Contact us at: sooddram@gmail.com

 

தமிழ்க் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் -  ிந்துமுன்னாள் ஆசிரியர் ராம்

இலங்கை அரசாங்க படைகளுக்கும் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளுக்கும் இடையிலான யுத்தம் நடந்து கொண்டிருந்த போது இந்திய அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் யுத்த நிறுத்தம் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று கேட்கவில்லை என்று இந்தியாவின் முன்னணி ஆங்கில தினசரியான ஹிந்து பத்திரிகையின் முன் னாள் ஆசிரியரும், இந்த பத்திரிகை நிறு வனத்தை கட்டுப்படுத் தும் கஸ்தூரி அன் சன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளருமான என். ராம் தெரிவித்தார். தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் எல்.ரி.ரி.ஈ.க்கு இருந்து வந்த ஆதரவு அவ்வியக்கம் எடுத்த இரண்டு தவறான முடிவுகளினால் சீர்குலைந்து போனது. 1987ல் இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக எல்.ரி.ரி.ஈ.யினர் யுத்தத்தை ஆரம்பித்தது முதலாவது தவறாகும். அதையடுத்து, 1991ம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்தது அவர்கள் இழைத்த இரண்டாவது குற்றமாகும்.

இவ்விரண்டு காரணங்களினால் இந்திய மக்கள் குறிப்பாக தமிழ் நாட்டு மக்கள் எல்.ரி.ரி.ஈயை வெறுக்க ஆரம்பித்து அவ்வியக்கத்திற்கு எவ்வித ஆதரவையும் கொடுக்க மறுக்கிறார்கள் என்று ராம் மேலும் தெரிவித்தார்.

சென்னையில் ஊடகவியலாளர் ஆசிய கல்லூரிக்கு இலங்கையில் இருந்து சென்ற ஊடகவியலாளர் மத்தியில் உரை யாற்றிய ராம், ஜனாதிபதி மஹிந்தராஜ பக்ஷவின் அரசாங்கத்தைப் போன்று இலங்கையில் கடந்த காலத்திலும் எதிர் காலத்திலும் மக்கள் ஆதரவுமிக்க ஓர் அரசாங்கம் உருவாகப் போவதில்லை. எனவே, இந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாட்டின் இனப்பிரச்சினைக்கு ஜனாதிபதி அவர்கள் ஒரு சிறந்த அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தமிழ் நாட்டு மக்கள் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்று ஏற்படுவது அவசியமென்று கருதுகிறார்கள் என்று தெரிவித்த ராம், பொல்பொட் போன்ற சர்வாதிகாரியின் போக்கில் எல்.ரி.ரி.ஈ. மனிதர்களை ஈவிரக்கமற்ற முறையில் படுகொலை செய்தது.

அன்று எல்.ரி.ரி.ஈக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தக்கூடாதென்று அடங்கிப் போன தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களுக்கு இப்போது பூரண சுதந்திரம் இருப்பதனால் அவர்கள் போலி சாக்கு போக்குகளைக் காட்டி பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு முட்டுக்கட்டைகளை விதிக்காமல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்குவது அவசியம் என்று கூறினார்.

தமிழ் நாட்டில் டெசோ மாநாட்டுக்கு தலைமை தாங்கிய கலைஞர் அவர்கள் தமிழர் பிரச்சினைக்கு தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கு மக்களின் அபிப்பிராய வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்திருப்பது செயல் படுத்தப்பட மாட்டாதென்றும் வெறுமனே மேடைப் பேச்சுகளை செய்து மக்களை கவர்வதற்காகவே இத்தகைய கருத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தினர் வெளியிட்டுள்ளார்கள் என்று தெரிவித்தார்.

சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, தமிழர்களுக்கான சுதந்திரத்தை வென்றெடுக்கும் நோக்கத்துடன் ஆயுதப் போராட்டத்தில் இறங்கிய எல்.ரி.ரி.ஈயினர் சிங்களவர்களை கொன்ற எண்ணிக்கையை விட அவர்கள் கையில் ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை பன்மடங்கு என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு தடவை இலங்கையில் நிலை கொண்டிருந்த இந்திய அமைதி காக்கும் படைக்கு தலைமை தாங்கிய லெப்டினட் ஜெனரல் திபேந்திர சிங், எல்.ரி.ரி.ஈ. பயங் கரவாத யுத்தம் மேலும் 30 வருடங்களுக்கு நீடிக்கும் என்றும் இராணுவத்தைச் சேர் ந்த தாங்கள் தங்களுக்கு பிறப்பிக்கப்படும் கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டுமென் றும் இந்து பத்திரிகைக்கு அன்று கூறி யிருந்ததை ராம் ஞாபகப்படுத்தினார்.

இலங்கை தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை போடும் மிகப் பெரிய சாபக்கேடாக புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகள் இருந்து வருகின்றன என்று தெரிவித்த ராம், சர்வதேச ஊட கங்கள் ஒரு தலைப்பட்சமாக செயற்படுவ தாகவும் அவற்றில் பல எல்.ரி.ரி.ஈயை நேரடியாக ஆதரிக்கின்றன என்றும் கூறினார்.

அர்ஜூன ரணதுங்க ஒவ்வொன்றுக்கும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகிறார்ரென்று தெரிவித்த ராம், அர்ஜூன ஒரு சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் என்பதை தாம் ஏற்றுக் கொள்வதாகவும் ஆனால், அவர் ஒரு நல்ல அரசியல்வாதி யல்ல என்பதையும் சுட்டிக்காட்டினார்.

ஊடகவியலாளர்களுக்கான ஆசிய கல்லூரியில் இலங்கையைச் சேர்ந்த ஊடகத்துறையில் ஆர்வமுடையவர்களுக்கு தாங்கள் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க விரும்புவதாகவும் இதற்கென வருடத்திற்கு விரல்விட்டு எண்ணக்கூடிய சிலருக்கு புலமைப்பரிசில்களை பெற்றுக் கொடுப் பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராம் மேலும் அறிவித்தார்.

இந்நிகழ்வில், ஊடகவியலாளருக்கான ஆசியக் கல்லூரியின் தலைவரும், பிரபல சர்வதேச ஊடகவியலாளருமான சசிக்குமார், மற்றும் இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் ஆர். கே. எம். ஏ. ராஜகருண ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com