|
||||
|
104 வீரர்களுடன்
சென்றும்
வெறுங்கையோடு....
ஆசிய விளையாட்டுப்போட்டி
எழுப்பும்
கேள்விகள் சீனாவின்
ஆதிக்கத்தை
நிலைநாட்டிய
மற்றுமொரு
ஆசிய விளையாட்டுப்போட்டி
நிறைவடைந்துள்ளது. எனினும் இந்த ஆசிய விளையாட்டுப்
போட்டியின்
முடிவோடு
இலங்கை விளையாட்டின்
எதிர்காலம்
குறித்து
மிகப் பெரிய கேள்வி
எழுந்துள்ளது.
133 பேர் கொண்ட குழுவுடன்
ஆசிய விளையாட்டுப்
போட்டியில்
களமிறங்கிய
இலங்கை வெறுங்கையோடு
நாடு திரும்பியது.
இம்முறை ஆசிய விளையாட்டுப்
போட்டியில்
இலங்கை சார்பில் 29
அதிகாரிகள்
104 வீர, வீராங்கனைகள்
பங்கேற்றனர்.
இவர்கள் 22 போட்டிப்
பிரிவுகளில்
பதக்கம் வெல்வதற்கு
முயற்சித்தனர்.
ஆனால் இலங்கையினால்
ஒரு வெண்கலப்பதக்கத்தைக்கூட
வெல்ல முடியவில்லை.
இதுவரை
நடந்த 16 ஆசிய விளையாட்டுப்
போட்டிகளிலும்
பங்கேற்ற
பெருமைக்குரிய
இலங்கைக்கு
இது மிகப்பெரிய
தலைகுனிவாகும். ஆசிய
விளையாட்டுப்
போட்டி வரலாற்றில்
இலங்கை ஒரு பதக்கத்தைக்கூட
வெல்லாமல்
வெறுங்கையோடு
திரும்பும்
மூன்றாவது
சந்தர்ப்பமாகும். இதற்கும் முன்னர்
1983 ஆம் ஆண்டு
டெல்லியில்
நடந்த போட்டியிலும்
1986 ஆம் ஆண்டு
தென்கொரியாவின்
சோலில் நடந்த போட்டியிலும்
இலங்கை ஒரு பதக்கத்தைக்கூட
வெல்லவில்லை.
எனினும் விளையாட்டுத்
துறையில்
பெரும் எதிர்பார்ப்புகளுடன்
முன்னகர்ந்து
செல்லும்
இலங்கைக்கு
தன் பயணம்
குறித்து
மீள் பரிசீலனை
செய்து பார்க்கும்
சந்தர்ப்பமாக
இதனை குறிப்பிடலாம்.
இம்முறை ஆசிய விளையாட்டுப்போட்டியில்
இலங்கை சார்பில் பங்கேற்கச்
செய்த நூற்றுக்கும்
மேற்பட்ட
வீர, வீராங்கனைகள்
உண்மையிலேயே
ஆசிய தரத்தில்
உள்ளவர்களா
என்ற கேள்வி
எழுந்துள்ளது.
இதில் பங்கேற்ற
ஒரு சில
வீர, வீராங்கனைகள்
மோசமான தோல்வியை சந்தித்து
ஆரம்ப சுற்றுடனேயே
வெளியேறியதை
காணக்கூடியதாக
இருந்தது.
இவ்வாறான ஒரு மிகப்
பெரிய குழாம் ஒன்றினை பங்கேற்கச்
செய்து வீணாக ஒரு
பதக்கத்தைக்கூட
வெல்லாமல்
நாடு திரும்புவதை
விடவும், ஆசிய தரத்தில்
உள்ள ஒரு
சில வீரர்களை
மாத்திரம்
பங்கேற்கச்
செய்வதினூடே
எமக்கு சிறந்த பெறுபேறுகளை
பெறமுடியும்
என்பது ஆர்வலர்களின்
கணிப்பாகும்.
இம்முறை
ஆசிய விளையாட்டுப்
போட்டியில்
கிரிக்கெட்,
கொல்ப், தடகளம் மற்றும் பழுதூக்குதல்
போட்டிகளில்
இலங்கை பதக்கம் வெல்லும் என பெரிதும்
எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் கிரிக்கெட்டில்
இலங்கை தங்கம் வெல்லும் என்பது பலரது எதிர்பார்ப்பாக
இருந்தது.
ஆனால்
கிரிக்கெட்டில்
குறைந்தபட்சம்
எம்மால் வெண்கலப்பதக்கத்தைக்கூட
வெல்ல முடியவில்லை. ஆண்களுக்கான
கிரிக்கெட்
போட்டியின்
காலிறுதி
முதல் களமிறங்கிய
இலங்கை அணி கிரிக்கெட்டின்
கத்துக் குட்டியான
நேபாளத்திடம்
தட்டுத்தடுமாறி
வெற்றியீட்டியது.
இதன்
மூலம் அரையிறுதிக்கு
முன்னேறிய
இலங்கை அணியினால்
பங்களாதேஷை
சமாளிக்க
முடியாமல்
போனது. அரையிறுதியில் தோற்றதன்
மூலம் தங்கப்பதக்க
எதிர்பார்ப்பை
தகர்த்துக்கொண்ட
இலங்கை வெண்கலப் பதக்கத்திற்காக
பாகிஸ்தானுடன்
மோதியது.
நேபாளம்,
பங்களா தேஷையே சமாளிக்கமுடியாத
ஜெஹான் முபாரக் தலைமையிலான
இலங்கை அணி பாகிஸ்தானிடம்
தோல்வியடைந்து
பதக்க வாய்ப்பை பறிகொடுத்தது. பெண்கள் கிரிக்கட்டுக்கும்
இதே கதிதான்.
ஆசிய
போட்டிகளில்
எம்மால் எதிரணிகளுக்கு
சவால் விடக்கூடிய
ஒரே விளையாட்டு
கிரிக்கெட்தான். அதில் நாம் இதனை விடவும்
சிறந்த அணி ஒன்றை
களமிறக்கி
இருக்கலாம்.
தடகளப் போட்டிகளைப்
பொறுத்தவரை
சுசந்திக்கா
ஜயசிங்க, தமயந்தி தர்ஷா, ஸ்ரீயானி
குலவன்ச, சுகத் திரக்கரத்ன,
ரொஹான் பிரதீப் குமார ஆகிய
வீர, வீராங்கனைகளுக்கு
பின் அடுத்த
தலைமுறை ஒன்று உருவாக்கப்படவில்லை
என்பது ஆசிய விளையாட்டுப்
போட்டிகளினூடே
தெட்டத்தெளிவாகியுள்ளது.
எனினும்
இலங்கையின்
குறுந்தூர
வீரரான ஷெஹான அம்பே
பிட்டிய காயத்திற்குள்ளாகி
போட்டிகளில்
பங்கேற்க
முடியாமல்
போனதை இங்கு குறிப்பிட
வேண்டும். இதில்
பெண்களுக்கான
அஞ்சலோட்ட
போட்டியில்
வழமைபோல்
இலங்கை வீராங்கனைகள்
தடியை தவறவிட்டு
போட்டியின்
இடையிலே வெளியேறியதை
காணமுடிந்தது. இலங்கை அணி அஞ்சலோட்டப்
போட்டிகளில்
கடந்த ஒரு தசாப்தமாக
இந்த தவறை
செய்து வருகிறது.
ஆனால் இந்த தவறு சரிசெய்யப்பட்டதாக
தெரியவில்லை.
கால்ப்
போட்டிகளைப்
பொறுத்தவரை
இலங்கை வீரர்கள் திறமையைக்
காட்டினாலும்
அது கடைசி
வரை கைகூடவில்லை. பழுதூக்கும் போட்டியில்
சிந்தன விதானகே பங்கேற்காததால்
இலங்கையின்
பதக்க எதிர்பார்ப்பும்
கைநழுவியது.
இதுதவிர,
நீச்சல், பட்மின்டன்
மற்றும் ரக்பி போட்டிகளில்
இலங்கை இதனைவிடவும்
சாதித்திருக்கலாம். பொதுநலவாய போட்டியை இலங்கையில்
நடத்த தயாராகிவரும்
நிலையில்
இலங்கை விளையாட்டுத்துறை
இவ்வாறு பின்னோக்கிச்
செல்வது மிகப்பெரிய
கேள்வியை
எம்மத்தியில்
எழுப்புகிறது.
எவ்வாறாயினும்
இம்முறை ஆசிய விளையாட்டுப்
போட்டியை
மிகப்பெரிய
பாடமாக எடுத்துக்
கொண்டால்
எதிர்காலத்தில்
எம்மால் சாதிக்க முடியும் என்பது நிச்சயம். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |