|
||||
|
சிறுபான்மையினரை
உள்வாங்குவதில் நெருக்கடி தேசியப் பட்டியலைத் தயாரிப்பதில் இரண்டு பிரதான கட்சிகளும் பலத்த சவாலை எதிர்கொண்ட நிலையில் சிறுபான்மை பிரதிநிதிகளை உள்வாங்குவதிலும் பெரும் சிரமத்தை எதிர்நோக்கும் நிலை உருவாகியதாக அக்கட்சிகளின் வட்டாரம் தெரிவித்து ள்ளன. வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட சமயத்தில் இரண்டு கட்சிகளிலும் சிறுபான்மை, தமிழ், முஸ்லிம்களுக்கென போதியளவு வாய்ப்பளித்திருந்த போதிலும், தற்போது அக்கட்சிகளுக்கு கிட்டியுள்ள தேசியப் பட்டியல் எண்ணிக்கையை பூரணப்படுத்துவதில் நெருக்கடி நிலையைச் சந்தித்துள்ளன. பெரும் இழுபறி நிலைகளுக்கு மத்தியிலும் பெரும் பான்மை பிரதிநிதிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலை யில் பட்டியலில் காணப்பட்ட தமிழ் முஸ்லிம் பிரதி நிதித்துவம் ஒன்று, இரண்டோடு மட்டுப்படுத்தப்பட்டி ருப்பதால் இரண்டு பிரதான கட்சிகளும் சவாலை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளன. ஜே. வி. பி. தேசிய பட்டியலில் தலா இரு தமிழர்களினதும் முஸ்லிம்களின தும் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்த போதும் வேறு இருவரின் பெயர்களே தேர்தல் ஆணையாளருக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளன. ஐ. தே. க.வின் தேசியப் பட்டியலில் 12 தமிழ் முஸ்லிம்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தனர். அக் கட்சிக்கு தேசியப் பட்டியலினூடாக 13 உறுப் பினர்கள் கிடைத்துள்ளதோடு நேற்று அவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டன. இதில் ஒரு தமிழரும் மூன்று முஸ்லிம் களும் இடம்பெறுள்ளனர். ஐ. தே. க. சார்பில் டி. எம். சுவாமி நாதன் மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ள தோடு முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் டாக்டர் அப்துல் ஹபீஸ் மற்றும் எம். எச். மொஹமட் சல்மான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் புத்தளம் மாவட்டத்தில் ஐ. தே. க. பட்டியலில் போட்டியிட்டு தேல்வியடைந்த எம். எச். எம். நவாவி நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் பரிந்து ரைக்கப்பட்டிருந்த கட்சி செயலாளர் ஹஸனலி, நிசாம் காரியப்பர் ஆகிய வர்களுக்கோ ஐ. தே. க. சார்பில் பெயர் சேர்க்கப்பட்டிருந்த கே. வேலா யுதத்திற்கோ இம்முறை தேசியப்பட்டி யலூடாக வாய்ப்பு வழங்கப்பட்டிருக் காதது விசேட அம்சமாகும். அஸாத் சாலி, வை. எல். எஸ். ஹமீத், மொஹமட் ஜெமீல், கே. வை. ராம் ஆகியோருக்கும் இடம் வழங்கப்படவில்லை. ஐ. தே. க. தேசிய பட்டியலினூடாக தெரிவாகும் 13 உறுப்பினர்களின் பெயர்களும் தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மலிக் சமரவிக்ரம, கரு ஜயசூரியா, ஐயம்பதி விக்ரமரத்ன. அதுரலியே ரத்னதேரோ. திலக் மாரப்பன, பேராசிரியர் சீ. ஏ. மாரசிங்க, எக். கே. டீ. எஸ். குணவர்தன, சிரிநால் த டி மெல் அனோமா கமகே ஆகியோரின் பெயர்களும் அடங்குகின்றன. ஐ. ம. சு. மு. வின் 29 பேர் கொண்ட தேசியப் பட்டியலில் 7 தமிழ், முஸ்லிம்களின் பெயர்கள் அடங்குகின்றன. இம்முறை தேர்தலின் பிரகாரம் ஐ. ம. சு. மு. வுக்கு 12 தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் கிடைத்துள்ளன. தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர்கள் 6 பேர் மீண்டும் ஐ. ம. சு. மு. தேசிய பட்டியலினூடாக நியமிக் கப்பட்டிருக்கும் நிலையில் ஐ. ம. சு. மு. வினூடாகவும் முஸ்லிம் பிரதிநிதி களான முன்னாள் அமைச்சர் ஏ. எச். எம். பெளசி, முன்னாள் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா, அங்கஜன், எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா ஆகியோர் உள்வாங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஜே. ஸ்ரீரங்கா, பிரபா கணேசன், கே. கணேசமூர்த்தி, எஸ். யு. உதுமாலெப்பை, எப். எம். முஸம்மில் ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட் டருந்தமை குறிப்பிடத்தக்கது. தமிழ் தேசிய கூட்டமைப்பும் இன்னும் தமது தேசிய பட்டியல் உறுப்பினர்கள் இருவரதும் பெயர்களை அறிவிக்கவில்லை. தேர்தலில் தோல்வியடைந்த சுரேஷ் பிரேமசந்திரன், விநோனோராதலிங்கம் ஆகியோரை நியமிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதோடு வேறு சிலரின் பெயர்கள் குறித்தும் பேசப்பட்டு வருகிறது. கூட்டமைப்பு தேசிய பட்டியல் தொடர்பிலும் நெருக்கடி தொடர்வதாக அறிய வருகிறது. இதேவேளை தேர்தலினூடாக வெற்றியீட்டிய 196 உறுப்பினர்களினதும் பெயர்கள் நேற்று வர்த்தமானியூடாக வெளியிடப்பட்டன. தேசியப் பட்டியல் மூலம் தெரிவாகும் உறுப்பினர்களின் பெயர்களை அறிவிக்க கட்சிகளுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கியுள்ள தாக தேர்தல் செயலகம் தெரிவித்தது. தேசிய பட்டியல் மூலம் தெரிவான உறுப்பினர்களின் பெயர்கள் அடுத்த வாரம் தனியாக வர்த்தமானியூடாக வெளியிடப்பட உள்ளது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |