Contact us at: sooddram@gmail.com

 

50 ஆண்டுகளுக்கு பின் கியூப - அமெரிக்க இராஜதந்திர உறவை ஏற்படுத்த பிரகடனம்

அமெரிக்க கொள்கை காலாவதியானது என்கிறார் ஒபாமா

அமெரிக்கா மற்றும் கியூபாவுக்கு இடையிலான இராஜதந்திர உறவை மீண்டும் ஏற்படுத்துவதற்கு இரு தரப்புக்கும் இடையில் இணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை வரவேற்றிருக்கும் கியூப ஜனாதிபதி ராவுல் காஸ்ட்ரோ தனது நாட்டின் மீதான அமெரிக்காவின் 50 ஆண்டு பொருளாதார தடையை நீக்க வலியுறுத்தியுள்ளார். இரு தரப்புக்கும் இடையில் கடந்த 18 மாதங்களாக இடம்பெற்று வந்த இரகசிய பேச்சுவார்த்தையை தொடர்ந்தே இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் காஸ்ட்ரோவுக்கு இடையில் கடந்த செவ்வாயன்று இடம்பெற்ற தொலைபேசி உரையாடலில் கைதிகள் பரிமாற்றம், இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பரம் தூதரகங்களை திறப்பது மற்றும் ஒருசில பொருளாதார தடைகளை தளர்த்துவது குறித்து உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இரு நாட்டு தலைவர்களும் ஒரே நேரத்தில் தொலைக்காட்சியில் உரையாற்றி இந்த உடன்பாட்டை அறிவித்தனர். கனடா மற்றும் வத்திக்கான் இந்த உடன்பாடு எட்டப்படுவதற்கு மத்தியஸ்தம் வகித் துள்ளன.

இந்நிலையில் கியூபா மீதான தடைகளை தளர்த்த ஒபாமா அழைப்பு விடுத்தபோதும், அமெரிக்காவின் இரு பிரதிநிதிகள் அவை யையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் எதிர்க்கட்சியான குடியரசு கட்சி கொம்மியு னிஸ தீவுடனான உறவை சுமுகமாக்கு வதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.

கியூபாவை தனிமைப்படுத்தும் காலா வதியான கொள்கையை தாம் முடிவுக்கு கொண்டுவருவதாக ஒபாமா வலியுறுத்தியுள்ளார். இந்த கொள்கைகள் கியூபாவில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இதன்படி கியூபாவுடனான ஒருசில வர்த்தக செயற்பாடுகளை திறந்துவிடுவது, அமெரிக் காவின் கடன் மற்றும் டெபிட் அட்டைகளை கியூபாவில் பயன்படுத்த அனுமதிப்பது, கியூபர்களுக்கு அனுப்ப முடியுமான பணத்தின் தொகையை அதிகரிப்பது மற்றும் தொலைத்தொடர்பு உபகரணங்கள் மற்றும் சேவையை வழங்க அனுமதிப்பது போன்ற மாற்றங்களை ஒபாமா நிர்வாகம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

இதில் நீடிக்கும் பயணத்தடை அமெரிக் கர்களுக்கு கியூபா செல்வதில் கடந்த காலங்களில் சிக்கல் இருந்து வந்தது. எனினும் இந்த தடையில் பாரிய அளவில் தளர்வு ஏற்படுத்தப்படவில்லை. கியூபாவுக்கு சுற்றுலா செல்லும் அமெரிக்கர்களுக்கு உள்ள தடை நீடிக்கிறது.

ஒபாமாவின் அறிவிப்பில் கியூபா மீது கடந்த 50 ஆண்டுகளாக நீடித்து வரும் பொருளாதார தடை நீக்கப்படவில்லை. இந்த தடையை அகற்ற அமெரிக்க பாராளுமன்றத்தின் அனுமதி தேவை. இதற்கான அனுமதி கோரப்படும் என்று ஒபாமா குறிப்பிட்டபோதும், அந்த முயற்சி கடினமாக இருக்கும் என்று அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஐந்து ஆண்டுகளாக கியூபாவின் சிறைச் சாலை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்க அரசின் ஒப்பந்ததாரரான அலன் கிராஸ் விடுவிக்கப்பட்டது இரு தரப்பு பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு சாதகமாக இருப்பதாக ஒபாமா குறிப்பிட்டிருந்தார். முறிந்து போயிருந்த அமெரிக்க-கியூப உறவுகளை சீர் செய்வதில் ஒரு பெரிய தடைக்கல்லாக கிராஸ் தடுத்து வைக்கப்பட்டிருந்தது இருந்து வந்தது.

கிராஸ் விடுதலை செய்யப்பட்டுள்ளதை அடுத்து, தமது நாட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள மூன்று கியூப நாட்டுப் பிரiஜகள் விடுவிக்கப்படுவார்கள் என்று அமெரிக்கச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தடை செய்யப்பட்ட செயற்கைகோள் தொழில்நுட்பத்தை தமது நாட்டுக்குள் கொண்டுவந்தார் என்று குற்றஞ்சாட்டி அவரை ஐந்து ஆண்டுகளாக கியூபாவின் அதிகாரிகள் சிறையில் அடைத்து வைத்திருந்தனர். விடுவிக்கப்பட்டுள்ள அலன் கிராஸ் அமெரிக்கா திரும்புகிறார்.

ஜனாதிபதி ராவுல் காஸ்ட்ரோவின் மூத்த சகோதரர் பிடெல் காஸ்ட்ரோ 1956 புரட்சி செய்து கியூபாவில் ஆட்சிக்கு வந்தது தொடக்க கியூபா மற்றும் அமெரிக்கா சித்தாந்த ரீதியில் மோதலில் ஈடுபட்டு வந்தன. கியூபா இடதுசாரி போக்கை பின்பற்றி முன்னாள் சோவியட் ஒன்றி யத்துடன் நெருங்கியதை அடுத்து 1961 ஆம் ஆண்டு அமெரிக்கா கியூபாவுடனான இராஜதந்திர உறவை முறித்துக் கொண்டது. அமெரிக்காவின் தெற்கு பிளோரியாவில் இருந்து கியூபாவுக்கு 140 கிலோமீற்றர் தூரமே உள்ளது.

கியூபா-அமெரிக்காவுக்கு இடையில் ஏற்பட்ட உளவு, அகதி மற்றும் ஏவுகணை பிரச்சினைகளால் 1962 ஆம் ஆண்டா கும்போது உலகம் அணு ஆயுத யுத்த அபாயத்தை எதிர்கொண்டிருந்தது.

சோவியட் ஒன்றியம் கலைக்கப்பட்டு பனிப்போர் முடிவுக்கு வந்ததையடுத்து, கியூபா மீது அமெரிக்கா மேலும் நெருக்கடிகளை கொடுத்தது. 2008 ஆம் ஆண்டு பிடல் காஸ்ட்ரோ ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து தலைமைப் பொறுப்பை ஏற்ற ராவுல் காஸ்ட்ரோவும் நாட்டில் ஒரு கட்சி அரசியல் முறையையே கடைப்பிடித்து வந்தார்.

எனினும் 50 ஆண்டுகளுக்கு மேலான மோதலை முடிவுக்கு கொண்டுவந்து மீண்டும் இராஜதந்திர உறவை ஏற்படுத் துவது குறித்து உலகத் தலைவர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். இரு தரப்பையும் ஒன்று சேர்க்க முக்கிய பங்காற்றிய பாப்பர சர் பிரான்ஸிஸ் இரு நாட்டுத் தலை வர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதனை ஒரு வரலாற்றுத் திருப்புமுனை என்று ஐரோப்பிய ஒன்றியம் விபரித்துள்ளது. லத்தீன் அமெரிக்க மாநாட்டிற்காக ஆர்ஜன் டீனாவில் கூடியிருக்கும் தலைவர்களும் கியூப-அமெரிக்க உறவை வரவேற்றுள் ளனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com