Contact us at: sooddram@gmail.com

 

மக்கள் எழுச்சி

அடுத்தது சவூதி அரேபியா?

துனீசியாவில் துவங்கி பல்வேறு நாடுகளில் எழுந்த எழுச்சியால் ஆட்சியாளர்கள் மாறியுள்ளனர். அவர்களின் கொள்கைகளில் மாற்றம் ஏற்படவில்லை என்றாலும், ஆட்சி மாற்றங்கள் அடுத்தடுத்துள்ள நாட்டு மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. பஹ்ரைன் போன்ற நாடுகளில் மக்கள் போராடியபோது, போராட் டத்தை ஒடுக்க சவூதி அரேபியா வின் மன்னர் அரசு அங்கு தங்கள் ராணுவத்தைஅனுப்பி வைத்தது. சிரியாவில் உள்நாட்டு கலகத்தை உருவாக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு ஆதரவும் அளித்தது. சொந்த நாட்டில் எந்தவிதமான ஜனநாயக உரிமைக்கும் இடம் தராமல் பார்த்துக் கொள்ளும் சவூதி மன்னருக்கு எதிராகவும் போராட்டங்கள் நடந்தன. இந்தப் போராட்டங்களின் மீதான அடக்குமுறைகள் செய்திகளாக வில்லை.

இத்தகைய நிலைமை இருந்தும் சவூதி அரேபியாவில் மீண்டும் மக்கள் போராடத் துவங்கியுள்ளனர். குறிப்பாக, அந்நாட்டின் கிழக்குப்பகுதியில் லட்சக்கணக்கான மக்கள் மன்னராட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பி வருகிறார்கள். ஏற்கெனவே போராட்டங்கள் நடந்தபோது, அதில் பங்கேற்ற மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி பாதுகாப்புப் படையினர் வெறியாட்டம் நடத்தினர். இந்த அடக்குமுறையால் மக்கள் அச்சத்தால் போராட்டங்களில் பங்கேற்க மாட்டார்கள் என்பது சவூதி அரேபியா மன்னரின் கருத்தாகும். அக் கருத்தைத் தகர்க்கும் வகையில் கிழக்குப்பகுதியில் உள்ள அவாமியா என்ற நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. தியாகிகளுக்கு விசுவாசம் காட்டுவோம்என்ற முழக்கமடங்கிய அட்டைகளுடன் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் போராட்டங்கள் மீது அரசுத்தரப்பில் நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்களால் பலர் கொல்லப்பட்டனர். இது அவா மியா மற்றும் காடிப் ஆகிய நகரங் களில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. அதேவேளையில், நாட்டின் கிழக்குப்பகுதியில் ஏராளமான ராணுவத்தினரைக் கொண்டு வந்து அரசு குவித்தது. இந்தக்குவிப்பு மக்கள் மத்தியில் இருந்த ஆத்திரத்தை அதிகப்படுத்தியது. தங்களின் மனித உரிமை, பேச்சுரிமை மற்றும் அரசியல் கைதிகள் விடுதலை போன்றவற்றோடு ராணுவம் கிழக்குப்பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைக்கத் துவங்கியிருக்கிறார்கள். பிப்ரவரி மாதத்திலிருந்து 160 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை எதுவுமில்லாமல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவாமியா நகருக்கு அடுத்தபடியாக காடிப் நகரம்தான் அரசுக்கு எதிராகத் தீவிரமான போராட்டங்களைக்கண்டு வருகிறது.

கடந்த மாத இறுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது ஒன்பது வயது சிறுமியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். அதே தாக்குதலில் மேலும் இருவர் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைகளுக்கு குறைந்தபட்ச வருத்தம் கூட மன்னர் நிர்வாகத்தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், மக்களின் போராட்டங்கள் சட்டவிரோதம் என்ற அறிவிப்பை மீண்டும் வெளியிட்டுள்ளார்கள். பிப்ரவரி மாதத்தில் மக்கள் போராடத்துவங்கினர். அதற்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகியதால், இத்தகைய போராட்டங்கள் சட்டவிரோதம் என்றும், இதைத்தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க நிர்வாகத்துக்கு அனுமதி என்றும் சவூதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

போராட்டம் பரவும்கிழக்குப்பகுதியில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள் போராடி வந்தாலும், நாட்டின் மற்ற பகுதிகளிலும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் துவங்கியுள்ளன. மேற்கு ஆசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் துவங்கிய போராட்டங்கள், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என்று பரவின. தற்போது மீண்டும் துவங்கிய இடத்திற்கே புதிய எழுச்சியுடன் போராட்டம் வந்துள்ளது. ஆட்சியாளர்கள் அகற்றப்பட்ட நாடுகளின் பட்டியலில் அடுத்ததாக இடம் பெறப் போவது சவூதி அரேபியாதான் என்கிறார்கள் போராடி வரும் குழுக்களின் தலைவர்கள்.

கிழக்கில் ராணுவமயம்

சவூதி அரேபியாவில் அவாமியா மற்றும் காடிப் உள்ளிட்ட பல்வேறு நகரங்களின் வீதிகளில் பீரங்கிகள் உள்ளிட்ட பல்வேறு ராணுவ வண்டிகள் மற்றும் நவீன ஆயுதங்களைத் தாங்கிய ராணுவத்தினர் வலம் வரும் காட்சிகள் அதிகரித்துள்ளன. இந்த அச்சுறுத்தல்களை மீறி பாதுகாப்புப் படையினரால் கடந்த மாதத்தில் கொல்லப்பட்ட ஐந்து பேரின் படங்களை ஏந்தியவாறு ஏராளமான மக்கள் ஒவ்வொரு நாளும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்று வருகிறார்கள். பிப்ரவரி மாதத்திலிருந்து கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 160 பேரைத் தாண்டி, பல்வேறு காரணங்களைக் காட்டி கைது செய்யப்பட்டு ஆயிரக்கணக்கானவர்கள் ஏற்கெனவே சிறைகளில் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் மீது இன்னும் குற்றமே சாட்டப்படவேயில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது விசாரணை நடைபெறவில்லை. இந்த விபரங்களை அம்னெஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட பல மனித உரிமை அமைப்புகள் வெளியிட்டுள்ளன. சுமார் 30 ஆயிரம் பேர் வரை சவூதி அரேபிய சிறைகளில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com