|
||||
|
அடைமழை
75,000பேர் பாதிப்பு,
வன்னிப் பிரதேசம் நீரில் மூழ்கின
நாட்டின் பல பாகங்களில்
தொடர்ச்சியாகப்
பெய்துவரும்
மழை காரணமாக
நாடு முழுவதிலும்
75 ஆயிரத்திற்கும்
அதிகமானவர்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள்
70 ற்கும் அதிகமான முகாம்களில்
தங்கவைக்கப்பட்டி
ருப்பதுடன்,
வெள்ளப்பெருக்கால்
இருவர் உயிரிழந்துள்ளதாக
அனர்த்த முகாமைத்துவ
நிலையம் தெரிவித்தது.
நாடு முழுவதிலுமுள்ள
முகாம்களில்
7 ஆயிரத்துக்கும்
அதிகமானவர்கள்
தங்கவைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில்
15 முகாம்களும்,
கிளிநொச்சியில்
19 முகாம்களும்
அமைக்கப்பட்டிருப்பதுடன்,
தொடர்ந்தும்
மழை பெய்து
வருவதால்
முகாம்களின்
எண்ணிக்கை
மேலும் அதிகரிக்கலாமென
எதிர்பார்ப்பதாக
அனர்த்த முகாமைத்துவ
நிலையத்தின்
பிரதிப் பணிப்பாளர்
பிரதீப் கொடிப்பிலி
தெரிவித்தார்.
நவம்பர் 10ம்
திகதியிலிருந்து
நேற்று வரையான காலப்பகுதியில்
வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட
மக்களுக்காக
அரசாங்கம்
இடர் முகாமைத்துவ
அமைச்சின்
ஊடாக 29 மில்லியன்
ரூபாவை ஒதுக்கியிருப்பதாக
அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு
தேவையான சமைத்த உணவு, தங்குமிடம்,
குடிநீர்
மற்றும் மருத்துவம்
போன்ற உடனடித் தேவைகளுக்கு
இந்நிதி ஒதுக்கப்பட்டிருப்
பதுடன், அரசாங்க அதிபர்கள்
ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு
உதவிகள் வழங்கப்படுவதாகவும்
அவர் மேலும்
தெரிவித்தார்.
தொடர் மழையால்
வடபகுதியின்
அனைத்துப்
பகுதிகளும்
முற்றாகப்
பாதிக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக அம்பாந்
தோட்டை மாவட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி,
முல்லைத்தீவு,
யாழ்ப்பாணம்
மற்றும் மன்னார் மாவட்டங்களில்
தொடர்ச்சியான
மழை பெய்து
வருவதால்
பாதிக்கப்பட்டவர்கள்
பற்றிய சரியான தகவல்களைப்
பெறமுடியாதிருப்பதாக
அந்தந்த அரசாங்க அதிபர்கள்
தெரிவித்தனர்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு
மற்றும் மன்னாரிலுள்ள
அனைத்து நீர்ப்பாசனக்
குளங் களும் நிரம்பி
வழிவதால்
வெள்ளப் பெருக்கு மேலும் அதிகரித் திருப்பதுடன்,
மக்களுக்கு
ஏற்பட்ட பாதிப்புக்களும்
அதிகரித்துள்ளன.
மன்னார் மாவட்டத்தில்
8 ஆயிரத்துக்கும்
அதிகமான குடும்பங்கள்
வெள்ளத்தால்
பாதிக்கப்பட்டிருப்பதுடன்,
பாதிக்கப்பட்
டவர்களுக்கு
உடனடியாக
சமைத்த உணவுகளை வழங்க கிராம
சேவகர்கள்
ஊடாக நடவடிக்கை
எடுத்திருப்பதாக
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நிக்கலஸ் பிள்ளை தினகரனுக்குத்
தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பலரைப் பாதுகாப்பாகப்
பொது இடங்களில்
தங்கவைத்திருப்பதுடன்,
உடனடியா கச் சமைத்த
உணவு வழங்கப்பட்
டாலும், ஒரு வாரத்துக்கான
உலரு ணவுப்
பொருள்களை
நிவாரணமாக
வழங்க நடவடிக்கை
எடுத்துள்
ளோம். அனைத்துக் குளங்களும்
நிரம்பிவழிவதால்
வெள்ளநீர்
மேலும் அதிகரித்துள்ளது.
குளங் களிலிருந்தும்,
நீர் தேங்கியிருக்கும்
இடங்களிலிருந்தும்
நீர்ப்பம்பிகள்
மூலம் நீரை வெளியேற்றி
வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், முல்லைத்தீவு
மாவட்டத்தில்
வவுனிக்குளம்
மற்றும் தண்ணிமுறிப்புக்
குளம் ஆகியன முற்றாக
நிரம்பி வான்பாய்ந்து
வருவதால்
பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை
மேலும் அதிகரித்திருப்பதாக
முல்லைத்தீவு
அரசாங்க அதிபர் வேதநாயகன்
தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின்
தீர்த்தக்கரை
கிராமம் முற்றாக நீரில் மூழ்கியிருப்பதால்
அங்கு பாதிக்கப்பட்ட
மக்களை படகுகளில்
சென்று மீட்டுள்ளோம்.
தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் இடம்பெயர்ந்த
மக்களின்
எண்ணிக்கை
மேலும் அதிகரித்துள்ளது. சில பகுதிகளூடாக
தொடர்புகள்
பாதிக்கப்பட்டிருப்பதால்
அங்கு பாதிக்கப்பட்டவர்கள்
குறித்த தகவல்களை சரியாகப் பெறமுடியாதுள்ளது
என்றார்.
கிளிநொச்சி மாவட்டத்தில்
ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக்
காரணமாக தட்டுவன்கொட்டி
கிராமம் ஏனையயபகுதிகளுடனான
தொடர்பை இழந்துள்ளது. இக்கிராமத்தைச் சூழ வெள்ளம் நிரம்பியிருப்பதாக
கிளிநொச்சி
அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்
தெரிவித்தார்.
கிளிநொச்சியில் 2 ஆயிரத்துக்கும்
அதிகமான குடும்பங்கள்
பாதிக்கப்பட்டுள்ளன.
கண்டாவளை, கராய்ச்சி
ஆகிய பகுதிகளே
கடுமையாகப்
பாதிக்கப்
பட்டுள்ளன. பூநகரிப் பிரதேசமும்
பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப் பட்ட மக்கள் பொது இடங்களிலும்
அருகிலுள்ள
அவர்களின்
உறவினர் களுடனும் தங்க வைக்கப்பட்டுள்
ளனர். தட்டுவன்கொட்டில் கிராம மக்களுக்கு
படகுகள் மூலம் நிவார
ணங்கள் வழங்கப்படுகின்றன.
இதற் குப் பாதுகாப்புத்
தரப்பினர்
எமக்கு உதவி வருகின்றனர்
என்றும் அவர் தெரிவித்தார்.
வெள்ள நீர் அதிகரித்திருப்பதால்
யாழ் மாவட்டத்தின்
தீவுப் பகுதிகளுக்கான
போக்குவரத்துக்கள்
இடைநிறுத்தப்
பட்டுள்ளன. வேலணை, மண்கும்பான்,
அல்லைப்பிட்டி,
காக்கைதீவு
உள்ளிட்ட
தீவகப் பகுதிகளும்,
பொம்மைவெளி,
சூரியவெளி,
இருபாலை, நாவற்காடு,
பொன்னாலை,
கரவெட்டி,
சங்கானை உட்பட குடாநாட்டின்
பெரும்பாலான
பகுதிகளிலும்
வெள்ளநீர்
தேங்கியுள்ளது.
சங்கானை பிரதேச செயலாளர் பிரிவில்
1880 பேரும், யாழ்ப்பாண
பிரதேச செயலாளர் பிரிவில்
2610 பேரும், ஊர்காவற்துறை
பிரதேச செயலாளர் பிரிவில்
1724 பேரும், நெடுந்தீவு
பிரதேச செயலாளர் பிரிவில்
1245 பேரும் வேலணைப் பிரதேசத்தில்
1386 பேரும் வெள்ளத்தால்
பாதிக்கப்பட்
டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்குத்
தேவையான அனைத்து உதவிகளையும்
வழங்குமாறும்
அதிகாரிகளுக்குப்
பணிப்புரை
வழங்கியிருப்பதுடன்,
அதற்கான அனைத்து அதிகாரங்களையும்
வடமாகாண ஆளுநர் மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு
வழங்கியுள்ளார்.
வடபகுதி மாத்திரமன்றி
மட்டக்களப்பு
மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும்
பல நீர்ப்பாசனக்
குளங்கள்
நிரம்பி யிருப்பதுடன்,
தாழ் நிலங்கள்
பல வெள்ளத்தால்
நிரம்பியுள்ளன.
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |