|
||||
|
தென்னாபிரிக்க சுதந்திர போராட்ட மாவீரர் நெல்சன் மண்டேலா காலமானார்
எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை
இறுதிக் கிரியைகள்
நடைபெறும்
95ஆவது
வயதில் குடும்ப உறுப்பினர்கள்
சூழ்ந்திருக்கையில்
உயிர் பிரிந்தது
ஐ.நா. செயலாளர்
நாயகம் உட்பட உலகத்
தலைவர்கள்
அனுதாபம்
தென்
ஆபிரிக்காவில்
நிறவெறி ஆட்சியை ஒழித்து கறுப்பின மக்களுக்கு
அதிகாரம்
பெற்றுத்
தந்த நெல்சன்
ரொலிஹ்லஹ்லா
மண்டேலா தனது 95 வயதில்
காலமானார். தென்னாபிரிக்காவில் குலு கிராமத்தில்
1918 ஆம் ஆண்டு
ஜுலை 18 ஆம்
திகதி பிறந்த மண்டேலா, தனது 95 வது
வயதில் ஜோகன்ஸ்பர்க்
நகரில் உள்ள அவரது
இல்லத்தில்
காலமானதை
தென்னாபிரிக்க
ஜனாதிபதி
ஜேக்கப் ஜுமா தொலைக்காட்சி
மூலம் உலக நாடுகளுக்கு
நேற்று அறிவித்தார். நுரையீரல்
தொற்று நோய் காரணமாக
கடந்த ஜூன் மாதம்
பிரிட்டோரியா
மருத்துவமனையில்
மண்டேலா அனுமதிக்கப்பட்டார். மண்டேலாவின்
உடல் நிலையில்
முன்னேற்றம்
ஏதும் ஏற்படாததால்
செப்டம்பர்
மாதம் வீடு திரும்பிய
அவருக்கு
அவரது வீட்டிலேயே
வைத்து தொடர்ந்தும்
சிகிச்சை
அளிக்கப்பட்டு
வந்தது. நெல்சன் மண்டேலாவின்
குடும்ப உறுப்பினர்கள்
சூழ்ந்திருக்கையில்
அவரது உயிர் 2013 டிசம்பர் 5 ஆம் திகதி
இரவு 8.50 மணிக்கு
பிரிந்துள்ளது. தான் மரணித்த பின்னர் தனது சொந்த
கிராமத்தில்
தன்னை அடக்கம் செய்ய மண்டேலா
விருப்பம்
தெரிவித்திருந்ததால்,
அவரது விருப்பம்
நிறைவேற்றப்படும்
என்று தென்னாபிரிக்க
செய்திகள்
தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை
இறுதிக் கிரியைகள்
நடைபெறும்
என எதிர்பார்க்கப்படுகின்றது.
தென்னாபிரிக்க
நாடு பெருமை
வாய்ந்த குடிமகனை இழந்துவிட்டது
என்று வருத்தம் தெரிவித்துள்ள
அந்நாட்டு
ஜனாதிபதி
முழு அரசு
மரியாதையுடன்
மண்டேலாவின்
இறுதி ஊர்வலம் நடைபெறும்
என்றும் அறிவித்துள்ளார். சமாதானத்துக்கான
நோபல் பரிசு பெற்ற
சுதந்திர
போராட்ட வீரர் நெல்சன்
மண்டேலாவின்
மறைவு காரணமாக தென்னாபிரிக்கா
சோகத்தில்
ஆழ்ந்துள்ளது. ‘நாடு ஒரு நல்ல
புதல்வனை
இழந்துவிட்டது.
மக்கள் சிறந்த
தந்தையை இழந்துவிட்டனர்’
என தென்னாபிரிக்க
ஜனாதிபதி
தெரிவித்துள்ளார்.
இலங்கையின்
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நெல்சன் மண்டேலாவின்
மறைவு குறித்து தென்னாபிரிக்க
ஜனாதிபதிகளும்
மக்களுக்கும்
தனது அனுதாபச்
செய்தியை
அனுப்பி வைத்துள்ளார். பொதுநலவாய
அமைப்பின்
தலைவர் என்ற வகையிலும்,
இலங்கையின்
ஜனாதிபதி
என்ற வகையிலும்
அவர் தனது
அனுதாபச்
செய்தியை
அனுப்பி வைத்துள்ளார். அமெரிகக் ஜனாதிபதி பராக் ஒபாமா
அமரிக்காவில்
தேசியக் கொடியை அரைக் கம்பத்தில்
பறக்கவிடுமாறும்,
மண்டேலாவின்
மறைவுக்காக
துக்கதினம்
அனுஷ்டிக்குமாறு
தெரிவித்துள்ளார்.
ஐ. நா. செயலாளர்
நாயகம் பான் கீ
மூன், பிரிட்டிஷ்
மகாராணியார்,
பிரிட்டிஷ்
பிரதமர் டேவிட் கமரூன், பில் கிளிண்டன்
உட்பட உலகத் தலைவர்கள்
அத்தனை பேரும் தங்களது அனுதாபங்களை
தெரிவித்து
வருகின்றனர். இறுதி
ஊர்வலத்தில்
உலகத் தலைவர்கள்
பலரும் கலந்து கொள்வார்கள்
என தெரிவிக்கப்படுகிறது. தென்னாபிரிக்காவில்
கறுப்பின
மக்களுக்கு
எதிரான அடக்குமுறைகளை
எதிர்த்து,
ஆபிரிக்க
தேசிய காங்கிரஸ்
ஆட்சியில்
இணைந்து தீவிரமாக போராடிய மண்டேலாவை
1964ல் நிறவெறி
வெள்ளையர்
அரசு சிறையில்
அடைத்தது.
27 ஆண்டுகளுக்குப்
பின் 1990ல் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்.
அவரது விடுதலையோடு
கறுப்பின
மக்களுக்கும்
நிறவெறி வெள்ளையர்
ஆட்சியிலிருந்து
விடுதலை கிடைத்தது. தென்
ஆபிரிக்காவில்
கறுப்பினத்தைச்
சேர்ந்த முதல் ஜனாதிபதியாக
மண்டேலா தேர்ந்தெடுக்கப்பட்டார். மண்டேலா சிறையிலிருந்த
போதே அவருக்கு
நேரு சமாதான
விருதையும்
1990ல் பாரத ரத்னா விருதையும்
வழங்கி இந்தியா கெளரவித்தது.
1993 ல் உலக அமைதிக்கான
நோபல் பரிசும் வழங்கப்பட்டது.
2 மனைவிகளைக்
கொண்ட மண்டேலாவிற்கு
5 பிள்ளைகள்
உள்ளனர். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |