Contact us at: sooddram@gmail.com

 

நாளை மறுதினம் யாழில் ஆர்ப்பாட்டம்

ஜனநாக செயற்பாடுகளில் இராணுவம் தலையிடக்கூடாது

மாணவர்களினதும், பொதுமக்களினதும் ஜனநாயக செயற்பாடுகளில் இராணுவத்தினரும், பொலிஸாரும் தலையிடக் கூடாது என வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து நாளை மறுதினம் 4 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளன. இது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் துணைச் செயலாளர் சி.வி.கே.சிவஞானம் தெரிவிக்கையில், மாணவர்களினதும் பொதுமக்களினதும் ஜனநாயக செயற்பாடுகளில் இராணுவத்தினரும் பொலிஸாரும் தலையிடக் கூடாது எனக்கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டப் பேரணியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் இணைந்து செயற்படுவார்கள்.

தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் நேற்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த மாதம் 27 திகதி இராணுவத்தினரும், பொலிஸாரும் பல்கலைக்கழகத்தினுள் அத்துமீறி பிரவேசித்து பல்கலைக்கழக மாணவர், மாணவியர்களைத் தாக்கியுள்ளனர். மறுநாள் பல்கலைக்கழக மாணவர்கள் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து நடாத்திய அமைதியான செயற்பாட்டை மேற்கொண்டபோது அதனை குழப்பியதுடன் கண்மூடித்தனமாக அவர்களைத் தாக்கியும் உள்ளனர். அத்துடன் இந்தச் சம்பவங்களை பார்வையிடச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கடமைகளைச் செய்யவிடாது தடுக்கப்பட்டார். செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதனை கண்டிக்கும் முகமாக எதிர்வரும் திங்கள் கிழமை மூன்றாம் திகதி ஓர் அமைதியான போராட்டத்தை நடாத்துவதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கடந்த இருபத்தோழாம் திகதியே அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.

மரணித்த எமது உறவுகளை நினைவுகூர்வதை தடுப்பதற்கு எவருக்கும் எந்த நியாயமுமில்லை. இதே நேக்கத்துக்காக எதிர்வரும் செவ்வாக்கிழமை நான்காம் திகதி ஓர் ஆர்ப்பாட்டம் பேரணியை நடாத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவிப்பு விடுத்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில் இந்த நடவடிக்கையை ஒரே நாளில் ஒருங்கிணைந்து நடாத்துவதே பொருத்தமானதாகவும், வினைத்திறனானதாகவும் இருக்குமெனவும் கருதப்படுவதால் எல்லோரும் சேர்ந்த நாளை மறுதினமே நடத்த வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே கட்சி மற்றும் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் சகல பொதுநிறுவனங்களும், பொது அமைப்புகளும், பொதுமக்களும் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்துகொண்டு, யாழ்ப்பாண பல்கலைக்கழக செயற்பாடுகளில் இராணுவமும் பொலிஸாரும் தலையிட்டதை கண்டிப்பதும் அவ்வாறான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டுமெனவும் கோருவதுடன் பல்கலைக்கழக மாணவர்களதும் பல்கலைக்கழகத்தினதும் சிவில் சமூகத்தினதும் ஜனநாயக செயற்பாடுகிலும் இராணுவமும் பொலிஸாரும் தலையிடக் கூடாது எனவும் கோரி நிற்க ஒன்று சேர வேண்டுமென தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வேண்டிக்கொள்கிறது.


மேலும்
கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளரையும் மாணவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும் நாம் கோருகிறோம் என்றார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com