|
||||
|
கிழக்கில் எங்கும்
வெள்ளக் காடு: மூன்று
இலட்சம் மக்கள் பாதிப்பு
அடைமழையினால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்:
வீடுகள், வயல்கள், வீதிகள் வெள்ளத்தில்
கிழக்கு
மாகாணத்தில்
பல தினங்களாக
தொடர்ச்சியாகப்
பெய்து வரும் பலத்த
மழை காரணமாக
பெருமளவான
பிரதேசங்கள்
வெள்ளத்தில்
மூழ்கியுள்ளதுடன்
சுமார் மூன்று இலட்சத்துக்கும்
மேற்பட்ட
மக்கள் கடுமையான பாதிப்புக்கு
உள்ளாகியுள்ளனர்.
மட்டக்களப்பு, அம்பாறை,
திருகோணமலை
மாவட்டங்களில்
பார்க்கும்
இடங்களெல்லாம்
வெள்ளக்காடாகவே
காட்சியளிக்கின்றன.
பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள்
வீடுவாசல்களை
இழந்து பொது இடங்களில்
தஞ்சமடைந்துள்ளன.
மக்கள் குடியிருப்புகள்,
வீதிகள், வயல் நிலங்கள்
வெள்ளத்தில்
மூழ்கியுள்ளன.
பல இடங்களில்
வீதிப் போக்குவரத்து
துண்டிக்கப்பட்டுள்ளது.
மழை இனிமேலும்
தொடருமானால்
வெள்ள நிலைமை மேலும் மோசமடையுமென
அஞ்சப்படுகிறது.
நேற்று முன்தினம்
பகல் 12 மணி
வரை மட்டக்களப்பு
மாவட்டத்தில்
பாதிக்கப்பட்டோரின்
எண்ணிக்கை
35847 ஆகும்.
இவர்கள் 81068 குடும்பங்களைச்
சேர்ந்தவர்களாவர்.
இந்த பாதிப்புத்தொகை
நேற்று மாலை மேலும்
அதிகரிக்குமென
எதிர்பார்க்கப்பட்டது.
இருபதுக்கு மேற்பட்ட
நலன்புரி
நிலையங்களில்
மட்டக்களப்பு
மாவட்டத்தில்
இடம்பெயர்ந்த
மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
1704 குடும்பங்களைச்
சேர்ந்த
6408 பேர் நலன்புரி
நிலையங்களிலும்,
10829 குடும்பங்களைச்
சேர்ந்த
41702 பேர் நண்பர்கள்,
உறவினர் கள் வீடுகளிலும்
தங்கியுள்ளனர்.
மட் டக்களப்பு
மாவட்டத்தின்
அனைத் துக் குளங்களும்
நிரம்பி வழிவதால் குளங்களை அண்டிய பிரதேசங்கள்
வாவிக்கரையோரங்களை
அண்மித்த
கிராமங்களும்
வெள்ளத்தில்
மூழ்கியு
ள்ளதாக மட்டக்களப்பு
மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம்
தெரிவித்தார்.
வெள்ளத்தினால் மட்டக்களப்பு
மாவட்டத்தின்
நிலைமை அபாயகர மாகவுள்ளதாகவும்
அரசாங்க அதிபர் கூறினார்.
மட்டக்களப்பு
மாவட்டத்தின்
பல கிராமங்களுக்கான
போக்குவரத்து
துண்டிக்கப்பட்டுள்ளதாகவும்
அக் கிராமங்க
ளுக்கான போக்குவரத்தை
நடத்த கடற் படையினரின்
உத வியை
நாடியுள்ளதாகவும்
அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
நலன்புரி
நிலையங்களில்
தங்கியு ள்ளவர்களுக்கான
சமைத்த உணவு வழங்கப்பட்டு
வருவதுடன்
சகல பிரதேச
செயலாளர்கள்,
கிராம உத்தியோகத்தர்கள்
பாதிக்கப்பட்ட
மக்களுக்கு
உதவுவதில்
ஈடுபட்டு
வருவதாகவும்,
அரச சார்பற்ற
நிறுவ னங்களும், இவர்களுக்கு
உதவி வருவதாகவும்
அரசாங்க அதிபர் மேலும் கூறினார். மட்டக்களப்பு
மாவட்டத்தின்
பிர தான
நீர்ப்பாசனக்
குளங்களான
உன்னிச்சைக்
குளத்தின்
வான் கதவுகள்,
நவகிரி, உறுகாமம், வாக னேரி
போன்ற குளங்களின்
வான் கதவுகளும்,
நேற்றுக்காலை
திறந்து விடப்பட்டதாக
பிராந்திய
நீர்ப் பாசன பணிப்பாளர்
எஸ். மோகன்
ராஜ் தெரிவித்தார்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட
பிரதேசங்களை
பிரதியமைச்சர்
விநாயகமூர்த்தி
முரளிதரன்
சென்று பார்வையிட்டார்.
நேற்று முன்தினம்
காலை முதல்
நேற்று காலை வரை
145.6 மில்லி மீற்றர் மழை மட்டக்களப்பு
மாவ ட்டத்தில்
பெய்துள்ளதாக
மட்டக்க ளப்பு வானிலை
அவதான நிலை யம்
தெரிவித்தது.
இதேவேளை அம்பாறை
மாவட் டத்தில் மழை சற்றுத்
தணித்திருந்த
போதிலும்
நேற்று முன்தினம்
முதல் அடைமழை பொழிகிறது.
இம் மாவட்டத்திலும்
பல பிரதேசங்கள்
வெள்ளத்தில்
மூழ்கியுள்ளன.
தாழ் நிலப் பிரதேச மக்கள் மேட்டு நிலப் பிரதேசங்களை
நோக்கி இடம்பெயர்ந்து
வருவ துடன்
தமது உறவினர்களில்
வீடுக ளில் தஞ்சமடைந்து
வருகின்றனர்.
கல்முனை
தமிழ் பிரிவு சாய்ந் தமருது, கல்முனை முஸ்லிம் பிரிவு, காரைதீவு, நிந்தவூர்,
அட்டாளைச்
சேனை பிரதேச
செயலாளர்
பிரிவு கள் அடைமழை
காரணமாக வெகு வாக
பாதிக்கப்பட்டுள்ளன.
பல பாடசாலைகளும்
மழை வெள்ளத்
தினால் சூழப்பட்டுள்ளன.
தொடர்ச் சியாக மழை பெய்யுமானால்
திங்கட்கிழமை
முதலாம் தவணை நடவடிக்கைகளுக்காக
பாடசாலை களை திறக்க
முடியாத சூழ்நிலை ஏற்படும் என அதிபர்கள்
தெரிவிக்
கின்றனர்.
தொடர்ச்சியாக
பெய்து வரும் அடை
மழை காரணமாக
சம்மாந்துறை
பிரதேசத்தில்
உள்ள சொறிக்கல்
முனை கிராமத்தைச்
சேர்ந்த மயான வீதியில்
உள்ள இரு
வீடுகள் இடி ந்து
விழுந்துள்ளன.
எனினும் உயி ரிழப்புக்கள்
எதுவும் ஏற்படவில்லை.
வயல் நிலங்கள்
யாவும் வெள்ள க்காடாக
காட்சியளிக்கின்றன.
குட லைப் பருவத்தில்
உள்ள வயல்
நிலங்களில்
மழை வெள்ளம்
தேங்கி நிற்பதனால்
பெரும் சேதம் ஏற்படும்
அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருமலையில்
போக்குவரத்து
துண்டிப்பு
அடைமழை
காரணமாக திருகோ ணமலை மாவட்டத்தின்
மூதூர் பிரதேசத்திற்கான
கிண்ணியா
ஊடான போக்குவரத்தும்,
திருகோணமலை
ஊடான கடற்
போக்குவரத்தும்
துண்டிக்கப்பட்டதனால்
மக்கள் பிரயாணம் செய்ய முடியாத
நிலை யில்
உள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில்
புதிய காத்தான்குடி,
பாலமுனை, பூநொச்சி முனை, கல்லடி
போன்ற பல கிராமங்கள்
வெள்ளத்தில்
மூழ்கி யுள்ளன.
பல்லாயிரக்கணக்கான மக்கள்
தமது இருப்பிடங்களை
விட்டும்
வெளியேறி
பாடசாலைகளிலும்
பள்ளிவாயல்களிலும்
உறவினர்களின்
வீடுகளிலும்
தஞ்சமடைந்துள்ளனர்.
பாடசாலைகள் வெள்ளத்தில்
மூழ் கிக்
கிடக்கின்றன.
அம்பாறை
மாவட்டத்தில்
இன் னும்
சில வாரங்களில்
அறுவடை க்காக காத்திருந்த
பல்லாயிரக்கணக்
கான ஏக்கரில்
செய்கை பண்ணப் பட்ட வேளாண்மைப்
பயிர்கள்
வெள்ளத்தில்
மூழ்கியுள்ளன.
அக்கரைப்பற்று,
அட்டாளைச்
சேனை, நிந்தவூர்,
காரைதீவு,
சாய் ந்தமருது,
கல்முனைக்குடி,
கல் முனை,
மருதமுனை
நற்பிட்டி
முனை, உகனை
போன்ற பிரதேசங் களில் உள்ள
பல நூற்றுக்கணக்கான
மக்களின்
குடியிருப்புகள்
வெள்ள நீரினால் சூழப்பட்டுள்ளன.
பிரதான வீதிகள்
மற்றும் கிராம ப்புற
வீதிகள் பல நீரில்
மூழ்கியு
ள்ளதால் போக்குவரத்துக்கள்
ஸ்தம் பிதம் அடைந்துள்ளன.
தொழிலாளர்கள்
வருமானம்
இழப்பு
மீனவர்கள் மற்றும்
ஏனைய தொழிலாளர்கள்
தொழிலுக்குச்
செல்லவில்லை.
இதனால் அவர்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
-கிxஞி வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட
வர்களுக்கு
உலருணவு அடங்கிய நிவாரணப் பொதிகளை உடனடி யாக
வழங்க மீள்குடியேற்ற
அமை ச்சு
நடவடிக்கை
எடுத்துள்ளது.
வெள்ளப்
பிரதேசங்களுக்குச்
சென்ற பிரதியமைச்சர்
விநாயக மூர்த்தி முரளிதரன்
கோறளைப்பற்று
மேற்கு பிரதேச செயலகத்தில்
நடைபெற்ற
விசேட கூட்டத்தில்
இதனைத் தெரிவித்தார்.
மின்னல்
தாக்கி பெண் காயம்
மட்டக்களப்பு மாவட்டத்தில்
மின்னல் தாக்கத்திற்கு
ஒரு பெண்
பலியாகி உள்ளதுடன்
பலர் காயத்துக்குள்ளாகியுள்ளனர்.
திருப்பெருந்துறையைச் சேர்ந்த
திருமதி நேசத்துறை
வயது 50 என்ற
பெண்மணியே
பலியாகியுள்ளார்.
மட்டக்களப்பு,
காத்தான்குடி,
ஆரையம்பதி,
சிகரம், நாவற்குடா,
கல்லடி, பூநொச்சிமுனை,
முகத்து வாரம், செங்கலடி,
களுவாஞ்சிகுடி,
குருக்கள்
மடம், வாழைச்சேனை,
ஏறாவூர், சித்தாண்டி
ஆகிய பகுதிகள்
யாவும் வெள்ளத்தில்
மூழ்கியுள்ளன.
மட்டக்களப்பு
மாவட்டத்தில்
2 இலட்சத்து
50 ஆயிரத்திற்கு
மேற் பட்ட
மக்கள் பாதிக்கப்பட்டு
ள்ளதா கவும் சுமார்
ஐயாயிரத்திற்கு
மேற் பட்டோர்
இடம்பெயர்ந்து
ள்ளதாகவும்
மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
ஏறாவூர் நகர பிரதேசம் முழுமையாக
நீரில் மூழ்கியுள்ளது.
போக்குவரத்துச் சிரமங்கள்
எதிர்நோக்கப்படுகின்றன.
வாகரை,
கிரான், வாழைச்சேனை,
ஓட்டமாவடி,
ஏறாவூர்ப்
பற்று, ஏறாவூர் நகர் காத்தான்குடி
மற்றும் வவுணதீவு போன்ற பிரதேச
செயலகப் பிரிவுகளிலும்
நூற்றுக்கண
க்கான கிராமங்கள்
வெள்ளத்தில்
மூழ்கியுள்ளன. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |