|
||||
|
TNA கிழக்கு
மாகாண சபையை
கைப்பற்றிவிடும்
எனும் பயத்தில்
அரசாம்!
மு.கா. தலைவர்,
ஹக்கீமின் கண்டுபிடிப்பு
இது
தமிழ்
தேசியக் கூட்டமைப்பு
இந்த தேர்தலில்
கிழக்கு மாகாண
சபையை கைப்பற்றி
விடும் என்ற பயம்
அரசாங்கத்திற்கு
இருக்கின்றது. இந்தப்
பயத்தை எமது சமூகத்தின்
அந்தஸ்தை உயர்த்துவதற்கு
நாம் பயன்படுத்த
வேண்டும். என நீதி அமைச்சரும்
முஸ்லிம் காங்கிரஸின்
தலைவருமான ரவூப்
ஹக்கீம் கூறினார்.
கிழக்கு மாகாண
சபைத் தேர்தலில்
போட்டியிடும்
முஸ்லிம் காங்கிரஸ்
வேட்பாளர்களுக்கு
ஆதரவான பிரச்சாரக்கூட்டமொன்று
கிண்ணியாவில்
கிழக்கு மாகாண
சபை வேட்பாளர்
மெளலவி எஸ்.எல்.எம்.
ஹஸன் (அஷ்ஹரி)
தலைமையில் கிண்ணியா
ஹஸனாத் பராமரிப்பு
நிலையத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில்
கலந்துகொண்டு
உரையாற்றுகையிலேயே
அமைச்சர் ஹக்கீம்
மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
இந்நிகழ்வில்
அமைச்சர் ஹக்கீம்
தொடர்ந்தும் பேசுகையில்,
எங்களுடைய கட்சிதான்
மிகப்பெரிய அளவில்
பிளவுபட்ட இயக்கமாக
இருக்கின்றது. ஒவ்வொரு
தேர்தலிலும் ஏதோ
கட்சியில் பதவிகளுக்காக
சேர்ந்து கொள்வதாக
இருக்கின்றனர்.
முஸ்லிம் காங்கிரஸ்
கட்சி என்ற இயக்கம்
தனித்து போட்டியிடுவது
என்ற முக்கிய தீர்மானத்திற்கு
வந்த காரணம் முஸ்லிம்
சமுதாயத்தை நீண்ட
சந்தேக கண்ணோட்டத்தில்
பார்ப்பது, எடுத்ததற்கெல்லாம்
எங்களைப் பார்த்து
நீங்கள் வந்தான்
வரத்தான் என்ற
ரீதியில் பார்ப்பது
போன்றவையாகும்.
எங்களது
ஆன்மீக நடவடிக்கைகளில்
வலிந்து வந்து
குந்தகம் விளைவிக்கின்ற
ஒரு காலம் இது. நாங்கள்
அரசாங்கத்தில்
இணைந்திருக்கின்றோம்,
ஆட்சியாளரிடம்
பங்களியாகவும்
இருக்கின்றோம்.
சிலர் எங்களிடம்
கேள்விகளைக் கேட்டுக்
கொண்டிருக்கின்றார்கள்.
நீங்கள்
இன்னும் முஸ்லிம்
காங்கிரஸ் தானே,
அரசாங்கத்தின்
தானே இருக்கின்aர்கள். வெற்றி
பெற்ற பின்னரும்
மீண்டும் போய்
அரசாங்கத்தில்
இருக்கப் போகினaர்கள்?
என்று கேட்கிறார்கள்.
இது பற்றி தெளிவாக
விளக்கத்தை சொல்ல
வேண்டும். இன்று இச்சமூகம்
மத்திய அரசில்
இருந்து கொண்டு
பேரம் பேசும் நிலைமாற
வேண்டும். இன்று எமது கட்சியாளர்கள்
அணிகளாக பிரிந்து
சென்று ஆளுந்தரப்பில்
அமைச்சராக பதவியில்
இருக்கின்றார்கள்.
இந்த கிழக்கு
மாகாணத்திலே இந்த
தேர்தலில் முஸ்லிம்களின்
வாக்குகளைப் பெற்று
அதை சர்வதேச சமூகத்திற்கு
காட்ட வேண்டும்
என அரசாங்கம் பார்க்கின்றது.
இந்த
தேர்தலில் முஸ்லிம்களின்
வாக்குகள் ஆட்சியை
தீர்மானிக்க வேண்டும். முஸ்லிம்களின்
வாக்குத்தான்
அரசாங் கத்தையும்
தீர்மானிக்கும்
என்பதும் அரசாங்கத்துக்கு
தெரியும். ஆனால் அது முஸ்லிம்களுடைய
அதிகபட்ச ஆசனங்களை
கொண்டதாக இருக்க
வேண்டும்.
வெற்றிலைக்கு
வாக்களிக்குமாறு
மு.கா தவிசாளர்
கூறுமளவுக்கு
இன்று
நிலைமை
வங்குரோத்து
ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸின்
தவிசாளரே வெற்றிலை
சின்னத்திற்கு
வாக்களிக்குமாறு
கூறியிருக்கும்
போது ஏன் இன்னும்
மரத்திற்கும்
முஸ்லிம் காங்கிரசுக்கும்
வாக்களிக்க வேண்டும்
என நான் கேட்க
விரும்புகின்றேன்
என அமைச்சரும்
அகில இலங்கை மக்கள்
காங்கிரஸின் தலைவருமான
றிசாட் பதியுதீன்
கூறினார். காத்தான்குடியில்
நடைபெற்ற ஐக்கிய
மக்கள் சுதந்திரக்
கூட்டமைப்பில்
போட்டியிடும்
அகில இலங்கை மக்கள்
காங்கிரஸின் வேட்பாளர்களை
ஆதரித்து நடைபெற்ற
தேர்தல் பிரச்சாரக்
கூட்டத்தில் உரையாற்றும்
போதே அமைச்சர்
றிசாட் பதியுதீன்
மேற்கண்டவாறு
கூறினார்.
அங்கு
தொடர்ந்தும் உரையாற்றிய
அமைச்சர் றிசாட்
பதியுதீன், “கிழக்கு
மாகாண சபையில்
முஸ்லிம் முதலமைச்சர்
ஒருவரை பெற்றுவிடக்
கூடாது என்ற நோக்கிலேயே
ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸின் தலைவர்
றவூப் ஹக்கீம்
போட்டியிடுகின்றார்.
அவரிடம் எந்தவிதமான
சமுதாய நோக்கமும்
கிடையாது. இந்த
முஸ்லிம் சமுதாயம்
முஸ்லிம் முதலமைச்சர்
ஒருவரை பெற்றுவிடக்
கூடாது என்ற சிந்தனையில்
ஏதோ ஒரு நாட்டின்
நிகழ்ச்சி நிரலுக்கேற்ற
வகையில் செயற்பட்டு
வருகின்றார்.
ஒரு
இலட்சம் முஸ்லிம்கள்
கலிமா சொன்ன ஒரே
காரணத்திற்காக
வெளியேற்றப்பட்டனர். அவர்கள்
பட்ட துன்பங்களும்
அவலங்களும் ஏராளம்.
அவர்கள் சொந்த
மண்ணுக்கு செல்லுகின்ற
வேளையில் புலிகள்
அழிந்தாலும் புலிகளுக்கு
உதவி செய்தவர்கள்,
புலிகளை வழிநடத்திய
சில மதத்தலைவர்கள்,
புலிகளுக்கு பொருளாதார
உதவிகளை வழங்கியவர்கள்
இந்த ஒரு இலட்சம்
முஸ்லிம்களையும்
வடக்கிலே மீளக்குடியேறாமல்
தடுக்கின்ற ஒரு
பாரிய சதி வடக்கிலே
நடந்துகொண்டிருக்கின்றது.
வடபுலத்து
முஸ்லிம்களை மீள்குடியேற்றுகின்ற
பணியை அகில இலங்கை
மக்கள் காங்கிரஸ்
செய்து கொண்டிருக்கின்ற
போது அதற்கு தலைமை
தாங்கும் என்னை
ஒரு மதவாதியாக,
ஒரு இனவாதியாக
காட்டி குற்றம்
சாட்டி என்னை தண்டிப்பதற்கு
சிறையில் கொண்டுபோய்
தள்ளுவதற்கு கூட
சதி செய்து கொண்டிருக்கின்றனர்.
கிழக்கு
மாகாண சபை தேர்தல்
ஒரு முக்கியமான
ஓர் இடத்தில் இருந்து
கொண்டிருக்கின்றது. இந்த
தேர்தலில் முஸ்லிம்
சமுதாயம் எவ்வாறான
ஒரு முடிவை எடுக்கப்போகின்றது
என்பதை ஜனாதிபதி
பார்த்துக்கொண்டிருக்கின்றார்.
இந்த நாட்டில்
அமைதியையும் நிம்மதியையும்
ஏற்படுத்தியிருக்கின்ற
ஜனாதிபதியை நாம்
ஆதரிக்க வேண்டும்.
கடந்த
முப்பது வருடங்களாக
பிரபாகரனினால்
செய்ய முடியாமல்
போனவற்றை தமிழ்
தேசியக் கூட்டமைப்பும்
ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ¤ம் இணைந்து
அமெரிக்காவின்
உதவியுடன் செய்வதற்கு
சதி செய்து கொண்டிருக்கின்றன.
ஜனாதிபதியை
குற்றவாளிக் கூண்டிலும்
ஏற்றுவதற்கு இவர்கள்
முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள். பிரிந்திருக்கின்ற
வடக்கையும் கிழக்கையும்
இணைப்பதற்காக
இவ்விரண்டு கட்சிகளும்
மறைமுகமாக செயற்பட்டு
வருகின்றன.
ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ்
தலைவர் ஒன்றை பேசுகின்றார். தவிசாளர்
வேறொன்றை பேசுகின்றார்.
செயலாளர் இன்னுமொன்றை
பேசுகின்றார்.
52 அமைச்சர்கள்
உள்ள அமைச்சரவையில்
தம்புள்ள பள்ளிவாயல்
பிரச்சினையில்
நான் துணிந்து
நின்று ஜனாதிபதி
முன்னிலையில்
அவற்றை எதிர்த்தேன்.
ஆனால் மு.கா
தலைமை வாய் திறவாமல்
இருந்துவிட்டு
இப்போது வெற்றிலைக்கு
வாக்களிப்பது
பள்ளிவாயலை உடைப்பதற்கு
அளிக்கப்படும்
வாக்கு என பேசுகின்றனர்.
ஐ.ம.சு.முன்னணி
அமோக
வெற்றிபெறும்
கிழக்கு
மாகாண சபைத் தேர்தலில்
அம்பாறை மாவட்டத்தில்
ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணி
பாரிய அளவில் வெற்றியீட்டவுள்ளது. அம்பாறையில்
எட்டு ஆசனங்களை
முன்னணி பெறவுள்ளது.
நீங்களும் இத்
தேர்தலில் ஐக்கிய
மக்கள் சுதந்திர
முன்னணிக்கு வாக்களித்து
வெற்றியின் பங்காளியாக
வேண்டும் என பாராளுமன்ற
உறுப்பினர் நாமல்
ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்தப்
பிரதேசத்தில்
மீதியாகவுள்ள
குறைபாடுகளை நிவர்த்தி
செய்வதற்கு உங்கள்
சார்பாக ஐக்கிய
மக்கள் சுதந்திர
முன்னணியில் போட்டியிடுகின்ற
இனிய பாரதி, புஸ்பராசா,
செல்வராசா போன்ற
வேட்பாளர்களுக்கு
நீங்கள் ஆதரவளித்து
அவர்களை வெற்றிபெறச்
செய்வதன் ஊடாக
தமிழ் பிரதேசங்களில்
பல்வேறு வகையான
அபிவிருத்தித்
திட்டங்களை பெற்றுக்
கொள்ளக்கூடியதாக
இருக்கும். இந்த நாட்டில்
எந்தப் பகுதியிலும்
பெளத்த, இந்து,
கிறிஸ்தவ, முஸ்லிம்
மதங்கள் எந்த வேறுபாடுகளின்றி
தத்தமது மத கலாசாரங்களைப்
பேணி வாழ வசதிகளை
அரசாங்கம் செய்துள்ளது.
இதற்கு நீங்கள்
அரசாங்கத்திற்கு
நன்றி தெரிவிக்க
வேண்டும்.
இந்த
நாட்டில் நினைத்த
நேரத்தில் எந்த
இடத்திற்கும்
சென்றுவரக்கூடிய
சூழலை நமது ஜனாதிபதி
ஏற்படுத்தித்
தந்துள்ளார். இங்கு
போட்டியிடுகின்ற
எதிர்க்கட்சி
வேட்பாளர்கள்
வெற்றி பெற்றதன்
பின்னர் அமெரிக்கா,
லண்டன், இந்தியா
போன்ற நாடுகளில்தான்
வசிப்பார்கள்.
இவர்கள் இங்கு
வாக்கு கேட்கின்ற
போது, அமெரிக்கா,
இந்தியா, லண்டன்
போன்ற நாடுகளுக்குப்
போய் வாக்கு கேளுங்கள்
என்று கூறுங்கள்.
உங்களது
காணிப் பிரச்சினை,
எல்லைப் பிரச்சினை
போன்ற அனைத்துப்
பிரச்சினைகளையும்
இந்தியா, அமெரிக்கா,
லண்டன் போன்ற நாடுகளினால்
தீர்த்துத் தரமுடியாது. நமது
பிரச்சினையை நமது
ஜனாதிபதியினால்தான்
நிவர்த்தி செய்துகொள்ள
முடியும். கிழக்கு
மாகாண சபைத் தேர்தலில்
ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணி
அதிகப்படியான
ஆசனங்களைப் பெற்று
ஆட்சியமைக்கும்
என்பதில் எந்தவித
ஐயமுமில்லை என
பாராளுமன்ற உறுப்பினர்
நாமல் ராஜபக்ஷ
மேலும் தெரிவித்தார்.
தமிழரசுக்
கட்சியினர் ஒன்றும்
மகான்களல்ல
தமிழரசுக்
கட்சியினர் ஒன்றும்
மகான்களல்ல. மக்களின்
பெயர்களை விளம்பரப்
பலகைகளாக்கி வியாபாரம்
செய்யும் மிகக்
கேவலமான அரசியல்வாதிகள்
கூட்டமே அவர்கள்
என்று சி. சந்திரகாந்தன்
தெரிவித்தார்.
நாவிதன் வெளியில்
இடம்பெற்ற அரசியல்
கூட்டமொன்றின்
போது மேற்கண்டவாறு
தெரிவித்த அவர்
அங்கு தொடர்ந்தும்
உரையாற்றுகையில்,
எம் மக்கள் ஏமாற்றுவது
எப்படி என்கின்ற
வித்தையினை மாத்திரம்
நன்கு பயின்றுள்ள
கூட்டமைப்பு தொடர்ந்தும்
அவற்றினை எம் மக்கள்
மீது பிரயோகித்து
வருகின்றது.
அந்த
வகையில், எமது
அம்பாறை மக்களது
வாக்குளையும்
வீணடித்து கிடைக்கின்ற
சந்தர்ப்பத்தினைத்
தமக்குச் சாதகமாகப்
பயன்படுத்திக்
கொண்டு தலை மறைவாகி
விடுவதே அவர்களது
நோக்கம். தம்மால்
எதனையும் சாதிக்க
இயலாது என்று தெரிந்தும்
விதண்டா வாதத்திற்கே
அவர்கள் இத் தேர்தலில்
போட்டியிடுகின்றனர்.
பிள்ளையானை
வீழ்த்தப் போகின்றோம்
எனக் கூறி ஒட்டு
மொத்தக் கிழக்குத்
தமிழரது வாழ்விலும்
விஷப்பரீட்சை
வைத்து விளையாடிக்
கொண்டிருக்கின்றார்கள்.
ஆனாலும் எமது
மக்களும், நாமும்
நிச்சயமாகத் தோற்கப்
போவது கிடையாது.
மேலாதிக்க
சிந்தனையாளர்களான
இவர்களது சுயரூபத்தினை
நாம் உணந்து கொண்டது
போல, எம் மக்களும்
இன்று உணர்ந்திருக்கின்றனர்.
அரசியல் ரீதியான
தெளிவு நிலை இப்போது
தான் மெல்ல மெல்ல
வெளிச்சமடைந்து
வருகின்றது. எமது சமூகத்தினைச்
சுற்றியுள்ள மாய
வேலியினை நிச்சயம்
நாம் உடைத்தெறிவோம்
என்று கூறினார்.
கிழக்கு
முஸ்லிம்கள் கூட்டமைப்புடன்
ஒன்றிணைந்தால்
நல்ல தீர்வை பெறலாம்
நல்லிணக்க
ஆணைக்குழுவின்
பரிந்துரைகளையும்
சர்வதேசத்தின்
ஆலோசனைகளையும்
நடைமுறைப்படுத்தவோ
கேட்டு நடக்கவோ
அரசாங்கம் தயாரில்லை
என யாழ். மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர்
எஸ்.சுமந்திரன்
தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின்
தேர்தல் பிரசாரக்
கூட்டம் உப்புவெளி
ஆனந்தபுரி பகுதியில்
பிரதேச சபை உறுப்பினர்
தலைமையில் அண்மையில்
நடைபெற்றது. அந்நிகழ்வில்
கலந்து கொண்டு
உரையாற்றும் போதே
அவர் மேற்கண்டவாறு
கூறினார்.
நல்லிணக்க
ஆணைக்குழுவின்
பரிந்துரைகளை
உடன் நிறைவேற்றுமாறு
ஐ.நாடுகள் சபை
செயலாளர் நாயகமும்
சர்வதேசமும் வலியுறுத்தி
வருகின்ற போதிலும்
அதில் அரசு அதிக
அக்கறை காட்டாமலே
நடந்துகொள்கிறது.
போர் முடிந்ததும்
உடன்தீர்வு வழங்கப்படும்
என வாக்குறுதி
அளித்த அரசு கடந்த
மூன்று வருடங்களுக்கு
மேலாகிவிட்ட போதும்
அதில் கவனம் செலுத்தாது
இழுத்தடிப்பு
செய்து வருகின்ற
நிலையிலேயே கடந்த
ஐக்கிய நாடுகள்
மனித உரிமை மாநாட்டில்
இலங்கைக்கெதிரான
மனித உரிமை மீறல்
தீர்மானம் தீவிரமாக்கப்பட்டது.
மார்ச்
மாதத்தில் நடைபெறவுள்ள
மனித உரிமை மாநாட்டில்
இலங்கை மீது எத்தகைய
அழுத்தம் மேற்கொள்ளப்படவிருக்கின்றது
என்பதை சர்வதேசமும்
நாமும் மிகக் கவனமாக
அவதானித்துக்
கொண்டிருக்கிறோம்.
கிழக்கு
எமது கையில் உள்ளது
என்பதை நிரூபிக்கவே
இந்தத் தேர்தலை
நடத்துவதில் அவசரமும்
அக்கறையும் காட்டி
வருகின்றது அரசு.
வடக்கு
கிழக்கு மாகாண
சபை கேட்கப்பட்ட
போது ஏனைய மக்களைத்
திருப்திப்படுத்துவதற்காக
ஏனைய மாகாணங்களுக்கும்
மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. உருவாக்கப்பட்ட
மாகாண சபைகள் தமிழ்
மக்களின் அபிலாஷைகளுக்கு
தீனி போட்டதாக
இல்லை. அதிலும்
வடக்குத் தேர்தலை
நடத்துங்கள் என்று
கூறி வருகின்றோம்.
எமது பிரச்சினைகள்
சர்வதேசம் வரை
கொண்டு செல்லப்பட்டு
இன்று உள்நாட்டு
பேச்சுவார்த்தையில்
பேசித் தீர்ப்போம்,
தெரிவுக்குழுவுக்கு
வாருங்கள். வருவதன் மூலமே
பிரச்சினைக்குத்
தீர்வு காண முடியுமெனக்
கூறி கொண்டிருக்கிறார்கள்.
கடந்த 60 வருட காலம்
எத்தனையோ பேச்சுவார்த்தை
மேசைகளையும் ஒப்பந்தங்களையும்
கண்டுங்கூட முடிவு
காண முடியாத பிரச்சினையாக
நமது பிரச்சினை
இருந்துகொண்டிருக்கிறது.
கிழக்கில்
வாழும் முஸ்லிம்
சமூகம் கூட்டமைப்புடன்
இணைவதன் மூலமே
ஒரு நல்ல தீர்வையும்
முடிவையும் பெற
முடியும் என்பதை
அவர்கள் உணர்ந்துகொள்ள
வேண்டும்.
போராட்ட
களத்தில் சாதனை
படைத்ததுபோல
அரசியல்
களத்திலும் பெண்கள்
மிளிரவேண்டும்
அன்று
போராட்ட களத்தில்
நின்று சாதனைகள்
படைத்த எமது பெண்கள்
இன்று எமது அரசியல்
ரீதியான களத்தில்
போராடி எமது சமூகத்தை
உச்சநிலைக்கு
கொண்டுவர முனைப்புடன்
செயற்படவேண்டும்
என ஐக்கிய மக்கள்
சுதந்திரக்கூட்டமைப்பின்
வேட்பாளர் ருத்திரமலர்
ஞானபாஸ்கரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில்
சீலாமுனையில்
மகளிர் அமைப்பின்
பிரதிநிகளை சந்தித்து
கலந்துரையாடும்போதே
அவர் இவ்வாறு தெரிவித்தார். பெண்கள்
சமூகத்தில் முக்கிய
பாத்திரங்கள்
வகிக்கின்றனர்.
ஆனால் அரசியல்
ரீதியாக பார்க்கும்போது
மட்டக்களப்பு
மாவட்டத்தில்
அது பெரும் கவலைக்குரிய
விடயமாகவே உள்ளது.
கடந்த காலங்களில்
போராட்ட களத்தில்
பெணகள் பல சாதனைகளை
படைத்தது உலகம்
வியக்கும் வகையில்
இருந்தனர். ஆனால் அவர்கள்
அரசியல் ரீதியாக
எதனையும் கருத்தில்
கொள்ளாதவர்களாகவே
உள்ளனர்.
கடந்த
காலத்தில் இடம்பெற்ற
யுத்தத்தினால்
அதிகளவு பாதிப்புக்களை
பெண்களே எதிர்கொண்டனர். இவர்கள்
தொடர்பில் சிந்திப்பவர்கள்
எவரும் அற்ற நிலையே
உள்ளது. இன்று
நாங்கள் உரிமைகளைப்பற்றி
பேசிக்கொண்டு
காலத்தை வீணடித்துச்செல்லுவோமானால்
நாளை எமது எதிர்கால
சந்ததிகள் தெருவில்
திரியும் நிலையே
ஏற்படும். இது தொடர்பில்
அனைவரும் சிந்திக்கவேண்டும்.
கடந்த காலத்தில்
ஏற்பட்ட யுத்த
நிலை காரணமாக உண்மையில்
அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம்.
இந்த யுத்த
சூழ்நிலையின்போது
எங்களது குடும்பம்
பாரிய பிரச்சினைகளை
எதிர்நோக்கியது.
எங்களால் முடிந்தவரை
மற்றவர்களுக்கு
உதவிகளைச்செய்துளோம்.
மட்டக்களப்பு
மாவட்டத்தை பொறுத்தவரையில்
பெண் அரசியல் அனாதைகளாகவே
உள்ளனர். அந்த
நிலையினை மாற்றியமைக்கவேண்டும்
என்பதற்காகவே
எனது அதிபர் தொழிலையும்
விடுத்து நான்
இந்த தேர்தலில்
இறங்கியுள்ளேன்.
எம்முடன் எமது
பிரதியமைச்சரும்
எனது சகோதரனுமான
கருணா அம்மானும்
இருக்கின்றார்.
அவர் மத்திய
அரசில் இருக்கின்றார்.
நான் மாகாணசபையின்
ஆட்சியில் அமரும்
வாய்ப்பு ஏற்பட்டால்
நாங்கள் இருவரும்
இணைந்து எமது சமூகத்துக்கு
எங்களால் முடிந்தவற்றைச்செய்வோம்
என்றார். இந்நிகழ்வில்
மீள்குடியேற்ற
பிரதியமைச்சர்
விநாயகமூர்த்தி
முரளிதரனும் கலந்து
கொண்டார்.
அம்பாறையில்
அழிந்து வரும்
எமது அடையாளம்
தடுத்து நிறுத்தப்பட
வேண்டும்
அம்பாறை
வேட்பாளர் செலஸ்ரின்
தமிழ்ப்
பேசும் பிரதேசமாகத்
திகழ்ந்த எமது
அம்பாறை மாவட்டம்
இப்பொழுது விரைவாக
தனது அடையாளத்தை
இழந்து வருகின்றது. இதனைத்
தடுப்பதற்குத்
தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின்
தலைமையை வலுப்படுத்த
வேண்டும் என்று
கிழக்கு மாகாணசபைத்
தேர்தலில் அம்பாறையில்
போட்டியிடும்
செலஸ்ரின் கூறினார்.
1948
ஆம் ஆண்டு இலங்கை
சுதந்திரம் அடைந்த
காலம்தொட்டு இன்றுவரை
எமது தமிழ்ப் பிரதேசங்கள்
பல காணாமல் போயுள்ளன. மேலும்
பல கிராமங்கள்
அழிவின் விளிம்பில்
இருக்கின்றன.
பல கிராமங்கள்
சிங்களமயமாக்கப்பட்டுள்ளன.
இந்நிலை நீடித்தால்
இன்னும் சில வருடங்களில்
அம்பாறையில் தமிழினம்
வாழ்ந்ததற்கான
அடையாளமே இல்லாமல்
போய்விடும் ஆபத்து
உள்ளது. இப்பொழுதே
நாம் எமது சொந்த
மண்ணில் மூன்றாவது
சிறுபான்மையினமாக
மாறிவிட்டோம்.
இவற்றைத் தடுத்து
நிறுத்த வேண்டிய
பாரிய பொறுப்பும்
கடமையும் எம் அனைவருக்கும்
உள்ளது. இன்று
நாம் எமது சொந்த
மண்ணிலேயே அகதிகளாக
வாழும் நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ளோம்.
முன்னெப்பொழுதும்
இல்லாத அளவிற்கு
எமது பிரதேசத்தின்
காணிகளும் வளங்களும்
சூறையாடப்படுகின்றன. இதை
நாம் அனுமதிக்க
முடியாது. கடந்த மாகாணசபை
ஆட்சியில் தமிழர்
ஒருவர் முதலமைச்சராக
இருந்தபோதும்
அவராலும் இந்த
அழிவினைத் தடுக்க
முடியவில்லை.
தமிழ் மக்களின்
உரிமைகளை வென்றெடுக்கும்
ஒரே அமைப்பு தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பாக
இருப்பதனால் நானும்
எனது வரலாற்றுக்
கடமையை ஆற்றுவதற்குத்
தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பில்
இணைந்து கொண்டு
எமது மக்களின்
விடியலுக்காக
உழைப்பதற்கும்
தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின்
ஆசனங்களை உயர்த்துவதற்கும்
இந்த மாகாணசபைத்
தேர்தலில் போட்டியிடுகின்றேன்.
காழ்ப்புணர்வு
கொண்ட சக்திகளே
மு.காவை
தூற்றுகின்றன
மக்கள்
தெளிவுடன் இருப்பதாக
சல்மா தெரிவிப்பு
கிழக்கு
மாகாணத்தில் முஸ்லிம்
காங்கிரஸின் எழுச்சியைப்
பொறுக்கமாட்டாத
சக்திகளே அக்கட்சித்
தலைவரையும் ஏனைய
முக்கியஸ்தர்களையும்
விமர்சித்து வருவதாகவும்
காழ்ப்புணர்வு
கொண்ட இந்த சக்திகளின்
வலையில் சிக்க
வேண்டாமெனவும்
மட்டக்களப்பு
மாவட்டத்தில்
போட்டியிடும்
முஸ்லிம் காங்கிரஸ்
வேட்பாளர் சல்மா
அமீர் ஹம்ஸா தெரிவித்தார்.
காத்தான்குடியில்
நடைபெற்ற தேர்தல்
பிரசாரக் கூட்டத்தில்
உரையாற்றிய அவர்
மேலும் கூறியதாவது,
கிழக்கு மாகாணத்துக்கு
முஸ்லிம் முதலமைச்சர்
வரவேண்டுமென எமது
ஸ்தாபகத்தலைவர்
மர்ஹும் அஷ்ரப்
கண்ட கனவு தற்போது
நனவாகும் சூழல்
ஏற்பட்டுள்ளது.
இம்முறை தேர்தலில்
முஸ்லிம் காங்கிரஸே
தீர்மானிக்கும்
சக்தி. எவர்
எதைச் சொன்னாலும்
முஸ்லிம் காங்கிரஸ்
இம்முறை அதிகூடிய
ஆசனங்களைக் கைப்பற்றும்.
இது முஸ்லிம்களின்
சமூகக் கட்சி.
பட்டம், பதவிக்காக,
அபிவிருத்திக்காக
முஸ்லிம் சமுதாயத்தை
பலி கொடுக்கும்
கட்சியல்ல.
இன்று
முஸ்லிம் பெண்கள்
அரசியலில் நாட்டம்
கொள்ளத் தலைப்பட்டுள்ளனர். மு.காவின்
வரலாற்றில் கடந்த
உள்ளுராட்சித்
தேர்தலில் மு.காவிலிருந்து
ஒரு பெண் நகரசபைக்கு
தெரிவானார். அதேபோன்று கிழக்கு
மாகாண சபை க்கு
முஸ்லிம் பெண்
ஒருவரை உள்வாங்கும்
வகையில் அக்கட்சி
என் னைப் போட்டியிட
நிறுத்தியுள்ளது.
மட்டக்களப்பு
மாவட்ட முஸ்லிம்
பெண்கள் தமது பிரதிநிதித்துவத்தை
வலுப்படுத்த உதவ
வேண்டும். மாகாண சபைக்கு
முஸ் லிம் பெண்
ஒருவர் தெரிவாகும்
வரலாற்றுப் பெருமையை
இந்த மாவட்டம்
பெறவேண்டும்.
இன்று முஸ்லிம்
பெண்கள் எதிர்நோக்கும்
பிரச்சினைகள்
அநேகம். எனினும்
பெண்கள் தொடர்பான
சட்டமியற்றும்
போது முஸ்லிம்
பெண்களின் அபிலாஷைகளை
வெளிப் படுத்த
சந்தர்ப்பம் இல்லை.
பாராளுமன்றம்
போன்று மாகாண சபைக்கும்
சட்டமி யற்றும்
அதிகாரம் உண்டு.
எனவே மாகாண
சபையில் எனது பிரதிநிதித்துவத்தை
உறுதிப்படுத்த
அமைப்புகள், அரச
சார்பற்ற நிறுவனங்கள்
உதவ வேண்டுமென்றார்.
தேர்தல்
காலத்தில் மாத்திரம்
பொட்டணி வியாபாரிகளாக
முஸ்லிம் காங்கிரஸ்
அமீர்
அலி
ஸ்ரீ
லங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தலைமை
முஸ்லிம் சமூகத்திற்கும்
சிங்கள சமூகத்திற்குமிடையில்
இன முறுகல் ஏற்படுத்தி
அதன் மூலம் அரசியல்
செய்ய முயற்சிக்கின்றது
என்று முன்னாள்
அமைச்சரும் கிழக்கு
மாகாண சபைத் தேர்தலில்
ஐக்கிய மக்கள்
சுதந்திரக் கூட்டமைப்பு
வேட்பாள ருமான
எம்.எஸ்.எம்.அமீர்
அலி தெரிவித்தார்.
கிழக்கு
மாகாண சபைத் தேர்தலில்
மட்டக்களப்பு
மாவட்டத்தில்
அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ் சார்பாக
ஐக்கிய மக்கள்
சுதந்திரக் கூட்டமைப்பில்
போட்டியிடும்
வேட்பாளர்களை
ஆதரித்து ஓட்டமாவடி
பிரதேச சபையின்
பிரதித் தவிசாளர்
ஏ.எம்.நெளபர் தலைமையில்
மீராவோடையில்
இடம்பெற்ற கூட்டத்தில்
உரையாற்றும் போதே
அவர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
அங்கு
அவர் தொடர்ந்து
உரையாற்றுகையில்,
மூவின
மக்களும் ஒற்றுமையாக
சகோதர உணர்வுகளுடன்
வாழ்ந்து கொண்டு
இருக்கும் எமது
நாட்டில் இனக்
குரோதங்களை வளர்த்து
இனங்களுக்கிடையிலான
பகைமையை வளர்த்து
அரசியல் செய்ய
நினைப்பதை வைத்தே
முஸ்லிம் காங்கிரஸின்
அரசியல் வங்குரோத்து
எவ்வாறு உள்ளதென்று
உணர்ந்து கொள்ள
முடியும்.
கல்குடாத்
தொகுதிக்கு முஸ்லிம்
காங்கிரஸ் தலைமைத்துவம்
கடந்த காலங்களில்
தேசியப்பட்டியல்
தருவதாக வாக்குறுதி
யளித்தார்கள்.
அது
போன்று நடந்தார்களா
அல்லது பிரதிநிதித்துவத்தை
எதிர்பார்த்து
ஏமாற்றம் அடைந்த
மக்களை சந்திப்பதற்காக
வருகை தந்தார்களா? தேர்தல்
காலங்களில் மாத்திரம்
பொட்டணி வியாபாரி
போல் வந்து வாக்குகளை
பெற்று சென்றால்
அடுத்த தேர்தல்
காலங்களிலேயே
இவர்களை இப் பிரதேசத்தில்
காண முடியும்.
இன்று முஸ்லிம்
காங்கிரஸின் நிலை
எவ்வாறு உள்ளதென்று
பார்த்தால் தமிழ்
தேசியக் கூட்டமைப்பின்
தலைவர் சம்பந்தன்
ஐயா முஸ்லிம்கள்
அனைவரும் முஸ்லிம்
காங்கிரஸிற்கு
வாக்களிக்குமாறு
கூறும் அளவிற்கு
முஸ்லிம் காங்கிரஸ்
கட்சியின் நிலைமை
மாறியுள்ளது என்றார்.
இக்கூட்டத்தில்
ஓட்டமாவடி பிரதேச
சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட்,
பிரதித் தவிசாளர்
ஏ.எம்.நெளபர், முன்னாள்
தவிசாளர் எம்.கே.முஹைதீன்,
வேட்பாளர்களான
எம்.எஸ்.சுபைர்,
எம்.எப்.ஷிப்லி
ஆகியோரும் உரையாற்றினர்.
(எஸ்.எம்.எம்.முர்ஷித்
கல்குடா தினகரன்
நிருபர்)
தமிழ்
தேசியக் கூட்டமைப்பினால்
கிழக்கு ஆட்சியை
பிடிக்க முடியுமா?
முடிந்தால்
கூறட்டும். தமிழ்
மக்களுக்காக
நாம் ஒதுங்கவும்
தயார்
தமிழ்
தேசியக் கூட்டமைப்பினால்
கிழக்கு மாகாணத்தின்
ஆட்சியைப் பிடிக்க
முடியுமா? முதலமைச்சராக
முடியுமா? முடிந்தால்
கூறட்டும்.தமிழ்
மக்கள் விடுதலைப்
புலிகள் கட்சி
ஒதுங்கி மக்களுக்காக
தியாகம் செய்யத்
தயாராக உள்ளது
என ஐக்கிய மக்கள்
சுதந்திரக் கூட்டமைப்பின்
வேட்பாளரும் தமிழ்
மக்கள் விடுதலைப்
புலிகள் கட்சியின்
பொதுச்செயலாளருமான
பூ.பிரசாந்தன்
தெரிவித்தார்.
மண்முனை தாழங்குடாவில்
நடைபெற்ற தேர்தல்
பிரசாரக் கூட்டத்தில்
கலந்து கொண்டு
உரையாற்றும் போதே
அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.
தமக்கென்று
எந்தவிதமான கொள்கையோ,
தூரநோக்கோ இல்லாது
விடுதலைப் புலிகள்
இருக்கும் வரை
தமிbழம், வடகிழக்கு
இணைப்பு, சர்வதேசத்திற்கு
62 வருடங்களாக காட்டிக்
காட்டி என்ன நடந்தது?
இலங்கையில்
அதி உச்சமாக தமிழ்
தேசிய கூட்டமைப்பு
ஊடாக 22 நாடாளுமன்ற
உறுப்பினர்களையும்,
பாராளுமன்றத்திற்கு
அனுப்பிக் காட்டினோம்.
சர்வதேசம்
என்ன செய்தது?
இன்று கிழக்கு
மாகாணம் சுடர்விட்டு
அபிவிருத்தியில்
பிரகா சிக்கும்
போது மீண்டும்
அதனைக் குழப்ப
கங்கணம் கட்டிக்கொண்டு
வருகின்aர்களே
இது எந்தவிதத்தில்
நியாயமானது என
கிழக்கு மாகாண
சபை வேட்பாளர்
பூ.பிரசாந்தன்
கேள்வி எழுப்பினார்.
கிழக்கு மாகாணத்தில்
தமிழ் தேசிய கூட்டமைப்பு
ஆட்சியைப் பிடிக்குமா?
இல்லை என்பது
வெளிப்படை. இப்படியிருக்கையில்,
தமிழரிடம் இருக்கும்
முதலமைச்சுப்
பதவியை ஸ்ரீ லங்கா
முஸ்லிம் காங்கிரசிற்கு
எடுத்துக்கொடுக்கவா
அல்லது ஐக்கிய
தேசிய கட்சிக்கு
எடுத்துக்கொடுக்கவா
பார்க்கிறது? இது எப்படி சாத்தியமாகும்
என எந்ததமிழ் தேசிய
கூட்டமைப்பு வேட்பாளராவது
விளக்குவாரா?
கிழக்கில்
ஆட்சியமைக்கப்
போவது ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணி
என்பது வெளிப்படை.
(நன்றி:
தினகரன்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |