Contact us at: sooddram@gmail.com

 

கனடாவில் நடக்கும் தில்லு முல்லு: வெளிச்சத்திற்கு வரும் சில உண்மை சம்பவங்கள் !


2009ல் முள்ளிவாய்க்காலில் உலக நாடுகள் பலவற்றின் ஆசியோடும் ,ஆதரவோடும் பெரும் இனவழிப்பை மேற்கொண்டு எங்களது விடுதலைப் போராட்டத்துக்கும் பேரிழப்பையும் பெரும் பின்னடைவையும் சிறீலங்கா அரசாங்கம் ஏற்படுத்தியது. அதன் பின்னர் தாயகத்தில் எங்களது மக்களை திறந்த வெளிச் சிறைச்சாலைக்குள்ளும் புலனாய்வாளர்களின் கழுகுப் பார்வைக்குள்ளுமே வைத்திருக்கின்றது. இருந்த போதும் அது வெளித் தெரியா வண்ணம் பார்த்துக் கொள்கின்றது. இந்த நிலையில் புலம் பெயர்ந்த எங்களது மக்களால் மட்டுமே எங்களது விடுதலைக்கான காத்திரமான பங்களிப்பைச் செய்ய முடியுமென்பதால் புலம் பெயர்ந்து வாழ்கின்ற மக்களிடையே குழப்பத்தை திட்டமிட்டு ஏற்படுத்த தமிழர் விரோத சக்திகள் பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றன.

புலம் பெயர் நிலங்களில் மக்கள் எந்தெந்த ஊடகங்களில் நம்பிக்கை வைத்திருக்கின்றார்களோ அந்த ஊடகங்களை கையகப்படுத்தும் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார்கள். அந்த வகையில் அனைத்துலக ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் (ஐ.பி.சி) மற்றும் கனடா CTR போன்ற ஊடகங்களை கையகப்படுத்தும் முயற்சிகளில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளார்கள். தொலைபேசி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள லிபரா நிறுவனத்தின் கையில் ஐ.பி.சி வானொலி தொலைக்காட்சி என்பன முற்று முழுதாக வந்துள்ளதை அநேகர் அறிவர். அது போல கனடாவில் ரிவி.ஐ தொலைக்காட்சியும் அவர்கள் கையில் வந்துள்ளதாகவே பரவலாகப் பேசப்படுகின்றது. அத்துடன் தமிழ்த் தேசியத்தில் மிகுந்த பற்றுறுதியோடு செயற்பட்டு வந்த CTR வானொலியிலும் அண்மைக் காலத்தில் நிர்வாக மாற்றங்கள் செய்யப்பட்டு புளட் ரமணன் என்பவரும் அந்த வானொலிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். அவர் நிகழ்ச்சிகளில் பாரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாகவும் பல கட்டுப்பாடுகள் தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு கொண்டு வந்திருப்பதாகவும் அறிய முடிகின்றது.

அங்கு தமிழ்த் தேசிய விடயங்களில் பற்றுறுதியோடு செயற்பட்டு வந்த பல மூத்த ஒலிபரப்பாளர்கள் ஓரங்கட்டப் பட்டுள்ளார்கள். இந்த ரமணன் என்பவர் ஒரு புளட் உறுப்பினர் எனவும் தாயகத்தில் பல காட்டிக் கொடுப்புக்களையும் கூட்டிக் கொடுப்புக்களையும் மேற்கொண்டு தண்டிக்கப்பட வேண்டிய நிலையில் இருந்து நாட்டை விட்டு தப்பித்து வந்தவர் எனவும் தெரிய வருகின்றது. இந்த ரமணன் தன்னோடு உதைபந்தாட்டத்தில் ஈடுபட்ட ஒருவரின் காலை துளையிடும் கருவி கொண்டு துளையிட்டவர் என்றும் அறியப் படுகின்றது. அத்தோடு டக்ளஸ் தேவானந்தாவோடு மிகவும் நெருக்கமான உறவுக்குரியவர் என்றும் தெரிய வருகின்றது. தொலைபேசி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள லிபராவின் முக்கியஸ்தர் ஒருவர் அண்மையில் சிறீலங்கா சென்று அப்போது அமைச்சராக இருந்த சம்பிக்க ரணவக்கவை சந்தித்து கொழும்பில் லிபராவின் அலுவலகத்தை திறப்பதற்கான பேச்சுவார்தையில் ஈடுபட்டதாகவும் மண்ணின் மைந்தர்களால் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

இந்த பெரும் வாத்தகர்கள் புலம் பெயர் நிலங்களில் பல ஊடகங்களை விலைக்கு வாங்கி வருவதும் அந்த மண்ணின் மைந்தர்களால் மிகுந்த கவனத்தோடு அவதானிக்கப் படுகின்றது. லிபராவின் இந்த கைங்கரியங்களுக்கு 2009க்கு முன்னர் தேசிய முகமூடி அணிந்தவர்களும் பணத்துக்காகவும் ஊடக புகழுக்காகவும் விலை போவதையும் தமிழ்த் தேசியத்தில் பற்றுறுதியோடு உள்ளவர்களால் அவதானிக்கப் படுகின்றது. இந்தக் கூட்டணியில் தான் ஆகஸ்ட் 8ஆம் 9ஆம் திகதிகளில் கனடாவில் விஜய TV யால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் நடாத்தப்பபட இருக்கின்றது. காட்டிக் கொடுப்புக்களாலும் நம்பிக்கைத் துரோகங்களாலும் கவன ஈனங்களாலும் எங்களது இனம் பெரிய விலை கொடுத்துள்ள வரலாற்றுப் பின்னணியில் எங்கள் மக்கள் எம்மைச் சுற்றி நடைபெறுகின்ற அனைத்து விடயங்களிலும் மிக விழிப்போடு இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இவை அனைத்தையும் தமிழர் வரலாறும் வரலாற்றை உருவாக்கியவாகளும் உற்று நோக்குவார்கள். காலம் கட்டளைகளுக்காய் காத்திருக்கும்.

மண்ணின் மைந்தன்.

நன்றி: மண்ணின் மைந்த பிளாக்ஸ்பாட்

Disclaimer
This news was published in blogger. We have re published this. The information contained in this page is for general information purposes only. The information is provided by [mannimaynathan blog spot] and while we endeavour to keep the information up to date and correct, we make no representations or warranties of any kind, express or implied, about the completeness, accuracy, reliability, suitability or availability with respect to the website or the information, products, services, or related graphics contained on the website for any purpose. There for ,we will not be responsible for this news.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com