Contact us at: sooddram@gmail.com

 

'முன்னாள் போர் வலயத்தில் கருத்தடைக்கு அவசரம் இல்லை'

கிளிநொச்சி மாவட்டத்தில், கடந்த நவம்பர் முதலாம் திகதியன்று வேரவில், கிராஞ்சி மற்றும் வலைப்பாடு ஆகிய கிராமங்களில் முறையான சுகாதார வழிகாட்டலின் பின்னர், தாய்மார் சுயவிருப்பத்தின் பேரில் கருத்தடையை ஏற்றுக்கொண்டாலும், அவர்கள் நிதானமாகச் சிந்தித்து முடிவெடுப்பதற்குரிய கால அவகாசம் வழங்கப்படாமையே இந்த விடயத்தில் குற்ற உணர்வு மற்றும் சமூக நெருக்கீடு ஏற்படக் காரணமாகியுள்ளது' என வடமாகாண சுகாதார அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், 'போருக்குப் பின்னரான இந்தக் காலப்பகுதியில், போரினால் உயிரிழப்புக்களைச் சந்தித்துள்ள வடபகுதி மக்கள் மத்தியில் குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை ஊக்குவிப்பதற்கான அவசியமோ அவசரமோ தற்போது இல்லை' என்று கருதுவதாக வடமாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் பிபிசிக்கு கூறியுள்ளார்.

இது தொடர்பில் பிபிசி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 'வேரவில், கிராஞ்சி மற்றும் வலைப்பாடு ஆகிய கிராமங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகளினால் பெண்களுக்கு கருத்தடை கட்டாயமாக வழங்கப்பட்டிருந்ததாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன. அதனையடுத்து வடமாகாண சுகாதார அமைச்சு, விசேட விசாரணைக்குழு ஒன்றை அமைத்து விசாரணைகளை நடத்தியிருந்தது. இந்தக் குழுவின் அறிக்கை வடமாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கத்தினால் அமைச்சின் வவுனியா அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் பொறுப்புக் கூறல், அடிப்படை சுகாதார வசதிகள் மற்றும் மகளிர் குடும்ப சுகாதார உரிமை என்பவற்றை உறுதிப்படுத்தும் வகையில் குடும்பத்திட்ட முறைகள் அனைத்தையும் தமிழ்மொழியில் வழங்கவும், குடும்பத்திட்டம் தொடர்பாக பயனாளர்கள் தமது குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முடிவுகளை மேற்கொள்வதற்கு வசதியாக போதிய கால அவகாசம் வழங்கவும் வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

குடும்பத்திட்ட சுகாதாரக் கல்வி வழங்குதல் தொடர்பில் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு விசேட பயிற்சி வகுப்புகளை வழங்கவும் உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
'வற்புறுத்தப்படவில்லை'

கிளிநொச்சியில் பெண்கள் கட்டாயக் கருத்தடைக்கு உள்ளாக்கப்பட்டதாக அண்மைக் காலங்கள் குற்றச்சாட்டுக்கள் வெளியாகியிருந்தன
விசேட மகப்பேற்று மற்றும் பெண்களுக்கான மருத்துவ நிபுணர் அடங்கிய விசேட குழுவினால் நடத்தப்பட்ட ஆய்வின்படி, யாரையும் வற்புறுத்தியோ பயமுறுத்தியோ இக்கருத்தடை முறைமை வழங்கப்படவில்லை என்பது தெளிவாகின்றது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கருத்தடை சிகிச்சையானது அதிகமானவர்களுக்கு ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் சமூகமட்டத்தில் விளம்பரப்படுத்தப்பட்டு தப்பபிப்பிராயம் ஏற்படக் காரணமாகியுள்ளது.

முறையான சுகாதாரக் கல்வி வழங்கப்பட்ட பின்னர் தாய்மார் தமது சுயவிருப்பத்தின் பேரில் மேற்படி கருத்தடையை ஏற்றுக்கொண்டாலும் அவர்கள் நிதானமாகச் சிந்தித்து முடிவெடுப்பதற்குரிய கால அவகாசம் வழங்கப்படாமையே குற்ற உணர்வு மற்றும் சமூக நெருக்கீடு ஏற்படக் காரணமாகியுள்ளது.

கால அவகாசம் போதுமானதாக இருந்திருந்தால் இக்கருத்தடை முறையினை பெற்றுக்கொண்டவர்கள் சமூக மட்டத்திலும் வீட்டிலும் நன்றாகக் கலந்தாலோசித்து நேரான சிந்தனையுடன் செயற்பட்டிருப்பார்கள். பத்திரிகைகள் இணையத்தளங்களில் பிரசுரமான தவறான கருத்துகள் ஏற்படாது தடுத்திருக்கலாம் என இக்குழு கருதுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போருக்குப் பின்னரான இந்தக் காலப்பகுதியில் போரினால் உயிரிழப்புக்களைச் சந்தித்த எமது பிரதேசங்களில் குடும்பக்கட்டுப்பாட்டு முறைகளை ஊக்குவிப்பதற்கான அவசியமோ அவசரமோ தற்போது இல்லை என அமைச்சு கருதுகிறது.

இருந்தபோதும், குடும்பத் திட்டமிடல் தொடர்பான ஆலோசனைகள் தேவையுடையோர் அவற்றை சுகாதார நிலையங்களில் பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் செய்யப்படல் வேண்டும்.

இவ்வாறான சம்பவங்கள் எதிர்வரும் காலங்களில் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக அமைச்சு திணைக்கள நடைமுறைகள் ஊடாகப் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது எனவும் வடமாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com