|
||||
|
ஐ.தே.க,
ஸ்ரீ.ல.சு.க விட்டுக்கொடுப்புடன் இணக்கம் புதிய அமைச்சரவை செப்.2இல் பதவியேற்பு அமைச்சரவை தொடர்பில் ஐ. தே. க. வுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையில் நீடித்த நீண்ட இழுபறிக்குப் பின்னர் அமைச்சர்கள் எதிர்வரும் செப்டம்பர் 2ஆம் திகதி பதவி ஏற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்கவும் சுதந்திரக் கட்சி எம். பிக்கள் அடுத்த வாரம் பதவி ஏற்கவும் முன்பு தீர்மானிக்க ப்பட்டிருந்தது. ஆனால் இரு தரப்பினருக்குமிடையில் நேற்று உடன்பாடு ஏற்பட்டதையடுத்து இருதரப்பு அமைச்சர்களும் செப்டம்பர் 2ஆம் திகதி பதவி ஏற்பதாக ஐ. தே. க. தவிசாளர் மலிக் சமரவிக்கிரம நேற்று அறிவித்தார். ஐ. தே. க. வும் சு. க.வும் இணைந்து தேசிய அரசாங்கம் அமைப்பதற்காக கடந்த வாரம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதற்கான சு.க. தரப்பில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. ஆனால், அமைச்சு பதவிகளை பகிர்வது தொடர்பில் இரு தரப்பினருக்குமிடையில் பலசுற்று பேச்சு நடைபெற்ற போதும் உடன்பாடு ஏற்படாததால் அமைச்சர்கள் பதவி ஏற்பு தொடர்ந்து பின்போடப்பட்டு வந்தது. முக்கிய சர்வதேச மாநாடுகளில் பங்கேற்பதற்காக மூன்று அமைச்சர்கள் மாத்திரம் கடந்த திங்களன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றிருந்தனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சுகாதார அமைச்சு உட்பட பல முக்கிய அமைச்சுப் பதவிகள் வழங்குமாறு சு. க. தரப்பில் கோரப்பட்டதாக சு. க. சிரேஷ்ட உபதலைவர் டபிள்யூ. ஜே. செனவிரத்ன தெரிவித்தார். அமைச்சுப்பதவிகள் குறித்து இறுதி முடிவு எட்டப்படாத நிலையில் இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் கட்சி தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இதே வேளை ஜனாதிபதிக்கும் பிர தமருக்கும் இடையிலான பேச்சுவார்த் தையின் பின்னரே இறுதி முடிவு எட்டப்பட இருந்ததாக மஹிந்த அமரவீர குறிப்பிட்டார். இந்த நிலையில் ஜனாதி பதிக்கும் பிரதமருக்குமிடையிலான முக்கிய சந்திப்பையடுத்து தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பாக இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அறியவருகிறது. இது தொடர்பாக நேற்று அறிக்கை யொன்றை வெளியிட்ட ஐ. தே.க. தவிசாளர் மலிக் சமரவிக்கிரம நாட்டில் புதிய அரசியல் கலாசாரம் மற்றும் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக முழு பாராளுமன்றத்தையும் அரசாங்கமாக மாற்றுவதாக ஐ. தே.க. தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகக் குறிப்பிட்டார். அதற்காக குறைந்த பட்சம் 2 வருடங்களுக்கு தேசிய அரசாங்கமொன்றை உருவாக்குவதாகக் கூறியிருந்ததற்கமைய சுதந்திரக் கட்சியுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டதாக தெரிவித்துள்ள அவர் தேசிய அரசாங்கம் அமைப்பதற்காக சுதந்திரக் கட்சியுடன் சுமுகமான மற்றும் ஆழமான பேச்சுவார்த்தைகளை நடத்தி உடன்பாட்டுக்கு வந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இரு தரப்பினரதும் அடிப்படை நோக்கம் மக்களுக்கு சேவையாற்றுவதே என்றும் சம்பிரதாயபூர்வ அரசியல் சிந்தனைகளில் இருந்து ஒதுங்கி நாட்டின் எதிர்காலத்தை வளமிக்கதாக மாற்றிய மைக்கவே ஒன்றிணைந்துள்ளோம் என்றும் அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். அமைச்சு பதவிகள், மற்றும் சலுகை ளுக்காக அன்றி நாட்டை உயர்நிலைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிக்கே முன்னுரிமை வழங்கியுள்ளதாகக் கூறியுள்ள அவர் இரு தரப்பினருக்கும் அர்ப்பணிப்புகள் செய்ய நேர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சகல அர்ப்பணிப்புகளையும் நாட்டின் நலனுக்காகவே மேற்கொண்டதாகவும் 60 மாதங்களில் புதிய பாராளுமன்றத்துடன் புதிய அமைச்சரவையுடன் இணைந்து புதிய நாட்டைக் கட்டியெழுப்பும் சவாலை வெற்றி கொள்ள சகலரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் எனவும் மலிக் சமரவிக்கிரம தெரிவித் துள்ளார். 19ஆவது திருத்தத்திற்கமைய அமைச்சரவை 30ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவை 45 ற்குட்பட்டதாக இருக்க வேண்டும் என சு. க. கோரியுள்ளதாக ஜோன் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார். 50ற்குட்பட்டதாகவே அமைச்சரவை அமையும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் பாராளுமன்றம் செப்டம்பர் முதலாம் திகதி கூடும் போது அமைச்சரவை தொகையை அதிகாரிப்பதற்கு பாராளு மன்றத்தின் அனுமதி பெறப்பட இருப்பதாக ஐ.தே.க. வட்டாரங்கள் தெரிவித்தன. இரு தரப்பினதும் ஆதரவுடன் இதற்கான பிரேரணை அனுமதி பெறப்பட்ட பின் செப்டம்பர் 2ஆம்திகதி ஜனாதிபதி முன்னிலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்க இருப்பதாக அறிவிக்கப் படுகிறது. நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஐ. தே. க. வுக்கு 106 ஆசனங்களும் ஐ. ம. சு. மு. வுக்கு 95 ஆசனங்களும் கிடைத்தது தெரிந்ததே. தேசிய அரசாங்கம் அமைக் கப்பட்ட போதும் ஐ. ம. சு.மு. தரப்பில் சுமார் 50 பேர் எதிர்தரப்பில் அமர இருப்பதாக அறிய வருகிறது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |