கிய குருத்துவாராவில் படு கொலைச் சம்பவம் நடந்துள்ளது.

2 படுகொலைகளையும் வலதுசாரி பிற் போக்குச் சிந்தனைகொண்ட வெள்ளை இன வெறியர்களே நடத்தியிருக்கக்கூடும் என்றும், இந்தச் சம்பவங்கள் தனிப்பட்ட முறையிலா னவை என்றும் வேறு எந்த நிகழ்வுகளுடனும் தொடர்பில்லாதவை என்றும் அமெரிக்க அரசும், உள்நாட்டுப் புலனாய்வு அமைப்பான எப்பிஐயும் கூறியுள்ளன.

ஆனால் உண்மை வேறு விதமாக இருக் கிறது. சீக்கியர்கள் மீது நடந்த கொடூரத்தாக்கு தலை இதுதான் முதல் சம்பவம் என்று கூற முடி யாது. 2001 செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவின் உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரத்தை தாக்கித் தகர்த்தது உட்பட பயங்கரவாதிகள் நடத் திய தாக்குதலுக்குப் பின்னர் பாதுகாப்பு ஏற்பாடு கள் என்ற பெயரிலும், பயங்கரவாதத் திற்கு எதி ரான போர் என்ற பெயரிலும் அமெரிக்க அரசு உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களை பயங் கரவாதிகள் என்று ஒட்டுமொத்தமாக முத்திரை குத்தியது. இஸ்லாமியர்கள் மட்டு மல்ல, இஸ் லாமியர்களைப் போலவே நீண்ட தாடி வளர்க் கிற, அவர்கள் அணிவதைப் போலவே வெவ் வேறு விதமான தலைமறைப்பு ஆடையை அணி கிற சீக்கியர்களையும் பயங்கர வாதிகளாக இரு க்கக்கூடும் என்ற சந்தேக முத்திரை குத்தியது.

செப்டம்பர் 11 சம்பவத்திற்குப் பிறகு, அமெரிக் காவில் சீக்கியர்கள் வாழக்கூடிய பகுதிகளில் அவர்களது வழிபாட்டுத் தலங்கள், அவர்களது தொழில் நிறுவனங்கள், வீடுகள் என கடந்த 10 ஆண்டுகளில் 700க்கும்மேற்பட்டதாக்குதல்கள் நடந்துள்ளன.

அப்போதெல்லாம் முந்தைய ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷோ, தற்போதைய ஜனாதிபதி ஒபா மாவோ ஆன்மா எங்கே இருக்கிறது என்று தேடி ஓடவில்லை. ஆனால் இப்போது ஜனாதிபதி தேர்தல் நெருங்குகிறது. அதனால்தான்
அமெ ரிக்காவில் வசிக்கும் 7 லட்சத்திற்கும் அதிக மான சீக்கியர்களின் ஆன்மாவைத்தொட்டு பேச முயன்றிருக்கிறார் ஒபாமா.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com