Contact us at: sooddram@gmail.com

 

காரைதீவு பிரதேச சபையின் பட்ஜட் மீண்டும் தோற்கடிப்பு

காரைதீவு பிரதேச சபையின் வரவு, செலவுத் திட்டம் மீண்டும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட இந்தப் பிரதேச சபை, தமிழ்த் தேசி யக் கூட்டமைப் பின் ஆளுகைக் குட்பட்டது. இந்த சபையில் அங்கம் வகிக்கும் 5 உறுப்பினர்களில் நால்வர் எதிர்த்து வாக்களித்துள்ளனர். காரைதீவு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் கடந்த 18 ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப் பட்டபோது தோற்கடிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து இரண்டாவது தடவை யாகவும் நேற்று சபையில் சமர்ப்பிக்கப் பட்டபோது ஐந்து உறுப்பினர்களில் நான்கு பேர் எதிர்த்து வாக்களித்தனர். அதாவது, சபையின் தவிசாளரைத் தவிர சகல உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களித்தனர். தவிசாளரின் தன்னிச்சையான போக்குக்கு எதிராகவே தாங்கள் எதிர்த்து வாக்களித் துள்ளதாக உறுப்பினர்கள் தெரிவித்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள காரைதீவு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பதற்கான அமர்வு நேற்று தவிசாளர் செ. இராசையா தலைமையில் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.

அங்கு தவிசாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட 2வது வரவு செலவுத் திட்டத்தை ஆளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த உப தவிசாளர் கே. தட்சணாமூர்த்தி, உறுப்பினர்களான சு. பாஸ்கரன், வை. கோபிகாந், ஸ்ரீல. மு. கா. உறுப்பினர் எம். ஏ. பாயிஸ் ஆகியோர் எதிர்த்து வாக்களித்து பேசினர். இறுதியில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது 4-1 என்ற வாக்கு வித்தியாசத்தில் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது. காரைதீவு பிரதேச சபை வரலாற்றில் வரவு செலவுத் திட்டமொன்று இரு தடவைகளும் தோற்கடிக்கப்பட்டமை இதுவே முதற்தடவையாகும். அதுமட்டுமல்ல கடந்த மூன்று வருட காலத்தில் ஊடகவியலாளர்களுக்கோ, பார்வையாளர்களுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால் இக்கூட்டத்திற்கு தவிசாளரினால் அவரது ஆதரவாளர்கள் சிலருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.

அமர்வு நிறைவுற்றதும் சபாமண்டபத்தில் வைத்து அச்சு இலத்திரனியல் ஊடகங்களுக்கு கருத்துகள் தெரிவிக்கப் பட்டன. அங்கு உபதவிசாளர் தட்சணாமூர்த்தி கருத்துரைக்கையில், நாம் கடந்த 18ம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 1வது வரவு செலவுத் திட்டத்தையும் நிராகரித்தோம். நேற்று சமர்ப்பித்த 2வது வரவு செலவுத் திட்டத்தையும் நிராகரித்தோம். இதனூடாக எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எந்த இழப்புமில்லை. நாம் கூட்டமைப்பில் தான் இருக்கிறோம்.

ஆனால் கூட்டமைப்பிலிருந்துகொண்டு பிழையான நடவடிக்கை மேற்கொள்ளும் தலைமைத்துவத்தை மாற்றியுள்ளோம் என்பதை தெளிவாகக் கூறியுள்ளோம். எமது கட்சியினால் எமது தவிசாளர் தோற்கடிக்கப்பட்டாரே தவிர ஏனைய கட்சியினால் தோற்கடிக்கவில்லை. ஒரு மாற்றத்தை கொண்டுவருவதற்காக மக்களுக்கு சிறந்த வெளிப்படைத் தன்மையான சேவையை வழங்கவே நாம் இதனைச் செய்துள்ளோம். 2014ம் ஆண்டுக்கான இரண்டு பட்ஜெட்டுகள் தோற்கடிக்கப்பட்டுள்ளன. எனவே தவிசாளர் பதவியிறக்கப்பட்டுள்ளார். அதைவிட, பார்வையாளர்கள் அதுவும் அவரது ஆதரவாளர்கள் மட்டுமே கலந்துகொண்டிருப்பது அதிகமாகவுள்ளது என்றார்.

கோபிகாந்

த. தே. கூ. உறுப்பினர் வை. கோபிகாந் கூறுகையில், மக்களின் தேவை கருதியே இப்பட்ஜட்டை தோற்கடித்துள்ளோம். எம்முடன் சற்றும் கலந்தாலோசியாமல் தவிசாளர் தன்னிச்சையாக பட்ஜெட்டைத் தயாரித்துள்ளார். அதனை முற்றாக கண்டிக்கிறோம். இதனால் நாம் த. தே. கூட்டமைப்பிற்கு எதிரானவர்களல்ல. கட்சி எடுக்கும் எவ்வித செயற்பாடுகளுக்கும் தலைசாய்ப்போம். நாவிதன்வெளி பிரதேச சபை பட்ஜெட் தோற்கடிக்கப் பட்டமைக்கு காரணமும் இதே தவிசாளரின் சதிவேலையே என்றார்.

மற்றுமொரு த. தே. கூட்டமைப்பு உறுப்பினர் சு. பாஸ்கரன் கருத்துரைக்கையில்:-

நாம் நிதிக் குழுவில் இருக்கிறோம். எம்மிடம் ஒரு வார்த்தை கேட்கவில்லை. பாதீடு தயாரிக்கப்படும்போது உறுப்பினர்கள் என்ற வகையில் எமது கருத்துக்களும் ஆலோசனைகளும் கேட்கப்படவேண்டும். ஆனால் அப்படி கேட்கவில்லை. நாம் எமது த. தே. கூட்டமைப்பிற்கு துரோகம் இழைக்கமாட்டோம். நாம் ஒரு சர்வாதிகாரியை அகற்றியுள்ளோம் என்பதே உண்மை என்றார்.

மு. கா. உறுப்பினர் பாயிஸ்

ஸ்ரீல. மு. கா. உறுப்பினர் எம். ஏ. பாயிஸ் கருத்துரைக்கையில்,

இன்று 2வது முறையாகவும் பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டு 1-4 என்ற விகிதத்தில் தோற்றகடிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கடந்த 18ம் திகதியும் 1வது பட்ஜெட் கொண்டுவரப்பட்டு 1-4 என்ற விகிதத்தில் தோற்கடிக்கப்பட்டது. ஆனால், ஊடகங்களில் வேறுபட்ட செய்தி வந்தமை கவலைக்குரியது. செயலாளரின் நடவடிக்கையையும் கண்டிக்கிறோம். அவர் 1வது பட்ஜட் தோற்கடிக்கப்பட்டமை பற்றி உதவி உள்ளூராட்சி ஆணையருக்கு இன்னும் அறிவிக்கவில்லை. இது கண்டனத்துக்குரியது. எனவே உள்ளூராட்சி அமைச்சு ஊடாக செயலாளருக்கெதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளோம். எனவே 2வது பட்ஜெட்டும் முற்றாக தோற்கடிக்கப்பட்டுள்ளது என்பதை ஆணித்தரமாக கூறிக்கொள்ளவிரும்புகிறேன் என்றார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com