Contact us at: sooddram@gmail.com

 

பிரபாகரன் கொல்லப்படுவது கருணாநிதிக்கு அறிவிக்கப்பட்டது

“இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் இலங்கை ராணுவத்துக்கு ஏற்படும் முன்னேற்றம் பற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அடிக்கடி கூறப்பட்டது. இறுதி யுத்தத்தில், விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கொல்லப்பட போகிறார் என்பதும், இதோ, கொல்லப்பட்டு விட்டார் என்பதும், கருணாநிதிக்கு அறிவிக்கப்பட்டது. கருணாநிதி இந்த விஷயத்தில் தலையிடாமல் மெளனம் சாதித்தார்.” இவ்வாறு கூறியுள்ளார், சுப்ரமணியம் சுவாமி.

‘சுவாமி கூறியிருப்பது உண்மையாக இருக்குமோ’ என்ற சந்தேகம் ஏற்படுகிறதா?
அவர் எந்த இடத்தில், எந்த சந்தர்ப்பத்தில் அவ்வாறு கூறினார் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். இலங்கை ராணுவத்தின் 2013-ம் ஆண்டுக்கான 3-வது ஆண்டு பாதுகாப்பு கருத்தரங்கு (Sri Lanka Army’s third annual international conclave the ‘Defence Seminar – 2013′), இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்றது. இலங்கை பாதுகாப்பு அமைச்சு ஏற்பாடு செய்திருந்த இந்த கருத்தரங்கில், இலங்கையின் ராணுவ உயரதிகாரிகள் கிட்டத்தட்ட அனைவருமே கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும், இறுதி யுத்தம் நடந்தபோது, இலங்கை ராணுவத்தில் இருந்தவர்கள்.

மேலே குறிப்பிட்ட பாதுகாப்பு கருத்தரங்கின் மேடையில்தான், கொழும்புவில் வைத்தே, சுப்ரமணியம் சுவாமி, “இறுதி யுத்தத்தில், விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கொல்லப்பட போகிறார் என்பதும், இதோ, கொல்லப்பட்டு விட்டார் என்பதும், கருணாநிதிக்கு அறிவிக்கப்பட்டது” என்று பேசினார்.

இலங்கை ராணுவ தளபதி உட்பட யாரும் அதை மறுக்கவில்லை. இலங்கை ராணுவ பாதுகாப்பு கருத்தரங்கில் தொடர்ந்து பேசிய சுப்ரமணியம் சுவாமி, “விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் இலங்கை ராணுவம் வெற்றி பெறுவதற்கு இந்தியா மற்றும் அமெரிக்கா இலங்கைக்கு உதவி செய்தன. இந்தியாவின் சிறப்பு ஒத்துழைப்பு பெறப்பட்டது.
அது எப்படியென்றால், ஜனாதிபதி ராஜபக்ஷேவின் சீனியர் ஆலோசகர், ஜனாதிபதியின் செயலர், பாதுகாப்பு செயலர் உட்பட 6 பேரடங்கிய இலங்கை உயர்மட்டக் குழுவினர், யுத்தம் முடியும்வரை டில்லியுடன் நேரடித் தொடர்பில் இருந்தார்கள். டில்லியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளிவிவகார செயலர், பாதுகாப்பு செயலர் ஆகியோருடன் இலங்கை குழுவினர் எந்த நேரமும் தொடர்பு கொள்ள வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருந்தன.
யுத்தம் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருந்த போது, இலங்கை மற்றும் இந்திய உயர்மட்ட குழுவினர் மிகவும் ரகசியமான முறையில் உடனுக்குடன் ஆலோசனை செய்து, அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றினர்.

தி.மு.க.வின் தலைவரும், தமிழகத்தின் அன்றைய முதலமைச்சருமான கருணாநிதிக்கு விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் இலங்கை ராணுவத்துக்கு ஏற்படும் முன்னேற்றம் பற்றி அடிக்கடி விளக்கிக் கூறப்பட்டது. பிரபாகரன் கொல்லப்படுவது கருணாநிதிக்கு அறிவிக்கப்பட்டது. கருணாநிதி மதிநுட்பத்துடன் நிலைமையை உணர்ந்து, இந்த விஷயத்தில் தலையிடாமல் மெளனம் சாதித்தார்” என்று பேசினார். சுப்ரமணியம் சுவாமி கூறியிருப்பது நிஜம்தான் என்பதையும் நாம் அறிந்திருந்தோம். அதே நேரத்தில், தமிழக முதல்வர் என்ற முறையில் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இந்த விபரம் தெரிவிக்கப்பட்டாலும், அவரால் ஏதும் செய்து இதையெல்லாம் தடுத்திருக்க முடியாது என்பதும் நிஜம்தான். அது அவரிடமே கூறப்பட்டிருந்தது.

நாம் அறிந்தவரை, முடிவு மிகமிக மேல்மட்டத்தில், இந்தியாவுக்கு வெளியே எடுக்கப்பட்டது. டில்லிக்கும், தலையாட்டுவதை தவிர வேறு வழி கிடையாது. கருணாநிதிக்கு தகவல் மட்டும் சொல்லப்பட்டது, அவ்வளவுதான். அது சரி. சு.சுவாமி ஏதாவது சொன்னால் பாய்ந்து வரும் ‘உணர்வாளர்கள்’ யாரும், சுவாமியின் கொழும்பு பேச்சு தொடர்பாக வாயே திறக்கவில்லை கவனித்தீர்களா? என்ன காரணம்? “பிரபாகரன் கொல்லப்படுவது கருணாநிதிக்கு அறிவிக்கப்பட்டது” என்று சுவாமி பேசியது குறிந்து பொங்கியெழுந்தால், லாஜிக் உதைக்கும் அல்லவா?

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com