|
||||
|
முல்லைப்பெரியாறு
அணை பிரச்சினை;
தமிழகம், கேரளாவில்
பதற்றம் முல்லை
பெரியாறு
அணை பிரச்சினையில்
மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கு
தி.மு. க சார்பில்
இன்று உண்ணாவிரதம்
15ந் திகதி மனிதச் சங்கிலி போராட்டம்
நடத்தப்படும்
என்று கருணாநிதி
தலைமையில்
நடைபெற்ற
தி.மு. க செயற்குழு
கூட்டத்தில்
தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
தி.மு.க தலைமை செயற்குழு
அவசர கூட்டம்
சென்னை அண்ணா அறிவாலயம்
கலைஞர் அரங்கில் கூடியது. கூட்டத்திற்கு தி.மு. க தலைவர்
கருணாநிதி
தலைமைதாங்கினார்.
பொருளாளர் மு. க. ஸ்டாலின், பொதுச் செயலாளர் பேராசிரியர்
அன்பழகன்,
துணை பொதுச்
செயலாளர்கள்
சற்குணபாண்டியன்,
துரைமுருகன்,
வி. பி. துரைசாமி, முதன்மை
செயலாளர்
ஆற்காடு வீராசாமி, மத்திய மந்திரிகள்
ஜெகத்ரட்சகன்,
பழனி மாணிக்கம்,
எம். பிக்கள் டி.ஆர்.
பாலு, டி.கே. இளங்கோவன், நடிகை குஷ்பு, நடிகர் குமரிமுத்து,
திண்டுக்கல்
லியோனி உள்பட கட்சியின்
செயற்குழு
உறுப்பினர்கள்,
சிறப்பு அழைப்பாளர்கள்
பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட
தீரமானம்
வருமாறு:- முல்லை பெரியாறு அணை பிரச்சினையில்
நீதிமன்ற
நடவடிக்கைக்குப்
புறம்பாக
திடீரென கேரளாவில்
உள்ள ஒரு
சிலர் அரசியல் நோக்கில் மேற்கொண்ட
செயல்பாடுகளின்
காரணமாக கேரள, தமிழக
மாநிலங்களில்
உள்ள எல்லை
மாவட்டங்களில்
பரபரப்பும்
பதற்றமுமான
சூழ்நிலை
ஏற்பட்டுள்ளது.
இரு மாநிலங்களுக்கிடையே
பாரம்பரியமாகப்
பல முனைகளிலும்
பேணப்பட்டு
வரும் பன்னொடுங்கால
உறவும், நட்பும் மனித நேயமும்
பங்கப்பட்டு
விடுமோ என்ற அச்ச
உணர்வு நாட்டு நலனில் அக்கறை உள்ள அனைவரது
உள்ளங்களிலும்
எழுந்துள்ளது.
ஒரு
கணம் சிந்தித்துப்
பார்த்தால்,
தமிழகத்துக்கும்
கேரள மாநிலத்துக்கும்
உள்ள வரலாற்று
ரீதியான உறவு எவ்வளவு
வலுவானது
உண்மையானது
என்பதை உணர்ந்திட
முடியும். மூவேந்தர்களில் சேர மன்னர்கள்
கேரளத்தைச்
சேர்ந்தவர்கள்.
சமூகச் சீர்திருத்தச்
சிந்தனையாளர்கள்
கேரளத்தைச்
சேர்ந்தவர்கள்,
தமிழகத்திலும்
தமிழகத்தைச்
சேர்ந்தவர்கள்
கேரளத்திலும்
பெரிதும்
மதித்து போற்றப்பட்டு
வருகிறார்கள்.
கேரளத்தைச்
சார்ந்த டொக்டர் டி. எம். நாயர் திராவிட
இயக்கத்தின்
முன்னோடிகளில்
ஒருவர். இத்தகைய உன்னத உறவும் நினைவுகளும்
என்றென்றைக்கும்
நின்று நிலைத்திட
வேண்டுமேயல்லாமல்
அதை யாரும்
சீர்குலைத்திட
அனுமதிக்கலாகாது.
தி.மு. கழகம் 2006 ஆம் ஆண்டு அன்
றைய முதல்
அமைச்சர்
என்ற முறையில்
தமிழக அனைத்துக்
கட்சித் தலைவர்களின்
கூட்டத்தை
தி. மு.க தலைவர் கருணாநிதி
கூட்டியபோது,
அ. தி. மு. சார்பில் இன்று அமைச்சர்களாக
இருக்கும்
ஒ. பன்னீர்செல்வமும்
கே. ஏ. செங்கோட்டையனும்
கலந்துகொண்டார்கள்.
அந்தக் கூட்டத்தில்
நிறைவேற்றிய
தீர்மானத்தில்
'முல்லைப்
பெரியாறு
பிரச்சினை
குறித்து
தமிழக அரசின் சார்பாக எடுத்து வைத்த நியாயங்களை
ஏற்றுக்கொண்டு
உச்ச நீதிமன்றம்
அளித்த தீர்ப்பினை
நிறைவேற்றுவதற்கு
முன் வராத
கேரள அரசின்
போக்கைச்
சுட்டிக்
காட்டி, உச்ச நீதிமன்றம்
தெரிவித்த
கருத்தின்
அடிப்படையில்
நல்லெண்ண
சமிக்ஞையாக
மத்திய அரசு முன்னிலையில்
தமிழக அரசு கேரள
அரசுடன் பேச்சுவார்த்தை
நடத்த இக்கூட்டம்
இணக்கம் தெரிவிக்கிறது
உச்ச நீதிமன்றம்
ஏற்கனவே 27.
2. 2006ல் பிறப்பித்த
உத்தரவான
அணையின் நீர் மட்டத்தை
136 அடியிலிருந்து
142 அடிக்கு
உயர்த்திக்
கொள்ளலாம்
என்பதை நடை முறைப்படுத்த
வேண்டுமென்று
உத்தரவளிக்
குமாறு முறையீடு செய்துகொள்வதென்று"
கேட்டுக்
கொண்டோம்.
இரு மாநிலங்களும்
தமது சமூக
பொருளாதார
வாழ்வு மேம்பாட்டுக்கு
ஒன்றையொன்று
சார்ந்தே
இருந்திட
வேண்டும்
என்பது இயற்கையாகவே
பூகோள ரீதியாக உருவாகியுள்ள
நிலைமை ஆகும். எனவே இரு மாநிலங்களுக்கும்
இடையிலான
உறவுப் பாலங்கள், ஒன்றையொன்று
சார்ந்திருக்க
வேண்டிய கட்டாயம் ஆகியவற்றை
கருத்தில்
கொண்டு, பிரச்சினைகளை
அணுகுவதற்கு
மாறாக குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக,
நீண்ட நெடிய வரலாற்று
அடிப்படையிலான
உறவைக் காயப்படுத்திட
எண்ணினால்,
வரலாறு நிச்சயம் மன்னிக்காது
என்பதை அருகருகே உள்ள இரண்டு
மாநிலங்களின்
மக்களும்
குறிப்பாக
அரசியலாளர்களும்
கருத்தில்
கொண்டு செயல்பட வேண்டுமென்று
தி.மு.க செயற்குழு
வற்புறுத்திக்
கேட்டுக்கொள்கிறது.
தி.மு.க வின் இந்த
நோக்கங்களையும்,
கருத்துக்களையும்
வலியுறுத்திடும்
வண்ணம் மத்திய அரசின் உடனடியான கவனத்தை ஈர்ப்பதற்கும்,
இன்று தமிழகத்தில்
உள்ள அனைத்து
மாநகரங்களிலும்,
நகரங்களிலும்,
காலை 8 மணி
முதல் மாலை 5 மணி
வரையில் ஒருநாள் உண்ணா விரதத்தில்
ஈடுபடுவதென்றும்
அதற்கடுத்து
15ந் திகதி
(வியாழக்கிழமை)
முல்லைப்பெரியாறு
அணையினால்
பாசன வசதி
பெறும் தேனி, மதுரை,
சிவகங்கை,
திண்டுக்கல்,
ராமனாதபுரம்
மாவட்டங்களில்
மாலை 3 மணி
முதல் 5 மணி வரை
மாபெரும்
'மனிதச் சங்கிலி' அணி வகுப்பு
நடத்துவதென்றும்
இச் செயற்குழு
முடிவு செய்கிறது.
இவ்வாறு தீர்மானத்தில்
கூறப்பட்டுள்ளது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |