Contact us at: sooddram@gmail.com

 

மோசடி மூலம் ஆளுங்கட்சிக்கு வெற்றி! ரஷ்ய மக்கள் ஆவேசம்

டிசம்பர் 4 ஆம் தேதியன்று நடைபெற்ற ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் ஏராளமான மோசடிகள் நடந்துள்ளன என்று அனைத்துக்கட்சிகளும் குற்றம் சாட்டியுள்ளன. திங்களன்று வெளியான முடிவுகளின்படி ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சிக்கு 238 இடங்களும், ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 92 இடங்களும், ஜஸ்ட் ரஷ்யா கட்சிக்கு 64 இடங்களும், லிபரல் ஜனநாயகக் கட்சிக்கு 56 இடங்களும் கிடைத்துள்ளன. களத்தில் இருந்த மற்ற மூன்று கட்சிகளும் குறைந்தபட்சத் தேவையான மூன்று விழுக்காடு வாக்குகளைப் பெறவில்லை என்பதால், அக்கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் இடங்கள் கிடைக்கவில்லை. கடந்த தேர்தலில் 315 இடங்களைப் பெற்றிருந்த ஆளுங்கட்சி தற்போது 238 இடங்களை மட்டுமே பெற்றுள்ளதோடு, மொத்த வாக்குகளில் 50 விழுக்காடு வாக்குகளை எட்ட முடியவில்லை.

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் இது ஆளுங்கட்சி வேட்பாளர் விளாடிமீர் புடினுக்கு நெருக்கடியைத் தரும் என்று கூறப்படுகிறது. இத்தனைக்கும் இந்த 49 விழுக்காடு வாக்குளையோ, வாக்குச்சாவடி மோசடிகள், பிரச்சாரத்திற்கு அரசு எந்திரப் பயன்பாடு, அதிகார வர்க்கத்தின் மிரட்டல்கள் போன்றவற்றின் உதவியால்தான் பெறமுடிந்தது. ஆளுங்கட்சியின் மோசடிகளை எதிர்த்து ரஷ்ய மக்கள் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர். தலைநகர் மாஸ்கோ உள்ளிட்ட நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் பெரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். மக்களைக் கட்டுப்படுத்த கலவரத்தடுப்பு காவல்துறையை ரஷ்ய அரசு இறக்கி விட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான காவல்துறையினர் இரவும், பகலும் ஆயுதங்களோடு நாட்டின் வீதிகளில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

குண்டர்களும் குவிப்புமக்களின் போர்க்குரலை ஒடுக்க காவல்துறையினரை இறக்கி விட்டதோடு நிற்காமல், ஆளுங்கட்சியும் தனது தரப்பில் குண்டர்களையும் நிறுத்தியுள்ளது. போராடும் மக்களுக்கு எதிர்ப்போராட்டம் நடத்துகிறோம் என்ற பெயரில் தாக்குதல் நடத்தும் வேலைகளில் அவர்கள் இறங்கியிருக்கிறார்கள். ஆளுங்கட்சி வெற்றியைக் கொண்டாடும் நிகழ்ச்சிகள் என்று கூறி எதிர்க்கட்சியினரையும், மோசடிகளை எதிர்க்கும் மக்களையும் ஒடுக்கும் பணி இவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒரு புறம் காவல்துறையினர், மறுபுறத்தில் ஆளுங்கட்சி இறக்கி விட்டிருக்கும் குண்டர்கள் என்று போராடும் மக்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது.

ஆளுங்கட்சிக்காக வன்முறையில் ஈடுபடும் குண்டர்களைக் கைது செய்யாமல், போராடும் மக்களைக் கைது செய்வதில் காவல்துறை கவனம் செலுத்துகிறது. மாஸ்கோவில் ஆர்ப்பாட்டம் நடத்திய 250 பேரைக் கைது செய்து காவல்துறை அழைத்துச் சென்றது. வெட்கப்படுங்கள் பாசிஸ்டுகளே என்றும், புடின் இல்லாத ரஷ்யா என்றும் அரசு எதிர்ப்பாளர்கள் முழக்கமிட்டனர். இது ஒரு நாள் நடந்து முடியும் நிகழ்வல்ல. ஆர்ப்பாட்டங்கள் தொடரும், மோசடிகள் அம்பலமாகும் வரை போராட்டம் நடக்கும் என்று எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.

இதற்கிடையில், குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க விரும்பும் அமெரிக்கா, ரஷ்யத் தேர்தல் மோசடிகள் பற்றி முழுமையாக விசாரணை நடக்க வேண்டும் என்று கோரியுள்ளது. அந்நியத் தலையீடு தேவையில்லை என்று அரசு எதிர்ப்பாளர்களே அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்கள். ஆர்ப்பாட்டங்கள் சட்டவிரோதமானவை என்று ரஷ்ய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தடைகளை மீறி ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

கம்யூனிச எதிர்ப்பு வெறிப்பிரச்சாரம்

கம்யூனிஸ்ட் கட்சி கருத்து

ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை யொன்றை வெளியிட்டுள்ளது. அதில், டிசம்பர்4 ஆம் தேதி யன்று புதிய நாடாளுமன்றத் தைத் தேர்வு செய்ய வாக்குப் பதிவு நடந்தது. அதிகாரபூர்வ மான முடிவுகள் இன்னும் சில நாட்களில் வெளியாகும். 2007 ஆம் ஆண்டு நடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில், கணிசமான முன்னேற்றத்தை கம்யூனிஸ்ட் கட்சி கண்டுள்ளது. புதிய நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 92 இடங்கள் கிடைத்துள்ளன. 2007 ஆம் ஆண்டில் 57 இடங்கள் மட்டுமே இருந்தன.

பிரச்சாரத்தின்போது அரசு எந்திரம் ஆளும் கட்சிக்குச் சாதகமாகப் பயன்படுத்தப்பட்டது. கம்யூனிஸ்ட் எதிர்ப்பு வெறிப்பிரச்சாரம் நடந்தது. வாக்குச்சாவடிகளில் ஏராளமான மோசடிகள் ஆளுங்கட்சியால் அரங்கேற்றப்பட்டது. ஐக்கிய ரஷ்யா என்ற அரசியல் கட்சியை மட்டுமல்ல, ரஷ்யாவின் அரசு எந்திரம், அதிகார வர்க்கம் ஆகியவற்றையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நாடாளுமன்றத் தேர்தலோடு 27 மாகாணங்களுக்கான தேர்தலும் நடந்தது. வோல்கோகிராடு, லெனின்கிராடு, மாஸ்கோ, நோவ்கோராட் உள்ளிட்ட பெரிய மாகாணங்களில் வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. அங்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்குகள் அதிகரித்துள்ளன. இறுதி
முடிவுகள் வந்தபிறகு விரிவான அறிக்கையை கட்சி வெளியிடும் என்று கூறப்பட்டுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com